கருணாநிதி துரோகம்.....
இன்றைய ஊடகங்கள் பல கருணாநிதி வெளியெ வந்தது நாடகம் என்று பக்கம்,பக்கமாக எழுதியுள்ளது.ஆனால் இதே ஊடகங்கள்தான் முன்பு கருணாநிதி சரியானவராக இருந்தால் மத்திய ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்று பக்கம் பக்கமாக எழுதியவை.
அதேபோல் 2009 இல் ஈழத்தமிழர் பிரச்னையில் துரோகம் செய்து விட்டதாகவும் மீண்டும்,மீண்டும் எழுதி வந்தன.
இங்கே நான் ஒன்றை பதிவு செய்ய விரும்பிகிறேன்.நான் திமுக வோ,அல்லது கருணாநிதி ஆதரவாளரோ கிடையாது.என்பதுதான் அது.உண்மை நிகழ்வுகளை சிலர் திட்டம் போட்டு தங்கள் வசம் ஊடக பலம் இருப்பதால் மறைத்து திசை திருப்பி வருவதை கண்டு மனம் பொறுக்காமல்தான் இதை மீண்டும் பதிவு செய்கிறேன்.
முன்பிருந்தே ஈழப்பிரச்னையில் கருணாநிதி தனது ஆதரவை தந்துதான் வருகிறார்.அதனால் இரு முறை தனது ஆட்சியை இழந்தும் இருக்கிறார்.ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டதும் அதில் அதிகம் பாதிக்கப்பட்டவர் கருணாநிதிதான்.பாதிக்கப்பட்ட இயக்கமும் திமுக தான்.காரணம் அதன் புலிகள் ஆதரவு போக்குதான்.ஆனால் ராஜீவ் கொலையால் பலன் அடைந்தவர் ஜெயலலிதா .அதிமுக அதிக அளவில் வென்று ஆட்சியமைத்தது.
ஆனால் பிரபாகரன் எம்ஜியார் ஆதரவாளர்.அதற்கு காரணம் புலிகள் இயக்கம் மற்றைய சக தமிழ் ஈழப்போராளிகளை அழித்து ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டதை கருணாநிதி கண்டித்ததுதான்.அதானால் தான் முந்தைய டெசோ மூலம் திரட்டப்பட்ட தொகையை விடுதலை இயக்கங்களுக்கு [பிளாட், போன்ற] திமுக பிரித்து கொடுத்த பணத்தை பிரபாகரன் வாங்க மறுத்தார்.
ஆனாலும் திமுக அனைத்து தமிழீழ இயக்கங்களை ஒன்றாகவே பார்த்து வந்தது.
2009 இல் கருணாநிதி முதல்வர்.இலங்கையில் நடந்த போரோ ஒருஅண்டை நாட்டின் உள்னாட்டு யுத்தம்.
அதில் இந்திய அரசே தலையிடக் கூடாது.அப்படி நிலையில் ஒரு மாநில முதல்வர் பொறுப்பில் உள்ளவர்.என்ன செய்ய இயலும்.என்ன செய்திருக்கலாம்.என்ன செய்திருக்க வே ண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?தமிழ் நாட்டின் காவல்துறையை அல்லது
திமுகவினரை கொண்டு சென்று இலங்கை ராணுவத்துடன் சண்டை செய்ய வேண்டுமா?
அல்லது என்ன செய்ய இயலும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.
எல்லோருக்குமே அப்போதைய போரில் சிங்கள ராணுவம் தமிழ் மக்களை கொன்று குவிப்பதை தடுக்க துடிப்பு இதய பூர்வமாக இருந்தது.ஆனால் என்ன செய்ய முடிந்தது.?
