சாலைகளில் நடந்து போகக்கூடாது

பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பெயர் உண்டு.அதற்கு காரணமான வைக்கத்தில், சாதி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்த தந்தை பெரியார் முக்கியக் காரணமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். 
எதற்காக போராட்டம் ?
வைக்கத்தில் ஊர் நடுவில் கோவிலும் 4 நேர் வீதிகளும் இருந்தது அந்த சாலைகளில் விழாக் காலங்களில்  கீழ்ச் சாதிக்காரர்கள் யாரும் அந்த நான்கு புறத்திலும் கோயில் வாசலுக்கு முன் நடக்கக் கூடாது. மற்றைய நாட்களில் துண்டை இடுப்பில் கட்டி காலில் உள்ள செருப்புகளை கையில் வைத்துக்கொண்டு கேள்விக்குறியாக வளைந்தே நடந்து சீக்கிரமாக கடக்க வேண்டும் 
ஈழவர்கள், ஆசாரிகள், சாணார்கள் எனப்பட்ட நாடார்கள், வாணியர்கள், நெசவாளிகள் யாரும் அந்தச் சாலைகளில் நடந்து போகக்கூடாது. இதே நடைமுறை சுசீந்திரம் கோயில் பகுதிகளிலும் இருந்து வந்தது. 
வைக்கம் கோர்ட் ராஜாவின் அரண்மனையில் இருந்தது. அப்போது ராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே பார்ப்பனர்கள் ஜெபம் முறை நடந்து கொண்டிருந்ததால் மாதவன் என்ற ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வக்கீல் கோர்ட்டுக்குச் செல்வதைத் தடுத்துவிட்டனர். 
அதனால் பெரியார் அங்கு சென்று வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். 
பெரியார் தடையை மீறினார்.
அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறைத் தண்டனையை அருவிக்குத்தி சிறையில் அனுபவித் தார். ஆனால் பிரச்சாரம் தடைபடவில்லை. ஈரோட்டிலிருந்து பெரியாரின் மனைவி நாகம்மையாரும் தங்கை கண்ணம்மாளும் மற்றும் சிலரும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர்.
 போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே இருந்தது. போராட்ட வீரர் களுக்கு நிதியும் குவிந்தது. தேங்காய் காய்கறிகள் கூட அன்பளிப் பாகக் குவிந்து போராட்ட முகாம் ஒரு கல்யாண வீடு போலக் காட்சியளித்தது. பெரியாரும் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
போராட்டத்தைத் தீவிரமாக வகுத்தார். அந்தநேரம் அவருக்குத் தமிழ்நாட்டிலிருந்து ஒரு கடிதம் வந்தது.
அதில் 'நீ ஏன் நம் நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டில் போய் ரகளை செய்கிறாய்? அது சரியில்லை அதை விட்டுவிட்டு இங்கு வந்து வேலைகளைக் கவனி' என்று எழுதப்பட்டு இருந்தது.
அந்தக் கடிதம் எழுதி யவர் வேறுயாருமல்ல. அப் போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜாஜி அவர்களேதான்.
எப்படியும் பெரியாரின் வைக்கம் போராட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று காந்தியிட ம் பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டது. காந்தி உடனே " இந்தப் போராட்டத்தில் காங்கிரசார் முஸ் லீம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கி யர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது "என்று அறிக்கை  விட்டார்.
ஆனால் இந்த மறியல் போராட்ட  முகாமில் இருந்த 1000-க்கும் மேற்பட்ட காங்கிரசு தொண்டர்கள் பெரியாருக்கு ஆதரவு அளித்துப் போராட் டத்தை நீடிக்க உறுதிபூண்டனர்.
காந்தி,ராஜாஜி  போட்ட திட்டம்  பலிக்க வில்லை.
பெரியார் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது.
 பெரியார் மேலும் ஆறு மாதம் கடுங்காவல் தண்ட னை பெற்றுச் சிறையில் அடைக் கப்பட்டார். அதைத் தொடர்ந்து நம்பூதிரி பார்ப்பனர்கள் பெரியார் போன்ற விரோதி களை அழிக்க சத்ருசங்கார யாகம் நடத்தினர்.
ஆனால் அது விரோதியான பெரியார்  அழிய வில்லை. அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்ட மகாராஜாதான் திடீரெனக் காலமானார்.
இதனால் பார்ப்பனர்களுக்கும்,யாகத்துக்கும் பயந்திருந்த மக்கள் மத்தியில் போராட்டத் திற்கு மேலும் மதிப்பும் ஆதரவும்  ஏற் பட்டுவிட்டது. ராஜாவின் கருமாதியை முன்னிட்டுச் சிறையில் இருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ராணியும் பெரியாரிடம் ஒரு உடன் பாட்டிற்கு வர விருப்பம் தெரி வித்தார்.
ஆனால் அப்போதும் அப்போது ராஜாஜி தலையிட்டு பெரியாருக்கு இப்போராட்டத்தின் வெற்றி போய் பெயர் வந்து விடக்கூடாது. காங்கிரசு தலைமை காந்திக்குக்கும் ,தனக்கும்  இப்பிரச்னையை வெற்றியாக முடித்த பெயர் வர வேண்டும் என்று திட்டம் தீட்டி "பெரியார் ராணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் காந்தி  தான் ராணியுடன்பேசி உடன்பாடு காண வேண்டுமென்று' காந்தி யை  வரவழைத்து ராணி யோடு பேச வைத்தார்.
நாங்கள் சாலைகளைத் திறந்து விடுகிறோம்.
 ஆனால் பெரியார்  இழிந்த மக்கள் கோயிலுக்குள் போக வேண்டு மென்று ரகளை செய்தால் என்ன செய்வது? என்று ராணி தெரிவித்தார்.
பின்னர் காந்தி  பெரியாரைச் சந்தித்துப் பேசினார்.
பெரியார் "கோயில்களைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோமென்று எப்படி உறுதி அளிக்க முடியும்?
அது காங்கிரஸ் இலட்சியமாக இல்லாவிட்டாலும் என்னுடைய இலட்சியம் அதுதான். வேண்டுமானால் இப் போதைக்கு அப்படி கிளர்ச்சி இருக்காது" என்று ராணியிடம் கூறுங்கள் என்று பதிலளித்தார்.
 அதற்குப் பிறகு சாலையில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று ராணி உத்தரவு பிறப்பித்தார்.
வைக்கம் போராட் டம் வெற்றி பெற்றது. பெரியார் வைக்கம் வீரர் ஆனார்.காந்தி,ராஜாஜி பெயர் இப்போராட்டத்தில் துரோகம் செய்த தாகவே வரலாறு பதிவு.
ஆனால் அவை வழக்கம் போலவே மறைக்கப் பட்டு விட்டது.
இது போன்று தொடாந்த செயல்களாலேயே பெரியார் ஈ.வெ .ரா ,காங்கிரசை விட்டு விலகி அடித்தட்டு மக்கள் விடுதலைக்காக போராட ஆரம்பித்தார்.வெள்ளையனிடம் இருந்து விடுதலை பெறும் முன்னர் சாதிகள்,மதங்கள் பெயரால்  கீழே தாழ்த்தப்பட்டோர் விடுதலை பெற வேண்டும் என்பதே அவர் எண்ணம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?