ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு

ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுஇந்த ஜி.எஸ்.டி யை முன்வைத்து  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விளக்கங்கள்,கருத்துக்கள் இந்தியா முழுக்க வலம் வருகிறது.
வெளிப்படையாகவே இந்தவரி விதிப்பு அதாவது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி (G.S.T )விதிப்பு கண்டிப்பாக ,உண்மையாக பொது மக்களுக்கு எதிராக சுமையை தரும் என்பதும்,கார்பரேட்களுக்கு பணம் கொட்டும் சலுகைகளுமாகத்தான் இருக்கும் என்பதில் மட்டும் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.
அதற்கு மோடி கொண்டுவரும் சீர் திருத்தங்கள் எல்லாமே நடுத்தரவர்க்கம் வரை கொடுமைகளை தரும் விளைவுகளைத்தான் உள்ளடக்கியுள்ளது.பண மதிப்பிழப்பு,மாட்டு இறைச்சி,அரசுக்கு பணத்தை அள்ளித்தரும் பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது என எல்லாமே.
காங்கிரசு கொண்டுவர முயற்சித்து வரி விதிப்பு பற்றி யோசித்து தாமதமாகி பாஜக மோடியால் கொண்டுவரப்பட்டுள்ளது.மோடி அரசின் பணக்கார நலன் இந்த வரி விதிப்பில் அங்கங்கே வெட்ட வெளிசசமாகிறது.
பீட்சாவுக்கு 5%,கடலை மிட்டாய்க்கு 18% கார்கள் விலை 2 லட்சம் வரை குறைவு  எல்லாம்தான் அந்த மோடி விளைவுகள்.(மோடி எபெக்ட்)
 இதோ ஜி.எஸ்.டி பற்றிய மற்றோரு கட்டுரை.
செங்கொடி தளத்தில் வெளியான கட்டுரை இது.

விடப்பட்டுள்ள ஏராளமான பொய்களில் மிகவும் கொடூரமானது, “சாமானிய மனிதன் ஜி.எஸ்.டி யை வரவேற்கிறான்” என்பதுசாதாரண உழைக்கும் அடித்தட்டு மக்களை விட்டு விடுவோம்படித்து ஓரளவு நல்ல வேலையில்ஊதியத்தில் இருக்கும் பலருக்கும் ஜி.எஸ்.டி என்றால் என்னஎந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது தெரியாது
ஏதோ ஒரு புதிய வரிமுறை என்பதைத் தாண்டி இங்கே யாருக்கும் எதுவும் தெரியாதுஆனால் சாதாரண மனிதன் ஜி.எஸ்.டி யை வரவேற்கிறான் என்கிறது அரசுசிறு குறு வணிகர்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள்ஜவுளி உற்பத்தியாளர்கள்வியாபாரிகள்விசைத்தறி உரிமையாளர்கள் ஆகியோர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க மூன்று நாட்கள் நிறுவனங்களை அடைத்து போராடியிருக்கிறார்கள்பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்,திரையறங்க உரிமையாளர்களும் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்
அவ்வளவு ஏன் மாற்றுத் திறனாளிகள் கூட ஜி.எஸ்.டி யை எதிர்த்து பெரணி நடத்தியிருக்கிறார்கள்அதே நேரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்வால்மார்ட்டின் இந்திய அதிகாரி கிருஸ் ஐயர்டாட்டாஅம்பானிஅதானி உள்ளிட்ட இந்திய தரகு முதலாளிகள் ஆகியோர் ஜி.எஸ்.டி யை மனமுவந்து பாராட்டி வரவேற்கிறார்கள்.
 இது தான் எதார்த்தம்இவை அனைத்தும் நாளிதழ்களில் வெளிவந்திருக்கும் செய்திகள் தாம்ஆனால் ஒரு ஊர்சுத்தி பொம்மையும் அதன் பின்னாலிருக்கும் அரசும் சொல்கிறது சாமானிய மனிதன் ஜி.எஸ்.டி யை வரவேற்கிறான் என்றுஎவ்வளவு அருவருக்கத்தக்க வக்கிரம் இது.

ஜி.எஸ்.டி யால் யாருக்கு லாபம்பொருட்களின் விலை கூடுமா குறையுமாபோன்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்இப்படி ஒரு வரி விதிப்பு முறை வேண்டும் என்று கேட்டது யார்

மக்கள் எவ்வளவோ கோரிக்கைகளை வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்
அடிப்படை வசதிகளைக் கூட தன் மக்களுக்கு இன்னும் முழுமையாக செய்து கொடுக்க முடியாத அரசு இதுசாராயம் வேண்டாம் சாப்பாடு வேண்டும் என்று மக்கள் போராடும் நாடு இது
தண்ணீர் சுமக்க வேண்டும் என்பதற்காகவே நான்கு திருமணம் செய்வோர் இருக்கும் நாடுஇவைகளுக்கிடையில் வரியை சீர்திருத்த வேண்டும் என்று போராடியது யார்
எந்த அம்பானியும் அதானியும் இதை வரவேற்கிறார்களோ அவர்களின் கோரிக்கை தான் ஜி.எஸ்.டி வேண்டும் என்பதுஅம்பானியும் அதானியும்குப்பனும் சுப்பனும் வாழ்வில் உயர வேண்டும் எனும் ஒரே நோக்கத்திற்காக போராடும் போராளிகளா?
 கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கை எப்படி உழைக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கும்ஜி.எஸ்.டி யால் நுகர் பொருட்களுக்கு விலை குறையும் என சாமியாடிக் கொண்டிருக்கும் யாரும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் நகரக் கூடாது.

ஜி.எஸ்.டி என்பது 1956 ல் பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி விதிப்பு முறைஉலகம் முழுவதிலும் தோராயமாக 140 நாடுகள் இந்த வரிவிதிப்பு முறையை பின்பற்றி வருகின்றனஆனால் எந்த நாடும் குறைந்த விலையில் மக்களுக்கு நுகர் பொருட்களை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த வரி விதிப்பு முறையை செயல்படுத்துகிறொம் என்று அறிமுகப்படுத்தியதில்லைஇந்தியாவைத் தவிர.மட்டுமல்லாது எந்த நாட்டிலும் இந்தியா அளவுக்கு அதிக வரிவிதிப்பு இல்லைஇந்தியாவில் மட்டும் தான் 28 சதவீத வரி ஜி.எஸ்.டி யில் விதிக்கப்பட்டிருக்கிறது.


இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டதன் பின்னர் என்ன நடந்திருக்கிறது உலகில்?ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைத்திருகின்றனவா?
 அல்லது பெரு முதலாளிகளின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறதாஇந்த முதலாளித்துவ உலகில் அரசுகள் கொண்டுவரும் எத்தகைய மாற்றமும் சீர்திருத்தங்களும் மக்களை ஒட்டச் சுரண்டுவதையும்,கார்ப்பரேட்டுகளை மேலும் கொழுக்க வைப்பதையும் மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன.அப்படி இருக்க ஜி.எஸ்.டி மட்டும் மக்களுக்கு நல்லதை நிகழ்த்தி விடுமா?

ஜி.எஸ்.டி என்பது ஒரு வரி விதிப்பு முறை அவ்வளவு தான்ஆனால் இந்த வரி விதிப்பு முறையால் யார் பலனடைகிறார்கள் என்பது தான் முதன்மையான கேள்விஇரண்டு விதமான வரிகள் இருக்கின்றன
1. நேரடி வரி
2. மறைமுக வரி
தனிநபர் வருமான வரிநிறுவனங்களின் வருமான வரிசொத்து வரி ஆகியவை நேரடி வரிகள்இவை தவிர ஏனைய அனைத்தும் – விற்பனை வரிகலால் வரிசுங்க வரி,சேவை வரிசெஸ் வரி லொட்டுலொசுக்கு உட்பட அனைத்தும் – மறைமுக வரிகள்முன்பு கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் தொடங்கிஅண்மையில் கொண்டு வரப்பட்ட மதிப்புக் கூட்டு வரி முதல் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரை அனைத்தும் மறைமுக வரிகளையே மாற்றியமைக்கிறது.

ஒரு நாடு எந்த அளவுக்கு நேரடி வரிகளை உயர்த்துகிறதோஎந்த அளவுக்கு மறைமுக வரிகளை குறைக்கிறதோ அல்லது நீக்குகிறதோ அந்த அளவுக்கு அந்த அரசு மக்கள் நல அரசாக இருக்கிறது என்பது பொருள்.
 ஆனால் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?
 ஒவ்வொரு ஆண்டும் நேரடி வரி விதிப்பு குறைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறதுவருமான வரிக்கான உச்ச வரம்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறதுஇதன் பொருள் வருமான வரி கட்டுவதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கட்டும் அளவுக்கான பணக்காரர்கள் வரி கட்டுவதிலிருந்து விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் நேரடிவரியாக வசூலிக்கப்படும் தொகை இந்திய அளவில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறதுஅதாவது பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்அவர்களுக்கான வருமான வரியோ குறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கு நேர் எதிராக மறைமுக வரிகள் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
 ஒவ்வொரு பொருளின் மீதும் பல அடுக்கு வரிகள் விதிக்கப்படுகின்றனஎடுத்துக்காட்டாக நாட்டில் வெள்ளம் வந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அதை சரி செய்வதற்காக நிவாரண வரி என்பது போன்று ஏதாவது ஒரு பெயரில் விற்பனை பொருட்களின் மீது அல்லது சதவீத வரி விதிக்கப்படும்.அதாவது பொருட்களின் விலை உயரும்வாங்கிப் பயன்படுத்துவோர் அனைவரும் அந்த வரியைச் சுமந்து தான் ஆக வேண்டும்ஏழை பணக்காரன் வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தானே இந்த வரி விதிக்கப்படுகிறது என்று தோன்றலாம்.
 ஆனால் அதில் நுணுக்கமான வித்தியாசம் இருக்கிறது.ஏழை ஒருவன் நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு பத்து கிலோ அரிசியை பயன்படுத்துகிறான் என்று கொள்வோம்பணக்காரனும் அதே போன்று பத்து கிலோவையோ அல்லது கூடுதலாக ஒரு கிலோவையோ பயன்படுத்தலாம்இப்போது இருவரும் நிவாரண நிதி என்று முன்று சதவீதம் அதிகமாக அரிசியின் மீது விலை கொடுப்பதால் அதிகமாக செலவு செய்வார்கள்அந்த அதிகமாகும் செலவுதோராயமாக ஐம்பது ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்


இந்த ஐம்பது ரூபாய் என்பது ஏழையின் ஒரு நாள் வருமானத்தில் எட்டில் ஒரு பங்காக இருக்கும்இதுவே பணக்காரனுக்கு அவனுடைய ஒரு நாள் வருமானத்தில் நூறில் ஒரு பங்காக இருக்கும்இதன்படி ஏழைகள் தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியையும்பணக்காரர்கள் தங்கள் வருமானத்தின் சொற்பப் பகுதியையும் வரியாக அரசுக்கு செலுத்துகிறார்கள்
இது தான் மறைமுக வரிகளின் கொடூரம்இந்த மறைமுக வரிகளைத் தான் ஒவ்வொரு முறையும் மாற்றியமைக்கிறோம் சீர்திருத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு மக்களின் வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஜி.எஸ்.டி யின் நோக்கம் என்ன என்பது குறித்து வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள்.வரிவிதிப்பை பரவலாக்குவதுஅதாவதுநாட்டில் அதிகமான மக்கள் வரிவிதிப்பிலிருந்து தப்பி விடுகிறார்கள்வணிகர்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள்இதை முறைப்படுத்துவதற்குவரி ஏய்ப்பு செய்து விடாமல் கண்காணிப்பதற்குஇன்னும் வரி செலுத்தும் வரம்புக்குள் வராமல் இருக்கும் சிறு குறு வணிகர்களை வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு இது போன்ற வரிவிதிப்பு சீர்திருத்தங்கள் தெவைப்படுகின்றன
இதன் மூலம் நாட்டின் வரி வருமானம் உயர்ந்து அதன் மூலம் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தலாம்அமைச்சர்கள் முதல் அடிவருடிகள் வரை இது போன்ற சீர்திருத்தங்களுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் ஈறாக இப்படித்தான் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.இதில் இருக்கும் இரட்டை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

