அடுத்து வரும் "ரூ 10,000 கோடிகள்" இழப்பு?
மத்தியில் அன்னை சோனியாவின் வழிகாட்டுதலில் நடக்கும் மன்மோகன் சிங் கின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இது வரை இந்திய வரலாற்றிலே இல்லாத அளவு எந்த
துறையை தொட்டாலும் அதில் முறைகேடுகள் மற்றும் ஊழல் செய்யாமல் இருப்பதில்லை.
இத்தன ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் அண்ணல் மன்மோகன் சிங்
ஊழல்-முறைகேடுகளில் புதிய வரலாற்றையே படை த்து வருகிறார்.
அவர் பொருளாதாரத்தில் மட்டும் புலி அல்ல.
அரசு பணத்தை முறைகேடுகள் செய்வதிலும் அப்படி செய்பவர்களை காப்பாற்றுவதிலும் புலியாகத்தான் நடந்து கொள்கிறார்.
2-ஜி ,3-ஜி,கேஜி ,நிலக்கரி,இயற்கை வாயு,ஹெலிகாப்டர்,வரிசையில் இப்போது விவசாயமும் சேர்ந்துள்ளது.
விவசாய கடன் தள்ளுபடி
செய்யப்பட்டதில் தகுதி இல்லாத நபர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்து ரூ. 10
ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய கணக்காயம் மக்களவையில் தாக்கல் செய்த தனது அறிக்கையில் கூறி புதிய முறைகேட்டை வெளி கொண்டுவந்துள்ளது.
"சென்ற 2008 ல் ரூ 52 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ய" மத்திய அரசு அறிவித்திருந்தது.
"சென்ற 2008 ல் ரூ 52 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ய" மத்திய அரசு அறிவித்திருந்தது.
அ து
தொடர்பாக கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த போதுதான் இந்த புதிய ஊழல் பூதம் வெளி வந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு விவசாயக் கடன் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"ஏறக்குறைய 4 ஆயிரத்து 800 கணக்குகள் தவறான பயனீட்டாளர்கள் இந்த
பலனை அனுபவித்துள்ளனர்.
வங்கி கணக்கில் மொத்தம் 90 ஆயிரத்தில் 20 ஆயிரம்
பேர் கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது.
மத்திய அரசின் கடன் தள்ளுபடி
திட்டத்தின்படி 8 சத வீத விவசாயிகள் தகுதி இல்லாதவர்கள்.
இவர்கள் கடன்
தள்ளுபடி செய்யப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
2 ,800
கணக்குகள் வங்கி அதிகாரிகளால் திருத்தி எழுதப்பட்டுள்ளது.
கடன் தள்ளுபடி
பயனாளிகளிடம் முறையான ஒப்புகை பெறப்படவில்லை.
இந்த முறைகேட்டை மதிய அரசு கண்டும் காணதது போல் இருந்துள்ளது.
கடன் தள்ளுபடியில் ஆளுங்கட்சியினர் தலையீட்டிலே தாங்கள் இந்த கடன் தள்ளுபடிகளை செய்ததாக வங்கிகள் கூறுகின்றன.
இந்த அறிக்கை மூலம் காங்கிரசு அரசுக்கு
கூடுதல் புகழ் ஏற்பட்டுள்ளது.ஆஸ்கார்,நோபல்,போன்று உலக அளவில் ஊழல் முறைகேடுகளுக்கு ஏதாவது விருது அறிவித்தால் இந்திய மன்மோகன்சிங் அரசை உலக அளவில் யாரும் வெல்ல வாய்ப்பேயில்லை.
அதற்கு மன்மோகன்-சோனியா ஏதாவது வழி செய்யக்கூடாதா?
---------------------------------------------------------------------------------------------------------------
இவர்கள் எல்லாம் பேய் பிடித்தவர்களாம்.
--------------------------------------------------------------------------------------------------------------
சிலையான தலைகளின் நிலை.?
பிடித்தமானவர்களுக்கு அப்போதைய தலைவர்களுக்கு நினைவாக சிலையை வைப்பதும் பின்னர் வருபவர்கள் அச்சிலையை கண்டம் செய்வதும் தமிழகத்தில் மட்டுமல்ல உலகமெங்குமே நடைமுறையாகி விட்டது.நீல் சிலை அகற்றம் பலருக்கு மறந்திருக்கலாம்.
எம்ஜியார் இறந்ததும் கருணாநிதிக்கு திக வினர் வைத்த சிலையைத்தான் முதன் முதலாக உடைத்தனர்.எதுவோ கருணாநிதிதான் எம்ஜிஆரை கொன்றது போல்.
அடுத்து ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் கண்ணகி சிலை காணாமல் போய் கருணாநிதி ஆட்சியில் மீண்டு வந்தது.
ரசியாவில் லெனின்,ஸ்டாலின் சிலைகள் அமெரிக்க கைக்குலிகள் கார்பசெவ்,புடின் காலத்தில் அகற்ற ப்பட்டன.
புத்தர் சிலைகள் ஆப்கனின் தர்க்கப்பட்டன.
இப்போது சிரியாவின் அதிபர் பாஷர் ஆசாத் சிலை அகற்றப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------