இலங்கை ஆதரவில்
"இந்திய சோனியா அரசு "...,
"இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவால்
கொண்டுவரப்படும் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்" என்பது
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து இந்தியாவில் மக்களிடமி ருந்து பெறப்பட்ட 14 லட்சம்
கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வி நாராயணசாமியிடம் மனித
உரிமைகளுக்கான அமைப்பான அம்னெஸ்டி இண்டர்ஷனலின் இந்திய தலைமை நிர்வாகி
ஜி. அனந்தபத்மனாபன் ஓப்படைத்தார்.
தமிழ்நாட்டைச்சேர் ந்தவர்கள் 12 லட்சம் பேர்களும் மற்ற பகுதிகளில்
இருந்து இரண்டுலட்சம் பேர்களும் இதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
இந்த
மனுவில் பலர் தன்னார்வத்துடன் கையெழுத்திட்டு வருகிறார்கள். இதுவரையிலான மொத்த எண்ணிக்கை பதினைந்து லட்சத்தை
தாண்டிச் சென்றுள்ளதாம்.
இலங்கையில் நடந்த கடுமையான மனித உரிமை மீறல்கள்
குறித்து சர்வதேச குழு விசாரணை தேவை .இதற்கு இந்தியா தனது கடுமையான வலியுறுத்தலை ஐ.நாவில் வலியுறுத்தவேண்டும்.
இலங்கையில் தற்போதும்
நடந்துவரும் மனித உரிமை மீறல்களை ஐநா தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்
.இதை அங்கு நிவாரணப்பணிகள் செய்வதாக நிதியை கொடுக்கும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இலங்கையில் நடக்கும் பல்வேறு
மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருக்கும் பயங்கரவாத தடைசட்டத்தை உடனடியாக
ரத்து செய்யவேண்டும்.
தமிழர்களை வரவர் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் .அங்கு சிங்கள மக்களை பெருமளவில் குடியேற்றி இடையூறு செய்வதை இலங்கை அரசு கைவிட வேண்டும் .என்பது போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த கையெழுத்துக்கள்
பெறப்பட்டுள்ளது.
ஆனால் மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர்
நாராயணசாமி "
இந்தியாவின் நிலைப்பாடு இன்னமும் இறுதி செய்யப்படவில்லை" என்று மழுப்பலாகவே பேசியதாக தெரிகிறது.
அமைச்சர நாராயணசாமி பேசியதை வைத்துப்
பார்த்தால் " இந்த பிரச்சனையில் இந்தியா மனித உரிமைகளுக்கும் ,இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கும் ஆதரவாக நிலையை எடுக்க இந்தியா இன்னமும் தயாராகவில்லை என்பது தெரிவதாக மனு அளித்த அனந்த பத்மநாபன் கூறினார்.
"இந்தியா தமிழர்களின் மனித
உரிமைகளுக்கு ஆதரவாக தெளிவான நிலையை எடுக்க இன்னமும் தயங்குவதும் ,இலங்கை ராஜபக்சேக்கு ஆதரவாகவே இருப்பதும் வெளிப்படையாக உள்ளது.என்றும் அம்னே ஸ்டி தலைமை நிர்வாகி வருத்தத்துடன் தெரிவித்தார்.
இன்னமும் கோடிபேர் க ள் கையெழுத்திட்டாலும் இந்தியாவின் சோனியா அரசு இலங்கை ஆதரவில் இருந்து இப்போதைக்கு வெளிவருவது சந்தேகமே.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------