நேரடி வரிவிதிப்பில் நடக்கும் வரி ஏய்ப்புகளுக்கு என்ன விதமான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன?வருமான வரி அதிகமாக விதிக்கப்படுவதால் தான் வரி ஏய்ப்புகள் நடக்கின்றன.
 எனவேவரியைக் குறைப்பதன் மூலமும்இதுவரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலமும்,தாங்களாகவே வரி செலுத்த முன்வருபவர்களுக்கு இதுவரை வரி ஏய்ப்பு செய்த தொகையில் ஒரு சிறு பகுதியை மட்டும் வசூலித்து விட்டு தண்டனை கொடுக்காம அவர்களை விட்டு விடுவதன் மூலமும் அவ்வாறு வரி ஏய்ப்பு செய்தவர்களின் மனதை மாற்றி அவர்களை வருமான வரியை செலுத்தச் செய்யலாம் என்று அழுகுணித்தனமான வழியை கண்டுபிடித்து அதை செயல்படுத்துகிறார்கள்
இதனால் தான் ஆண்டுதோறும் வருமான வரியின் உச்சவரம்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்மட்டுமல்லாமல் இவ்வாறு அரசின் சலுகைகளை குற்றச் செயல்களிலும் (வரி ஏய்ப்புபெற்றுக் கொண்டிருக்கும் பணக்காரர்களின் மனோநிலை எப்படி இருக்கிறது
நான் வரி கட்டுபவன் எனும் அதிகாரத்திமிர் அவர்களின் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது.ஒரு சிறு குறை நேர்ந்து விட்டாலும் வரி கட்டும் எனக்கே இந்த நிலையா என்று பொங்குகிறார்கள்.அவ்வாறு பொங்குவது நியாயமாகவும் பார்க்கப்படுகிறது.


மறுபக்கம் சாதாரண உழைக்கும் மக்களை எப்படி வரி விதிப்பு வரம்புக்குள் கொண்டு வரலாம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு சிந்திக்கிறார்கள். சிறு குறு வணிகர்களை வரி ஏய்ப்பில் ஈடுபட்டு விடாமல் இருக்க, இருக்கும் அத்தனை கண்காணிப்பு நடவடிக்கைகளையும்,அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி – அவர்களால் தொழில் நடத்த முடியாமல் போனாலும் கூட – நெருக்குதல்களுக்கு உள்ளாக்குகிறார்கள்.
 இதற்காகவே வரி விதிப்பு முறைகளை மாற்றி மாற்றி வரி கட்டு இல்லாவிட்டால் செத்து போ எனும் முட்டுச் சந்துக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்
இப்படி வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அரசினால் தணலில் வறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்களின் மனோநிலையோ அரசு வரி கட்டச் சொன்னால் கட்டுவது தானே முறை.அதை ஏதாவது ஒரு வகையில் அரசு நமக்குத்தானே செலவு செய்கிறது என்று அப்பாவியாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி தெளிவாக இரட்டை நிலை எடுத்து தம் குடி மக்களில் பெரும்பாலானோரை வதைத்துக் கொண்டிருக்கும் அரசுதன் ஒவ்வொரு திட்டங்கள் மூலமும்அதை நடைமுறைப் படுத்துவதன் மூலமும் மக்கள் மடிவது குறித்து எந்தக் கவலையும் இல்லை என தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ளும் அரசுஇப்போது கொண்டு வந்திருக்கும் இந்த ஜி.எஸ்.டி மட்டும் மக்கள் நலனுக்கானது என்பதை ஏற்பதற்கு ஏதேனும் அடிப்படை இருக்கிறதா
ஆனால் முட்டுக் கொடுப்பவர்களுக்கு இது மட்டும் போதாதேஅவர்கள் தங்களைத் தாங்களே அறிவாளிகளாக நியமித்துக் கொண்டு புள்ளி விபரங்களை ஆள்ளி வீசுகிறார்கள்.

1988 லிருந்தே ஜி.எஸ்.டி யை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டனகடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வர முயற்சி செய்து பெரும்பான்மை இல்லாததால் முடியால் போய் இப்போது மோடியின் 56” மார்பு அதைக் கொண்டு வந்திருக்கிறதுகாங்கிரசும்பாஜகவும் தொடர்ச்சியாக இதை கொண்டு வர முயற்சிப்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம்
பன்னாட்டு நிதியாதிக்க கும்பல்களின் நிர்ப்பந்தம் காரணமாகவே இது கொண்டு வரப்படுகிறது என்பதை.முதலில் இவ்வாறான ஒரு வரிவிதிப்பு முறையைக் கொண்டு வர பல மாநிலங்களில் எதிர்ப்பு நிலவியதுஏனென்றால் இது மாநிலங்களில் வரிவிதிப்பில் தலையிட்டு மாநில வரி வருமானத்தை மத்திய அரசுக்கு கைமாற்றுகிறது
இதை மோடியின் மார்பு பல விதங்களில் எதிர் கொண்டது.தமிழ்நாட்டைப் பொருத்தவரை பாசிச ஜெயா மரணத்திற்குப் பின் தங்கள் அடிமைத்தனத்தை மோடிக்கு மாற்றிக் கொண்டவர்கள் என்பதால் சின்ன முணுமுணுப்பு கூட எழவில்லைபல மாநிலங்கள் தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஐந்து ஆண்டுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் எனும் அறிவிப்பில் சமாதானமடைந்திருக்கின்றனஅண்மையில் மோடி ஜி.எஸ்.டி குறித்து கூறும் போது, “எந்தக் கட்சியும் ஜி.எஸ்.டி யை எதிர்த்து தங்களை தற்கொலைப் பாதைக்குள் தள்ளிக் கொள்ளாது” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்
இதன் மெய்யான பொருள் என்னவென்றால், ‘உங்கள் ஓட்டு வாங்கும் பேச்சுக்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விடுங்கள்இது நம் எஜமானர்களின் உத்தரவு’ என்பது தான்எனவேஎந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.


ஜி.எஸ்.டி என்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானதுவேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் அரசியல் சாசனம் இந்தியாவுக்கு கொடுக்கும் வரையறை
இங்கு பல தேசியங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு தேசியத்துக்கும் ஒவ்வொரு கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் இருக்கின்றனமாட்டை வைத்து ஆர்.எஸ்.எஸ் எப்படி கலாச்சாரங்களை சிதைக்கிறதோஅதையே பொருளாதார ரீதியாக வரிவிதிப்பை வைத்து செய்வது தான் ஜி.எஸ்.டிபல்வேறு மாநிலங்கள் தங்களுக்கான தனித்தன்மையுடன் இருக்கும் போது அனைவருக்கும் பொதுவான ஒரே வரி என்பது எப்படி பொருந்தும்
இந்தியர்கள் அனைவருக்கும் இந்தி தான் ஒரே மொழி என்றால் அது எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும்?