இன்று 2009 இல் கருணாநிதி படுகொலைகளை தடுக்காமல் துரோகம் இழைத்து விட்டார் என்று பேசியும்,எழுதியு வருகிறார்களே இவர்கள் அப்போதும் உயிருடந்தானே இருந்தார்கள்.இந்த தமிழகத்தில்தானே வசித்தார்கள் இவர்கள் அப்போது ஏன் ஒன்றுமே செய்யவில்லை.அல்லது படுகொலையைஏன் தடுக்க வில்லை?
முன்பு பிரபாகரன் வலுவான நிலையில் துணிச்சலுடன் கள்ளத்தோணியில் சென்ற ,அதை விளம்பரப்படுத்திக்கொண்ட ஈழக்காப்பாளர் வைகோ போரின் போது ஆதரவு கொடுக்க அதே கள்ளத்தோணியில் ஏன் செல்லவில்லை.போரில் கலந்து கொள்ளவில்லை.
இனப்படுகொலையை தடுக்கவில்லை.அது துரோகம் இல்லையா?
இப்போது ஈழத்தாய் அப்போதைய மைனாரிட்டி அரசின் எதிர்கட்சித்தலைவர் என்னதான் செய்தார் ?கருணாநி தியாவது உண்ணாவிரத நாடகத்தை நடத்திக்காட்டினார்.
ஜெயலலிதாவோ "உள்னாட்டு போரில் மக்கள் குண்டடிப்பட்டு சாவது ஒன்றும் புதியது அல்ல.இயற்கைதான் என்றாரே.அதற்கு முன்னர் பிரபாகரனை கைது செய்து தமிழக சட்டமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றெல்லாம் முழக்கமிட்டாரே அதெல்லாம் துரோகம் இல்லையா?
இதை ஏன் ஊடகங்கள் இப்போது கண்டு கொள்ளவே இல்லை.?
காரணம் ஊடகங்கள் கருணாநிதி கூறுவது போல் அவாள் கையில் உள்ளது.இனப்பாசம்.தங்கள் இனத்தவர் முதல்வராக வே ண்டும் அதுமட்டும்தான் முக்கிய-முதல் நோக்கம்.
எனவேதான் கருணாநிதி துரோகம் செய்ததாக திரும்ப,திரும்ப இப்பத்திரிக்கைகள் எழு தின. எழுதிய-எழுதி வரும்பத்திரிக்கைகள் வரிசையை பாருங்கள் உங்களுக்கே பின்னணி புரியும். தினமலர்,தினமணி,இந்தியாடுடே,என்டிடிவி.,ஆனந்த விகடன்,ஜூனியர் விகடன்,குமுதம்,ரிப்போர்டர் இந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ்,துக்ளக் .
ஆனால் இப்போதுகூட கருணாநிதி டெசோ அப்படி ,இப்படி என்று இலங்கை பிரச்னையில்
தனது பணியை செய்கிறார்.இப்பத்திரிக்கைகள் கூட சேர்ந்து பேசும் சீமான்,நெடுமாறன் போன்றோர் ஜெயலலிதா வை புதிய ஈழத்தாய் அளவுக்கு பேசுகிறார்களே அவர் இப்போது என்ன இப்பிரச்னையில் செய்துள்ளார்.தீர்மானம் கடைசி நாளில் பெயருக்கு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். இப்போது ஆட்சி,அதிகாரம் அம்மாவிடம் இருக்கிறதே துரோகம் செய்வதாக மூச்சு கூட ஊடகங்களில் எழவில்லையே.காரணம்.
இது நம்ம ஆளு.
மொத்தத்தில் கருணாநிதி ஈழப்பிரச்னையில் துரோகம் செய்ததாக எனனைபொறுத்தவரை தெரியவில்லை.
ஆனால் துரோகம் என்று மீண்டும்,மீண்டும் எழுதி கோயபல்ஸ் பாணியில் மக்களிடம் கருணாநிதியின் பெயரை கெடுத்தவ்ர்களையும் அதன் பின்னணியும் மட்டும்தான் தெரிகிறது.
