குமரியை கேரளத்தில் இனைக்க போராட்டம்.?
வ.உ.சிதம்பரனார் ,
இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என்றால் இதற்காக தங்கள் உயிர்களை தானம் செய்தோர், பல ஆண்டு களாக சிறையில் வாடியோர், , தடியடிக்கு உள்ளானோர் என எண்ணிலடங்காதவர் பலர்.
அவர்கள் சிந்திய ரத்தத்தால்தான், நாடு சுதந்திரம் பெற்றது.ஒரு காந்தி நூல்நூற்று உண்ணா விரதம் இருந்து மட்டும் வாங்கியதில்லைஇந்திய விடுதலை.
இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என்றால் இதற்காக தங்கள் உயிர்களை தானம் செய்தோர், பல ஆண்டு களாக சிறையில் வாடியோர், , தடியடிக்கு உள்ளானோர் என எண்ணிலடங்காதவர் பலர்.
அவர்கள் சிந்திய ரத்தத்தால்தான், நாடு சுதந்திரம் பெற்றது.ஒரு காந்தி நூல்நூற்று உண்ணா விரதம் இருந்து மட்டும் வாங்கியதில்லைஇந்திய விடுதலை.
சுதேசி கொள்கையையே உயிர்மூச்சாக கொண்டதால் ஆங்கிலேயரால் செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளான வ.உ.சிதம்பர னாருக்கு இதில் தனி இடமுண்டு.
இன்று, அவரது பிறந்த நாள். ஏழைகள், தொழிலாளர்களுக்காக கோர்ட்டில் வாதாடியதற்காகவும், சுதேசி கப்பல் விட்டதற்காகவும் ஆங்கிலேய அரசு இவரை சிறையிலடைத்து, மாடுகள் கட்டி இழுக்க வேண்டிய செக்கை இவரை வைத்து இழுத்து ஆத்திரத்தை தணித்து கொண்டதிலிருந்து, இவரது சுதந்திர வேட்கையை தெரிந்து கொள்ளலாம்.
ஒட்டப்பிடாரத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் அப்பா சிதம்பரம்பிள்ளை. அவரது தந்தை உலகநாதபிள்ளை. மனௌவுயார் மீனாட்சியம்மாள், ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர். 1901ல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு எட்டு குழந்தைகள். உலகநாதன் சிறுவயதிலேயே இறந்து விட்டார்.
ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ரவுடி ஒருவன், பல பிரச்னைகளில் ஈடுபட்டான். ஊர் பெரியவர்கள் சொல்லியும் கேட்கவில்லை. இதனால் அழகப்பபிள்ளை என்பவர் உட்பட சிலர் சேர்ந்து அவரை தாக்கினர். இதில் அவன் இறந்து விட்டான்.
அழகப்பபிள்ளை உட்பட 6 பேர் மீது ஆங்கிலேய அரசு வழக்கு பதிவு செய்தது. இதில் அழகப்பபிள்ளை மட்டும் தலைமறைவாகி விட்டார். மற்றவர்களுக்கு தண்டனை கிடைத்தது. சில ஆண்டுகள் கழித்து ஊருக்கு திருவாடுதுறை ஆதீனத்தை சேர்ந்த ஆறுமுகம் தம்பிரான் என்பவர் வந்திருந்தார். அவர் தான் அழகப்பபிள்ளை என நினைத்து ஆங்கிலேயர் கைது செய்து விட்டனர்.
அவருக்காக வ.உ.சி தூத்துக்குடி சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த வழக்கில் ஆஜரானார். குற்ற வழக்குகளில் எதிரணியை விசாரிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்யமாட்டார்கள்.
ஆனால் இந்த வழக்கில் வ.உ.சி, தன் வாதத் திறமையால், வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தார்.
இந்த வழக்கை நடத்திய ஆங்கிலேய அதிகாரி பிளாக்ஸ்டென், அப்பாவை பார்த்து, ''பிள்ளை யு டன் வெல்,'' என பாராட்டினார். அந்த வழக்கை தள்ளுபடி செய்தவர் ஆங்கிலேய நீதிபதி வாலஸ்துரை.
பிறகு அந்த நீதிபதி சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றார். அந்த காலத்தில் வ.உ.சி திறமையான வக்கீலாக திகழ்ந்தார். கொஞ்ச காலங்கள் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி,வ,உ.சி யை வக்கீல் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினர். அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதி வாலஸ்துரை.
வ.உ.சி க்கு மீண்டும் வக்கீல் தொழில் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அந்த நீதிபதிக்கு நன்றி செலுத்திட, தனது மகனுக்கு வாலேஸ்வரன் என பெயர் வைத்தார்.
