மாகவி பாரதி

இன்று தமிழ் மாகவி பாரதி நினைவு நாள்.
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி இறந்த தினம். 
இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். 
1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தியவர்.

தமிழின் கவிதை மற்றும் உரை நடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடி. தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை ஊட்டியவர் என பலரும் இவரை போற்றியுள்ளனர். 

இந்திய வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். 
பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். இவருடைய கவிதை திறனை பாராட்டி பாரதி என்ற பட்டத்தை எட்டப்பர் மன்னர் வழங்கினார். 
அன்றுமுதல் பாரதி என்றும் சுப்பிரமணிய பாரதி என்றும்  அழைக்கப்பட்டார்.
"தேடிச் சோறு நிதந் தின்று பல"
                                                                                                                              சின்னஞ் சிறுகதைகள்                                                                                                        பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
?வீழ்வேனென்று நினைத்தாயோ'
என்ற பாரதி தன்னால் அன்புடன் பார்க்கப்பட்ட யானை முட்டித்தள்ளியதால் ஏற்பட்ட மன அதிர்ச்சியிலும்,உடல் நலக்குறைவினாலும் இயற்கை எய்தினார்.
யானை முட்டியது பாரதிக்கு இறுதிக்கட்டத்தை தந்தது.இப்போதோ அது யானைகளுக்கு அல்லவோ இறுதியை தந்து விடுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
 அறிவியல் நகரம்? 

அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் சகாயம், ஐ.ஏ.எஸ். 
அது என்ன அறிவியல் நகரம்? 
சென்னை தரமணி – கிண்டி பகுதிகளில் உள்ள சுமார் 60 கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கியது தான் அறிவியல் நகரம் திட்டம். 
 ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக் கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய ஆடை வடிவமைப்பு மையம் (NIFT), எம்.எஸ். ஸ்வாமிநாதன் ரிசர்ஸ் ஃபவுண்டேஷன் ஆகியவை உள்ளிட்ட பல மத்திய மற்றும் மாநில நிறுவனங்களை உள்ளடக்கியது தான் அறிவியல் நகரம். 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்க்கும் விதமாக 1998-ம் ஆண்டில் நிறுவப்பட்ட அறிவியல் நகரத்தில் 1,500-க்கும் மேற்பட்ட முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். 
ஏராளமான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் உள்ளன. சோலார் திட்டத்தை பரவலாக்குவது, காற்றாலை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மாற்று மின்சக்திகளை உருவாக்கும் திட்டங்களில் ஆராய்ச்சி செய்து மேம்படுத்துவது உள்ளிட்ட பல புதிய திட்டங்களுக்கான ஆராய்ச்சிகள் அறிவியல் நகரத் திட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றன. 
மாண்புமிகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் இந்தத் துறையின் தலைவர். துணைத் தலைவராக தற்போது சகாயம், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். 
துணைத் தலைவருக்கு ஒரு பழைய அம்பாசிடர் கார் ஒன்றும் இப்போது ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருக்கிறது.அதை ஊட்டிக்கொள்வது சகாயத்தின் சகாயம். 
பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.முத்துக்குமரன், வேளான் விஞ்ஞானி எம்.எஸ். ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் இந்தத் துறையின் உறுப்பினர்கள். 
சென்னை காந்தி மண்டபம் சாலையில் இந்தத் துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அறிவியல் நகரத் துறையின் கீழ் வரும் நிறுவனங்கள் :
 Anna Centenary Library 
Anna University Anna University of Technology Ascendas IT Park BCG Vaccine Laboratory Board of Apprenticeship Training Bureau of Indian Standards Cancer Institute Central Electrochemical Research Institute (CSIR) Central Electronics Engineering Research Institute (CSIR) Central Leather Research Institute Central Polytechnic Central Scientific Instruments Organisation (CSIR) Centre for Indian Knowledge Systems Centre for International Cooperation in Science (CICS) Chennai Snake Park Trust Computer Society of India Department of Statistics Directorate of Technical Education Dr. A.L.M. Postgraduate Institute of Basic Medical Sciences Dr. Dharmambal Govt. Polytechnic for Women Electronics Test and Development Centre Elnet Technologies Limited Film and TV Institute of Tamilnadu Guindy National Park, Department of Forest, Government of Tamilnadu Guru Nank College Highways Research Station Indian Institute of Rural Development Indian Institute of Technologies – Chennai Indira Gandhi National Open University Institute of Chemical Technology Institute of Electrical and Electronics Engineers Madras Section Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition Institute of Leather Technology Institute of Mathematical Science Institute of Textile Technology Institute of Water Studies International Institute of Tamil Studies King Institute of Preventive Medicine M.S. Swaminathan Research Foundation Madras Institute of Development Studies Madras School of Economics Modern Food Industries National Environmental Engineering Research Institute (NEERI) (CSIR) National Institute of Fashion Technology National Institute of Teacher Training and Research National Metallurgical Laboratory National Test house Polytechnic College of Printing Technology Regional Labour Institute SAMEER-Centre for Electromagnetics
சுரன்  1092014


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?