கடைசியில் முதலிடம் பிடிச்சாச்சு!

கொழுப்பைக் குறையுங்கள்!

இரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேருவதே பெரும்பாலான இதய நோயாளிகளின் பிரச்னையாக உள்ளது.
ரத்தத்தில் அதிக அளவு கொழுப்புச் சத்து சேரும் நிலையில், அது ரத்தக் குழாய் பாதைகளை குறுகலாக்கி ("அதீரோஸ்குளோரோசிஸ்'), அடைப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து சேருவதற்கும் பாதிக்கப்படுபவரின் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
எண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பன்றிக் கறி, மூளைக் கறி, நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை -பால் கட்டி-பால் கோவா, முந்திரி, தேங்காய், வேர்க்கடலை உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.
எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள இதய நோயாளிகள், உணவு முறையை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்:-

1. வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலைஎண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள்.
2. கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்' போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெய்யிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.
3. பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.
4. எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்ûஸடு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து உள்ள இதய நோயாளிகளுக்கென்றே, கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.
5. அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் கொலஸ்டிரால் உள்ளது. இதனால் இவற்றில் கொழுப்புச் சத்து அதிகம். முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம். இதய நோயாளிகள் கோழிக்கறி, மீன் சாப்பிடலாம்; ஆனால் அவற்றை பொரிக்கவோ அல்லது வறுக்கவோ கூடாது. குழம்பில் போட்ட மீன் அல்லது குழம்பில் போட்ட கோழிக்கறி சாப்பிடலாம். வாரத்துக்கு இரு முறை மட்டுமே இவற்றைச் சாப்பிடலாம்.
6. அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.
7. கொட்டை வகைகள்: முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும். பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.
8. நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.
--------------------------------------------------------------------
கடைசியில் முதலிடம்?
இந்திய மாநிலங்களின் உள் நாட்டு பொருளாதார உற்பத்தி வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கும் இந்திய அரசின், மத்திய புள்ளி விவரயியல் அலுவலகம், 2012-13ம் நிதியாண்டில், இந்திய மாநிலங்களிலேயே , பீகார் மாநிலம் 10.23 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக்க் கூறியிருக்கிறது.அதுதான் முதலிடம்.
இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 3.39 சதவீத வளர்ச்சியே பெற்று பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி குறைய காரணம்.மின்தடை,குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதுதான்.அமைச்சர்கள்,அலுவலர்கள் அடிக்கடி மாற்றம் அரசை பற்றி ஒரு நிலையற்ற தன்மையை தொழில் முனைவோரிடம் உருவாக்கியதும் காரணம்.முதல்வர் ஜெயலலிதா வாக்குப்படி சொல்ல வேண்டுமானால் அரசியலில் கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை.அதே போல் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தையும் பார்க்க முடியவில்லை.ஜால்ரா ஊடகங்களுக்கு ஓராண்டு,ஈராண்டு,மூவாண்டு வளர்ச்சியைப்பற்றி பக்கம் பக்கமாக கொடுத்த விளம்பரங்கள்தான் இந்த ஆட்சியின் வளர்ச்சி.கோடிக்கணக்கில் அரசு கொடுத்த விளம்பரங்களில் மட்டும்தான் இந்த ஆட்சியின் சாதனையும்,தமிழ்நாட்டின் வளர்ச்சியும் இருந்தன.
ஏட்டு சுரைக்காய் கறிக்குதவுமா?
---------------------------------------------------------------------
சுரன் 10092014

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?