ஒரு முறை வ.உ.சி யிடம் ஒருவர் வழக்கை நடத்தும்படி கேட்டு கொண்டார். அதற்கான வழக்கு ஆவணங்களையும் கொடுத்தார். பிறகு அதற்காக கமிஷனும் கேட்டார். ஆவேசமுற்ற வ.வு.சி,, ''கமிஷன் கொடுத்து வக்கீல் தொழில் செய்ய வேண்டிய அவசியமில்லை,'' என வழக்கு கட்டை அவர் முகத்தில் தூக்கி எறிந்ததுள்ளார்.தனது தொழில்தர்மத்தை காத்து வந்தார்..
"வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் அதை வைத்து நம்மை அடிமையாக்கினர். நம்மவர்களும் ?வளிநாடு சென்று வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கப்பல் விட திட்டமிட்டார்.
இதற்காக தன் சொந்த பணத்தை போட்டும், மக்களிடம் பணம் வசூலித்தும், 1906 அக். 16ல் 'சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிமிடெட்' பெயரில் 'காலியா, லாவோ' என்ற இரு கப்பல்களை வாங்கி விட்டார்.
சொந்தமாக கப்பல் விடும்முன், கோல்கட்டாவில் தனியாரிடம் இருந்து ஒரு கப்பலை வாடகைக்கு வாங்கினார். அதையறிந்த ஆங்கிலேய அரசு, அந்த நபரை மிரட்டவும் கப்பலை அவர் திரும்ப பெற்று கொண்டார். இதனால் சொந்தமாக கப்பல் வாங்கி விட்டார்.
கப்பல் விட்டதில் இருந்து வ.வு.சிக்கு இந்தியா முழுக்க பேரும் புகழும் பெருகுவதை ஆங்கிலேய அரசால் பொறுக்க முடியவில்லை. அவரை மட்டம்தட்ட அவரை கப்பல் கம்பெனி செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல், 'கம்பெனியில் சாதாரண கண்காணிப்பாளராக இருந்து கொள்கிறேன்' என அப்பா தெரிவித்து விட்டார்.
அவரின் தந்தை உலகநாதபிள்ளையும், பாரதியாரின் தந்தை சின்னச்சாமி சுப்ரமணிய ஐயரும் எட்டையபுரம் ஜமீனில் ஒன்றாக வேலை செய்தவர்கள். அந்த பழக்கத்தில் , பாரதியாருக்கும் ,வ.உ சிக்கும் நல்ல பழக்கம். பாரதியாரை புதுச்சேரியில் தான் முதன் முதலாக சந்தித்தார்.
வ.வு சிக்கு இலக்கியத்திலும் நல்ல ஆர்வம் உண்டு.
16 புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். சிவஞானபோதத்திற்கு உரை எழுதியுள்ளார். . எதையாவது எழுதி கொண்டிருப்பார் அல்லது கோர்ட்டிற்கு சென்று விடுவார். பூர்வீக சொத்து மற்றும் வக்கீல் தொழிலில் கிடைத்த வருமானத்தை கடைசி வரை இந்த நாட்டிற்காக தான் செலவழித்தார், தனது பேச்சாற்றல் மூலம் தொழிலாளர்களையும்,மக்களையும் விடுதலை இயக்கத்திற்ற்கு கொண்டு வந்தார்.நாட்டின் விடுதலைக்காக போராடி தனது சொத்துக்களை இழந்த வ.உ.சியை காங்கிரசு கட்சி ஒதுக்கியது.காரணம் தெற்கில் வ.உ.சி,க்கு இருந்த செல்வாக்கை கண்டு தங்கள் தலைமைக்கு ஆபத்து வரலாம் என்ற பயம்தான்.
சிறைக்கு சென்று செக்கிழுத்து உடல் தளர்ந்து பொருளிழந்து வெளியே வந்த வ.உ.சியை வரவேற்க்க காங்கிரசு ஒருவரையும் போகக்கூடாது என தடையை அந்தரங்கமாக பிறப்பிந்திருந்தது.
அதை கேள்விப்பட்ட வ.உ.சி மிக்க மனசொடிந்து போனார்.வாழ்க்கையை ஓட்ட அரிசி கடை,மளிகைக்கடைகளில் கணக்கெழுதியும்,சொந்தமாக கடை வைத்தும் தனது இறுதி நாட்களை கழித்தார்.
வெள்ளைக்காரனை விட விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொண்டிருந்த காங்கிரசு தான் வ.உ.சியை நோக வைத்தது.வாழ்வை பலி வாங்கியது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-வரலாற்றை சிதைக்கும் பா.ஜ.க,
குமரியை கேரளாவுடன் இணைக்கப் போராடப் போகிறாராம் பொன்னர்.
குமரியை கேரளாவுடன் இணைக்கப் போராடப் போகிறாராம் பொன்னர்.
“இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி என்றழைக்கப்பட்ட சமூகப் போராளியின் போராட்டங்கள் குறித்தோ அல்லது நமது சகோதரிகள் மேலாடை (மாராப்பு) அணியக் கூடாத அனுமதிக்கப்படாத அவலங்கள் குறித்தோ அறியாமலிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.