பொருளாதார ரீதியில் பார்த்தால்அஸ்ஸாமில் தேயிலை விளைச்சல் அதிகம்பஞ்சாப்பில் கோதுமை,தென்னகத்தில் அரிசி விளைச்சல் அதிகம்இது போல் ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும்பிற மாநிலங்களில் இருந்து அஸ்ஸாமுக்கு தேயிலை கொண்டு சென்றால் அஸ்ஸாமிய தேயிலையை விட பிற மாநில தேயிலை அதிக விலை இருக்க வேண்டும்இல்லையென்றால் உள்ளூர் தொழில் நசிந்து விடும்
இதை போக்குவரத்து சுங்க வரிகளும்மாநில நுழைவு வரியும் பாதுகாக்கும்இது வெறும் தொழில் பாதுகாப்பு என்பதோடு முடிந்து விடுவதில்லைபல்லாயிரம் மக்களின் வாழ்வோடு தொடர்புடையதுமட்டுமல்லாது வணிக நோக்கில் உள்ளூரில் பற்றாக்குறை இருக்கும் போது வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் போக்கையும் மட்டுப்படுத்தும்
இவை அனைத்தையும் நீக்கி விட்டு ஒரே விதமான ஜி.எஸ்.டி வரி என்று திருத்தி விட்டால் சிறு நிறுவனங்கள் அழிந்து பெரு நிறுவங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கும்இது யாருக்கு லாபம்?ஏற்கனவே தனியார்மயத்துக்கு கூறப்பட்ட அதே மயக்கு வாதங்கள் இதிலும் கூறப்படுகின்றன.விளைவுவிவசாயம் உட்பட சிறு நிறுவனங்கள் அழிந்து பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சும் நிலை தான் இன்று இருக்கிறது
கடலை மிட்டாயை பன்னாட்டு நிறுவனம் தயாரித்து சந்தைப்படுத்துகிறதுஇந்த நிலை உள்ளூர் அளவிலும் வர வேண்டுமா?

மக்கள் வாங்கும் பொருட்களின் விலை குறையும் என்பது தான் ஜி.எஸ்.டி யை பொருத்தவரை கூறப்படும் மீப்பெரும் மயக்கு வாதம். 80 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்புக்குள் வந்து விடுவதால் அது இப்போதிருக்கும் வரியை விட குறைவானதாக இருக்கும்எனவேபொருட்களின் விலை குறையும் என்று புள்ளி விபரம் அடுக்குகிறார்கள்பேதமின்றி அன்றாடம் அனைவரும் பயன்படுத்தும் பிஸ்கட்டுகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
 இப்போதே தேனீருக்கு இரண்டு ரூபாய் வீதம் உயர்த்தி விட்டார்கள்இந்த யதார்த்தம் புரிந்தவர்கள்இந்த வரி விதிப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று மென்று முழுங்குகிறார்கள். 500, 1000 ஒழிப்பிலும் இதேயே தான் சொன்னார்கள். 60 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார் மோடி. 60 நாட்களுக்குப் பிறகு என்ன நடந்துவிட்டது அந்தக் கொடுமைக்கு நாம் பழகி விட்டோம் என்பதைத் தவிரஇப்போது ஐந்து ஆண்டுகள் என்கிறார்கள்
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியான வரி தான் நமக்கு விதிக்கப்படுகிறது என்பதையே நாம் மறந்திருப்போம்.

சரிமுட்டுக் கொடுப்பவர்களின் மொழியிலேயே இப்போது சில பொருட்களுக்கு நடப்பு அளவிலிருந்து வரி குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்ஜி.எஸ்.டி யைப் பொருத்தவரை இதுதான் வரிவிதிப்பு விகிதம் இந்த விகிதம் மாறாது என்று ஏதேனும் உறுதி மொழி கூறப்பட்டிருக்கிறதா?
 பெட்ரோல் விலை தினசரி மாறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் சில பைசாக்கள் குறைந்து வருகிறதுஇதன் அடிப்படையில் எதிர்ப்பு மழுங்கி ஏற்றுக் கொண்டு விட்டார்கள்நாளையே ஒவ்வொரு நாளும் விலை ஏறும்அப்போது என்ன செய்வது
அதேபோல நாளை ஜி.எஸ்.டி வரிவிதிப்பு விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்இப்போது விலை குறையும் என்று ஜல்லி அடிப்பவர்கள் அப்போது வேறு ஒன்றில் ஆருடம் கூறிக் கொண்டிருப்பார்கள்ஜி.எஸ்.டி கமிட்டி என மத்திய மாநில அமைச்சர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறதுஇந்தக் குழு தான் வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டு வருவதை செய்யப் போகிறதுஅப்படி என்றால் நாளை இந்த வரி விதிப்பு விகிதங்கள் கட்டாயம் மாறும் என்பதைத்தான் அந்த குழு அமைத்திருப்பது உறுதி செய்கிறது.

இந்தக் கமிட்டியும் மாநிலங்களுக்கு எந்த உரிமையும் இல்லாமல் மத்திய அரசு நினைப்பது தான் நடைபெறும் வண்னம் வடிவமைக்கப்பட்டிருக்கிறதுஎப்படி என்றால் அந்தக் குழுவில் மத்திய அமைச்சருக்கு 33 சதவீத மதிப்பும்அனைத்து மாநில அமைச்சர்களுக்கும் சேர்த்து 67 சதவீத மதிப்பும் இருக்கும்இந்த 67 சதவீத மதிப்பு என்பது எந்தப் பிரச்சனையிலும் சில மாநிலங்கள் ஏற்கும் சில மாநிலங்கள் ஏற்காது என்று இரண்டாக பிளந்தால்மத்திய அரசின் மதிப்பு மட்டுமே மொத்தமாக இருக்கும்
எனவே, மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அந்த மாற்றம் மட்டுமே செயல் வடிவம் பெறும்அதாவது உப்புக்கு ஒரு சதவீத வரியை குறைக்க வேண்டும் என்றால் கூட அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும்
இப்படியெல்லாம் திட்டமிட்டு கமிட்டிகளை அமைத்து வைத்து விட்டுத்தான் விலை குறையும் என்றும்மாநில உரிமைக்கு எந்தப் பங்கமும் வராது என்றும் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

ஒரு பொருள் வெளி மாநிலங்களில் இருந்து ஒரு மாநிலத்துக்குள் வருகிறது என்றால் அதற்கு மாநில நுழைவு வரி இருக்கும்இன்னும் பல நிலைகளிலும் அந்தந்த மாநிலங்கள் வரி வசூலிக்கும்.ஜி.எஸ்.டி முறையில் இனி இந்த வரிகள் மொத்தமும் மாநிலங்களுக்கு இல்லாமல் போகும்இதனால் மாநிலங்களின் வருவாய் குறைந்து அனைத்துக்கும் மத்திய அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலை ஏற்படும்
இது வெறுமனே மாநில உரிமை சார்ந்த பிரச்சனை மட்டும் அல்லமாநில அரசுகள் அழிக்கப்படுவதற்கான முன்னோட்டம் என்று கூட கொள்ளலாம்.


