400 ஆண்டுக்கு மின்சாரம்
இந்தியாவில் 400 ஆண்டுக்கு மின்சாரம் தடையே இல்லாமல் தயாரிக்க தேவையான
தோரியம், தமிழக, கேரள கடலோரங்களில் குவிந்து உள்ளது.
பாபா அணு
ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி, டேனியல் செல்லப்பா கூறியதாவது;
"நீர், அனல் மின்நிலையங்கள் சில ஆண்டுகளுக்கு
மட்டுமே பலன் தரக்கூடியவை. இன்னும் சில ஆண்டுகளில், இந்த மின்நிலையங்களை
செயல்படுத்த முடியாது.
அணு மின்நிலையம், அப்படியல்ல. சுற்றுச்சூழலுக்கு
மாசு ஏற்படுத்தாமல், நமக்கு தேவையான அளவு மின்சாரத்தை அணு சக்தி மூலம் பெற
முடியும்.
அமெரிக்காவில், சராசரியாக ஒரு நபர், ஆண்டிற்கு 12 ஆயிரம் யூனிட்
மின்சாரம் பயன்படுத்துகிறார்.
ஐரோப்பிய நாடுகளில், 6,000 யூனிட்
பயன்படுத்துகிறார். மற்ற நாடுகளில் 1500-1000 வரை பயன் படுத்துகிறாகள்.
ஆனால் இந்தியாவில் ஒரு நபர் 660 யூனிட் மட்டுமே
பயன்படுத்துகிறார்.
அந்த தேவையைக்கூட பூர்த்தி செய்ய இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்ய
முடியவில்லை.
அனல்- நீர் மின்நிலையங்கள் மூலம், தமிழகத்திற்கு தினமும் 5500
மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
மத்திய தொகுப்பில் இருந்து 3000 மெகாவாட்
கிடைக்கிறது.
ஆனாலும் தமிழ் நாட்டின் தேவைக்கு தினமும் 3500 மெகாவாட்டிற்கு மேல் பற்றாக்குறை உ ள்ளது.
இதற்கு தீர்வு . அணுமின்சார உற்பத்தியே.அதுதான் மிகவும் எளிதானதும் கூட .
கன்னியாகுமரி
மணவாளக்குறிச்சி கடற்கரை பகுதிகளிலும், கேரளா ஜாராகுஷா கடற்கரையிலும்,
ஜார்கண்ட் மாநிலத்திலும் தோரியம் அதிகம் கிடைக்கிறது.
தோரியத்தை, யுரேனியமாக
மாற்றி மின்சாரம் தயாரிக்கலாம்.
எதிர் வரும் 400 ஆண்டுகளுக்கு, நம் நாட்டின் மின் தேவைக்கு ஏற்ப தடையே இல்லாமல் மின்சாரம் தயாரிக்கும் அளவு இந்தியாவில் தோரியம் இருப்பு உள்ளது.
எதிர் வரும் 400 ஆண்டுகளுக்கு, நம் நாட்டின் மின் தேவைக்கு ஏற்ப தடையே இல்லாமல் மின்சாரம் தயாரிக்கும் அளவு இந்தியாவில் தோரியம் இருப்பு உள்ளது.
அதிக
மின்சாரம் தயாரிக்கப்படும் போது, பெட்ரோல், டீசல் தேவையை குறைத்துக் கொள்ள
முடியும்.
மின்சக்தியில் இயங்கும் மின் வாகனங்களை உற்பத்தி செய்யலாம்.
அணுமின் சக்தி
மூலம் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு எளிதான தீர்வு காண முடியும்.
உணவுப்பதப்படுத்தும் தொழிலில் அணு, சிறந்த தொழில்நுட்பமாக மாறி வருகிறது.
அணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த
முடியும்.
இப்போதுள்ளது போன்று மாசு அதிகரித்துக் கொண்டெ போனால் எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் முதுகில் ஆக்சிஜன் உருளைகளை கட்டிக்கொண்டு
அதன் மூலம்தான் நல்ல காற்றை சுவாசித்துக்கொண்டு அலையவேண்டும்."
கூறியுள்ளார்.
தமிழக கடற்கரை பகுதியில் கிடைக்கும் தோரியம் மிக்க அந்தமணலைத் தான் தமிழக அரசின் ஆசியோடு கப்பல்,கப்பலாக வி.வி.மினரல்ஸ் என்று பெயரை வைத்துக்கொண்டு வைகுண்டராஜன் விற்று பணக்குவியலை குவித்து வருகிறார்.
மிச்சம் உள்ள தோரியம்,டைடானியம் ,சிர்கொனியம் மிக்க மணலையாவது அரசு தக்கவைத்து இது போன்று உபயோகங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளுமா?
-------------------------------------------------------------------------------------------------------------