ஐந்தாண்டு செலவு 12 கோடிகள் ?

 சென்ற காங்கிரசு ஆட்சியில் நடந்த பெரிய முறைகேடு 2ஜி.இதனால் மத்திய அரசுக்கு பல் கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை குழு அறிவித்தது.
மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக,  ராஜா பதவி வகித்த போது, '2ஜி ஸ்பெக்ட்ரம்' உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில், பெருமளவு முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில், பொதுநல அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அமைச்சர் ராஜாவை மட்டுமே முன்னிறுத்தி வழக்கு பதியப்பட்டது.இதில் ஏல விபரம் அறிந்த அனுமதித்த மன்மூகன் சிங்,ப.சிதம்பரம்,சோனியா போன்றவர்களை கண்டு கொள்ளப்படவீ இல்லை.ராஜா பலமுறை இவர்கள் அனுமதியின் பேரில்தான் நடந்தது என்று நீதிமன்றத்தில் கூறியும் சி.பி.ஐ இவர்களின் பெயர்களை சேர்க்க மறுத்து விட்டது.இவர்களிடம் விசாரணையும் தீவை இல்லை என்று நீதிமன்றத்தில் கூறி விட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்தது.
இந்நிலையில், '2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில், பொதுநல அமைப்பு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தில், புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:'2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேட்டில் சிக்கிய சிலர், சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். 
சின்கா வீட்டிற்கு வந்தவர்கள் குறித்த, நுழைவுப் பதிவேட்டில் இடம் பெற்றுள்ள பெயர்கள் மலைக்க வைப்பதாக உள்ளன. இந்தப் பட்டியலால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம்.2ஜி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிலரை பாதுகாக்க, சின்கா முயற்சிக்கிறார். அதனால், அவரை சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார்.
சுரன் 10092014
சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா
அத்துடன், சி.பி.ஐ., இயக்குனர் சின்கா வீட்டிற்கு சென்று வந்தவர்கள் பட்டியலையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., இயக்குனர் சார்பில் ஆஜரான, மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர், விகாஸ் சிங், 'சி.பி.ஐ., இயக்குனர் வீட்டிற்கு சென்று வந்தவர்கள் பற்றி, ஊடகங்கள், தங்கள் இஷ்டத்திற்கு செய்திகளை வெளியிடுகின்றன; அதற்கு தடை விதிக்க வேண்டும்' என, கோரினார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி தத்து தலைமையிலான, உச்ச நீதிமன்ற அமர்வு, 'சி.பி.ஐ., இயக்குனர் சின்கா வீட்டிற்கு வந்து சென்றவர்கள் குறித்த விவரங்களை பார்க்கும் போது, அது மிக மோசமானதாக தோன்றுகிறது. அதனால், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து, எழுத்து மூலமாக சின்கா பதில் அளிக்க வேண்டும்' என, தெரிவித்தது.சின்கா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ''தனக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக, சின்கா எழுத்து மூலமாக பதில் அளிக்க விரும்பவில்லை. அதற்கு பதிலாக, மேலோட்டமாகவே பதில் அளிப்பார். அத்துடன், சின்கா வீட்டிற்கு வந்து சென்றவர்கள் குறித்த வருகைப் பதிவேடு ஆவணம், பிரசாந்த் பூஷனுக்கு எப்படி கிடைத்தது என்பதை, அவர் தெரிவிக்கும்படி உத்தரவிட வேண்டும்,'' என்றார்.