ஜி.எஸ்.டி என்பது மாபெரும் வரிச் சீர்திருத்தம்விரிந்த மார்பின் சாதனைவிலை குறையும்உள்நாட்டு உற்பத்தி உயரும் என்றெல்லாம் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவர்களின் அயோக்கியத்தனத்தை தோலுறிக்க ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதும்இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் பெட்ரோல்சாராயம் ஆகியவை சேர்க்கப்படவில்லைபெட்ரோலுக்கு 60 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறையும் போதெல்லாம் அதற்கு ஏற்ப வரிகள் உயர்த்தப்பட்டு விலை குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.மெய்யாகவே சங்கிகளும் மங்கிகளும் கூறுவது போல விலைவாசியை குறைப்பது தான் நோக்கம் என்றால் பெட்ரோலுக்கான வரியை 28 சதவீதத்துக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை சற்றேறக் குறைய பாதியாக குறைந்து விடும்
பெட்ரோல் விலை பாதியாக குறைந்தால் போக்குவரத்துச் செலவும் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விடும்அவ்வாறு குறைந்தால் காய்கறி உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் குறைந்து விடும்ஆனால் மத்திய மாநில அரசுகளின் வருவாய் கணிசமாக குறைந்து விடும்
அதனால் தான் இந்த யோக்கிய சிகாமணிகள் பெட்ரோலை ஜி.எஸ்.டி க்கு உள்ளே கொண்டு வராமல் தக்கவைத்துக் கொண்டார்கள்.தெளிவாகச் சொன்னால் பெட்ரோல் சாராயம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி க்குள் கொண்டுவர மாட்டோம் என் வாக்குறுதி அளித்துத் தான் பல மாநிலங்களை ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார்கள்இது இந்த அரசுகள் மக்களுக்குச் செய்யும் பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?

விலைவாசி குறையும் என்பது எப்படி பாமர உழைக்கும் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப் பட்டிருக்கிறதோ அதேபோல உள்நாட்டு உற்பத்தி உயரும் என்பது படித்த அறிவுத் துறையினரை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டிருக்கிறதுகடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு ஒரு அயோக்கியத்தனம் செய்திருந்ததை நினைவுபடுத்திக் கொள்வோம்
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றொரு புள்ளி விபரம் வெளியிட்டு ஏழ்மையை ஒழித்து விட்டதாக விளம்பரம் செய்து கொண்டார்கள்எப்படி அதைச் செய்தார்கள்?
 ஒரு மனிதனுக்குத் தேவையான உணவில் கலோரி அளவைக்கு குறைத்து மதிப்பிட்டுஅந்த குறைவாக மதிப்பிடப்பட்ட கலோரி அளவு உணவை வாங்கும் பண மதிப்பையும் குறைத்து மதிப்பிட்டு தோராயமாக நாள் ஒன்றுக்கு 26 அல்லது 32 ரூபாய்க்கு அதிகமாக ஒருவர் சம்பாதித்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு கீழே வரமாட்டார் என வரம்பு நிர்ணயித்து அந்த அடிப்படையில் வறுமை ஒழிந்து விட்டது என்றார்கள்
அதேபோன்ற அயோக்கியத்தனத்தைத் தான் ஜி.எஸ்.டி யால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்பதிலும் செய்திருக்கிறது பாசிச மோடியின் கூட்டமும்.


ஜி.எஸ்.டி யைப் பொருத்தவரை ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய் அளவுக்கு விற்றுமுதல்(டர்ன் ஓவர்)கொண்டிருந்தால் (கவனிக்கவும் விற்றுமுதல் தான் 20 லட்ச ரூபாய்லாபம் அல்ல) அந்த நிறுவனம் ஜி.எஸ்.டி யின் வரம்புக்குள் வந்து விடும். 20 லட்ச ரூபாய் என்றதும் பெரிய நிறுவனம் என எண்ணிவிட வேண்டாம். 20 லட்ச ரூபாய் என்பதை நாள் அளவில் கணக்கிட்டால் தோராயமாக 5500ரூபாய்நாள் ஒன்றுக்கு 5500 ரூபாயை விற்றுமுதலாக நீங்கள் கொண்டிருந்தால் நீங்களும் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வந்து விடுவீர்கள்
அதாவது வயதான ஒரு பாட்டி மாவு எண்ணெய் உள்ளிட்ட மூலப் பொருட்களை 4000 ரூபாய்க்கு வாங்கி அடுப்பில் அமர்ந்து முருக்கு சுட்டுஅதை கூடையில் அள்ளிக் கொண்டு நான்கு தெருவுக்குச் சென்று 6000 ரூபாய்க்கு கூவி விற்கிறார் என்று கொண்டால்அந்த ஆயாவும் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வந்து விடுவார்
அவர் சுட்டு விற்கும் முருக்கு உள்நாட்டு உற்பத்திப் பொருளோடு சேர்ந்து கொள்ளும்இப்படி ஆயா சுட்டு விற்கும் முருக்கையும்,சாலையோர கையேந்தி பவன் தோசையையும் உள்நாட்டு உற்பத்திப் பொருளாக சேர்த்து விட்டு,ஜி.எஸ்.டி யால் உள்நாட்டு உற்பத்தி கூடி விட்டது என்று உங்களிடம் யாராவது சொன்னால் அவர்களை எந்தச் செருப்பால் அடிப்பீர்கள்?

இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பில் முதன்மையான அம்சமாக குறிப்பிடப்படுவது என்னவென்றால் உற்பத்திப் பொருளுக்கு பல விதங்களில் வரி விதிப்பு செய்வதால் அது நுகர்வோர் தலையில் தான் வந்து விடிகிறதுஅதனால் தான் பொருட்களின் விலை உயருகிறதுஇதை மாற்றி ஒரு பொருளுக்கு ஒரே வரி என்று மாற்றி விட்டால் பொருட்களில் விலை உயராது என்று பாடம் நடத்துகிறார்கள்.
தனியார்மயத்துக்கு ஆதரவாக கூறப்பட்ட வாதமும் கிட்டத்தட்ட இதே தான்உற்பத்தியில் அரசின் கட்டுப்பாட்டை நீக்கி விட்டால் அது போட்டியை ஏற்படுத்தும்போட்டி ஏற்பட்டால் உற்பத்தியாளர்களுக்கு தரமான பொருட்களை குறைந்த விலையில் விற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்எனவே மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் என்றார்கள்.



 ஆனால் நடந்தது என்ன
பன்னாட்டு நிறுவனங்கள் நம்மையும் நம் நாட்டு வளங்களையும் சூறையாடியது தான் நடந்திருக்கிறதுஇப்போது வார்த்தைகளை மாற்றிப் போட்டு அதே வாதங்களை ஜி.எஸ்.டி வுக்கும் கொண்டு வந்திருக்கிறார்கள்
நாம் இன்னும் ஏமாறத் தயாராக இருக்கிறோமா என்பது தான் கேள்வி.


பல முனைகளில் வரிவிதிப்பு செய்வதால் விலை கூடுகிறதுஅதை ஒரே வரியாக மாற்றினால் விலை குறைந்து விடும் என்று கூறப்படுவதில் இரண்டு அயோக்கியத்தனங்கள் மறைந்திருக்கின்றன
1.இதுவரை நுகர் பொருட்களின் விலை கூடியதற்கு வரி விதிப்பு அதிகமாக இருந்தது தான் காரணமே அன்றி உற்பத்தி செய்யும் பெரு முதலாளிகள் காரணம் இல்லை என்று மறைப்பது
2. உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு எந்த வரியும் விதிக்காமல் வாங்கி பயன்படுத்தும் மக்களுக்கு மட்டும் வரி விதிப்பது என்பதை மறைப்பது
இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விலை உயர்வு என்பதற்கு முதன்மையான காரணம் ஆன்லைன் வர்த்தகமும்,பதுக்கலும் தான்இந்த இரண்டையும் சட்டபூர்வமாக அங்கீகரித்துஅதற்கு தடையாக இருந்த பழைய சட்டங்களையெல்லாம் திருத்தி மாற்றியது அரசு தான்ஆக விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருந்தது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிஅதற்குத் துணையாக இருந்து சட்டங்களை திருத்தியது அரசு.
 இப்போது இவைகளை மறைத்து வரிகள் கூடுதலாக இருந்தது தான் காரணம்எனவே அதைக் குறைக்கிறோம் என்று கூறுவது எவ்வளவு பெரிய மோசடி?


ஜி.எஸ்.டி என்பது பொருட்களை விற்கும் போது மட்டுமே வரி விதிக்கும் ஒரு முறைஎந்த முறையில் வரிவிதிப்பு இருந்தானாலும் அது வாங்கிப் பயன்படுத்தும் மக்கள் தான் அனைத்து வரிகளையும் சுமக்க வேண்டும் எனும் நிலையில் தான் இருக்கிறதுஇது ஒருபுறம் இருந்தாலும்பழைய முறைகளில் பல்வேறு வரிகள் பொருட்களின் தயாரிப்பு நிலையிலேயே விதிக்கப்படுவதாக இருப்பதால் தயாரிப்பு நிறுவங்கள் அவ்வரிகளை ஏற்றுச் செய்து விட்டு அதனை பொருட்களின் விலையில் சேர்த்து விடுவார்கள்.
 ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இந்த தொல்லைகளிலிருந்து தயாரிப்பு நிறுவனங்களை விடுவித்து அவைகளை விற்பனை முனைகளில் கொண்டு போய்ச் சேர்க்கிறது
அதாவது நேரடியாக மக்களிடம் பொருளைக் கொண்டு போய்ச் சேர்க்கும் வணிகரே அனைத்து வரிகளையும் வசூலித்து அரசுக்கு செலுத்தும் பொறுப்புதாரராக மாற்றப்படுகிறார்இதன் மூலம் பெரு நிறுவனங்களின் உற்பத்திச் செலவு குறையும்ஆனால் அது விலையை குறைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
அதேநேரம் சிறு குறு வியாபாரிகளின் சுமையை கடுமையாக அதிகரிக்கும்இதற்கான கூடுதல் செலவையும் கூட மக்கள் தான் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள்.

அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் மக்களை கடுமையாக ஒடுக்கி அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்தை உறுதிப் படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது

அந்த வரிசையின் புதிய வரவு தான் ஜி.எஸ்.டிஉள்நாட்டு தரகு நிறுவனங்களையும்பன்னாட்டு நிறுவனங்களையும் வரிச் சுமையிலிருந்து பாதுகாக்கும் இந்த ஜி.எஸ்.டி மறுபுறம் சிறு குறு உற்பத்தியாளர்களின்வணிகர்களின் பணிச் சுமையை கடுமையாக அதிகரிக்கிறது.
 தெளிவாகச் சொன்னால் கார்ப்பரேட் நிறுவனங்களைத் தவிர ஏனையவை உற்பத்தியிலிருந்துவணிகத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகிறது.அதற்கு இசைவாகத்தான் ஜி.எஸ்.டியின் விதிமுறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றனஅவைகளில் சில,
1. ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பொருட்கள் வாங்குவோரின் முகவரி தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிப்பது வணிகரின் கடமை.
2. வரியை குறிப்பிடாமல் பில் கொடுத்து வியாபாரம் செய்தால் அது தண்டனைக்குறிய குற்றம்.
3. விற்பனையை அதிகரிக்க கொடுக்கப்படும் இலவசப் பொருட்களுக்கும் வரி கணக்கிடப்பட வேண்டும்.
4. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வண்டிகளில் பொருட்களைக் கொண்டு செல்லும் போது அதன் மதிப்பு ஐம்பதாயிரத்துக்கு அதிகமாக இருந்தால் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே ஆவணங்களை வைத்திருந்து காட்ட வேண்டும்.
5. வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தாலும் அதற்கும் கண்டிப்பாக ஆவணங்களை பராமரித்து ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
6. தாக்கல் செய்யும் ஆவணங்களில் ஏதேனும் பிழை இருந்தால் அதை சரி செய்வது வரையிலான வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டும்.
7. தாக்கல் செய்யும் ஆவணங்களின் நகல்களை ஐந்து வருடங்களுக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.
8. கூட்டாக செய்யும் வியாபாரங்களில் பங்குதாரர் ஒருவர் விலகினால் அதை முறைப்படி தெரிவிக்க வேண்டும்அவ்வாறு தெரிவிக்காவிடின் அது குற்றமாக கருதப்படும்.
9. தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் தவறு இருக்கிறது என தணிக்கை செய்யும் அதிகாரி கருதினால் வேறு கணக்கரிடம் காட்டி விளக்கம் கேட்கப்படும்அவாறான தருணங்களில் அதற்காகும் செலவை அந்த வணிகரே ஏற்க வேண்டும்.
இது போன்ற விதிமுறைகளை சாதாரண வியாபாரிகளால்சிறு உற்பத்தியாளர்களால் தாக்குப் பிடிக்க முடியுமாஇது தான் ஜி.எஸ்.டி யின் நோக்கம்வேறு எதுவும் இல்லைஇவைகளுக்கு அப்பாற்பட்டு ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தம்விலை குறையும்உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்நாடு முன்னேறும் என்றெல்லாம் யாரேனும் கூறினால் அவர்களை மக்கள் விரோதிகள் என புரிந்து கொள்ள வேண்டும்.

