வஹ்ஹாபிய பயங்கரவாதம்..?

சில இசுலாமியர்கள் செய்கைகளால்   நாம் நமது அடுத்தவீட்டு நண்பர் அவர் இசுலாமியராக இருந்தால் கொஞ்சம் சந்தேககக் கண்ணுடன் பழகுகிறோம்.
அது மிக தவறு.
சிலர் தீவிரவாதங்கள் செய்வது என்பது எல்லா மதங்கள்-சாதிகளில் இருக்கிறது.
தீவிரவாதிக்கு மதம்-சாதி  கிடையாது.அவன் சமுக விரோதி என்ற அடையாளம் மட்டுமே அப்படித்தான் நாமும் வைத்திருக்க வேண்டும் .
இதோ நண்பர் பீர் முகமது முகனூலில் வெளியிட்டுள்ள மனக்குமுறல்.
"உலகில் அரபு பெயர்களில் இயங்கும் பெரும்பாலான தீவிர ஆயுத குழுக்கள் அனைத்தும் அடிப்படையில் வஹ்ஹாபிய கருத்தியலை செயல்திட்டமாக கொண்டவைகள்  தான். அல்கொய்தா, தாலிபான், லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷ் இ முஹம்மத், ஹர்ஹதுல் முஜாஹிதீன் போன்ற பெரும்பாலான இயக்கங்கள் அனைத்துமே இந்த கருத்தியலை கொண்டது தான்.... 
மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலில் ஈடுபட்டவர்களும் வஹ்ஹாபிகள் தான். 
அவர்களுக்கு கலை, இலக்கியம், அறிவுச்செல்வங்கள், தத்துவம், வரலாறு உட்பட எதுவுமே உகந்தது அல்ல. 
லஷ்கர் இடத்திலோ அல்லது தலிபான்கள் இடத்திலோ அல்லாமா இக்பாலை குறித்து சொல்லுங்கள்..... உடனே அவர்கள் இக்பாலை கடுமையான வார்த்தைகளால் திட்டுவார்கள்.... ரூமியை குறித்து சொல்லிப்பாருங்கள்..... அவன் மிகப்பெரும் அயோக்கியன் என்பார்கள்..... தங்களின் இராணுவ செயல்பாடுகளுக்கு குர் ஆனில் இருந்தே வசனங்களை வியாக்கியானித்து காட்டுவார்கள்..... இந்நிலையில் அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரானபோர், புனிதப்போர், ஜிஹாத் என்றெல்லாம் வெளிப்படுத்தும். ஆனால் ஒரு போதும் வஹ்ஹாபிசம் என்று மட்டும் குறிப்பிடாது. 
அந்த சொல்லை மட்டும் மிக லாவகமாக தவிர்க்கும். 
காரணம் அவ்வாறு குறிப்பிட்டால் தன் விசுவாசமான அடிமைக்கு (சவூதி அரேபியா) களங்கத்தை ஏற்படுத்தி விடும் என்பது அதற்கு நன்றாக தெரியும்.
 இந்த பெரும் அபத்தத்தை தான் எல்லா ஊடகங்களும் செய்கின்றன. அவர்கள் எப்போதும் இஸ்லாமிய பயங்கரவாதம் (Islamic terrorism)என்றே ஒட்டுமொத்தமாக குறிப்பிடுகிறார்கள்.... மாறாக வஹ்ஹாபிய பயங்கரவாதம் (wahhabist terrorism) என்றே அவர்கள் குறிப்பிட வேண்டும்..... இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள் சில இவற்றைப்பற்றி நன்றாக தெரிந்திருந்தும் ஒட்டுமொத்த சமூகத்தையும் Islamic terrorism என்ற சொல்லாடலால் குறிப்பிடுகின்றன..... சமூகத்தின் இந்த அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாட்டை ஊடகங்கள் புரிந்து கொண்டு அவற்றை மாற்றிக் கொள்வது நல்லது...."
