இந்திய சினிமா- 100 ஆண்டு



தற்போது" இந்திய சினிமா- 100 ஆண்டு "விழா கொண்டாட ஏற்பாடுகள்  நடக்கிறது. இவ்விழா சென்னையில் நடைபெறும் .
இவ்விழாவில் கமல்ஹாசன் ,அமிதாப்பச்சன், ரஜினி,  மோ கன்லால், மம்முட்டி, சீரஞ்சிவி ஆகியோர் கலந்து கொள் கின்றனர்.
விழாவை முன்னிட்டு " 100 ஆண்டு கால இந்திய சினிமா"வில் சிறந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வரு கின்றனர். 
இதற்காக இணையத்தளம்  மூலம் வாக்கெடுப்பும் -அவர்களை தேர்வு செய்த காரணமும் கேட்கப்பட்டது.
இதற்கு இந்திய சினிமாவின் உலகளாவிய  ரசிகர்கள் இணையம் மூலம் தங்கள்  வாக்குகளை அளித்தனர்.
 இதில் சிறந்த நடிகருக்கான முதல் இடம் மறைந்த தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவுக்கு பெற்றார்.அவருக்கு  53 சதவீதம் பேர்  வாக்களித்து உள்ளனர்.
[வாக்களித்தவர்களில் ஆந்திர ரசிகர்கள் அதிகமாக இருக்குமோ?]
ராமர், கிருஷ்ணர், கர்ணன், அர்ஜுனன், திருப்பதி வெங்கடாஜலபதி போன்றதோர் கேரக்டர்களில் நடித்து அதிக அளவு ரசிகர்களை பெற்றுள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. கடவுள் வேடங்களில் என்.டி.ராமராவுக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிறந்த நடிகருக்கான இரண்டாவது இடம் "கமல் ஹாசனு"க்கு கிடைத்துள்ளது.
 இவர் 44 சதவீதம் பெற்றுள்ளார்.
 மலையாள நடிகர் மோகன்லால்,மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.இருவரும் தலா 1 சதவீதம் வாக்குகள்  பெற்றுள்ளனர்.மற்றவர்கள் மிச்சம் இருக்கும் ஒரு சதவீதத்தை பங்கிட்டுக்கொண்டுள்ளனர். 
நடிகைகளில் 39 சதவீதம் பெற்று சிறந்த நடிகையாக ஸ்ரீதேவி தேர்வாகியுள்ளார்.
 இவர் தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வர்ணிக்கப்பட்டார். 
 இரண்டாவது இடத்தை மாதுரி தீட்சித் பெற்றுள்ளார் . இவருக்கு 16 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. 
மூன்றாம் இடம் மறைந்த நடிகை சாவித்திரிக்கு கிடைத்துள்ளது. இவருக்கு 12 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். 
நான்காவது இடத்தை ஐஸ்வர்யாராய் பெற்றுள்ளார்.8 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

அதேபோல் இந்திய அளவில் சிறந்த படமாக கமல்ஹாசன்  ந டித்த 
"நாயகன் "தேர்வாகி உள்ளது.
 
 இப்படத்தை  32 சதவீதம் பேர் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.
 
 இரண்டாவது இடம் இந்திப்படமான ஷோலேவுக்கு கிடைத்திருக்கிறது. 
 
24 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். 
 
இந்தப்படத்தில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா இணைந்து நடித்திருந்தனர்.
 
இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. 
 
இந்திய அளவில் சிறந்த இயக்குனராக மணிரத்னம் தேர்வாகியுள்ளார். 
 
இவருக்கு 29 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்போது இலங்கை .....

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கூகுள் தளம் மூலம் உளவு,?
கூகுள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அமெரிக்க புலனாய்வுத் துறையான எப்பிஐ ரகசியமாக உளவு பார்த்து வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இன்றைய இணைய உலகில் பெரும்பகுதி மக்கள் தங்களின் தகவல் தொடர்புக்கு கூகுள் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 
அதில் குறிப்பாக மின்னஞ்சல், வரைபடம், தகவல் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கூகுள் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.


 ரகசியமானவை என மக்கள் நினைத்து வருகின்றனர்.

ஆனால் அவை உண்மையல்ல என்ற போதிலும் ஒரு நாட்டின் உளவு நிறுவனமும், கூகுளை பயன்படுத்தி உளவு பார்த்து தனக்கு வேண்டப்படாதவர்களை அழித்தொழித்து வருகிறது என்பது இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையான எப்பிஐ, தேசிய பாதுகாப்பு கடிதங்களை காட்டி தொடர்ந்து கூகுளைபயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்பரிமாற்றம் மற்றும் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல்களை சேகரித்து வருகிறது. 2012ம் ஆண்டின் கடைசி 6 மாதங்களில் மட்டும் கூகுளை பயன்படுத்தும் குறிப்பிட்ட 14 ஆயிரத்து 790 நபர்களின் கணக்குகளை கேட்டு பெற்று அவர்களின் தகவல்களை சேகரித்து இருக்கிறது எப்.பி.ஐ. 
தொடர்ந்து இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர நீதிமன்ற ஆணையை கண்காணித்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, தகவல்களை அவர்களுக்கு தெரியாமல் சேகரித்து வருகிறது. நீதிமன்ற பிடியாணையை காண்பித்து சுமார் 3 ஆயிரம் பேரின் தகவல்கள் மற்றும் நடவடிக்கைகளை கேட்டு பெற்றிருக்கிறது. இதே போல் நிதிமன்ற உத்தரவை காண்பித்து 1250 பேரின் தகவல்கள் மற்றும் கோப்புகளை அழித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.இது போன்று திருட்டுத்தனமாக ஒருவரின் தனிப்பட்ட வகையிலான உரையாடல்கள். தகவல் பரிமாற்றங்களை தெரிந்து கொண்டு, அதனை பயன்படுத்தி அவருக்கு இடையூறு செய்தல், தேவைப்பட்டால் திட்டமிட்டு சிக்கவைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் தொடர்ந்து எப்பிஐ ஈடுபட்டு வருகிறது. 
தேசபக்தி என்ற பெயரில் தனி நபர்களின் உரிமைகளில் தலையிட்டும், ஜனநாயக ரீதியில் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பவர்களையும் குறிவைத்து அழிப்பதற்கு இணைய பயன்பாட்டை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
இது ஒரு சட்டவிரோமான செயல் ஆகும். இங்கு அடிப்படை கருத்துரிமையைக்கூட அமெரிக்க அரசு அனுமதிப்பதில்லை என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும், இது மிகப்பெரிய ஆபத்தான போக்கு ஆகும் என அமெரிக்காவில் உள்ள இணைய பயன்பாட்டாளர்களே குற்றம் சாட்டியுள்ளனர்.
கூகுள் நிறுவனத்தில் தனது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட ரகசியத்தை காப்பதில் தோல்வியை தழுவியிருக்கிறது என ஐரோப்பா ஒன்றியம் 2012 ம் ஆண்டிலேயே தெரிவித்திருந்தது. 
இதே போல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் வில்லியம் பென்னி அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரின் நடவடிக்கையும் அவர்களுக்கு தெரியாமல் இணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் அபாயகரமான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?