சுவரில் ஓட்டைக்கு விருது,
டி.இ.டி. இங்கிலாந்தில் உள்ள ஒருலாபநோக்கமற்ற அமைப்பு ஆகும். இது
உலகம் முழு வதும் தொழில்நுட்பம், பொழுது போக்கு, வடிவமைப்பு (T.E.D)
ஆகிய துறைகளில் சிறந்து விளங் கும் வல்லுநர்களை ஊக்கப்படுத்தி -ஒருங்கிணைக் கும் வகையில்
ஆண்டுதோறும் கருத்தரங்கம் நடத்தி வருகிறது.
இத்துறை சார்ந்த புதுமையான ஆக்கச் செயல்களுக்கு பரிசும் வழங்கு கிறது.பரிசுத் தொகையின் இந்திய மதிப்பு ரூ 5.4 கோடிகள் ஆகும்.
அந்த வகையில், இந்த ஆண் டுக்கான டி.இ.டி.
விருது வெளி நாடுவாழ் இந்தியரும் சிறந்த கல்வியாளருமான டாக்டர் சுகதா
மித்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர், இங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டில்
பல்கலைக்கழகத் தில் கல்வி தொழில்நுட்பப் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வரு
கிறார்.
1999ஆம் ஆண்டு "சுவரில் ஓட்டை"என்ற புதிய திட்ட த்தை மித்ரா வடிவமைத்தார்.. இதன்படி, டில்லியில் குடிசைப்
பகுதிக்கு அருகே உள்ள தனது ஆராய்ச்சி மய்யத்தில் உள்ள ஒரு அறையின் சுவரில்
ஓட்டை போல் சிறு அறை செய்து அதில் கணினியை மாட்டி வைத்தார். அதை அப்பகுதி குடிசைவாழ்
குழந்தைகள் இலவசமாக பயன் படுத்திக் கொள்ள செய்தார்.
கணினி அறிவு, ஆங்கில அறிவு இல்லாமல் சிறுவர்கள் தாங்களாகவே கணினியை இயக்க கற்றுக் கொள் ளும்
வகையில் வடிவமைத்திருந்தார்.அதன் பயனாக அப்பகுதி சிறார்கள் கணினி உபயோகிக்க பயின்று கொண்டனர்.இன்னமும் பயின்று வருகின்றனர்.
இச்செயலுக்காக விருது பெற்ற மித்ரா கூறியது:
"எனக்குக் கிடைத்த இந்த பரிசுத் தொகையை,
பள்ளிகள் மற்றும் குடும்பத்தினருக்கு தாமா கவே கல்வி கற்கக்கூடிய சாதனங்
களை உலகம் முழுவதும் அறி முகம் செய்வதற்காகப் பயன்படுத் துவேன். இதன்மூலம்
தாமாக கல்வி கற்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் என்
குறிக்கோள். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் தனித்திறமையை வெளிக் கொண்டு
வந்து, அவற்றை ஒருங்கிணைக்க உதவுவதன் மூலம், எதிர்காலத் துக்கான சிறந்த
கல்வி முறையை வடிவமைக்க உதவ வேண்டும் என்பதுதான் என் விருப்பம் "
-என்றார்.வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
சப்போட்டா
---------------------
இனிப்பு சுவை அதிகமுள்ள சப்போட்டா
பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள்
நிறைந் துள்ள சப்போட்டா பழம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இந்த பழத்தில்
நார் சத்து உள்ளதால் செரிமானத்துக்கு உதவுகிறது. புரோட்டின், இரும்பு சத்து
கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது. கண்பார்வையை
அதிகரிக்கும். தோல் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.
இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப
பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில்
மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக் கின்றது. சப்போட்டா பழச்சாறுடன்,
தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குண மாகும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு
தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.
கேன்சரை தடுக்கும் ஆற்றல் உடையது
சப்போட்டா.
இதுபோன்று உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்ல சப்போட்டா பழங்கள்
குறைவான விலைக்கு கிடைக் கின்றன. எனவே, சப்போட்டா பழத்தை நாமும் சாப்பிட்டு
பயன் பெறலாமே.
மிகவும் கனிந்த மற்றும் அழுகிப்போகும் நிலையில் உள்ள
சப்போட்டா பழங்களை சாப்பிடுவதை தவிர்த்து, நல்ல நிலையில் உள்ள சப்போட்டாவை
வாங்கி சாப்பிடலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------