ஊழல்கள் ஒரு தொடர்கதை.
சாலைப் பாதுகாப்புக்கு அதிலே வைக்கப்படும் அறிவிப்புப் பலகைகள் மிகவும் முக்கியமானதாகும்.
ஆனால்தமிழ் நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை வாயிலாக மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க வழி காண்கிறார்கள்.
கோயம் பேடு - கத்திப்பாரா - பாடியை இணைக்கும் உள் வட்டச் சாலையில் சில திட்டங்கள் தேசிய நெடுஞ் சாலைத் துறை ஆணையத்தால் நிறைவேற்றப்பட்டு வந்தன. இவற்றைச் செய்து முடித்து, 2012ஆம் ஆண்டு இந்தத் திட்டப்பணிகளைப் பராமரிப்பதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் இந்தச் சாலை ஒப்படைக்கப் பட்டது.
அதன் பின்னர் மாநில நெடுஞ்சாலைத் துறை யினர் இந்தப் பாலங்களில் சாலை வழிகாட்டிகளை நிறுவுவதில் மேலும் சில பணிகளை மேற்கொள்வதாகக் கூறி, 2013ஆம் ஆண்டு 290 லட்சம் ரூபாய்ப் பணிகளை நிறைவேற்ற ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரினார்கள். அரசு இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிப்பதற் கான நாளுக்கு முந்தைய நாள்தான் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த விவரங்கள் விதி முறைப்படி 15 நாட்களுக்கு முன்பே அரசு இணைய தளத்திலே வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
இந்தப் பணிகளை சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்குக் கொடுக்க வேண்டுமென்பதற்காக, திட்டமிட்டு இந்தச் செய்தியை இணைய தளத்தில் வெளியிடாமல் மறைக்கப்பட்டுள்ளது. முதல் ஒப்பந்தப் புள்ளி 22-4-2013 அன்று கோரப்பட்ட போதிலும், அரசு இணைய தளத்தில் இந்தச் செய்தி 8-5-2013 அன்றுதான் வெளியிடப்பட்டுள்ளது. இது போலவே தான் மற்ற இரண்டு ஒப்பந்தப் புள்ளிகளிலும் நடைபெற்றுள்ளது.
விசாரித்த அளவில், இந்த மூன்று ஒப்பந்தப் புள்ளிகளும் நெடுஞ்சாலைத் துறையிலே உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்போடு புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கும், ஒருசில ஒப்பந்த தாரர்களுக்கும் தரப்பட்டுள்ளன.
ஆனால் மாறுதலுக்கு ஆளாக நேரிடும் என்றோ, தொடர்ந்து தொந்தரவு தரப்படும் என்று அச்சுறுத்தப்பட்டோ இந்த ஊழலுக்கு துறை அதிகாரிகள் உடந்தையாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தத் துறையின் அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒப்பந்தப் புள்ளியின் தொகை மிக அதிகமாக இருந்த தால், கத்திப்பாரா, பாடி பணிகளுக்குத் தொழில்நுட்ப அனுமதி வழங்க மூத்த அதிகாரி ஒருவர் மறுத்தார்.
அந்த அதிகாரியை மாறுதல் செய்த பிறகு, இந்தப் பணிகள் ஒரு தனியார் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டன என்றார்.
இந்தத் திட்டம் பற்றிய முழு விவரங்களும், தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட பதில்களும் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் முதன்மைச் செயலாளருக்கு 13-1-2014 அன்று அனுப்பப்பட்டிருப்ப தாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் "டைம்ஸ் ஆப் இந்தியா" வெளியிட்டிருக்கிறது.
இந்த ஊழலுக்கு தமிழக அரசின், குறிப்பாக முதல் அமைச்சரின் பதில் என்ன? "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு வெளியிட்டிருப்பது, அ.தி.மு.க ஆட்சியில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலின் ஒரு சிறு துளிதான்.ஆனால் தமிழ் நடுநிலை [சொம்பு ]ஊடகங்கள் இதை கண்டு கொள்ளவில்லை.பின்னே தங்களுக்கு வரும் விளம்பரம் வெட்டுப்பட்டு விடுமே.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும்,மீண்டும் ........,
இரண்டு நாட்களுக்கு முன்பு கோ-ஆப்டெக்ஸிலிருந்து
இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறைக்கு
இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார் சகாயம், ஐ.ஏ.எஸ்.
இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறைக்கு
இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார் சகாயம், ஐ.ஏ.எஸ்.
புதிய பொறுப்பில் பணி ஏற்பதற்கு முன்னதாகவே அதையும்
ரத்து செய்து விட்டு தற்போது வேறு ஒரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரத்து செய்து விட்டு தற்போது வேறு ஒரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறை மிகப் பெரியது. கிட்டத்தட்ட 8,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட துறை. அதேபோல எக்கச்சக்க ஊழல்கள் உள்ள துறை. சகாயம் வந்தால் உடனடியாக அந்தத் துறை சரி செய்யப்படும் என்று பேச்சு எழுந்த நிலையில், தற்போது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு,
சென்னையில் உள்ள ‘அறிவியல் நகரம்’ (Science City) என்ற துறையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது வரை பணியில் இருந்த 22 வருடங்களில் 23 முறைட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட சகாயம், 23வது பணியில் சேருவதற்கு முன்னதாகவே மாற்றப்பட்டுள்ளார்!
கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்ட செல்வி அபூர்வாவுக்கு பதிலாக தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேஷனின் இயக்குநராகஇருந்த டி.என். வெங்கடேஷ், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செல்வி அபூர்வா, தமிழ்நாடு மெடிகல்ர்வீஸஸ்கார்ப்பரேஷனின்நிர்வாகஇயக்குநராகவும்,
இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதிகமிஷனராக கூடுதல் பொறுப்பும் வகிப்பார் என்று அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதிகமிஷனராக கூடுதல் பொறுப்பும் வகிப்பார் என்று அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக குமார் ஜெயந்த், ஐ.ஏ.எஸ்., கடந்த ஆகஸ்ட்
1-ம் தேதியன்று தான் நியமிக்கப்பட்டார்.
1-ம் தேதியன்று தான் நியமிக்கப்பட்டார்.
என்ன நிர்வாகம் தமிழ் நாட்டில் நடக்கிறது.அறிவிப்பு வெளியிடும் முன் அதை பற்றி சிந்தித்து செயல்படுவதே இல்லை.கட்சியின்பொறுப்பாகட்டும் - அமைச்சர் பொறுப்பகட்டும்,மானில ங்க்களவை வேட்பாளராகட்டும் அறிவித்து விட்டு பின்னர் அவர்கள் பின்னணியை ஆய்வு செய்து நீக்குவது.என்பதே இந்த அறிவிப்பு ஆட்சியின் முதல்வரின் சாதனையாகி விட்டது.
சகாயம்.இ.ஆ.ப,
கோ -ஆப் டெக்சில் இருந்து மாற்றம் செய்யப்பட
உண்மையான காரணங்கள்.
கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம், மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை திடீரென இடமாற்றம் செய்தது, ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களிடம், கடும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.
கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக, கடந்த 2012 ஜூன் மாதம், சகாயம் பொறுப்பேற்றார். அதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தை மேம்படுத்த, சகாயம், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இதன் பயனாக, 2012 - 13ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.கோ - ஆப்டெக்ஸ் விற்பனை, 200 கோடியில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 14 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. இதிலிருந்து ஒரு கோடியை, நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கினார். நெசவாளர்கள் புகைப்படத்தை, அவர்கள் நெய்த துணியில் இணைக்க நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில், தற்போது சகாயம் மாற்றப்பட்டு, இந்திய மருத்துவத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமாக, அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கூறியதாவது:சென்னையில் உள்ள, கோ - ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், தனக்கு அறை ஒதுக்கி தரும்படி, அமைச்சர் கேட்டார். ஆனால் சகாயம், அறை ஒதுக்க முன் வரவில்லை. கோபமடைந்த அமைச்சர், தனக்கு அறை ஒதுக்கும்படி, கைத்தறி துணி நுால் துறை செயலருக்கு, கடிதம் அனுப்பினார்.

கோகுல இந்திரா கோபம்தான் |
அவரும், உடனே அறை ஒதுக்கும்படி, சகாயத்திற்கு உத்தரவிட்டார். அதற்கு சகாயம், 'இதுவரை, அமைச்சருக்கு தனி அறை ஒதுக்கப்படவில்லை. மேலும், தற்போதுள்ள அமைச்சர், உள்ளூர் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவருக்கு அறை ஒதுக்கினால், அங்கு கட்சிக்காரர்கள் திரள்வர். ஊழியர்கள் பணி பாதிக்கப்படும். எனவே, அமைச்சர் வரும்போது, என் அறையில் அமரலாம்' என, பதில் அனுப்பினார்.
அடுத்து, கோ - ஆப்டெக்ஸ் மண்டல விற்பனை மேலாளர்கள், 11 பேருக்கு, கார் வாங்கி, முதல்வர் கையால் வழங்க வேண்டும் என, அமைச்சர் ஆசைப்பட்டார்.இதற்கும் சகாயம் எதிர்ப்பு தெரிவித்தார்.'முன்பு, 700 கிளைகள் இருந்தபோதே, மேலாளர்களுக்கு கார் கிடையாது; தற்போது, ஒவ்வொருவரும், 15 கிளைகளை மட்டும் கவனிக்கின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது தான், அவர்கள் அதிக இடங்களுக்கு செல்ல வேண்டி வரும். அப்போது, வாடகைக்கு கார் அமர்த்தினால் போதும். தேவையின்றி கார் வாங்கி, நிதியை வீணடிக்க வேண்டாம்' எனக் கூறி, அமைச்சரின் கார் திட்டத்திற்கு, முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்து, கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் இடமாற்றத்தில், அமைச்சர் தலையிட்டார். அதையும் சகாயம் ஏற்றுக் கொள்ளவில்லை.கள்ளக்குறிச்சியில், கோ - ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் சோமசுந்தரம் என்பவரை, ஆளும் கட்சியை சேர்ந்த, நகராட்சி தலைவர் மற்றும் அவரது ஆட்கள் தாக்கியது தொடர்பாக, போலீசில் புகார் செய்யும்படி, சகாயம் உத்தரவிட்டார்.
