17.69 லட்சம் கோடி! 17.69 லட்சம் கோடி! மோசடி

செய்ய துடிக்கும் மோடி அரசு!

                                                                                                                           -ஆர்.ராஜேந்திரன்,

1956ல் ரூ.5கோடி மூலதனத்தில், 245தனியார், அந்நிய இன்சூரன்ஸ் கம்பெனி களின் முறைகேடுகள் காரணமாக, தேச உடமையாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் எல்.ஐ.சி. ஆகும். 31.03.2014ல் ரூ.17.69 லட்சம் கோடி அளவிற்கு மக்களின் சேமிப்பை திரட்டியுள்ளது. (இந்த வருட மத்திய அரசின் வரவு-செலவு ரூ.17 லட்சம் கோடிதான்) மேலும், நமது நாட்டில் ஊழல் அற்ற ஒரு மிகப்பெரிய நிதித்துறை நிறுவனமாகவும் உள்ளது. மத்திய அரசின் வருடாந்திர கடன் தேவையில் 25 சதவீதம் - கால் பங்குஅளவை எல்.ஐ.சி.யே வழங்குகிற அளவிற்கு மக்களின் காமதேனுவாக செயல்படுகிறது. 1956ல் ரூ.5 கோடி மற்றும் 2011ல் ரூ.95 கோடி கொடுத்து, மொத்தம் ரூ.100 கோடி மூலதனத்தில் செயல்படும் எல்.ஐ.சி. டிவிடெண்டாக மட்டும் சுமார் ரூ. 15,000 கோடியை 31.03.2014 வரை மத்திய அரசிற்கு வழங்கியுள்ளது. இதுபோல பல மடங்கு வருமான வரியாகவும், நிறுவன வரியாகவும், சேவை வரியாகவும் மத்திய அரசிற்கு வழங்கும் மாபெரும் நிதித்துறை நிறுவனமாகும்.
2013 - 2014 -ல் சாதனை
1) 2048 கிளைகளை கொண்ட, 1,20,388 ஊழியர்கள், 12 லட்சம் முகவர்களை கொண்ட ஆயுள் காப்பீடு நிறுவனமாகும். கடந்த ஆண்டு புது வணிகமாக 3.45 கோடி புதிய பாலிசிகளையும், ரூ.90,123/- கோடி முதல் வருட பிரீமியம் ஆகவும் வணிகம் செய்துள்ளது. 23 தனியார், அந்நிய கம்பெனிகளின் போட்டிகளுக்கிடையே, 84 சதவீதம் பாலிசி அடிப்படையிலும், 75 சதவீதம் பிரீமியம் அடிப்படையிலும் இன்சூரன்ஸ் சந்தையை தக்க வைத்துள்ள மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே நிறுவனமாகும். எல்.ஐ.சி. க்கு அடுத்து 2வது ஆக உள்ள ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிறுவனம் 4 சதவீதம் சந்தையைதான் வைத்துள்ளது.2) 2.59 கோடி பாலிசிதாரர்களுக்கு ரூ.91,186 கோடி முதிர்வு தொகையை கடந்த ஆண்டு மட்டும் வழங்கியுள்ளது. 99.68 சதம் முதிர்வு தொகையையும், 99.3 சதம் இறப்புக்கான காப்பீட்டு தொகைகளையும் வழங்கியுள்ள, உலக சாதனை படைத்துள்ள, ஒரே நிறுவனம் ஆகும். இதில் 72 சதம் மக்களின் வங்கி கணக்கிலேயே வழங்கப்படுகிறது.
3) 30 கோடி தனி நபர் ஆயுள் காப்பீடு பாலிசிகள், 11.5 கோடி குழு காப்பீடு பாலிசிகள் என 41.50 கோடி பாலிசிதாரர்களின் ஆயுளுக்கு பொருளாதார உத்தரவாதம் வழங்கியுள்ள உலகின் மிகப்பெரிய உயிர் காக்கும் நிறுவன மாக சாதனை படைத்துள்ளது எல்.ஐ.சி. என்ற மூன்று எழுத்து ஆகும். 41 கோடி என்ற எண்களை தாண்டியுள்ள, மக்கள் சீனத்தை தவிர, உலகில் வேறு நாடுகளே கிடையாது எனலாம்.4) 31.3.2014 முடிந்த கடந்த வருடத்தில் மட்டும் எல்.ஐ.சி.யின் மொத்த வருமானம் ரூ.3,80,042/- கோடியாகும். இது மத்திய பட் ஜெட்டின் 25 சதவீதமாகும் எனலாம்.
கடந்த ஆண்டின் மொத்த பிரீமிய வருமானம் மட் டும் ரூ.2,36,798/- கோடியாகும். மக்களின் சேமிப்புக்கு ஏற்ற காப்பகமாக உள்ள ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகும்.5) 31.03.2014 வரை மத்திய, மாநில அரசுகளிடம் செய்த முதலீடு ரூ.8,71,497/- கோடியாகும். வீட்டு வசதிக்காக, மின்சாரம், குடிநீர், பாசனம், சாலை, தகவல் தொடர்பு வசதிக்காக என உள்கட்டமைப்பு தேவைக் காக செய்த முதலீடு ரூ.1,98,272/- கோடி ஆகும். ஆக மொத்தம் ரூ.10,69,769/- கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் வருடத்திற்கு ரூ.60,000/- கோடி அளவிற்கு முதலீடு செய்து வரும், பங்குச் சந்தைக்கு ஆபத்து வரும்போதெல்லாம், மத்திய அரசின் ஆலோசனைக்கேற்ப பங்குச் சந்தைக்கும் முதலீடு செய்து ஆபத்திலிருந்து அந்நிறுவனத்தையும் காப்பாற்றி வந்துள்ளது எல்.ஐ.சி. இவ்வாறு பங்குச்சந்தைக்கும் மறை முகமாக, இலவசமாக ஆயுள் காப்பீடு செய்து வரும் இன்சூரன்ஸ் நிறுவனம் எல்.ஐ.சி. ஆகும்.
ஐந்தாண்டு திட்டங்களுக்கு
