ஹியூகோ சாவேஸ்

வெனிசுலா அதிபர் சாவேஸ் இன்று காலை மரணமடைந்தார்.
புற்றுநோய் பாதிப்பிற்குள்ளான வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸூக்கு (வயது 58), கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நாடு திரும்பிய அவர் ஈர்‌‌னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
தொடர்‌ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.
 சாவேஸ் மரணமடைந்த செய்தியை துணை அதிபர் நிக்கோலஸ் அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியின் மூலம் தெரிவித்தார்.
 கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இதுவரை 4 முறை கியூபா சென்று புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தார்.

இடதுசாரி புரட்சியாளரான சாவேஸ் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ வீரராக வாழ்க்கையை துவக்கினார்.
ஐக்கிய சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான இவர் 1999ம் ஆண்டு வெனிசுலா நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார்.
அமெரிக்காவின் கடும் எதிரியான இவர் கடைசிவரை தென் அமெரிக்க நாடுகளை  அமமெ ரிக்கா சுரண்டுவதை  எதிர்த்து தனது நாட்டில் இடது சாரி திட்டங்களை கொண்டுவந்தார்.
எண்ணை நிறுவனங்களை நாட்டுடமை ஆக்கி வருமானத்தில் மக்கள் நலத்திட்டங்களை செய்து வெனிசுலா மக்களின் பேராதரவை பெற்றார்.
அவர் கடந்த ஆண்டு மீண்டும் அதிபராக  தேர்ந்து எடுக்கப்பட்ட நாளில்
," நான் எனது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன் . அமெரிக்காவை விட புற்று நோய் என்னை நாளும் வேகமாக கொன்று விட நினைக்கிறது. நான்அமெரிக்காவுடன் மட்டுமல்ல  புற்று  நோயுடனும் போராடுகிறேன்" என்றார்.
தொடர்ந்து தேர்தல்களில் வென்று14ஆண்டுகளாக வெனிசுலா நாட்டை ஆண்டு வந்த சாவேஸ் மறைவு மக்களை கவலையில் தள்ளியுள்ளது.
சவாஸ் இறந்தாலும் அவரது கட்சியும் ஆட்சியும் மிக கட்டுகோப்பாகவே உள்ளது.

அந்த நாட்டு சட்டப்படி , நாடாளுமன்ற தலைவர் (head of Congress, Diosdado Cabello) டிஷ்டடோ கபெல்லா இப்போதைக்கான ஜனாதிபதியாக பொறுப்பு வகிப்பார்.
பின்னர் துணை ஜனாதிபதி பதவி ஏற்பார்.
========================================================================
வெனிசுலாவின் சபனிடா நகரில் 1954ல் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் சாவேஸ். படிப்பை முடித்து ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 
அப்போதைய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் பிடிக்காததால் புரட்சிகர பொலிவேரியன் இயக்கம் என்ற கம்யுனிச சிந்தனையுடன்  இடதுசாரி இயக்கத்தை 1980களில் தொடங்கினார். 


1992ல் ஆட்சியை கைப்பற்றும் வகையில் அதிபர் கார்லோஸ் ஆண்டர்ஸ் பரேசுக்கு எதிராக ராணுவ புரட்சியில் ஈடுபட்டார். 
எதிர்பாராதவிதமாக அது தோல்வியில் முடிந்ததால் சாவேஸ் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறைவாசம் முடிந்து வெளியே வந்தவர், ‘பிஃப்த் ரிபப்ளிக் இயக்கம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 
1998ம் ஆண்டு டிசம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் அவரது குடியரசு கட்சி அபார வெற்றி பெற்றது. சாவேஸ் அதிபரானார். 
தனியார்-அமெரிக்க வசமிருந்த எண்ணைக்கிணறுகளை  அரசுடமையாக்கினார்.அதனால் பொருளாதார் ரீதியில் வெனிசுலா முன்னேறியது.மக்கள் சாவேஸ் மீது அதிக மரியாதையும் அன்பும் காட்டியதால்   
அதன் பின் நடந்த 2000, 2006 மற்றும் 2012ல் நடந்த அனைத்து அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றார். தொழிலாளர் உரிமைகள், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கங்கள் அமைப்பது ஆகியவற்றில் அதிக அக்கறை காட்டிய சாவேஸ் மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு பெற்றிருந்தார். 
=======================================================================
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?