மணல் ஆ [தர ]ய் வுக் குழு
மாவட்ட ஆட்சியர் திரு ஆஷிஷ் குமார் வேம்பார் பகுதி கடற் கரையில் சுமார் 40 ஹெக்டேர் பரப்பில் சுமார் 2.30 லட்சம் மெட்ரிக் டன் கனிம மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட் டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதன் பேரில் வி.வி. மினரல்ஸ் நிறுவ னம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சுரங்கத்துறை கமிஷன ருக்கு இம்மாதம் 6 ம் தேதி இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
இதை அடுத்து சுரங்கத்துறை ஆணையர் ஆகஸ்ட் 8ம் தேதி தமிழக அரசின் தொழில் துறை முதன்மை செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில்" தூத்துக்குடி மாவட்டத்தில் குத்தகைக்கு விடப் பட்ட சில சுரங்கங்களில் விதிமுறை களை மீறி அதிக கனிம மணல் எடுக் கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக வும், இந்த சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், இந்த ஆய்வுப்பணிகள் முடிவது வரை குவாரிகளில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்றும், குவாரி களில் இருந்து சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் தூத்துக்குடி சுரங்கத்துறை உதவி இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் கூறி யுள்ளார்.
இதன் அடிப்படையில் தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 6 சட்ட விரோத குவாரிகளில் கனிம மணல் எடுக்கப் படுவதை ஆய்வு செய்வதற்காக வரு வாய்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறை அதிகாரி களைக் கொண்ட சிறப்புக்குழு அமைக் கப்படவும், குவாரிகளில் சிறப்புக்குழு ஆய்வு செய்து முடிக்கும் வரை குவாரி களை நடத்துவதற்கு தடை விதிப் பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டுமென்றும் குவாரிகளி லிருந்து கனிமங்களை எடுத்துச் செல் லும் வாகனங்களுக்கு அனுமதி தருவதை தூத்துக்குடி கனிமவளத்துறை உதவி இயக்குநர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இந்த சிறப்புக்குழு குவாரிகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக் கை தர வேணடும் என்றும் உத்தரவிட் டுள்ளது. அந்த குழுவின் தலைவராக வரு வாய்த்துறை செயலாளர் திரு ககன் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த கனிம மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதை வரவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த வேண்டுமென்றும், அனுமதிக்கப் பட்ட அளவைக் காட்டிலும் கூடுத லாகவோ, சுற்றுச்சூழல் பாதிக்கும் வகை யிலோ கனிம மணல் அள்ளப்பட்டிருந் தால் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டுமென்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்கப்பட வேண்டுமென் றும், நேர்மையும், துணிவும் உள்ள அதி காரிகளை நியமிக்க வேண்டுமென்றும், அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டுமென்றும், பதவியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் தமிழக அரசைக் கோரி யுள்ளார்.
இந்த கோரிக்கையின் பின்னணி குறித்தும், அதன் நியாயம் குறித்தும் விவா திப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
கனிம மணல் எடுக்கப்பட்டு, விசார ணைக்கு உள்ளாகியிருக்கும் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம். ஆனால் தூத்துக் குடி மாவட்டத்தை விட மிக அதிக அள வில் நீண்ட காலமாக கனிம மணல் கொள் ளை கன்னியாகுமரி மற்றும் திருநெல் வேலி மாவட்டங்களில் நடந்து வருவதும், அதை எதிர்த்து பல நேரங்களில் மக்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை கூட ஏற்பட் டதும் அரசுக்குத் தெரியாததல்ல.
குறிப்பாக விசாரணைக்குழு தலைவராக இருக்கும் திரு ககன் சிங் பேடி அவர்கள் குமரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர் என்பதால் இந்த பிரச்சனை குறித்து அவர் நேரடியாகவே அறிவார். பல நேரங்களில் சில நேர்மையான அதிகாரிகள் நடவடிக் கை எடுக்க முயற்சித்ததும், அவர்கள் கடுமையான மிரட்டலுக்கு உள்ளானதும் அனைவரும் அறிந்த ஒன்று.
எனவே தான் இந்த கொள்ளையின் முழு பரி மாணத்தையும் அறிய வேண்டுமெனில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமன்றி நெல்லை, குமரி மாவட்டங்களிலும் ஆய்வு செய்வது தேவை.
1989ல் துவங்கப்பட்ட வி.வி. மின ரல்ஸ் என்ற நிறுவனம் கனிம மணல் கொள்ளையில் பல்லாண்டுகளாக ஈடு பட்டு வந்துள்ளது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடற்கரையில் காணப்படும் மணலில் மிக விலை மதிப்புள்ள கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்ட வி.வி.மினரல்ஸ் என்ற நிறு வனம் கோடி கோடியாக கொள்ளை அடிக்க திட்டமிட்டு கனிமக் கொள்ளையில் இறங் கியது.
