10 சிறந்த காணொளி இணையத்தளங்கள்



காணொளிஇணையத்தளம் [ வீடியோ வெப்சைட் ]என்றவுடனே எல்லோர் மனதிலும் வருவது  யூடியூப் இணையதளம் .சிலருக்கு அதைத் தவிர  பல்வேறு  நிறுவனங்கள்துவக்கியுள்ள  வீடியோ வெப்சைட்கள் பற்றி தெரிவதாக தெரியவில்லை.
 இங்கே 10 சிறந்த காணொளி இணையத்தளங்கள் வரிசை தரப்படுகிறது.இவை அனைத்தும் மேலை நாடுகளில் நன்கு வரவேற்பை பெற்ற தளங்கள் .சென்று பாருங்கள்.

1. YouTube

2.Netflix

3.Hulu

4.DailyMotion



5.MetaCafe

6.Myspace Video

7.Yahoo Screen

8.Vimeo

9.Break

10.Tv.com
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு என்ன?
-கே. சீனிவாசன்
காட்டை தீயிட்டுக் கொளுத்தி சாம்பலான இடம்தான் இப்பகுதி கரிசல் காடு. கூட்டு உழைப்பால் உருவான பகுதியே இந்த வானம் பார்த்த பூமி. வானாவாரி என்பது மருவியே மானாவாரியாக மாறியது. இம் மக்கள் நீண்ட கால குறிக்கோளுடன் நவதானியங்களை பத்திரப்படுத்தி விதைத்து, இப்பகுதியில் விவசாயத்தை உருவாக்கினார்கள் என்கிறது நாட்டார் வரலாறு.
தொன்றுதொட்டு பாரம்பரியமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழையை மட்டுமே நம்பி லட்சக்கணக்கான மக்கள் மானாவாரி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கம்பு, சோளம், மிளகாய், உளுந்து, பாசிப்பயறு, வெங்காயம், மக்காச் சோளம் போன்றவற்றை பயிரிட்டு வருகி றார்கள். பருவ மாற்றத்தால் மழை இல்லாமல் பெரும்பகுதி நிலங்கள் பயிரிடாமல் தரிசாக மாறி வருகின்றன.

மத்திய-மாநில அரசுகள் கடைப்பிடித்து வரும் கொள்கைகள் காரணமாக இடுபொருள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு கட்டுப்படி யாகும் விலை கிடைக்காத காரணத்தால் தினமும் மானாவாரி விவசாயிகள் செத்துப் பிழைத்து வருகிறார்கள். “உழன்றும் உழவே தலை” என்கிறார் வள்ளுவர். எவ்வளவு துன்பமானாலும் உழவே சிறந்த தொழில் என ஏற்று, இன்றும் இப்பகுதியில் விவசாயம் நடந்து கொண்டுதான் உள்ளது.

விவசாயிகள் தற்கொலை
1970லிருந்து விவசாயக் கடன் தொல் லையால் ஊரைக் காலி செய்து பஞ்சம் பிழைக் கச் செல்வது; (நானும் பஞ்சம் பிழைக்க வந் தவன் தான்) வேறு வழியில்லாமல் தற் கொலை செய்து கொள்வது என்பது இன்று வரை நடந்தே வருகிறது.

நடப்பு ஆண்டில் (2012-13) பருவ மழையை நம்பி தங்கள் கையிலிருந்த பொருட் கள் மற்றும் கூட்டுறவு, வங்கி, தனியார் நிறு வனங்கள் மற்றும் விதை, பூச்சிமருந்துக் கடை களில் கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபட் டார்கள். பருவமழை தவறி, தேவையான நேரத் தில் போதுமான மழை இல்லாததால் முளைத்து வளர்ந்த பயிர்கள் (மக்காச்சோளம், உளுந்து, பாசி, சோளம், கம்பு, பருத்தி, மிளகாய், வெங்காயம்) முற்றிலுமாக வறண்டு கருகி காய்ந்துவிட்டது. கையில் இருந்த கொஞ்ச நஞ்ச பணமும் காலி, கடன் தொல்லை, வரு மானம் இல்லாததால் குடும்பம் நடத்த முடி யாத சூழ்நிலையில் காய்ந்து நிற்கும் பயிர்கள் கண்டு பொறுக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது இப்பகுதியில் தொடர்கிறது.