:சின்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிக மோசமானவை. அதனால், அவர் எழுத்து மூலமாக பதில் அளிக்க இயலாது என, தெரிவிக்க முடியாது. 2ஜி வழக்கை, உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அப்படிபட்ட நிலையில், எழுத்து மூலமாக பதில் அளிக்க முடியாது என, சின்கா தெரிவித்தால், உச்ச நீதிமன்றம் கடும் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.எழுத்து மூலமாக பதில் அளிப்பதில், சின்காவுக்கு என்ன தடை உள்ளது. அவர் எதைத் தெரிவிக்க வேண்டும் என்றாலும், எழுத்து மூலமாகவே தெரிவிக்க வேண்டும்; அதுவும், ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, வரும், 15ம் தேதி நடைபெறும். அதேநேரத்தில், சி.பி.ஐ., இயக்குனருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது தெரியவந்தால், இந்த வழக்கு நிலுவையில் உள்ள காலத்தில், அவர் எடுத்த முடிவுகள் அனைத்தையும், நாங்கள் ரத்து செய்வோம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் இந்த உத்தரவை அடுத்து, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, எழுத்து மூலமாக பதில் அளிக்க, சின்கா சம்மதம் தெரிவித்தார்.

*பீகார் மாநிலம் ஜாம்ஜெட்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் சின்கா.
*1974ல், ஐ.பி.எஸ்., அதிகாரியான சின்கா, இந்தோ - திபெத் போலீஸ் படை மற்றும் ரயில் பாதுகாப்புப் படையின் இயக்குனர் ஜெனரலாகவும் பதவி வகித்துள்ளார்.
*பாட்னா மற்றும் டில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகங்களில் பணியாற்றிய இவர்,
2012 டிசம்பரில், சி.பி.ஐ., இயக்குனராக பதவியேற்றார்.
*2012ல் நடந்த, சி.பி.ஐ., இயக்குனருக்கான தேர்வின் போது, ரஞ்சித் சின்கா, சரத் சின்கா மற்றும் அதுல் என, மூன்று பேரின் பெயர்களை, தேர்வு கமிட்டி பரிந்துரை செய்தது. மற்ற இருவரில், ரஞ்சித் சின்கா சீனியர் என்பதால், அவர் தேர்வு செய்யப்பட்டார். அவரின் தேர்வுக்கு, அப்போதே, பா.ஜ., கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
*இவர், ரயில் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரலாக இருந்த போது, அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜிக்கு, பதவி விலகிய பின்னும், ரயில்வே பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன்பின், இந்தோ - திபெத் போலீஸ் படைக்கு மாற்றப்பட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழலில் தொடர்புடையவர்களை சந்தித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து, ரஞ்சித் சின்கா நீக்கப்படலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள், சி.பி.ஐ., இயக்குனரை சந்திக்க விரும்பினால், அவர்களை, மற்ற சி.பி.ஐ., அதிகாரிகள் முன்னிலையில், தன் அலுவலகத்திலேயே, இயக்குனர் சந்திக்க வேண்டும்.
இதுவே, விதிமுறை. அதை மீறி, தன் வீட்டில், குற்றம் சுமத்தப்பட்டவர்களை சந்தித்து உள்ளார் ரஞ்சித் சின்கா.ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மட்டுமின்றி, ஹவாலா மோசடியில் தொடர்புடைய வர்களையும் ரஞ்சின் சின்கா சந்தித்து உள்ளார்.
ஏற்கனவே, பல குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், சி.பி.ஐ., இயக்குனராக ரஞ்சின் சின்கா நியமிக்கப்பட்டார்.தற்போது, அதை விட பெரிய சர்ச்சைக்கு ஆளாகி உள்ள சின்காவை நீக்க வேண்டும் என, அவருக்கு எதிராக குற்றச்சாட்டு கூறிய பிரசாந்த் பூஷன் உட்பட, பலரும் கோரிக்கை விடுத்துஉள்ளதால், விரைவில் அவர் விடுப்பில் செல்லவோ ,அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவதற்கோ  வாய்ப்புகள் உள்ளன.
இவரின் எதிரியான மம்தாவும் இப்போது சாரதா சீட்டுக்கம்பெனி ஊழலில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.அவரை சொந்த கட்சி மக்களவை உறுப்பினரே மாட்டி விட்டுள்ளார்.சாரதா கம்பெனிக்கு ரெயில்வே உணவு வழங்கல் குத்தகையை மம்தா வழங்கி 18 ரெயில்களை அவர்கள் வசம் ஒப்படைக்கவும் செய்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------
ஐந்தாண்டு செலவு 12 கோடிகள் ?
1991 முதல் 1996 வரை செய்த 248 செலவுப் பட்டியல்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி வாசித்தார்.