அதன்படி, அவர் புகார் செய்தார். ஆனால், போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இத்தகவலை, தலைமைச் செயலர், போலீஸ் டி.ஜி.பி., கவனத்திற்கு, சகாயம் கொண்டு சென்றார். இதுவும் அமைச்சருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.சில தினங்களுக்கு முன், தீபாவளி விற்பனை குறித்து ஆலோசிப்பதற்காக, ஊழியர்கள் கூட்டத்திற்கு, சகாயம் ஏற்பாடு செய்தார்.
கடைசி நேரத்தில், அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்த கூட்டத்திற்கு, அவர் செல்லவில்லை. அதில் கலந்து கொண்ட அமைச்சர், 'எனக்கு அறை தர மறுக்கிறார். இங்கு நான் எப்படியும் அறை பெற்றே தீருவேன்' என, ஊழியர்களிடம் சபதமிட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாகத் தான், சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு நஷ்டம் இல்லை. கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கும், நெசவாளர்களுக்கும் தான் இழப்பு.இவ்வாறு, ஊழியர்கள் தெரிவித்தனர்.
சகாயத்திற்காக நடைமுறை மாற்றம்:தமிழக அரசு செயல்படுத்தும், இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்திற்கு, நுால் கொள்முதல் செய்து, வேட்டி, சேலை தயாரிக்கும் திட்டத்தை, கோ - ஆப்டெக்ஸ் மேற்கொண்டு வந்தது.இலவச சேலை, 372 கிராம் எடை இருக்க வேண்டும் என, அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாகி வந்த சேலைகளை, சகாயம் எடை போடும்படி கூறியுள்ளார்.
அப்போது, எடை குறைவாக இருந்த, 30 லட்சம் சேலைகளை நிறுத்தி விட்டார். அதன்பின், மேல்மட்ட தலையீடு காரணமாக, அந்த சேலைகள் வினியோகத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு நிதியாண்டில், கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படும், இலவச வேட்டி, சேலை கொள்முதல் திட்டப்பணி, கைத்தறி துணி நுால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தவறாக அனுப்பிய குறுஞ்செய்தி நீக்கிட.
--------------------------------------------------------------------
நீ ங்கள தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியைப் பற்றி இனி கவலைப்படவேண்டாம்.
அவர்கள் அதைப் படிக்கும் முன்னரே அழித்துவிடும் புது செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
"இன்விஸிபிள் டெக்ஸ்ட்" (“Invisible Text”) எனும் இந்த செயலி, பயனர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை, பெறுபவர் படிக்கும் முன்னரே அழித்துவிடும் வசதியைக் கொண்டுள்ளது.
இதில் ஒரே சிக்கல், செயலி அழிக்கும் வரை, அந்த குறுஞ்செய்தி படிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
இதே போல, வீடியோ மற்றும் குரல் பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பிவிட்டு, அவை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பெறுநர்களின் மொபைலில் இருக்குமாறு நேரத்தை நிர்ணயிக்கும் டைமர் வசதியும் இதில் உள்ளது.
ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு தற்போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள செயலி அல்லவா! கூடவே ஒரு முக்கிய தகவல்: உங்கள் குறுஞ்செய்தி மற்றும் படங்களை பெறுபவரது மொபைலிலும், "இன்விஸிபிள் டெக்ஸ்ட்" செயலி இருந்தால்தான் இந்த அம்சம் வேலை செய்யும்.
===========================================================================
பால் கறந்தவர் கொண்டிருந்தவர் மக்களிடம்
கறந்த 49000 கோடிகள்.
பால் விற்று வந்த ஒரு சாதாரண மனிதன் ஏறக்குறைய 49,000 கோடி ரூபாய் சேர்த்திருக்கிறார் என்றால் ஆச்சர்யமாக இல்லை!
"பிஏசிஎல்" நிறுவனத்தை ஆரம்பித்து செயல்பட்ட நிர்மல்சிங் பாங்கோ.
பஞ்சாபின் எல்லைப் பகுதியில் இருக்கும் அட்டாரியில் உள்ள ஒரு கிராமத்தில் பால் விற்றுக்கொண்டிருந்த விவசாயி.
பின்னர் கொல்கத்தாவில் செயல்பட்டு இந்தியா முழுக்க கிளை களைக்கொண்டிருந்த பியர்லெஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
அதன்பிறகு மக்களுக்கு சேவை செய்ய மூளையை கசக்கி இந்த பிஏசிஎல் நிறுவனத்தைத் தொடங்கி, நிலம் இல்லாத மக்களுக்கு குறைந்த விலையில் நிலம் என்கிற கவர்ச்சிகரமான உறுதிமொழி தந்தார்.
இந்த உறுதிமொழியை நம்பி பணம் போட்டவர்களுக்கு நாமமும்
பாங்கோவின் வசம் 1.83 லட்சம் ஏக்கர் நிலமும் இன்று.!
----------------------------------------------------------------------