ஜெகநாதன் தற்கொலை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வர கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெக நாதன் (48) தனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். பல வரு டங்களாக தொடர் நஷ்டம். இந்த வருடம் மழை பெய்தால் நஷ்டத்தை ஈடுகட்ட 18.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். மொத்த முள்ள 20ல் 2 ஏக்கர் பருத்தியும், 18 ஏக்கர் மக் காச்சோளம் பயிரிட்டார். கடன் வாங்கி உரம் இட்டு பூச்சி மருந்து தெளித்து விவசாயம் செய்தார். பருவமழை தேவையான நேரத்தில் போதுமான அளவு பெய்யாமல் வளர்ந்த பயிர் வறண்டு கருகியது. பல லட்சம் செலவு செய்து உரமிட்டு பூச்சிமருந்து தெளித்து மகசூல் இல்லை. குத்தகை கட்டமுடியாமலும், கடன் தொல்லையாலும் கடந்த 24ம் தேதி ஜெக நாதன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மனைவி ரங்கலட்சுமி (42), மகள் ரேணுகாதேவி (19), மகன் அய்யலுசாமி (21) ஆகியோர் தெருவில் நிர்க்கதியாக நிற்கின் றனர்.
இதே கிராமத்தில் 1990களில் வறட்சி பஞ்சம் காரணமாக 14 விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டார்கள் என்று அப் பகுதி மக்கள் சொல்கிறார்கள். கடந்த மாதம் இப்பகுதியில் செந்தூர்பாண்டி என்கிற விவ சாயி தற்கொலை செய்துவிட்டார்.

வரகனூர் கிராமம்

வரகனூர் கிராமத்தில் 400 விவசாயிகள் 3000 ஏக்கரில் மக்காச்சோளம், பருத்தி ஆகி யவற்றை ரூ.6.5 கோடி செலவு செய்து பயிரிட் டுள்ளனர். தற்போது வயிற்றுப் பிழைப்புக்காக விவசாயத்தை விட்டு விட்டு பட்டாசுத் தொழிற்சாலை, கட்டுமானப்பணி, பிளம்பிங் பணிக்குச் செல்கின்றனர்.

அரசு உடனடியாக தலையிடாவிட்டால் கடன் தொல்லையால் வேறு எதுவும் நடக் கலாம் என்று கூறுகிறார் கோபால்சாமி என்ற விவசாயி. இப்பகுதியில் உள்ள அனைத்து ஊர்களிலும் இதே நிலைதான்.

திசை திருப்பும் அதிமுக அரசு

டெல்டா பகுதியில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதிமுக அரசு நீதி மன்றத்தில் விவசாயிகள் வேறு காரணங்க ளால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்கிறது.

இதே பொய்யைத்தான் இப்பகுதியிலும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பரப்பு கிறார்கள். செந்தூர்பாண்டி, ஜெகநாதன் மரணம் குடும்பப் பிரச்சனையே என்று அசிங்கமாக பிரச்சாரம் செய்கிறார்கள். (மானா வாரி பயிர்கள் 95 சதவீதம் பாதிக்கப்பட்டுள் ளது என்றும் கடந்த காலங்களைவிட இந்த ஆண்டு 250 மி.மீட்டர் மழை குறைந்துள்ளது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித் துள்ளார்)
ஜெகநாதன் மரணத்தை திருவேங்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து எல்லைக் குட்பட்ட சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனை செய்தால் விவசாயிகள் திரள்வார்கள் என்று முடிவு செய்து கோவில்பட்டி மருத்துவமனைக்கு பரி சோதனைக்கு அனுப்பினார்கள்.