 -- நண்பர் பீர் முகமதின் கருத்துக்கள் இன்னமும் இசுலாமிய தீவிரவாதம்,காவி தீவிரவாதம் என்று குறிப்பிடுபவர்களை அதை மாற்றிக்கொள்ள வை த்திடும்.கண்டிப்பாக மாற்றிக்கொள்ளவும் வேண்டும்.
இந்த தீவிரவாதம் இந்தியாவில் மட்டும் நடப்பதில்லை .பாகிஸ்தானிலும்,ஈரானிலும்,ஈராக்கிலும் குண்டுவெடிப்புகள் அடிக்கடி நடப்பதையும்.அதில் பல மக்கள்[இசுலாமியர்கள்]சிதறி உயிரிழப்பதையும் நாம் நாள்தோறும் காண்கிறோம்.இதை எல்லாம் இவர்கள் எதற்காக செய்கிறார்கள்?இதன் மூலம் இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?என்னதான் இவர்கள் குறிக்கோள் ?
இவர்கள் இப்படி செய்வதால் இசுலாமிய மதத்தையே மற்றவர்கள் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் நிலைதான் வருகிறதே ஒழிய, இசுலாம் மதத்தை உயர்வாக எண்ணி தழுவிட ,நபிகளை பின்பற்றிட வருபவர்கள் இல்லாமல் போய்விடும் நிலைதான் உருவாகுகிறது.
இவர்கள் தங்கள் மதத்திற்கு பகைவர்களாகத்தான் ஆகிறார்கள்.தங்களின் பயங்கரவாதத்தின் மூலம் இசுலாமிய மதத்தின் புனிதத்தையே கெடுக்கிறார்கள்.எந்த மதமும் மற்றவர்களை கொன்று ஒழித்திட சொல்லாது .
---------------------------------------------------------------------------------------------------------------
"நோ ஃபயர் ஷோன்"-ஐ.நா,வில் காட்டப்பட்டது.

சானல் 4 தொலைக்காட்சியின் "நோ ஃபயர் ஷோன் "என்ற இலங்கையில் நடந்த ஈழத் தமிழர் ஒழிப்பு படுகொலை மற்று ம்  போர் குற்றங்கள் குறித்த படம் இன்று ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையில் திரையிடப்பட்ட து.
ஐநாவின் 23 வது அறையில் அது திரையிட்டு காட்ட ப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்தப் படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால்  ஐநாவில் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படையில் அது அங்கு திரையிடப்பட்டது.
பாதுகாப்பு வலயத்தில் நடந்த குற்றங்கள், சிறுவர்கள் இந்தப் போரினால் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற பல விடயங்களை அந்தப் படம் காண்பித்தது. பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்கள் மற்றும் சிறுவன் பாலச்சந்திரனின் கொலை குறித்த தகவல்கள் ஆகியனவும் அந்த ஆவணப்படத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.
ஆனால் இவ்வளவு ஆதாரத்துடன் இப்படம் திரையிடப்பட்டும் ஜெனிவாவுக்கான இலங்கை தூதர் ரவிநாத் ஆரியசிங்க  "இந்தப் படம் புனையப்பட்ட காட்சிகளை வைத்து எடுக்கப்பட்ட போலி நம் ப வேண்டாம் "என்றிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அங்கு பேசிய இலங்கையில் நடந்த போர் நிகழ்வுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐநா மன்ற செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவைச் சேர்ந்த ஜாஸ்மின் சூகா "இப்படம் மிகவும் வேதனையை தரக்கூடியது.இலங்கை போர் நிகழ்வுகள் -அதில் நடந்த குற்றங்கள் பற்றி கண்டிப்பாக  சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்பதை இந்த ஆவணப்படம்  உறுதி செய்கிறது"என்று  கூறியுள்ளார்.
 --------------------------------------------------------------------------------------------------------------
"அம்மா"வுக்கு பாரதத் தாய் வேடம்."தளபதி"க்கு முருகன் வேடமா?
வடிவேலு அல்லது ராம.கோபாலன்  கோபிக்க போகிறார்கள் .
இவர்கள்..பெரியார் வழியிலான திராவிட வழித்தோன்றல்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------
விடை பெறுகிறார் .
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?