5ஜி செல்பேசிகள்.



 தொலைதொடர்புத துறையில் குறிப்பாக செல்பேசியில் நோக்கியாவை பின்னுக்குத்தள்ளி முன்னே வருகிறது சாம்சங் .
இதன் இப்போதைய புதிய அதிரடி அறிமுகம்  5ஜி  செல்பேசிகள்.
5ஜி செல்பேசி தொடர்பாக சாம்சங் நிறுவனம் கூறும்போ து 
"ஒரு வினாடிக்கு ஒரு கிகாபைட் அளவிலான தகவல்களை பறிமாறிக்கொள்ளும் திறன் 5ஜி யின் சிறப்புத்தன்மை " என தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டில் தான் இந்த சேவை சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் 4ஜி சேவையை ஒப்பிடும் போது தகவல் பறிமாற்றத்தில் பல நூறு மடங்கு வேகம் படைத்தது 5ஜி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இந்த சேவையைக் கொண்டு 3டி திரைப்படங்கள், 3டி விளையாட்டுகள், அதி நவீன எச்.டி., (UHD) தரத்துடன் கூடிய ஸ்டரீமிங் ஆகியவற்றை உபயோகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
நிமிடத்துக்கு நிமிடம்  சமூக வலை தளங்களில் உலவி புதிது புதிதாக இடுகை  போடும் காலம். அதற்கேற்ப செல்பேசியும் கையடக்க கணினி என்ற தன்மையை விட்டு அடுத்ததளதுக்கு 5 வது தலைமுறை அலைவழியே போய்  விட்டது.
நீங்கள் விரும்பும் ஒரு திரைப்படத்தை யாராவது திருடி வலையில் போட்டால் அதை நாம் பதிவிறக்க இரவு முழுக்க கணினியை ஓடச்செய்து அல்லல் பட வேண்டாம் .
இந்த 5ஜி மூலம் ஒரு முழுப்படத்தையே ஒரே ,ஒரு  நொடியில் பதிவிறக்கம்செய்ய முடியும் என்கிறது சாம்சங் .
  இது போன்ற அதி புதிய  சேவைகளை  எப்படி வழங்குவது என்பதைத் தான் 5ஜி சேவையை பயன்படுத்தி 2 கி.மீ., தூரத்திற்குள் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது சாம்சங் மொபைல் நிறுவனம்.

 இந்த ஆய்வு தங்களுக் கு திருப்தி தந்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
 
உலகிலேயே முதல் இடத்தில் தென்கொரியாவில் தான் 4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருக்கின்றர் என்கிறது சில உலக புள்ளிகள்.
அதாவது இவர்கள் எண்ணிக்கை இருபது லட்சம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?