                                                                     இன்று நான்.! நாளை நீ?
========================================================================================
ன்று,
ஜூலை-04.

  • பிலிப்பைன்ஸ் குடியரசு தினம்
  • அமெரிக்க விடுதலை தினம்(1776)
  • இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் இறந்த தினம்(1902)
  •  முன்னாள் பிரதமர் குல்சாரி லால் நந்தா பிறந்த தினம்1898)

  • =======================================
  • குல்சாரிலால் நந்தா, பஞ்சாப் மாநிலம், சியால்காட் எனுமிடத்தில், 1898 ஜூலை, 4ல் பிறந்தார். தொழிலாளர்கள் பிரச்னைகள் குறித்த ஆராய்ச்சி படிப்பு மாணவராக, 1920ல், உ.பி., மாநிலம் அலகாபாத் பல்கலையில் பயின்றார். 1921௧ல், மும்பை நேஷனல் கல்லுாரியில் பொருளாதார பாடத்திற்கான பேராசிரியரானார்.கடந்த, 1950 ல் நாட்டின் திட்ட கமிஷனின் துணை தலைவராக இருந்தார். 1951 ல், மத்திய அரசின் திட்டத் துறை அமைச்சரானார்.1957ல் நடந்த தேர்தலில் லோக்சபா, எம்.பி.,யான இவர், மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் திட்ட அமைச்சராக பொறுப்பேற்றார். 1962ல் குஜராத் மாநிலத்தில் இருந்து லோக்சபாவிற்கு, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மத்திய உள்துறை அமைச்சரானார். 
    கடந்த, 1964 ல் பிரதமராக இருந்த நேரு மறைந்த போது, இடைக்கால பிரதமராக நந்தா தேர்ந்தெடுக்கப்பட்டு, 13 நாட்கள் பதவியில் இருந்தார். 
  • 1964 ல் பிரதமராக இருந்த, லால்பகதுார் சாஸ்திரி மறைவிற்கு பின்னும்,13 நாட்கள் பதவியில் இருந்தார். ஆக இரு முறை இடைக்கால பிரதமராக இவர் பணியாற்றினாலும் இந்திய மக்களுக்கு இவரை பரவலாகத்தெரியாது.அந்த அளவு செல்பி விளம்பர மோகமின்றி  செய்தவர் நந்தா.
  • 1997ல், நாட்டின் உயரிய, 'பாரத் ரத்னா' விருது பெற்றவர். 
  • 1998 ஜன., 15ல் காலமானார்.
  • ==================================================
ஹிந்தியர்களும், இந்தியர்களும்.

"இந்தி படிக்காமல் பின் தங்கி விட்டோம். இல்லைன்னா, பாலாறும், தேனாறும் ஓடியிருக்கும். தமிழ்நாட்ட தவிர அத்தனை மாநிலமும் ஹிந்தி கற்றவர்கள்" என்று சொல்லும் அன்பு 'ஹிந்தியர்கள்' கொண்டது தான் நம் தமிழகம்.
நானும், தமிழரல்லா இந்தியர்கள் அனைவருக்கும் ஹிந்தி தெரியும் என்று நினைத்த காலமும் உண்டு. பெங்களூரில் நான் பணியாற்றும் போது தான், 'தமிழ் மாத்திரமே தெரிந்த' ஆடிட்டர் அண்ணன் நெடுமாறன் பதினைந்து ஆண்டுகள் கன்னடர்களுக்கு 'கணக்கு-வழக்கு' பார்த்த விபரம் அறிந்தேன். கன்னடமும் தெரியாது, இந்தியும் தெரியாது.
என் அப்பா சிகிச்சைக்கு ஹைதராபாத் சென்ற போது ஆட்டோ டிரைவரிடம் நான் தெலுகில் பேச, அவர் விழிக்க, அடுத்த கதை தெரிந்தது. வெறும் 'உருது' மாத்திரமே தெரிந்த அந்த ஆட்டோ டிரைவர், பிறந்தது வளர்ந்தது அத்தனையும் 'ஹைதராபாத்' தான். அவருக்கு 'தெலுகும் தெரியாது, இந்தியும் தெரியாது'.
குன்னம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பயிற்சிபட்டறைக்கு டெல்லிக்கு சென்ற போது தான் இந்தியாவின் இன்னொரு முகம் தெரிந்தது. பயிற்சி வகுப்பை இந்தியில் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள், வடகிழக்கு மாநிலத்தவர்கள்.
அப்புறம் தான் நாங்கள், தமிழக ச.ம.உக்கள் குரல் கொடுத்தோம். அடுத்து குஜராத், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களும் எதிர்த்தார்கள். உத்தரபிரதேசத்தை சுற்றியுள்ள சில மாநிலங்கள் தான் ஹிந்தியை ஏற்றுக் கொண்டவர்கள்.
'ஹிந்தி ரட்சகனாக மோடி ' 