இப்போது கூட மத்திய ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் தினமணியும்,ஞா நி யும் துரோகப்பாட்டையே மீள்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் .
இப்போதைய நிகழ்வுகளை மக்கள் கண்டு கொள்ளாமல் பழைய பாடல்களையே பாட வெண்டும் என்பதே இவர்கள் எண்ணம்,திட்டம்.
இலங்கை பிரச்னையில் மட்டுமல்ல 2ஜி முறைகெடுகளிலூம் திமுகவை மட்டுமே குற்றாவாளியாக்க்கீறார்கள்.அதில் காங்கிரசின் பங்குதான் 90 சதவிகிதம் ஆ.ராசா பலியாடுதான் என்று இப்போது வருகின்ற உண்மைகளை மக்களுக்கு எழுதிட தங்களின் தார்மீக ஊடக தர்மத்தை இவர்கள் கண்டு கொ ள்ளவில்லை.
மின்தடை பற்றிய விவகாரத்திலும் இந்த பத்திரிகைகளின் எழுத்து வித்தியாசத்தை தொடர்ந்து படிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள்.ஆனால் அதை கண்டு கொள்ள முடியாதபடி இவர்கள் எழுத்துக்கள் அமைந்துள்ளது.இரண்டு மணி நேர மின்தடை அதுவும் நேரம் குறிப்பிட்ட தடையையே உலகமும்-வாழ்வும் இருண்டு விட்டதாக கருணாநிதி வீட்டில் எல்லா மின்சாரத்தையும் ஊழல் செய்து வைத்து அமுக்கி விட்டது போலவும் எழுதிய இவர்கள் இப்போத்தைய 18-20 மணிநேர மின்தடையை மட்டும் இயற்கையின் சதி,மத்திய அரசு ஜெயலலிதாவை பழி வாங்குகிறது,கருணாநிதி முன்பு செயல்படாததுதான் காரணம் என்று புதிது,புதிதாக கண்டு பிடித்து பத்திரிக்கையின் பக்கங்களை நிரப்புகிறார்கள்.மக்கள் மனதி ஜெயலலிதா பெயர் மின்தடையின் மூலம் கேட்டு போ ய்விடக்கூடாது என்பதை மட்டுமே நோக்கமாக வைத்திருப்பது தெரிகிறது.
பேருந்து கட்டணம்,பால்விலை ,விலைவாசி எதிலும் ஜெயலலிதாவின் கொடுமை இல்லை.முன்பு கருணாநிதி செய்யாததால் அம்மா எல்லாவற்றையும் பொறுப்புடன் மக்கள் நலனுக்காக செய்கிறார் என்று லாவணி மட்டுமே பாடுகிறார்கள்.குற்றம் சாட்டுவதில்லை.குற்றம் செய்வது-செய்தது கருணாநிதி மட்டும்தான்.இதைதான் மீண்டும் ,மீண்டும் சொல்லி எழுதி வருகிறார்கள்.
இதில் தா.பாண்டியன் கூட விலைவாசிகளை ஜெயலலிதா கூட்டியதற்கு,வரிகளை 3800 கொடிகளுக்கு பட்ஜெட்டுக்கு முன்பே போட்டதற்கு கருணாநிதிதான் காரணம் என்றதையும்,
இப்போது மத்திய அரசில் இருந்து விலகியதை மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் இதுவரை செய்த துரோகம் போல் இதுவும் ஒன்றுதான் ,என்று கூறிஉள்ளதும்.இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று கூறிக்கொண்டு பால் விலை,பேருந்து கட்டணம் வகையில் ஏழைகளை பாதிக்கிறது என்ற வகையில் போராட வில்லை.ஜெயலலிதா விலையை கூட்டியது மக்கள் நலனுக்கு நல்லது.கருணாநிதி தமிழ் நாட்டின் பொருளாதாரத்தையே கெடுத்து விட்டு பொய் விட்டார்.அம்மாதான் சரி செய்கிறார் என்று அதிமுக அடிபொடிகள் சரத் குமார்,போல் பேசு வது ம் புரியாத புதிர் கள்.
