தலைவலியா

மன அழுத்தம், ஹார்மோன்கள் மாற்றம் என பல காரணங்களைக் கொண்டு வரக்கூடிய னது அடுத்தநாட்கள் வரையும் நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு ஏற்படக்கூடிய தலைவலியை எளிய முறையில் தீர்க்கும் சில வழிகளை பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மதிப்பிடக்கூடியதில் ஒன்று இஞ்சி தேநீர். இது தலைவலியிலிருந்து நிவாரணம் தரும் சிறந்த மருந்தாகும்.
தேநீர் செய்யும் போது கொதிக்கும் நீரில் இஞ்சியை சேர்த்து தேநீர் தயாரித்து பருகினால் தலைவலியை போக்கலாம்.
2001ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தலைவலி ஏற்படும் போது அதை போக்குவதற்கு மென்மையான இசையை கேட்டகலாம் என்று கூறப்படுகிறது.
மிகவும் எளிய முறையில் தலைவலியை போக்க ஐஸ் பேக்கை நெற்றியில் வைத்து வைத்து எடுப்பதன் மூலம் தலைவலியை குறைக்கலாம்.
பூசணி விதையில் அதிகளவு மெக்னீசியம் சல்பேட் கொண்டிருப்பதால் அனைத்து வகையான தலைவலியையும் குறைக்கும் சிறந்த மருந்து என ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர்.
ஒரு பத்து நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்தால் இயற்கையில் ஏற்படக்கூடிய வலி, மன அழுத்தம் ஆகியவற்றுடன் போராடி தலைவலியை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது.
தலைவலி ஏற்படும் போது கண்களை மூடி அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்து கவனத்தை ஒருநிலைப்படுத்தி, நிதானமாக சுவாசித்தவாறு தியானம் செய்து தலைவலியை போக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் காவல் துறையினருக்கு

 பெரும் பங்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை.  ஆனால், பல நேரங்களில்

பாதிக்கப் பட்ட பெண்களுக்கு காவல் துறையினரின் உதவி உரிய நேரத்தில்

 கிடைக்கப் பெறாமல் இருக்கிறது என்பதையும்  மறுப்பதற்கில்லை.
அதற்குக் காரணம் காவல் துறை யினரின் அலட்சியமா? பாதிக்கப்பட்ட

 பெண்கள் தங்களு டைய சட்ட உரிமையை சரியாக புரிந்து  கொள்ளாத நிலையா?

இது விவாதத்துக்குரிய வினாவே.
சில நேரங்களில், விசாரணை என்ற போர்வையிலோ, உண்மையான

 விசாரணைக்காகவோ காவல்துறையினரால்  பெண்கள் ஆஜர்படுத்தப்படும்

நேரங்களில் பெண்களின் உரிமைகள் என்ன? காவல் துறையினரின்

 கடமைகள் என்ன? இதுவும் பெரும்பாலான  பெண்களுக்கு பரிச்சயமில்லாத

 ஒரு தளமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. கல்வியறிவு பெற்ற

 பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
பொதுவாக நடைமுறையில் சட்டங்களை இருவகைப் படுத்தக் கூடிய நிலை

 உள்ளது. தனிநபர் சம்பந்தப்பட்ட திருமணம், சொத்துரிமை போன்ற

  விஷயங்கள் உரிமை யியல் சட்டத்தின் கீழும், சமுதாயத்துக்கு எதிராக நடை

 பெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல்  வன்புணர்ச்சி

, வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்களை குற்றவியல் சட்டத்தின் கீழும்

 வகைப்படுத்தி பார்க்கிறோம்.
குற்றங்களிலிருந்து பொது  மக்களை காப் பாற்றவும், குற்றங்கள்

நடைபெறாமல் தடுக்கவும், குற்றங் கள் நடைபெற்ற நிலையில் அதில் தகுந்த

விசாரணை மேற்கொள்ளவும்,  சந்தேகப்படும் நபரை விசாரிக்கவும்

, குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் என காவல்

 துறையினரின் பங்கு பெருமளவில்  தேவைப்படுகிறது
.
காவல் துறையினர் பொதுமக்களின் நண்பன் என்று உரக்கக் கூறினாலும்

, காவல் துறையினரின் மீது பொது மக் களுக்கு ஒரு விதமான அச்சம்

  இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக பெண்கள் காவல்துறையினரை

 நாடவோ, உதவி கேட்கவோ தயங்கும் நிலை பரவலாக உள்ளது
.
பொது மக்களின்  நம்பிக்கையையும் நன்மதிப்பையும் காவல் துறையினர்