மேலும் காவல்துறை, விவசாய பாதிப்பால் மரணம் என்று வழக்குப் பதிவு செய்யாமல் திசை திருப்ப முயற்சி செய்தது.

ஆகவே உண்மையான வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத் திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கட்சி, மதிமுக, சிபிஐ+ ஆகிய கட்சிகள் உடலை வாங்க மறுத்துப் போராடிய பின் அதி காரிகள் கோரிக்கையை ஏற்பதாக உறுதி யளித்தார்கள். விவசாயி மரணத்தை பற்றி காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் வாய் திறக்க மறுக் கின்றன.

· அதிமுக அரசு திசை திருப்ப முயற்சி செய் கிறது. தமிழகத்தில் இதுவரை விவசாயம் பொய்த்தாலும் பயிர்வாட்டம், மன உளைச்சல், மாரடைப்பு, தற்கொலை என்று 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

தீர்வு தான் என்ன?

கீழ்க்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றி விவசாயி களை பாதுகாக்க வேண்டும்.

· மத்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி களில் போர்க்கால அடிப்படையில் நிவா ரணப் பணிகள் தொடங்க வேண்டும்.


· மானாவாரி பகுதி கண்டு அமைச்சர்கள் குழு உடனே சென்று ஆய்வு நடத்த வேண்டும்.

· மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட் டத்தை விவசாய உற்பத்தி மற்றும் வளர்ச் சிப் பணிகளுக்கு பயன்படுத்தி 100 நாட் களை 150 நாட்களாகவும், 100 ரூபாய் கூலியை 250 ஆகவும் உயர்த்த வேண் டும்.

· தற்கொலை செய்து கொண்ட விவசாயி களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

· குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும்.

· மத்திய அரசு நிதி 1000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

· ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை ஏற்க மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க மறுக்கின்றன.

"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே-

செல்வத்தை தேய்க்கும் படை"
 - திருவள்ளுவர்

அல்லலுற்று ஆற்றமாட்டாது அழுத ஏழை குடிமக்களின் கண்ணீரே முறையற்ற அரசனின் செல்வத்தை அழிக்கும் படை யாகும் என்பதை ஆளும் அரசுகள் உணர வேண்டும்.

[நன்றி:தீக்கதிர்.கட்டுரையாளர், சிபிஎம் நகரச் செயலாளர் கோவில்பட்டி,]
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தலைக்கு"டை'அடிப்பதால்,
கண்பார்வைபாதிக்கப்படுமா?

#கடைகளில்  விற்கப்படும், "டை' களில், ஏதாவதொரு வேதிப்பொருள் இருக்கத் தான் செய்கிறது. 
கருமை நிறத்திற்காக, "டை' களில் சேர்க்கப்படும், "பாரா பெனிலைன் டை அமின்' எனும் வேதிப்பொருள்தான் , பலருக்கு, எதிர்வினையை[அலர்ஜி] ஏற்படுத்துகிறது. "டை' அடித்த சில நாட்களில், ஒருவருக்கு, தலையில் அரிப்பு, சிறு கொப்பளங்கள் ஏற்பட்டால், "டை' ஒத்துக் கொள்ளவில்லை என அர்த்தம். உடனே, அதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து அடித்து வந்தால், உடல் முழுவதும் தோல் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படுவதுடன், தோல் கருமையாக மாறும் அபாயம் உள்ளது. உடலின் தன்மையை பொறுத்து, நாளடைவில்,  சிறுநீர்ப்பையில் புற்றுநோயும், கண்பார்வை பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. "பாரா பெனிலைன் டை அமின்' கலக்காத, முடிக்கு செந்நிறத்தை தரும், "டை'களை பயன்படுத்துவதால், இப்பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?