"மார்ச் -2012 "

"மார்ச் -2012 "ல் நடந்த நிகழ்ச்சிகள் இப்போது வரலாற்று பகுதியில் சேர்ந்து விட்டது.அதனால் அந்த வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம்.

உலகம்: 

மார்ச் 14: சூடானும் - தெற்கு சூடானும், மக்கள் இருநாடுகளுக்கும் சுதந்திரமாக சென்று வர, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மார்ச் 16: ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டிருந்த, நேட்டோ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி, 15 பேர் பலி.
மார்ச் 19: பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான டோங்கா நாட்டின் கடைசி மன்னர் ஜார்ஜ் டூபோவூ,[வயது  63], மறைந்தார்.
மார்ச் 20: மெக்சிகோவில் ரிக்டர் அளவில் 7.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 800 பேர் வீடுகளை இழந்தனர்.

இந்தியா:

மார்ச் 2: ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் அலுவலகம், ஒட்டுகேட்கப்பட்டதாக புகார் . உளவுத்துறை விசாரணைக்கு உத்தரவு.
மார்ச் 9: கோவா மாநில முதல்வராக, பா.ஜ., வைச் சேர்ந்த மனோகர் பரிக்கர் பதவியேற்றார்.
* மணிப்பூர் மாநில முதல்வராக காங்கிரசின் ஒக்ரம் இபோபி சிங் பதவியேற்றார்.
மார்ச் 13: உத்தரகண்ட் மாநில முதல்வராக காங்., கட்சியை சேர்ந்த விஜய் பகுகுணா பதவியேற்பு.
* பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சொத்துக் கணக்கு 111 கோடி என, அவரது ராஜ்யசபா எம்.பி., தேர்தல் வேட்பு மனு மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
மார்ச் 14: ஒடிசா மாநிலத்தில், இத்தாலியைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகளை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றனர். பல நாட்களுக்குப்பின் விடுதலை.
மார்ச் 14: பஞ்சாப் முதல்வராக சிரோண்மனி அகாலி தளம் சார்பில் பிரகாஷ் சிங் பாதல் 5வது முறையாக பதவியேற்றார்.
மார்ச் 15: ரயில்வே பட்ஜெட்டில், 10 ஆண்டுகளுக்குப்பின் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப் பட்டன. மம்தா பானர்ஜி எதிர்ப்பால் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா, கட்டணம் வாபஸ்.
மார்ச் 17: ஜோர்டானுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் உதவ, இந்திய தேர்தல் ஆணைய குழு பயணம்.
மார்ச் 20: முல்லை பெரியாறில், புதிய அணை கட்ட, முதல்கட்ட பணிகளைத் துவக்க, கேரள பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மார்ச் 24: 2012ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் (பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன்) 53 பேருக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டிலால் வழங்கப்பட்டது.
மார்ச் 25: தென்கொரியாவில் நடந்த, அணு ஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார்.
மார்ச் 29: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 4வது மாநாடு டில்லியில் நடந்தது.
மார்ச் 30: ஒலியை விட அதிக வேகத்தில் செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

தமிழ் நாடு:

மார்ச் 15: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, சிறையில் முதல் வகுப்பு வழங்க, சென்னை உயர் நீதி மன்றம் ஆணை .
மார்ச் 19: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்க வலியுறுத்தி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்ச் 31: அ.தி.மு.க., உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விலகல் நாடகம் முடிந்து மீண்டும் போயஸ் தோட்டத்தில் குடி புகுந்தார்..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------



------------------------------------------------------------------------------------------------------------------------------------

இறுதிப் போரின் போது ஊடகத்தினரின்  கேள்வி:
" அப்பாவி ஈழத் தமிழர்கள் இந்த போரில் கொல்லப்படு கிறார்களே?"
  ஜெயலலிதா  பதில்:-

" அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. 
ஈழத் தமிழர்கள் என்பது தவறு.இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் சரி.
அதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது.
 இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை
ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள். 
 இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாது காப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்."

- ஜெ.ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர், 18.1.2009)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
o நீங்கள் இல்லாத போது
 ---------------------------
 உங்கள் கணினியை யாராவது உபயோகிப்பதாக உங்களுக்கு ஒரு சந்தேகம்,அல்லது பயம் இருக்கிறதா?
அதை போக்கிடலாம்.வழி இருக்கிறது.


உங்களது கணினி யை வேறுயாரவது  உபயோகித்தால் அவர்கள் உங்கள் கணினி யில் செய்த செயல் கள் குறித்து இனி நீங்கள்  எளிதாக அறிந்து கொள்ளலாம்.
இதற்கு கீ லாக்கர்  ["Key logger "]என்ற மென்பொருள்  கை கொடுக்கிறது. கணினி யில் மற்ற வர் என்னென்ன செய்கிறாரோ அவை  அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.
இந்த மென்பொருள் குறிப்பிட்ட  நேரத்திற்கு ஒருமுறை என்ற கணக்கில் கணினியின் செயற்பாடுகளை  திரைப்பதிவு [ஸ்கிரீன் ஷாட் ]எடுத்து சேமித்து வைத்திருக்கும்.
அத்துடன் Chat History, History Log File என்பவற்றையும் சேமித்து வைத்திருக்கும்.
அதன் மூலம் நீங்கள் இல்லாத குறிப்பிட்ட நேரங்களில் கணினி என்ன வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் படம்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
 மேலும் இந்த மென்பொருள்  கணினியின் விசைப்பலகையில்  அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது.

 பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள்  கடலை [சாட்] போடுவதை  அப்படியே பதிந்து வைத்துக்கொள்கிறது.

 கணினி யில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது.

உங்கள்  கணினி யில் இருந்து உலவப்படும்  இணையத்தளங்களை கண்காணித்து குறித்து வைக்கிறது.
கணினியில்  தரவிறக்கம்ஆகும் ஒவ்வொரு கோப்பு  பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
இதன் மூலம் உங்கள் கணினியில் நீங்கள் இல்லாத போது நடந்த விடயங்கள் அனைத்தையும் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?