காங்கிரசு நிலை திமுகவுக்கும்



இன்றைய அரசியலில் கருணாநிதியை -திமுக வை த் தொடாமல் அரசியல் நடத்த இயலாது போல் தெரிகிறது.
நல்லவகையோ அல்லது திட்டவோ அவரின் தயவு இங்குள்ள அரசியல் வாதிகளுக்கு தேவையாகி விட்டது.ஆளுங்கட்சிகள் மட்டுமல்ல. எதிர் கட்சிகளும் திட்டுவதி ல் கூட்டணி அமைத்துக்கொள்கின்றன.
அதற்கு அவரின் 60 ஆண்டுகளு க்கும் மேலான அரசியல் வாழ்க்கைதான் காரணம்.அந்த நெடிய காலகட்டத்தில் அவர் பெரியார்,அண்ணா,காமராஜர்,ராஜாஜி,காயிதே மி ல்லத்,பக்தவச்சலம்,நேரு,மொரார்ஜி,வி.பிசிங்,இந்திராகாந்தி,ராஜீவ் காந்தி ,எம்ஜியார் போன்றவர்களுடன் மட்டமின்றி இன்றைய ஜெயலலிதா,விஜயகாந்த்,ராகுல் ,சோனியா போன்றோருடனும் அரசியல் நடத்துவதுதான்.
அன்றில் இருந்து இன்றுவரை அவர் அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகித்துவருகிறார்.
அவர் முடிவுகள் பலசமயங்களில் தீக்கதரிசனமாக அமைந்துள்ளது.அதேபோல் சில சமயங்களில் தவறாக இருந்துள்ளது.
எவ்வளவோ கால கட்டங்களில்  அவர் இத்துடன் முடிந்தார் என்று எதிர்பார்த்திருக்கையில்  மீண்டும் விஸ்வரூபம் எடுத்து அரசியலில் வலம் வந்திருக்கிறார்.
ஆனால் அவர் மீது எம்ஜியார் சுமத்திய ஊழல்வாதி என்ற கறை  மட்டுமே மக்கள் மனதில் ஆழப்பதிந்து அவரை அவ்வப்போது கீழேத்தள்ளி விட்டு விடுகிறது.அடுத்து அவரின் குடும்ப அரசியல் அவரின் குறைகளிலொன்றாக இருக்கிறது.
ஸ்டாலின் சரி.அவர் அன்று முதல் இன்று வரை அரசியலில் பல தடைகளை தாங்கி கட்சியில் 
இன்றுவரை சரியான இடம் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார்.
மிசா காலத்தில் வர சிறையில் மிகக்கொடுமைகளைஉள்ளார்.
ஆனால் அழகிரி?
அதிகாரம் இருக்கும்போது அரசியலில் நுழைந்துஆட்டம் போட்டு விட்டு  அதிகாரம் இல்லாத வேளைகளில் அடங்கி கிடக்கும் அரசியல் அஞ்சா நெஞ்சன் .
அவர் மிரட்டலுக்குப்பயந்து கருணாநிதி சில வேளைகள் முடிவெடுப்பது தவறாகவே ஆகியிருக்கிறது.
எம்ஜிஆர் கட்சியமைத்து ஆட்சியை பிடித்ததுமே கருணாநிதி அவ்ளோதான் என்றார்கள்.
அதேபோல் எம்ஜிஆர் காலம் வரை கோட்டை  பக்கம் கருணாநிதியால் செல்ல முடியவில்லை.அவரின் மறைவில் இவரின் சிலைதான் உடைத்து எறியப்பட்டது.ராஜீவ் கொலைக்கு ம் பலிகடா கருணாநிதிதான்.அவரின் விடுதலைப்புலிகள் ஆதரவு போக்கே ஆட்சியை பலி கொடுத்தது.
எம்ஜிஆர் மறைவு வரை கொக்குபோல் காத்திருந்து இப்போது ஜெயலலிதாவுடன் மாறி ,மாறி பதவியை பிடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அதற்கு கூட ஜெயலலிதாதான் காரணம்.அவரின் தவறான மக்கள் விரோத போக்கே 
கருணாநிதிக்கு நாற்காலியை அ வ் வப்போது தக்க வைக்க செய்துள்ளது-செய்து வருகிறது.
இப்போது காங்கிரசு கூட்டணியில் மத்தியில் ஆட்சியில் இருக்க ஈழப்பிரச்னையில் கருணாநிதி செய்த -எடுத்த சில தவறான முடிவுகள் அவரை புலிகள் எதிரியாக மட்டுமல்ல அவரின் காங்கிரசு கூட்டணி ஆதரவு ஈழ மக்கள் கொத்து,கொத்தான கொலைகளுக்கு கருணாநிதியும் உடந்தை என்ற அவப்பேச்சுக்கு 