கம்யூனிஸ்ட் என்று கூறிக்கொண்டு திரிபவர்களே இப்படி இரட்டை நாக்குடன் இருந்தால் இனப்பாசம் கொண்டவர்கள் நிலை எப்படி இருக்கும்.
இப்போதாவது கவனியுங்கள் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது அவரின் செயல்களை கேலி ப்படம் போட்ட தினமலர்,தினமணி தினசரிகளில் இன்றும் தினசரி கருணாநிதி அல்லது திமுக பற்றிய கேலி சித்திரங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன.
இதுவரை ஜெயலலிதாவை கிண்டல் செய்து ஒரு கேலிப்படம் கூட வரவில்லை.
அவர் ஆட்சில் இதுவரை ஒரு கேலி செய்து படம் போடும் அளவு ஒன்றும் நடக்கவே இல்லையா?
அமைச்சரவை மாற்றம்,அதி காரிகள் மாற்றம் திடீர் அறிவிப்புகள் எவ்வளவு இருக்கின்றன.
குற்றமே காணக்கிடைக்காத மனிதப் புனிதாரா ஜெயலலிதா?
ஆக இந்த ஊடகங்களின் [நமது எம்ஜியார் போன்ற ]ஒரு சார்பு நிலையை நீங்கள் கொஞ்சமாவது உணர வே ண்டும்.இவைகள் எழுதுவதை படித்தால் மட்டும் போதாது .
அந்த செய்திகளை இவர்கள் நடையின் மூலம் தங்கள் கருத்துகளை உங்கள் மூளையில் ஏ ற்றி விடுவதை தவிர்க்க செய்திகளை நீங்களே எடை போட்டு உண்மையை உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
கோயபல்ஸ் பற்றி அடிக்கடி செய்திகள் வருவது பார்த்திருப்பீர்கள்.அவர் அப்படி என்ன பொய்களை சொல்லிவிட்டார் என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அவர்களுக்காக:
'ஹிட்லரின் அமைச்சர்களில் ஒருவரான கோயபல்ஸ் மிக திறமையானவர்.இவரின் துறையே ஹிட்லர் தனது சாம்ராஜ்யத்தை விரிவாக உதவியது.வானொலி மூலமும்,தினமலர்,தினமணி போன்ற ஜெர்மனியில் உள்ள பத்திரிக்கைகளில் ஹிட்லரின் புகழை ஓயாமல் இடைவிடாமல் எழுத வைத்தான்.சொல்ல வைத்தான்.
அடுத்த நாடுகளில் ஜெர்மானிய வானொலி ஹிட்லர் மகத்தானவன்,மிக திறமைசாலி,அவர் ஒருவரால்தான் மக்களின் துன்பங்களை களைய முடியும் .இப்போதைய ஆட்சியாளர் உங்களை வஞ்சிக் கிறார்கள்.ஏமாற்றுகிறார்கள்.
என்ற செய்திகள் பரபரப்பாக ஒலிபரப்பப் பட்டுக்கொண்டே இருக்கும்.எப்போதும் ஹிட்லர் பற்றிய புகழுரைகளே ஒளிபரப்பாகும்.அவர் வல்லவர்,நல்லவர்.அவர் நம்மை ஆண்டால் நாம் எங்கோ போ ய் விடுவோம்.முன்னேற்றம் மிக விரைவில் சாத்தியமாகும்.என்ற அளவில் ஓயாமல் ஒளிபரப்பாகும் -அச்சாகும் செய்திகள் அடுத்த நாட்டு மக்களை மூளைச்சலவை செய்து கொண்டெ இருக்கும்.அதன் மூலம் அவர்களின் அடி மனதில் "ஹிட்லர் நம் நாட்டை ஆள மாட்டானா?நாம் எப்படியெல்லாம் வாழலாம் "என்ற எதிர்பார்ப்பே உருவாகிவிடும்.பின் அந்த நாட்டின் பக்கம் உள்ள மக்கள் அனைவரும் ஹிட்லரின் அபிமானிகள்.ஹிட்லர் வருகிறார் என்றாலே அந்த நாடு அவரின் காலில் விழ தயாராகிவிடும்.இதுதான் கோயபல்சின் அதிரடி பிரச்சார பாணி.
