"ஆயிரம் ரூபாய்" தாள்களை தின்றால் கூட ?
மணல்
கொள்ளையை ஜெயா அரசு கையாளும் விதம் ரொம்ப நல்லாயிருக்கிறது.மணல் கொள்ளையை
கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமாரை 6 மணி நேரத்தில்
மாற்றி விட்டு தனியாக குழு அமைத்துள்ளார் முதல்வர்.மாவட்ட ஆட்சியரை மாற்ற
காரணம் என்ன?அவரையே மேலும் முறைகேடுகளை கண்டறிய வைத்து அறிக்கை
கேட்டிருக்கலாமே?
தனியான
குழு அவர் விருப்பத்தை எதிரொலித்து தானே அறிக்கை கொடுக்கும்.விசாரணை
குழுக்கள்-ஆய்வுக்குழுக்கள் பணியே ஆட்சியாளர் விருப்பத்தை அறிக்கையாக
தருவதுதானே?
மாவட்ட
ஆட்சியர் நிலையை பார்த்த பின்னரும் நடுநிலை அறிக்கை அக்குழுவினர்
தருவார்களா?அப்படி வரும் என்று பொது மக்கள்தான் எதிர்பார்ப்பார்களா?
படுக்கப்பத்து பகுதியில் வைகுண்ட ராஜன் தம்பிக்கு
சொந்தமான பி.எம்.சி. மினரல்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்ய அதிகாரிகள் உள்ளே
சென்றனர்.
அதை கேள்விப்பட்ட
அந்த பகுதி மீனவர்கள் சுமார் 50க்கும்
மேற்பட்டோர் அந்த நிறுவனத்திற்குள்ளே நுழைய முயன்றார்கள். ஆனால், அந்த
நிறுவனத்தின் காவலாளிகள் மீனவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து
நிறுத்தினர். இதனால், மீனவர்களுக்கும் அந்த நிறுவனத்தின் காவலாளிகளுக்கும்
இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவலாளிகள் அந்நிறுவனத்தின்
கேட்டை இழுத்து பூட்டி விட்டனர்.
மீனவர்கள்”
நாங்கள் கொடுத்த மனுக்களால்தான் இந்த முறைகேடுகள் வெளி வந்தன.நாங்கள் இதை
பற்றி பல விடயங்களை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் .விவி.நிறுவனத்தை மட்டும்
விசாரித்தால் எப்படி உண்மைகள் வெளிவரும்.எங்களையும் விசாரிக்க வேண்டும்.”
என்று
வாதம் செய்தனர்.ஆனால் குழுவினர் கண்டு கொள்ளாமல் இருந்து
விட்டனர்.
காவல்துறை மூலம் மீனவர்கள் தடுத்து அனுப்பப்பட்டனர்.பின்னர்
அவர்களை பார்ப்பதாக குழு அறிவித்தது.
நல்லாயிருக்கிறது அல்லவா குழு விசாரணை.?
டாடா
நிறுவனம் கருணாநிதி காலத்தில் அரசு துணையுடன் விவி மினரல்ஸ்
கொள்ளையடிக்கும் இடங்களில் டைடானியம் தொழிற்சாலை அமைக்க முயன்றதை
வைகுண்டராஜன் அப்போதைய எதிர் கட்சியின் உதவியுடனும்,தனது சாதி அமைப்பு
துணையுடனும் நிறுத்தி விட செய்த வல்லமை மிக்கவர்.இவர் முறைகேடுகள் செய்வது
பரசியம் ஆனாலும் கூட இவரை அன்றைய கருணாநிதி அரசே ஒன்றும் செய்ய இயலவில்லை
என்பது வெட்ககேடான ஒன்று.
2007-08 ஆம் ஆண்டு முதல் 2012-13 ஆம் ஆண்டுவரை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடலோர தனிமங்கள் 15,55,000 டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் ப்பட்டுள்ளது.
இதில் 13,50,000 டன் இல்மனைட் 2,05,000டன் கார்னைட். சராசரியாக ஒரு ஆண் டுக்கு 2,50,000 லட்சம் டன் இந்தியாவின் கனிம வளம் வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட் டுள்ளது. இது தவிர ஒரு நாளைக்கு 20 கண்டைனர்களில்இந்த கனி மங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின் றன.
40 ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறியிருப்பது மிகக் குறைவான மதிப்பீடாகும்.
ஏற்று மதி செய்யப்பட்ட கனிமங்களின் மதிப்புலட்சம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
இது 2ஜி முறைகேட்டால் இழந்த தொகை யில் பாதிக்கும் அதிகமாகும். இத்தகைய முறைகேடுகளை அதிகாரிகளால் அது போல் எந்த நேரமும்இடம் மாறுதல்களால் பழி வாங்கப்படக் கூடிய என்ற ஆபத்து உள்ளது என்கிற நிலையில் இருக் கிற அதிகாரிகளால் விசாரணை செய்து விட முடியாது.
எனவே, ஒரு நீதி விசாரணைக்கு உத்தர விடுவது மட்டுமே இந்த கொள் ளையின் ஒட்டுமொத்த பரிமாணத் தையும் வெளிக்கொண்டுவர உத வும். எனவே, அத்தகைய நீதி விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வளவு மணலை கொள்ளையடித்து 5000 கோடிகளுக்கும் மேல் குவித்த விவி நிறுவனம்.இன்னமும் ஏன் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறது ?
இப்போதுள்ள
பணக்குவியலெ 20 தலை முறைகளுக்கு மேல் காணும்.1000 ரூபாய்தாள்களை தின்று
வாழ்ந்தால் கூட 10 தலைமுறைக்கு தாங்கும்.பின் என் இந்த மண்ணாசை.?ஜெயா டிவி -
பொறியியல் கல்லுரி,கலைக்கல்லுரி முதல் பல தொழிகளிலும் ஈடுப்பட்டுள்ளார்.அய்யா வைகுண்டராஜன்.
இனி தனக்கு குத்தகைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நேர்மையாக தொழில் செய்தால் கூட ஆண்டுக்கு பல கோடிகளை பெட்டியில் சேர்க்கலாம்.
இருந்தும்
ஏன் புறம் போக்கு நிலங்களிலும்,அடுத்தவர் பட்டா இடங்களிலும் மணல் அள்ளும்
சின்ன அல்லது திருட்டுத்தனம்முறைகேடுகளை ?எதிர்ப்பவர்களை அழிக்கும்
வில்லத்தனம்?
அதை விட முக்கியமான கேள்வி அவரின் திருட்டுக்கு அரசு துணை போவது ஏன்?