சமீபத்தில் கார்ப்பரேட் மோடி கைங்கர்யத்தில், இன்னும் சில மாநிலங்கள் 'இந்தி திணிப்பு - எதிர்ப்பு' படையில் இணைந்துள்ளன. அதற்கு முதலில் நன்றி 'மோடி அண்ணா'.
ஆனால், மோடியை தனியாகக் கேட்டால், அவரும் குஜராத்தி மொழிக்கு ஆதரவாகத் தான் இருப்பார். ஆனால் 'ஏக இந்தியா' கார்ப்பரேட்களின் நெருக்கடியில் அவரும் 'ஹிந்தி ரட்சகனாக' உருவெடுத்து விட்டார்.
இப்போது எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பு. எதற்குமே மத்திய அரசை எதிர்க்காத மாநிலம் ஒடிசா. அவ்வளவு பின் தங்கிய மாநிலம். அதன் முதல்வர் நவீன் பட்நாயக், இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.
மைல்கல்களில் ஒடிய மொழியை தவிர்த்து, இந்தியில் எழுதியதற்கு தான் அந்த எதிர்குரல். மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒரு கடிதம் எழுதினார். "ஒடிய மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம்".
அடுத்த குரல் கேரளத்தில் இருந்து. கேரள முதல்வர் பினராயி விஜயன், பள்ளிகளில் "மலையாளம் கட்டாயம் " என்று அறிவிப்பு கொடுத்தார். இந்தி திணிப்பிற்கான எதிர்குரல் தான் அது.
அடுத்து கர்நாடகம். கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று குரல் கொடுத்தார். அவர் மாத்திரமல்ல, சாதாரண மக்களும் குரல் கொடுத்தனர்.
குறிப்பாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலைய அறிவிப்பு பலகையில் இந்தி இடம் பெறுவதை, பெங்களூரு மக்கள் கடுமையாக எதிர்த்தனர். சமூக வலைதளங்களில் அனல் பறக்க ஆரம்பித்தது. இப்போது அறிவிப்பு பலகையில் இடம்பெற்றுள்ள இந்தி மறைக்கப்படுகிறது.
காங்கிரஸ்காரர்களும் , பொதுமக்களும் மாத்திரம் எதிர்க்கவில்லை, பா.ஜ.கவினரும் எதிர்க்கிறார்கள். அது தான் கவனிக்கப்பட வேண்டியது.
_எஸ்.எஸ்.சிவசங்கர்

சி.டி.ரவி. இவர் பா.ஜ.கவின் சிக்மகளூர் தொகுதி எம்.எல்.ஏ, மூன்று முறையாக.
"Ministries and Departments should take immediate step to#StopHindiImperialism and ensure primacy for all the recognized languages in India" என ட்வீட் செய்தார்.
"அமைச்சரகங்களும், துறைகளும் இந்தி ஆதிக்கத்தை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மற்ற இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்". இது தான் ரவியின் ட்வீட். இந்தி திணிப்பு என்பதைத் தாண்டி, இந்தி ஆதிக்கம் என வலியுறுத்துகிறார் இவர்.
அடுத்து, பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா, மைசூரு தொகுதி. "Imposition of Hindi in schools. Respected @RashtrapathiBhavan. Sir pls don't impose Hindi on us. #OurKannadaOurPride.", என ட்வீட் செய்துள்ளார்.
" எங்கள் பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுகிறது. மதிப்பிற்குரிய ஜனாதிபதி, இந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள். எங்கள் கன்னடம், எங்கள் பெருமை" என்பது எம்.பி பிரதாப்பின் ட்வீட். இவர் பிரதமரை விட்டுவிட்டு ஜனாதிபதிக்கு ட்விட்டியிருந்தாலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தான் சப்ஜெக்ட்.
பொறியாளர் குருபிரசாத்தின் கேள்வி இன்னும் ஷார்ப். "ஐந்து கோடி மக்கள் தொகை கொண்டது கர்நாடகம். இதில் எழுபத்தைந்து சதவீத மக்களே படித்தவர்கள். மீதி இருக்கிற படிக்காதவர்கள் மீது இந்தியை திணித்து என்ன செய்யப் போகிறீர்கள்? ".
கர்நாடக மக்களுக்கு தெரிந்தது கன்னடம் மாத்திரமே. படித்த 75% மக்களில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களே பெரும்பான்மை. அதில் ஹிந்தியை, "பாஸ் மார்க்" கிற்காக படித்தவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்தியை படிக்கத் தான் தெரியும், ஆனால் பேச தெரியாது. அது தான் கொடுமை. இது புரியாம ஹிந்தி படிக்கணும்னு கதறும் கோஷ்டி தான் கவனிக்க வேண்டும்.
மராத்தி எழுத்துக்கள், அப்படியே இந்தியை ஒத்தவை. மராத்தி பேசுபவர்களுக்கு, இந்தி பேசுவது எளிது. ஆனால் மராத்தியர்களும் இந்தி திணிப்பிற்கு எதிர் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மகராஷ்டிராவில் 'மோடி' என்று ஒரு மொழி உண்டு. இந்தி திணிப்பால், மோடி அழியும் நிலை. அதற்காகவும் குரல் எழும்ப ஆரம்பித்து விட்டது. இன்னும் பல மொழிகள், இந்தி திணிப்பால் அழியும் கதை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது.
ஆழி.செந்தில்நாதன் அவர்களால் நான் ஒரு குழுவில் இணைக்கப் பட்டேன். "மொழி சமத்துவம் ஊக்குவிப்போம். இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல" என்பது அந்தக் குழு. அதில் இணைந்த பிறகு பல இந்தி பேசும் மாநிலங்களிலேயே 'இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு' இருக்கிறது என்பது புரிய வருகிறது.
இன்றைய செய்தி:
மும்பையில் இன்றைய ட்வீட் ட்ரெண்ட்.
#AapliMetroHindiNako
#StopHindiImposition
"எங்கள் மெட்ரோவில் இந்தி வேண்டாம்.
இந்தி திணிப்பை நிறுத்து".
80 ஆண்டுகளுக்கு முன் இந்தியை எதிர்த்த முதல் மாநிலம் "தமிழ்நாடு". இன்று மற்ற மாநிலங்கள் பின் தொடர்கின்றன.
Inferiority complex-ஐ விட்டுத் தொலையுங்கள் ஹிந்தி-தமிழர்களே !
இந்தியை எதிர்க்கவில்லை, ஆனால் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
# இப்போ இந்தியாவே திரள்கிறது, இந்தி எதிர்ப்பில் !
                                                                                                                              _எஸ்.எஸ்.சிவசங்கர்.
  முன்னாள் குன்னம் ச.ம.உ.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?