"மிரட்டல் ஆயுதம் செல்லுபடியாகுமா?"


 



கருணாநிதி மத்திய காங்கிரசை மிரட்ட ஆட்சியில் இருந்து விலகுவோம் என்றிருக்கிறார்.
அவரிடம் எப்போதும் இருக்கும் கடைசி மிரட்டல் ஆயுதம் அதுதான் .ஆனால் அது இப்போதைக்கு காங்கிரசு ஆட்சி கவிழுமளவு செல்லுமா?என்று பார்த்தால் இல்லை.
 இந்தியாவின் மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கை- 544.
 ஆட்சி அமைக்க  தனிப்பெரும்பான்மை பலமாக  273 எம்.பி.,க்கள்  தேவை.
 காங்கிரசுக்கு சொந்தமாக  206 எம்.பி.,க்கள்முன்பு  இருந்தனர்.
 குஜராத்தைச் சேர்ந்த, ஒரு எம்.பி., காலமாகி விட்டதால், பலம் 205 ஆக குறைந்துவிட்டது .
தி.மு.க. தவிர்த்து  மற்ற கட்சிகள் ஆதரவு  எம்.பி.,க்கள் 68 .
இதுதவிர ஒன்பது சுயேச்சை எம்.பி.,க்களும், ஆதரவு தருகின்றனர். இந்த கணக்குப்படி பார்த்தால் சோனியாவின் காங்கிரசுக்கு  ஆதரவு தரும் எம்.பி.,க்கள் எண்ணிக்கை278 ஆக உள்ளது.பெரும்பான்மையை விட 5 அதிகம்.
 தி.மு.க.வின் 18 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவர் என 19 எம்.பி.,க்கள் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றாலும் கூட  மத்திய அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் தப்பிவிடும்.
 காரணம்  முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் ஆதரவை தருவார்கள்.
 இந்த இரு கட்சிகளுக்கும்  மொத்தம் தலா 22,21 என மொத்தம்  43 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த கட்சிகளின் ஆதரவு எந்த சூழ்நிலையிலும் தொடரும். காரணம் முலாயம்,மாயாவதி மேல் இருக்கும் சிபிஐ.விசாரணை ஆயுதம் காங்கிரசிடம் உள்ளது.
எனவே தி.மு.க., விடுத்த விலகல் மிரட்டலை, மத்திய காங்கிரசு  அரசு பயமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை யி ல்லை.
ஆனால் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று இந்த இலங்கை தீர்மான விவகாரத்தை அலட்சியப்படுத்தி மன்மோகன்-சோனியா ஆட்சி இலங்கை பக்சே ஆதரவாக முடிவெடுத்தால் அதன் பின் வரும் தேர்தலில் மிகப்பெரிய அசிங்கமான் விளைவுகளை எதிர் கொள்ள வே ண்டும்.தமிழத்தில் கொஞ்சம் வளர்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் காங்கி ரசுக்கு  மரண அடிதான் காத்திருக்கிறது.தேர்தல் கூட்டணிக்கு வழக்கம்போல் எறி அமர
திராவிட கட்சியின் தோள்கள் கிடைக்காது.
அதுமட்டுமல்ல.இனி எத்தனை நூற்றாண்டுகளானாலும் காமராஜர் ஆட்சி கனவில்கூட வராது.
உலக அளவிலும் சொந்த மக்களை காட்டிக்கொடுத்த -நட்டாற்றில் விட்ட பெருமை அதன் மூஞ்சில் கரியாக பூசப்படும்.ஆனால் காங்கிரசின் முடிவு இந்திய நாட்டுக்கே ஒரு அவப்பெயரை தந்து விடுகிற அவலம் உண்டாகிவிட்டது.
இப்போது கூட காங்கிரசு சோனியா கூட்டத்தில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக வெற் வழி இல்லாமல் எடுத்திருப்பதாகவும்.ஆனால் ஐ.நாவில் இலங்கையின் இந்த கொடுஞ்செயல்களுக்கு துணை நிற்கும் ரஷ்யா,சீனா போ ன்ற நாடுகளின் "வீட்டோ"
உரிமையை பயன் படுத்தி இந்த வாக்கெடுப்பை தரத்து விடலாம் என்றும்.தங்களை தப்பாக நினைக்காமல் பொறுத்துக்கொள்ளவும் -தங்களுக்கு தமிழ் நாட்டின் வாயை அடைக்க அரசியல் நடத்த வேறு வழி இல்லை.என்றும் இலங்கைக்கு தூது சென்று விட்டதாகவும் தெரிகிறது.


அ துதான் உண்மையாகவும் இருக்க வேண்டும் .மொத்தத்தில் கருணாநிதியின் மிரட்டல் ஆயுத ம் வென்று விட்டதாக அவரும்.தங்கள் போராட்டம் வென்று விட்டதாக எதிர் தரப்பினரும் தாராளமாக எண்னிக்கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?