1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த முத்துக் குட்டி என்பவர், தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.
1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமுலாக்கப்பட்டன. இன்றும் நமது சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன.
ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை நீடித்திருந்தால் நல்லதுதான். இன்று குமரி சுற்றுலா மையமாக மாறியிருக்கும்” என்று உயர்சாதி இளைஞனொருவன் வக்கிரமாகக் குறிப்பிடுகின்றான்.
1993-ல் அப்பாபாலு – இங்க்ளே எனும் வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி என்பவர் வேதனையோடு குறிப்பிட்டதைப் போல, ‘இன்னும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக வன்கொடுமைச் சட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’
“பசு புனிதமானதென்றும், இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மாட்டார்கள்” என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலுள்ள 60,000 பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் பசுமாமிசம் உண்பவர்கள்தான். அம்மக்களை இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தந்திரமாகத் தங்கள் பின்னால் அணிதிரட்டி வருகிறார்கள். ஆணாதிக்கக் கொடுங்கோலன் ராமனுக்கு, தன் மனைவி சீதையைச் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்யத் தூண்டிய ராமனுக்குக் கோவில் கட்ட முற்படுகிறார்கள்.
1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். அத்திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”
ஈழவர்களுக்கு ஒரு நாராயண குருவும்,சாணார்கள் என்ற நாடார்களுக்கு முத்துக்குட்டி என்ற வைகுண்டரும் தலமையேற்று மக்களை ஒரு வழிப்படுத்தினார்கள்.
இது போன்ற காரணங்களுக்காகத்தான் குமரி மக்கள் திருவிதாங்கூர் அரசை விட்டு விலகி தமிழகத்துடன் சேர போராடினார்கள்.ஆனால் அப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த பொன்.ராதாகிருஷ்ணன் தங்கள் பழைய வாழ்வை மறந்து கேரளாவில் இருந்து விலகியதற்கு புதிய கார்ணத்தை கண்டு பிடித்து உளறியிருக்கிறார்.
பாஜக வினர் செய்து வரும் வரலாற்று திரிபுக்கு இவரும் தனது பங்குக்கு சரடுகளை அள்ளி விடுகிறாரா?அமைச்சரான உடனேயே என்னவாயிற்று மனிதருக்கு.சுப்பிரமணிய சாமி வாடை அடிக்க ஆரம்பித்து விட்டதே.எதையாவது பரபரப்பாக பேசுவதுதான் அமைச்சர் கடமை என்று நினைக்கிறாரா?மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இந்த உளறல்கள் எதற்கு பயன்படும். நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்னைகளுக்கா பஞ்சம்?
சிவகாசி திருமண வீட்டில் போயும்”கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளத்துடன் இணைக்க நாங்களே முன் நின்று போராடுவோம்” என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புலம்பியுள்ளார்.
குமரி மக்கள் போட்ட வாக்குகள் இவரை அமைச்சராக்கியது மட்டுமல்ல புத்தி பேதலிப்பையும் ஆக்கி விட்டதா என்ன?
ஈழவர்களுக்கு ஒரு நாராயண குருவும்,சாணார்கள் என்ற நாடார்களுக்கு முத்துக்குட்டி என்ற வைகுண்டரும் தலமையேற்று மக்களை ஒரு வழிப்படுத்தினார்கள்.
இது போன்ற காரணங்களுக்காகத்தான் குமரி மக்கள் திருவிதாங்கூர் அரசை விட்டு விலகி தமிழகத்துடன் சேர போராடினார்கள்.ஆனால் அப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த பொன்.ராதாகிருஷ்ணன் தங்கள் பழைய வாழ்வை மறந்து கேரளாவில் இருந்து விலகியதற்கு புதிய கார்ணத்தை கண்டு பிடித்து உளறியிருக்கிறார்.
பாஜக வினர் செய்து வரும் வரலாற்று திரிபுக்கு இவரும் தனது பங்குக்கு சரடுகளை அள்ளி விடுகிறாரா?அமைச்சரான உடனேயே என்னவாயிற்று மனிதருக்கு.சுப்பிரமணிய சாமி வாடை அடிக்க ஆரம்பித்து விட்டதே.எதையாவது பரபரப்பாக பேசுவதுதான் அமைச்சர் கடமை என்று நினைக்கிறாரா?மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இந்த உளறல்கள் எதற்கு பயன்படும். நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்னைகளுக்கா பஞ்சம்?
சிவகாசி திருமண வீட்டில் போயும்”கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளத்துடன் இணைக்க நாங்களே முன் நின்று போராடுவோம்” என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புலம்பியுள்ளார்.
குமரி மக்கள் போட்ட வாக்குகள் இவரை அமைச்சராக்கியது மட்டுமல்ல புத்தி பேதலிப்பையும் ஆக்கி விட்டதா என்ன?
______________________________-------------------------------------------------------------------------------------------------------------