எல்.ஐ.சி.2வது ஐந்தாண்டு திட்டத்தில் (1956 - 1961)ரூ.184 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.3வது ஐந்தாண்டு திட்டத்தில் (1961 - 1966) ரூ.285 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.4வது ஐந்தாண்டு திட்டத்தில் (1969 - 1974) ரூ.1,530 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.5வது ஐந்தாண்டு திட்டத்தில் (1974 - 1979) ரூ.2,942 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.6வது ஐந்தாண்டு திட்டத்தில் (1980 - 1985) ரூ.7,140 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.7வது ஐந்தாண்டு திட்டத்தில் (1985 - 1990) ரூ.12,969 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.8வது ஐந்தாண்டு திட்டத்தில் (1992 - 1997) ரூ.56,097 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.9வது ஐந்தாண்டு திட்டத்தில் (1997 - 2002) ரூ.1,70,929 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.10வது ஐந்தாண்டு திட்டத்தில் (2002 - 2007) ரூ.3,94,779 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.11வது ஐந்தாண்டு திட்டத்தில் (2007 - 2012) ரூ.7,04,151 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.12வது ஐந்தாண்டு திட்டத்தில் (2012 - 2014) ரூ.4,51,460 கோடி முதலீடு (முதல் இரண்டு வருடம் மட்டும்) செய்துள்ளது எல்.ஐ.சி.. இவ்வாறு மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டங்களுக்கு மாபெரும் உதவி செய்யும் எல்.ஐ.சி. நிறுவனத்தை மத்திய அரசே சீரழிக்க அனுமதிக்கலாமா?
7) சிறப்பான பாலிசிதாரர் சேவை, ஊழலற்ற நிறுவனம், ஏழை, எளிய மக்க ளுக்கு ஆயுள் காப்பீடு என தனியார், அந்நிய பகாசுர கம்பெனிகளுடன் போட்டி போட்டு இந்திய அளவில் 31 பரிசுகளையும் வாங்கியுள்ள ஒரே காப்பீட்டு நிறு வனமாகும் எல்.ஐ.சி. எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் மிகவும் அதிகம் நம்பிக்கையுள்ள முதல் தரமான நிறுவனமாக எல்.ஐ.சி. உள்ளது (சூடி 1 ஆடிளவ கூசரளவநன ஐனேயைn க்ஷசயனே) என்பதை தெரிவித்துக் கொள்கிறது. இந்த முதல் இடத்தை தொடர்ச்சியாக தக்க வைத்தும் வருகிறது. இப்படிப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரத்தை சீரழிக்க நினைக்கும் பா.ஜ.க. மோடி அரசை கண்டிப்போம். இந்த தவறை மோடி அரசு திருத்திக் கொள்ளுமா? மக்கள் சக்தியால் இநத் தவறை திருத்த முடியும். மக்களை திரட்டிடுவோம்.
8) எல்.ஐ.சி.யின் சமூகக் கடமை : ஆம் ஆத்மி யோஜனா எனும் திட்டத்தை உடல் உழைப்பு ஏழை தொழிலாளிக்கு வழங்கி தன்னுடைய நிறுவன சமுதாய கடமையை சிறப்பாக செய்து வருகிறது .
எல்.ஐ.சி. 18 முதல் 59 வயது வரையில் உள்ளவர்களுக்கு இயற்கை மரணத்திற்கு ரூ.30,000/-, விபத்து மரணத்திற்கு ரூ.75,000/-, படிக்கும் குழந்தைகளுக்கு (9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) கல்வி உதவியாக ரூ.600 வருடத்திற்கு 2 முறை வழங்கி வரும் திட்டத்திற்கு ஆகும் பிரீமியம் ரூ.200/-. இதில் ரூ.100/- ஐ மானியமாக எல்.ஐ.சி. யே வழங்குகிறது.இவ்வாறு சிறப்பாக செயல்படும் நிறுவனத்தை சீரழிக்க அந்நிய முத லீட்டை 49 சதவீதம் உயர்வு என்ற சீரழிவு மசோதாவை, தேச விரோத மசோதா என்று சொன்னால் தவாறாகாது என சொல்ல தோன்றுகிறது. இது ஒரு பொருளாதார பயங்கரவாத செயல்என சில பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட பொருளாதார பயங்கரவாத செயலை அந்நிய முதலீடு என்று சொல்லி அனுமதிக்க வேண்டாம் என மக்கள் கேட்கிறார்கள்.
இந்த அந்நிய முதலீடுஉயர்வை எதிர்ப்பவர்களின் செயல் ஒரு தேசபக்த செயலாகும். இந்த தேச பக்த செயலை எல்.ஐ.சி. ஊழியர்கள், இடது சாரிகள், அறிவு ஜீவிகள் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியல் சக்திகள், பொது மக்கள் ஆதரிக்கிறார்கள். இவர்களை திரட்டுவோம்.
அந்நிய நேரடி முதலீடு எனும் சீரழிவு மசோதாவை தோற்கடிப்போம்.
-------------------------------------------------------------------------------------------------------
ஹோசிமின்நினைவு!