 பெறும்போது, மக்கள் அவர்களின் உதவியை நாடுவதில் தயக்கம் இல்லாம

 லிருக்கும்.  பொதுவாக, ஒரு குற்றம் நடைபெறும்போது பாதிக்கப்பட்ட நபரோ

, அவரைச் சார்ந்த நபரோ குற்றம் நடைபெற்ற எல்லைக் குட்பட்ட காவல்

  நிலையத்திலோ, காவல் துறை உயர் அதிகாரியிடமோ, நேரடியாகவோ

, அஞ்சல் மூலமோ புகார் மனுவை தகுந்த நேரத்துக்குள் அளிப்பது அவசியம்.

இவ்வாறான புகார் மனு தாக்கல் செய்யும் போது, அந்த புகார் மனுவை மிகுந்த

 கவனத்துடன் தயார் செய்வது புகார்தாரரின் அடிப்படைக்  கடமையாகும்

. பெரும்பாலான நேரங்களில் புகார் மனுவை உரிய முறையில், சரியான

 நேரத்தில் சரியான நபரிடம் கொடுக்கத் தவறுவதே பல  குற்றவாளிகள்

 தப்பிக்க ஏதுவாகிறது
.


இந்த புகார் மனுவின் அடிப்படையிலேயே குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, விசா

ரிக்கப்படும் நபர் தவறு  செய்திருக்கும் பட்சத்தில் அவர் மீது குற்றம்

 சாட்டப்படும்.  ஒருவர் புகார் மனு கொடுத்த பிறகு அவருக்கு காவல்

 நிலையத்திலிருந்து  CSR (Community Service Register)

எனப்படும் புகார் ஏற்பு சான்றிதழ் கொடுக் கப்படும்.
புகார் மனுவின் அடிப்படையில்  விசாரணை மேற் கொண்டு அதில் உண்மை

 இருக்கும் பட்சத்தில் அந்த குற்றத்துக்கான முதல் தகவல் அறிக்கை FIR-First

 Information Report)   தயாரிக்கப்படுகிறது
.
இந்த இடத்தில் குற்றங்கள் என்று கூறும்போது, பிணை  கொடுக்கக்கூடிய

 குற்றங்கள், பிணை கொடுக்க இயலாத குற்றங்கள் என்று இரு வகைப்படுத்

 தப்படும்.

இதில் பிணை கொடுக்க இயலாத  குற்றங்களுக்கு நீதிமன்றத்தை அணுகியே

குற்றவாளிகள் ஜாமீன் பெற இயலும். முதல் தகவல் அறிக்கை தயார்

  செய்தவுடன் காவல்துறை யினரால்  வழக்கு அதன் எல்லைக்குட்பட்

ட நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும்.  சில நேரங்களில் புகார் மனு பதிவு
செய்யப்
படாமலோ,  பதிவு செய்யப்பட்ட  மனுவின் மீது விசாரணை

 மேற்கொள்ளாமலோ, காவல் துறையினர் மெத்தனப் போக் குடன்

 செயல்படும்பட்சத்தில், தகுந்த நீதிமன்றத்தை நாடி  ஆணை பெற்று உரிய

நிவாரணம் பெற சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

சில நேரங்களில் பாதிக்கப்படும் நபர் கொடுக்கும் புகார் மனு சரிவர பதிவு

செய்யப்படவில்லை எனில், அதாவது, என்ன குற்றம், அது நடந்த இடம்,

  குற்றம் சாட்டப்படும் நபர் அல்லது சந்தேகப்படும் நபர், அந்தக் குற்றத்தால்

ஏற்படும் உயிர் மற்றும் பொருள் இழப்பு போன்றவை சரிவர

  குறிப்பிடவில்லையென்றால், சரியான முதல் தகவல் அறிக்கை தயாரிக்க

முடியாது. அதனால் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு அனைத்து

  விஷயங்களையும் உள்ளடக்கியதாக, தெளிவானதாக இருப்பதை உறுதி

செய்வது மிகவும் அவசியம்.
பெண்களை காவல் நிலை யத்துக்கு விசாரணைக்கு அழைக்கும் போது

அல்லது அவர் மீது விசாரணை நடைபெறும்போது, ஒரு பெண் காவலர்

 உடனிருப்பது சட்டப்படி அவசியமாகும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?