மராடி வாசித்த செலவுப் பட்டியலில் இருந்து...

சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியில் ஜெயா பப்ளிகேஷன் வாங்கிய 1.5 கோடிக்கு கடனுக்குச் செலுத்திய வட்டி ரூ.50,93,921. 
இதே வங்கியில் சசி என்டர்பிரைசஸ் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய தொகை ரூ.18,32,683. இதே கிளையில் லெக்ஸ் ப்ராபர்ட்டீஸ் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது ரூ.17,52,069.
ஆர்.பி.எஃப் நிதி நிறுவனத்தில் இளவரசி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது ரூ.4,41,569. மயிலாப்பூர் கனரா வங்கியில் இருந்து சேலம் ஸ்டோர்ஸுக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.12,73,642.
இதே வங்கியில் இருந்து பி.பி.எல். கேலரிக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.1,28,530. இதே வங்கியில் இருந்து கே.கே.வேணுகோபால் அவர்களுக்கு ஜெயலலிதா கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.5,95,000. இதே வங்கியில் இருந்து மதுரை காமராஜர் யுனிவர்சிட்டிக்கு ரூ.5,00,000. மௌலி அட்வர்டைஸுக்கு ரூ.11,00,000- ம் ஜெயலலிதா கணக்கில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

1987 - 88 ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2,50,445; 1988 - 89 ஆம் ஆண்டுக்கு ரூ.5,63,482; 1989-  90 ஆம் ஆண்டுக்கு ரூ.8,18,161; 1990 - 91 ஆம் ஆண்டுக்கு ரூ.30,61,549... இப்படி ஜெயலலிதா 1997 வரை வருமான வரி கட்டியுள்ளார். 88-  89 ஆண்டுக்கு ரூ.89,619; 1989 - 90 ஆண்டுக்கு ரூ.2,68,475; 92- 93 ஆம் ஆண்டுக்கு ரூ.13,51,590 என சொத்து வரி கட்டியுள்ளார்.

இதேபோல் சசிகலா 91-ல் இருந்துதான் வருமான வரி கட்டுகிறார். 91-  92 ஆம் ஆண்டுக்கு ரூ.2,23,750; 92 - 93 ஆம் ஆண்டுக்கு ரூ.3,00,550; 93 - 94 ஆம் ஆண்டுக்கு ரூ.7,62,151 என வருமான வரி கட்டியுள்ளார். 91- 92 ஆம் ஆண்டுக்கு ரூ.14,240; 92 - 93 ஆம் ஆண்டுக்கு ரூ.1,17,955 என சொத்து வரி கட்டியுள்ளார்.

ஐந்தாண்டில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வேலைபார்த்த ஆட்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவு ரூ.16,15,500. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் - சத்தியலட்சுமி திருமணச் செலவு ரூ.6,45,04,222. கொடநாடு பங்களா கட்டிய செலவு ரூ.12,20,310. மன்னார்குடியில் செங்கமலம் தாயார் நினைவு மகளிர் கல்லூரிக்கு டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் வாங்க சசிகலா கொடுத்த தொகை ரூ.10,82,420.

ஜெயா பப்ளிகேஷன் கட்டிய மின்சாரக் கட்டணம் ரூ.2,69,102. 1993 முதல் 96 வரை ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் கட்டிய மின்சாரக் கட்டணம் ரூ.7,38,433. குமரன் சில்க்ஸுக்கு ரூ.4,84,712, ஜேம்ஸ் ஃபிரெட்ரிக் -ரூ.30,00,000. இப்படி 1991 முதல் 1996 வரை செலவுசெய்த மொத்த செலவு தொகை ரூ.12,00,59,338.
இவ்வளவு செலவும் மாதம் ஒரு ரூபாய் சம்பளமாக முதல்வர் ஜெயலலிதா பெற்ற காலகட்டத்தில் உள்ள செலவுகள்தான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
சுரன் 10092014



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?