வியட்நாமின் விடுதலைக்கு களமாடிய ஹோசிமின்னுக்கு பெற்றோர் வைத்த பெயர் சிங்சுங்.
ஆனால் தங்கள் நாட்டை ஒளியேற்ற வந்தவர் என்பதாக குறிக்கும் ஹோசிமின் என்று மக்கள் அழைத்த பெயரான ஹோசிமின் என்பதே வரலாற்றில் நிலைத்து நின்று விட்டது.

ஹோசிமின் சிறுவனாக இருந்தபோது வியட்நாமை பிரான்ஸ் ஆண்டு கொண்டிருந்தது. அங்கு போராடிக்கொண்டிருந்த கெரில்லா குழுக்களுக்கு ஹோசிமின் தனது சிறு வயதிலேயே சிறுசிறு உதவிகள் செய்து தன்னை தொடர்பு படுத்திக்கொண்டிருக்கிறார். அந்த சிறுவயதிலேயே வியட்நாமை அந்நியரிடமிருந்து விடுதலை பெறச்செய்யவேண்டும் எனும் கனல் ஹோசிமின் உள்ளத்தில் எரிந்துகொண்டிருந்தது. பிரான்ஸின் பெரும்படையை எதிர்கொள்ளமுடியாமல் பிரான்ஸைப் பற்றி அறிந்துகொள்ள அந்த நாட்டிற்கே சென்று அங்கு ஒரு கடையில் வேலை பார்த்துக்கொண்டே தான் வந்த வேலையையும் செய்துவந்தார்.

விகடன்
அந்த சூழலில் ஜப்பானிய படைகள் வியட்நாமில் நுழைந்து பிரான்ஸை விரட்ட, மக்கள் மகிழ்ச்சியில் இருந்தபோது ஹோசிமின் தனது நாட்டிற்கு திரும்பி வந்தார். வந்ததும் மக்களை எச்சரித்தார். 'நமக்கான மூக்கணாங்கயிறுதான் மாறியிருக்கிறதே தவிர, விடுதலை கிடைக்கவில்லை' என்றார். ஜப்பானிய படை இவரைக் கைதுசெய்ய தேட, காட்டிற்குள் தங்கி பெரும்படையை நிர்மாணித்தார். தக்க சமயத்தில் ஜப்பான் படையை வீழ்த்தி, உடனே தேர்தல் நடத்த மக்கள் இவரையே தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

அதற்கு பின் பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற நாடுகளில் தாக்குதல்களை வெற்றிகரமாக சமாளித்து வியட்நாமை சுதந்திர பூமியாக்கிய ஹோசிமினின் நினைவு நாள் இன்று!

                                                                                                                               
-அபூர்வா.
------------------------------------------------------------------------------------------------------------------------------
அத்திப்பழம்!

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. 
அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும்.
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
2. மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. 
இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. 
அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
சுரன்04092014

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?