இம்மணலில் காணப்படும் கார் னைட், இல்மனைட், சிர்கான், ரூடைல் உள்ளிட்ட கனிமங்கள் அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, ஜெர்மனி, சிங்கப் பூர், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடு களுக்கு ஏற்றுமதியாகிறது.
ஒரு டன் கார் னைட் மதிப்பு ரூ. 1838.7 கோடி என்றும், 1 டன் இல்மனைட் மதிப்பு ரூ. 1792 கோடி என்றும், ஒரு டன் சிர்கான் மதிப்பு ரூ. 64.5 கோடி என்றும் கூறப்படுகிறது.
ஒரு ஆண் டுக்கு இந்த நிறுவனம்1.5 லட்சம் டன் கார்பனைட், 2.25 லட்சம் டன் இல் மனைட், 12000 டன் சிர்கான், 5000 டன் ரூடைல் கனிமங்களை ஏற்றுமதி செய் துள்ளதாக தெரிகிறது. இதனால் அரசுக்கு 96,120 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்படுகிறது. மேலும் தங்கு தடையற்ற மணல் கொள் ளையால் மிகப் பெரிய சுற்றுச் சூழல் பாதிப் பும் ஏற்பட்டு வருகிறது.
துவக்கத்திலிருந்தே இந்த நிறுவனம் நடத்தும் கனிமக் கொள்ளைக்கு கடற்கரை கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரி வித்து வந்தனர். 10.3.2004 ல் குமரி மாவட் டம் மிடாலம்கிராமத்தில் கனிம மணலை எடுக்க தமிழக அரசு கொடுத்த அனுமதி யை 26.5.2004 ல் மத்திய அரசு தடை செய் தது.
இருந்தும் இந்த நிறுவனம் அதை மீறி அடாவடியாக கனிம வளத்தைக் கொள் ளை அடித்து வந்தது.
இதை எதிர்த்து மிடாலம் கிராம மக்கள் போராடிய போது காவல்துறை கனிம கொள்ளைக்கு ஆதர வாக இருந்து 10.6.2004 ல் கிராம மக்கள் மற்றும் மத்திய பொதுத் துறை அதிகாரி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. இதை எதிர்த்தும், கனிமக் கொள்ளையை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கட்சி அப்போது வலுவான போராட்டங்களில் இறங்கியது. ஆனால் அரசு அதிகாரிகள் கனிமக் கொள் ளையைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதி லாக அதற்கு ஆதரவாகவே செயல்பட்ட னர்.
அரசின் ஆதரவும் கனிம கொள்ளை நடத்தும் நிறுவனத்திற்கு ஆதரவாகவே இருந்தது. இந்நிலையில் இந்த கனிம மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி அன்றைய நாகர்கோயில் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. தோழர் பெல்லார்மின், மாவட்டச் செயலாளர் எஸ்.நூர்முகம்மது ஆகியோர் கிராம மக்கள் பிரதிநிதிகளுடன் புதுடில்லி சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர், சுரங்கத்துறை செயலாளர் அப்போது சுற்றுப்புற சூழல் அமைச்சராக இருந்த திரு ராஜா ஆகியோரை சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். இருந்தும் அனைவரும் கனிமக் கொள்ளை நடத்தி வந்த நிறுவனத்திற்கே ஆதரவாக இருந்து கொள்ளையைத் தொடர அனுமதித்தனர்.
ஆனால் வலுவான போராட்டம் காரண மாக மிடாலம் கிராமத்தில் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டது.பிற பகுதிகளில் தனது கனிம மணல் கொள்ளையை அந்த நிறுவனம் தொடர்ந் தது. 2006 ல் நெல்லை மாவட்டத்தினை ஒட்டிய குமரி மாவட்ட கடற்கரை கிராமங் களில் நடைபெற்று வந்த கனிம மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் கோரி மக்கள் அன்றைய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதை ஒட்டி அன்றைய மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஜோதே நிர்மலா தலைமையில் அதிகாரி கள் குழு அங்கு அனுப்பப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு திருட்டுத் தனமாக நடந்த கனிம மணல் கொள்ளை யைக் கண்டு பிடித்த மாவட்ட வருவாய் அலுவலர் அதைத் தடுத்து நிறுத்திய தோடு, மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி களையும் பறிமுதல் செய்தார்.
உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்த வி.வி. மினரல்ஸ் நிறுவனர் திரு வைகுண்டராஜன் திருமதி ஜோதி நிர்மலா அவர்களை நேரில் சந்தித்து கடும் மிரட் டல் விடுத்தார்.
அவருக்குக் கடுமையான நெருக்கடிகள்
அவரால் தரப்பட்டன.