அதையேதான் இந்த ஆரியக்கூட்ட ஊடகங்களும் கையில் எடுத்துக்கொண்டு கருணாநிதியை ஆட்சியில் இருந்து அகற்றி ஜெயலலிதாவை தங்கள் ஆளை அரியணையில் ஏற்றி விட்டார்கள்.
இன்னமும் மக்களிடம் சென்ற முறைபோல் வந்து விடக்கூடாது என்று தங்கள் பாணியை இன்னமும் கைவிடாமல் இருக்கிறார்கள்.
18 மணி மின்தடையா ,விலைவாசி ஏற்றமா,20 ரூபாய்க்கு விற்ற அரிசி 45 ரூபாயா,பேருந்து கட்டணமுயர்வு,பால் விலை உயர்வு,அடிப்படை தேவைகள் உயர்வா கவலையே படாதீர்கள் உங்கள் நன்மைக்காக ஜெயலலிதா பாடுபடுகிறார்.கருணாநிதி ஆளத்தெரியாமல் செய்த கோளாறை அம்மா சரி செய்து வருகிறார்.எதுதான் செய்தியாக வரும்.பேசவும் படும்.அதற்கு எதிர் கருத்து ஓரமாக கண்ணில் படாமல் பிரசுரமாகும்.அல்லது கண்டு கொள்ளவே படாது.
ஆக இப்போது பழைய கருணாநிதியின் தவறுகள்தான் இன்னமும் பூதாகரமாக கான்பிக்கப்பட்டு.சென்ற ஆட்சியில் ஜெயலலிதா செய்த அலங்கோலங்கள் பூசி மெ ழுக்கப்பட்டு விட்டன.இப்போதைய அலங்கோலங்கள் உங்கள் பார்வைக்கு வராமலே தடுக்கப்பட்டும் விடும்.
ஆக கருணாநிதி ரொம்ம நல்லவர்-உத்தமர் என்று சொல்லுவதற்காக இப்பதிவு அல்ல.அவர் தவறுகள் மட்டுமே இங்கு ஊடகங்களால் திரும்ப,திரும்ப காட்டப்பட்டும்,மக்களுக்கு நினைவு படுத்தப்பட்டும் வருகிற அபாயம் ஊடகங்களால் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.ஜெயலலிதா இதே ஈழப்போரின் பொது நடந்து கொண்ட முறைகள் திரைக்கு வரவே இல்லை.திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டத்தான் இப்பதிவு .
"போரின் பொது ஈழமக்கள் சாவது இயற்கை.இது சாதாரண நிகழ்வு."
"பிரபாகரனை கைது செய்து தமிழக அரசினிடம் ஒப்படைக்க வெண்டும்."
"எம்ஜிஆருக்கு மோரில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள்."
"எம்ஜிஆரால் செயல்பட முடியாது.என்னை தமிழக் முதல்வராக்குங்கள்"-ராஜிவுக்கு எழுதிய கடிதம்.
எல்லாமே சுத்தமாக மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டு விட்டன.அதுதான் இந்த "அவாள்'ஊடக கூட்டமைப்பின் சாதனை.
இதை படிக்கும் நீங்களாவது இதில் கூறப்பட்டதை பற்றி கொஞ்சம் யோசித்துப்பாருங்களேன்.உண்மையா?தவறா என்று.------------------------------------------------------------------------------------------------------------------------------------