கொண்டுபோய் விட்டு விட்டது.
உண்மையான விடுதலிப்புலிகள் எதிரியான ஜெயலலிதா ஈழத்தை அளவுக்கு கொண்டாடப்படுகிறார்.
இப்போது கருணாநிதி எ டுக்கும் மத்திய ஆட்சியாளர் காங்கிரசுக்கு எதிரான முடிவுகளை அன்றே எடுத்திருந்தால் இன்று தமிழினத்தலைவர் என்ற பட்டத்துக்கே உயிர் வந்திருக்கும்.தமிழக -ஈழ மக்களின்  வெறுப்புக்கும் ஆளாகியிருக்க  வேண்டாம்.
ஆனால் அப்போது மத்திய ஆட்சியைவிட்டு விலகாமல் இருக்கவும்,சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களுக்கு காங்கிரசு ஆட்சி ஈழப்பிரச்னையை கையாண்டவிதம் பற்றிய வெறுப்பை உணர்ந்தும் காங்கிரசு கூட்டணியில் இருந்து தோல்வியை தழுவியதற்கும் குடும்ப பாசம்தான் காரணம் என்று தெரிகிறது.
அழகிரி வழங்கிய ஆலோசனைதான் -கட்டாயம்தான் முக்கிய காரணம்.சட்டமன்றத் தேர்தலில் ஆளே இல்லாத காங்கிரசுக்கு 60 இடங்கள் ஒதுக்கியது மிகப்பெரிய அரசியல் தவறு.அப்போது கழட்டி விட்டிருந்தால் அதிமுக இவ்வளவு வித்தியாசத்தில் வென்றிருக்க முடியாது.அது திமுக போல் விஜய் காந்த் ஆதரவுடன் மைனாரிட்டி ஆட்சியாகத்தான் இப்போது நடந்து கொண்டி ருக்கும்.
அடுத்து 2ஜி மிரட்டல் .குடும்ப பாசம் .கனிமொழி-தயாளு அம்மாள் மீதான வழக்கு பயம்.
அதுதான் இன்றும் கருணாநிதி இன்னமும் காங்கிரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் பசையான காரணம்.
ஆனால் தமிழக மக்கள் திமுக மீது நம்பிக்கை இழக்க காங்கிரசு ,மன்மோகன் சிங்-சோனியா செயல்பாடுகள்தான்.அதற்கு அவ்வப்போது சிங்கி அடிக்கும் செயல்கள்தான்.
அப்படி கருணாநிதி காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கிணாலும் காங்கிரசு துரோகமே செய்து வருகிறது.அதை கருணாநிதி உணராவிட்டாலும் .தமிழக மக்கள் நன்கு அறிந்துதான் உள்ளனர்.
2ஜி யில் ஆ.ராசாவை மட்டுமே மாட்டி விட்டு காங்கிரசு தப்பிக்கொண்டுள்ளது.போதாதற்கு மகள் கனிமொழியையும் உள்ளே வைத்து கருணாநிதிக்கு அழகு காண்பித்திருக்கிறது. ஈழப்பிரச்னையில் கருணாநிதி சொல்வதற்கு நேர்மாறாகவே நடந்து வருகிற து.
இதற்குப்பின்னரும் கருணாநிதி  காங்கிரசை கட்டிபிடித்துக்கொண்டிருக்க காரணம்?
வெறும் நான்கு மத்திய அமைச்சர் பதவிகளுக்காக மட்டுமா?
அதை மட்டும் ஆதாயமாக பார்த்தால் தமிழகத்தில் திமுக தடம் விரைவிலேயே அழிக்கப்பட்டு விடும்.அதாவது இன்றைய காங்கிரசு நிலை திமுகவுக்கும் வந்து விடும்.தலைவர்கள் மட்டும்தான் இருப்பார்கள்.தொண்டர்கள்-மக்கள் ஆதரவு காணாமல் போய்  விடும். 

காங்கிரசு மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள்-ஈழப்பிரச்னையில் காங்கிரசின் துரோகம் காரணமாக  தமிழத்திலேயே காங்கிரசு இப்போது இல்லாமல் போய்  விட்டது. அது போல் திமுக வை கழுத்தைக்கட்டியே அழித்துக் கொண்டிருக்கிறது சோனியா-ராகுல் கூட்டம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

அமுல் -விஸ்வரூப விளம்பரம் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?