பட்டாசு பலிகள்
தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாவது என்பது முடிவில்லா தொடர்கதைதான்.செப்டம்பர் மாதம் சிவகாசியில் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
அந்த கோரத்தில் இருந்து அரசும் பட்டாசு தொழில் செய்பவர்களும் பாடம் படித்ததாகத் தெரிய வில்லை.விபத்துகளின் சமீபங்களில் மட்டுமே அதை பற்றி பரபரப்பாக பேசுவதும்,பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு கெடுபிடி செய்வதும் நடக்கிறது.பின் அவ்ளோதான்.இன்று அந்தவகையி மற்றுமொரு வெடி வெடித்து பலரை சிதற வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மேச்சேரி அருகே
செங்காட்டூர் பிரிவு என்ற இடத்தில், பட்டாசு தயாரிக்கும் கூடத்தில் இன்று (25.12.12) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள்
உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்கும் அந்த ஆலையில்,
வானவெடிகள் உள்பட திருவிழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்குப்
பயன்படுத்தப்படும் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.ஆனால் பட்டாசு தயாரிப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனக்குறைவு வழக்கம் போல்தான்.இன்று, அந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் சாந்தியும் அவர்களது உறவினர்கள் அவர்களது குழந்தைகள் உள்ளிட்டோர் பட்டாசு தயாரித்துக்கொண்டிருக்கும்பொது திடீரென தீப் பிடித்து விபத்து ஏற்பட்டது.
பாதுகாப்பில்லா தயாரிப்பு முறை |
காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சாந்தி உள்பட நான்கு பெண்களும், சிறுவன் ஒருவனும் பரிதாபமாக இறந்து போயினர்..
காயடமடைந்த ஏழு பேர் கவலைக்கிடமான் முறயில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நம் கவனக்குறைவும்,பாதுகாப்பின்மையும்தான் இப்படி பட்ட விபத்துக்களை உண்டாக்குகிறது.ஆனால் ஒவ்வொரு விபத்திலும் நாம் பரிதாபப்படுகிறோம் தவிர பாடங்கள் படிப்பதில்லை .நம்மை விட அதிகமாக சீனாவில் பட்டாசுகள் தயாரித்து உலகமெங்கும் விற்று வருகிறார்கள்.இந்தியாவில் கூட சிவகாசி பட்டாசு தயாரிப்பை அவர்கள் தயாரிப்பு பட்டாசுகள் பின்னுக்கு தள்ளி வருகிறது.
ஆனால் தமிழ் நாட்டில் நடப்பது போல் பட்டாசு தயாரிப்பு இடங்கள் வெடித்து சிதறுவதில்லை.மனிதர்கள் கருகி சிதறி சாவை அடைவதுமில்லை.காரணம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசும்,பட்டாசு தயாரிப்பவர்களும் எடுத்துக்கொள்ளும் கவனம்தான்.
அது போல் இங்கு செயல் பட அரசுக்கும்,பட்டாசு தொழில் செய்பவர்களுக்கும் எதுதான் தடையாக இருக்கிறது என்று தெரிய வில்லை.?
செப்டம்பர் மாத சிவகாசி விபத்து |
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹோட்டல் ட்ரான்சில்வேனியா!
பெரிய நட்சத்திரங்கள், மாறுபட்ட லொக்க ஷன்கள், பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள் எதுவுமில்லாமலே பெரிய ஸ்டார் பட்ஜெட் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிக் சாப்பிட்டு, வசூலை குவித்துள்ளது ஒரு ஹாலிவுட் படம்.அந்தப்படம் அனிமேசன் படமான ஹோட்டல் ட்ரான்சில்வேனியா.
இது குழந்தைகளுக்கான ஒரு 3டி அனிமே ச ன் படமாகும். சோனி பிக்சர்ஸ் அனி மேச ன் கற்பனையில் வடிவமைக்கப்பட்ட இப்படத்தை இயக்கியிருப்பவர் கெண்டி தார்த்தா கோவ்ஸ்கி.
ட்ராகுலா என்றாலே ஒரே ரத்த வாடையும், பீதியைக் கிளப்பும் காட்சியமைப்புகளும்தான் என்பதை, இந்தப்படம் மாற்றியமைத்திருக்கிறது.
இந்த டிராகுலா மூலம் வயிறு வலிக்க சிரிக்க வைத்து, குழந்தைகளைக் கவர்ந்திருக்கிறார்கள். ஹோட்டல் ட்ரான்சில்வேனியா படத்தின் பாத்திரங்களுக்கு ஆடம் சாண்ட்லர், ஆன்டி சம்பெர்க், ஜெயின் ஜெம்ஸ் போன்றவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------------------
மக்கள்
--------------------------------
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அமைச்சரவையில், இடம் பெற்றுள்ள, 48 அமைச்சர்களில், 26 பேர், குற்ற பின்னணி உடையவர்கள். இவர்களில், நான்கு பேர் மீது, கற்பழிப்பு, கொலை, கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன' என, ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், தற்போது, அவரது அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களில், 54 சதவீதம் பேர், குற்றப் பின்னணி உடையவர்கள் என, தெரியவந்துள்ளது. சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தங்களின் சொத்து விவரம், தங்கள் மீதுள்ள வழக்குகள் ஆகியவை குறித்தும், அதில் தெரிவித்துள்ளனர்.
இதை ஆய்வு செய்தபோது, குற்றப் பின்னணி உடையவர்களை பற்றிய விவரம் தெரியவந்தது. உ.பி.,யில், மொத்தம், 48 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில், 26 பேர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கற்பழிப்பு, கொலை, கொலை முயற்சி, கடத்தல் ஆகிய வழக்குகள் உள்ள, ஐந்து அமைச்சர்களும், இதில் அடக்கம்.
ஜவுளித் துறை இணை அமைச்சர், மெகபூப் அலிக்கு எதிராக, கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட, 15 வழக்குகள் உள்ளன.
உணவுத் துறை அமைச்சர், ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பையாவுக்கு எதிராக, எட்டு வழக்குகள் உள்ளன.கிராமப்புற மேம்பாட்டு இணை அமைச்சர், அரவிந்த் சிங் கோப்புக்கு எதிராக, மூன்று வழக்குகள் உள்ளன.
முத்திரைத் தாள் துறை இணை அமைச்சர், மனோஜ் குமார் சிங் பராசிற்கு எதிராக, கற்பழிப்பு வழக்கு உள்ளது.
இந்த, 48 அமைச்சர்களில், 38 பேர், கோடீஸ்வரர்கள் என்ற விவரமும், அவர்கள் தாக்கல் செய்துள்ள, சொத்து பட்டியல் மூலமாக தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக, விவசாய அமைச்சர், குவார் ஆனந்த் சிங்கிற்கு, 18 கோடி ரூபாய் சொத்து உள்ளது.போக்குவரத்து அமைச்சர் ராஜா மகேந்திரா அரித்மான் சிங்கிற்கு, 15 கோடி ரூபாய் சொத்து உள்ளது.
ஆனால் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, ஐந்து கோடி ரூபாய் தான் சொத்து உள்ளதாம்.