2ஜி கணக்கு?



2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கான இரண்டாம் கட்ட ஏலத்தின் மூலம், மத்திய அரசுக்கு, 3,639 கோடி ரூபாய் மட்டும் கிடைக்கும் எனத் தெரிகிறது.
 மும்பை, உ.பி., கிழக்கு பகுதி ஆகிய மண்டலங்களுக்கான ஏலத்துக்கு, யாருமே விண்ணப்பிக்க வில்லை.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில்ரூ 1,80,000கோடிகள் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட உரிமங்களுக்கு பதிலாக, புதிய உரிமங்கள் வழங்குவதற்கு, மறு ஏலம் நடத்தும்படியும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதன்படி, ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்துக்கான சேவையை வழங்குவதற்கு, கடந்தாண்டு நவம்பரில் ஏலம் விடப்பட்டது. இதில், அரசு எதிர்பார்த்த வருவாயை விட, மிக குறைவாக, 9,407 கோடி ரூபாய் மட்டும்  கிடைத்தது.
அதேநேரத்தில், சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்துக்கான சேவையை வழங்கும் ஏலத்துக்கான அடிப்படை விலை, அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த ஏலத்தில், எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை.இதையடுத்து, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஏல தொகையை விட, 50 சதவீதம் குறைவாக, ஏல தொகை நிர்ணயிக்கப்பட்டது.
 இதற்கான ஏலம், நடந்தது. ஏல தொகை கணிசமாக குறைக்கப்பட்டபோதும், ரஷ்யாவைச் சேர்ந்த, சிஸ்டெமா எஸ்.எஸ்.எஸ்.டி.எல்., நிறுவனம் மட்டுமே, ஏலத்தில் பங்கேற்றது.
 நான்கு மணி நேரம் நடந்த இந்த ஏலத்தில், சிஸ்டெமா நிறுவனம், எட்டு மண்டங்களுக்கு சேவை வழங்குவதற்கான ஏலத்தை எடுத்ததாகவும், இதன்மூலம், அரசுக்கு, 3,639 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், தொலை தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 இதை தவிர, வேறு எந்தவிதமான கூடுதல் கட்டணமும், அரசுக்கு கிடைக்கவில்லை.
அதேநேரத்தில், மும்பை, மகாராஷ்டிரா (மும்பை, மகாராஷ்டிரா மாநில தலைநகராக இருந்தாலும், தொலை தொடர்பு துறையை பொறுத்தவரை, மும்பையும், மகாராஷ்டிராவும், தனித் தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன) உ.பி.,யின் கிழக்கு பகுதி ஆகிய மண்டலங்களுக்கு யாருமே ஏ ல ம் கேட்கவில்லை.
இந்த ஏலம் மூலம் இரு  சந்தேகங்கள் வருகின்றன.
ஒன்று இவ்வளவு குறைவாக  ஏலம் போகும் 2ஜி ஏலத்தில் 180000 லட்சம் கோடிகள் முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தணிக்கை துறை அறிக்கையில் கணக்கீடு தவறா?
18,000 கோடிகள் என்பது 1,80,000 லட்சம் கோடிகள் என்று இருக்கிற சை பர்களை எல்லாம் எழுதி  தவறாக  குறிப்பிடப்ப்பட்டுள்ளதா?
 இரண்டு .இந்த ஏலத்தை மிகக்குறைவாக காட்ட வேண்டும் என்று அலைவரிசை நிறுவனங்களும் -மத்திய அரசர்களும் திட்டமிட்டு பல நிறுவனங்கள் கலந்து கொள்ளாமலும் ,குறைவாக கேட்டும் ஏலத்தை குறைவாக்கி விட்டார்களா?
அதன் மூலம் 2ஜி முறைகேட்டை கேள்விக்குறியாக்கி விட திட்டமா?
எதுவானாலும் இந்த சந்தேகங்களை சரி செய்யும் கடமை கணக்கு
தணிக்கை துறைக்கு ம் ,எல்லா முறைகேடுகளையும் பூசி மூடும் மத்திய அரசுக்கும் உள்ளது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொறுப்பில்லா பொறுப்பாளர்கள்.
-------------------------------------------------------------------------
இந்திய மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை தற்பொதைய அறிவிப்பு ஒன்று .
"இதுவரை இந்தியா  முழுக்க இந்திய ஆட்சிப்பணியாளர்கள் { I.A.S,} அதிகாரிகள்  1,000 பேர்வரை  2012ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை. இதில் 20 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நாட்டிலேயே மிக அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இ.ஆ.ப . அதிகாரிகள் தான் சொத்துக் கணக்கைக் காட்டவில்லை. இந்த மாநிலத்தைச் சேர்ந்த 147 பேரிடம் இருந்து அசையா சொத்துக் கணக்கு வரவில்லை.

கர்நாடகத்தைச் சேர்ந்த 58 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த 53 பேரும், பஞ்சாபைச் சேர்ந்த 48 பேரும், ஒரிசா ச் சேர்ந்த 47 பேரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 45 பேரும், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 பேரும், ஹரியாணாவைச் சேர்ந்த 35 பேரும், ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த 25 பேரும், ராஜஸ்தானைச் சேர்ந்த 22 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரும், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 17 அதிகாரிகளும் அசையா சொத்துக்களின் விவரத்தை தாக்கல் செய்யவில்லை.
அதே போல அருணாசல பிரதேசம், கோவா, மிசோரத்தைச் சேர்ந்த 114 அதிகாரிகளும், மணிப்பூர், திரிபுராவைச் சேர்ந்த 100 பேரும், காஷ்மீரில் 96 பேரும், மத்திய பிரதேசத்தில் 88 அதிகாரிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தம் 6,217 இ.ஆ.ப. அதிகாரிகள் பதவிகள் உள்ளன.
இதில் 1,339 பேர் ஐஏஎஸ் தேர்வு எழுதாமல் பதவி உயர்வு மூலம்இ.ஆ.ப உயர்வு பெற்ற வர்கள். இப்போது 4,737 பேர் தான் பதவிகளில் உள்ளனர்.
இவர்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் தங்களது சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது பதவி உயர்களை மறுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு."என்று அறிவித்துள்ளது.
இந்திய நாட்டின் நிர்வாகத்தையே கைக்குள் வைத்திருக்கும்,அதன் சட்ட திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள இ .ஆ.ப.க்களே இப்படி பொறுப்பற்று இருந்தால் இந்திய நிர்வாகத்தில் சீர்கேடுகளுக்கு பஞ் சமின்றி போ ய் விடுமே?
---------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?