அப் போது எதிர் கட்சித் தலைவராக இருந்த தற்போதைய
முதல்வர்ஜெயலலிதா
அன்றைய தி.மு.க. அரசு "வி.வி.மின ரல்ஸ் நிறுவனம்எதிர்
கட்சி,சாதிய ஆர்ப்பட்டங்க்களை துணை கொண்டும் நீதிமன்றங்களில் திமுக
அரசுக்கும்,டாடா வுக்கும் எதிராக செயல் பட்டு தடை வாங்கியதாலும்"
எனவே தற்போது தமிழக அரசு ஆய்வுக்குழு போட்டதும், அது வரை கனிம மணல் எடுக்க தடை விதித்துள்ள தும் வரவேற்கத் தகுந்ததே.
ஆனால் மிக அதிகமான கனிம மணல் கொள்ளை நடைபெற்று வரும் குமரி, நெல்லை மாவட் டங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்படாதது முழுமையான கனிம மணல் கொள்ளை யை வெளிக் கொண்டு வரவும், அதைத் தடுத்து நிறுத்தவும் உதவாது.
இங்கு ஆய்வு நடைபெற்று வரும் போது அங் கெல்லாம் கனிம மணல் கொள்ளையை அந்த நிறுவனம் தங்கு தடையில்லா மல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அரசு நிலத்தை அபகரித்து மணல் கொள்ளை நடத்திய அந்த நிறுவனம் எவ்வித கிரிமினல் நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்படவில்லை. மேலும் ஏற் கனவே கனிம மணல்களில் இருந்து பிரித்தெடுக்கப் பட்ட கனிமங்கள் அந்த நிறுவனத்தின் கிட்டங்கிகளில் பல லட்சம் டன் சேமித்து வைக்கப்பட் டுள்ளதாகவும், அரசின் ஆய்வு உத்தர விற்குப் பிறகும் அங்கிருந்து ஏற்றுமதி செய்வது தொடர்வதாகவும், இதைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்iயும் எடுக்கவில்லை என்றும் ஊடகங் களில் செய்திகள் வந்து கொண்டே யிருக்கின்றன.
இத்தகைய கனிம மணல் கொள்ளையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அளவில் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள தாகக் கூறி கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களையும் நடத்தி யுள்ளனர்.
எனவே அரசு இத்தகைய கனிம மணல் கொள்ளை நடக்கும் நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆய்வு மேற் கொள்ள வேண்டும்.
ஆய்வு முடிவடைவது வரையிலும் எங்கும் கனிம மணல் எடுப்பதையோ அல்லது ஏற்கனவே பிரித்தெடுத்து கிட் டங்களில் வைக்கப்பட்டுள்ள கனிமங் களை ஏற்றுமதி செய்வதையோ அனு மதிக்காமல் தடை செய்ய வேண்டும்.
இந்த கனிமக் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகை யில் வி.வி.மினரல்ஸ் உட்படவுள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்து இழப் பீடு வசூலிக்க வேண்டும்.
சட்ட விரோதமாக கனிம மணல் கொள்ளை நடத்திய நிறுவனங்
களின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து கிரிமினல்
குற்றங்களுக் கான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
இத்தகைய நடவடிக்கை களை எடுப்பதன் மூலமே தற்போதைய
அரசின் மீது ஏற்படும் சந்தேகங்களை களைய இயலும்
என்பது மட்டுமன்றி இத்தகைய பொதுச் சொத்துக்களைக்
கொள்ளையடிப்போர் யாராக இருந் தாலும்
அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்ற எண்ணத்தை பொது மக்கள் மத்தியில் உருவாக்க இயலும்.
முறை
கேடுகளை வெளிக்கொண்டூவந்த ஆட்சியரை அகற்றி விட்டு விவி மினரசுக்கு ஆதரவாக
அறிக்கைகள் விட்ட இன்றைய முதல்வர் அமைத்துள்ள குழு நடவடிக்கைகள்-அறிக்கைகள்
என்னவாக இறக்கும் என்பதை கணிக்க முடிகிறது.
குழுவினர்
விவி மிரனஸ் முறைகேடாக மணல் அள்ளிய இடங்களை இன்றுவரை ஆய்வு செய்ய
மறுப்பதும் -அதற்கு எதிராக மீனவர்கள்,கிராமமக்கள் குழுவினருடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதும் நம் சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது.
அரசின் உள்நோக்கத்தையும் புரிய வைக்கிறது.
வெறும்.50 லட்சம் அபராதத்துடன்
இவ்விசாரணை மூடப்படும்.
அதுவும் விவி மினரஸ் தனது இடத்தில் அளவுக்கு கொஞ்சம்
அதிகமாக மணல் எடுத்து வந்ததாகத்தான் இருக்கும்.
பனை மரங்கள்
------------------------------------
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன.
இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.
உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன.
எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது.
தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
முன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.
கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான்.
அழிவிலிருந்து காப்பாற்ற பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"குண்டு வெடிப்பு" துண்டா.
----------------------------------------------
1993ல், மும்பை நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில், டில்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள், உ.பி.,யில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, பானிபட், சோனேபட், லூதியானா மற்றும் ஐதராபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவன் துண்டா.
இதுதவிர வேறு பல இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாகவும், அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.துண்டாவின் உத்தரவின் பேரில், டில்லியில், 24, அரியானாவில், ஐந்து, உ.பி.,யில், மூன்று குண்டு வெடிப்புகளை, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை சேர்ந்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.டில்லியில், 2010ல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்த போதும், குண்டு வெடிப்புகளை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியிருந்தான்.
ஆனால், சரியான நேரத்தில், இவனது கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டதால், நிகழவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவ முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிமுக்கு நெருக்கமான துண்டாவை கைது செய்ய, 1996ம் ஆண்டே, சர்வதேச போலீஸ் மூலம், எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டது. கைதான அவனிடம் விசாரணை நடத்துவதன் மூலம், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின், பல சதித் திட்டங்கள் அம்பலமாகும்.கடந்த, 1998ல், காஜியாபாத்திலிருந்து வங்கதேசம் சென்று, அங்கிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளான்.
40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், மத்திய அரசால் தேடப்பட்டு வரும், 20 பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவனுமான, அப்துல் கரீம் துண்டா என்ற அப்துல் குவாட்டூஸ், 70, நேற்று கைது செய்யப்பட்டான்.
இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது, நேபாள எல்லையில் சிக்கினான்.
கடந்த, 2008ம் ஆண்டில், பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக வந்த பயங்கரவாதிகள், மும்பையில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், 160க்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின், மத்திய அரசால் தேடப்பட்டு வரும், 20 பயங்கரவாதிகளின் பட்டியல், பாக்., அரசிடம் அளிக்கப்பட்டது.இந்த பட்டியலில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது, ஜெய்ஷ் - இ - முகமது தலைவர், மவுலானா மசூத் ஆசார், 1993ல், மும்பையில் நிகழ்ந்த தொடர்பு குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிம் உட்பட, 20 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.இந்தப் பட்டியலில், இடம் பெற்றிருந்த நபர்களில் ஒருவனும், மும்பை, ஐதராபாத், டில்லி, ஜலந்தர் மற்றும் ரோதக் என, நாட்டில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்ந்த, குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் வெடிகுண்டு நிபுணருமான, அப்துல் கரீம் துண்டா, நேற்று முன் தினம், மதியம், 3:00 மணி அளவில், இந்திய - நேபாள எல்லை அருகே கைது செய்யப்பட்டான்.
டில்லியில் மட்டும், இவன் மீது, 1994 முதல், 1998ம் ஆண்டு வரை, 21 வழக்குகள் பதிவாகியுள்ளன. லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பில், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு, வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பாக பயிற்சி அளித்தவன்.ஒரு கை ஊனமான இவன், யூரியா, நைட்ரிக் ஆசிட், பொட்டாசியம் குளோரைடு மற்றும் சர்க்கரை போன்ற உள்ளூரில் கிடைக்கும் பொருட்கள் மூலம், வெடி குண்டுகள் தயாரிப்பதிலும், அவற்றை மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் வெடிக்கச் செய்து, அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதிலும் கைதேர்ந்தவன்.
நேபாள எல்லை அருகே கைதான துண்டாவிடம், இந்த ஆண்டு ஜனவரியில், அப்துல் குவாட்டூஸ் என்ற பெயரில் பெற்றிருந்த, பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்தது.
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம், பிகுவா கிராமத்தைச் சேர்ந்த, துண்டா, 40 வயது வரை, தச்சு வேலை, பழைய பொருட்கள் வியாபாரம், ஜவுளி வியாபாரம் என, பல தொழில்களைச் செய்துள்ளான்.
இதன்பின், பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளான்.
துண்டாவின் இளைய சகோதரர் அப்துல் மாலிக் இன்னும், தச்சராகவே உள்ளார்.
துண்டா கைது தொடர்பாக, மாறுபட்ட தகவல்களை போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது, வளைகுடா நாடு ஒன்றில், துண்டா தங்கியிருந்ததாகவும், அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட போது, கைது செய்யப்பட்டதாக, ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.மற்றொரு தரப்பினரோ, பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து, 10 நாட்களுக்கு முன், துபாய் சென்ற துண்டா, அங்கிருந்து, நேபாள தலைநகர் காத்மாண்டு வந்ததாகவும், பின், இந்திய - நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
.