என்ன நியாயம்?"

"இத்தாலியை நம்பினாலே மோசம்தான்.
அதை இத்தாலி அரசின்  செயல் மீண்டும் நிருபித்து விட்டது.
போபர்ஸ்,ஹெலிகாப்டர் இப்போது கொலைகார கைதிகளை ஒப்படைக்க மறுக்கிறது.
இந்தியர்கள் இன்னமும் உசாராக வில் லை எனில்  வருகிறது நாட்டுக்கே கேடு.
 கேரளாவில்  இரு மீனவர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை திருப்பி ஒப்படைக்க வில்லை என்பதற்கு தூதரக உறவையே துண்டிப்பதாக பூச்சாண்டி காட்டும் இந்திய மன்மோகன் சிங் அரசு -ஈழத்தில் 70 ஆயிரத்துக்கு மேல் தமிழர்களை கொன்று  குவித்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு மட்டும் வக்காலத்து வாங்குகிறதே?
என்ன காரணம்?
அது என்ன நியாயம்?"
 அது சரி.இப்போது இந்திய அரசு இத்தாலியுடனான தூதரக உறவுகளை துண்டிப்பதாக கூறப்படும் செய்திகள் அன்னை சோனியாவுக்கு தெரிந்துதான் வெளியாகு கிறதா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் சிட்டுக்குருவிகள் குறைந்து வருகின்றன. இந்த மார்ச் மாதம் 20ம் தேதியன்று 'உலக சிட்டுக்குருவிகள் தினம்' கொண்டாடப் படுகிறது.
நேச்சர் பார் எவர் சொசைட்டி என்ற இயற்கை பாதுகாப்பு அமைப் பும் (என்எப்எஸ்) பறவைகள் பாதுகாப்பு ராயல் சொசைட்டியும் இணைந்து உலக அளவில் சிட்டுகுருவிகளுக்கான பாதுகாப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. 
சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் இந்த விழிப்புணர்வு வீட்டு சிட்டுக்குருவிகளை மட்டுமல்லாமல் உலகில் உள்ள 26 வகை சிட்டுக் குருவி இனங்களை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படுகிறது.
சிட்டுக்குருவி இனங்களை பறவை ஆர்வலர்கள் பார்த்து மகிழ்வதற்கும் வேர்ல்டு ஸ்பேரோ. ஓஆர்ஜி என்ற தளத்தில் காண்பதற்கு உலக சிட்டுக்குருவி தின செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் கோர்டோ பேன் என்ற சிட்டுக்குருவியை பற்றிய படங்கள் இல்லை. சிட்டுக்கருவிகளை பற்றி பத்திரிகைகளில் எழுதுதல் சிட்டுக்கருவி களுக்கு வாழ்விடம் உருவாக்குதல் சிட்டுக்கருவிகளுக்கு போதிய கூடு அமைத்தல் சிட்டுக்குருவி சுற்றுலா நடத்துதல் அதற்கு உணவு நிலையங்கள் ஏற்படுத்துதல் போன்றவை மூலமாக அந்த சின்னஞ்சிறு பறவை இனத்தை பாதுகாக்க முடியும் என சிட்டுக்குருவி ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழருக்கு வந்த சோதனை?

தமிழர்களை பார்த்தாலே கொஞ்சம் வடக்கர்களுக்கு இளக்காரம்தான் போல்.
இதுவரை தமிழில் அதாவது சொந்த மொழிகளில் இ .ஆ.ப.[I.A.S ]தேர்வை எழுதலாம் என்று இருந்ததை மத்திய அரசுப்பணி தேர்வாணையம் இந்தி,ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே திறனுடன் எழுதும்படி மாற்றி விட்டது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணி யிடங்கள் நிரப்பப்படுகின்றன. 
அதற்கான தேர்வு கள் முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு, நேர் முகத்தேர்வு என மூன்று கட்டங்களாக நடை பெறுகின்றன. 
இதில் பிரதானத் தேர்வுக்குரிய வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக் கும். 
அதற்குரிய விடைகளை தாய்மொழியில் அதாவது தமிழ் உள்ளிட்ட அப்பகுதி  மொழி களில் எழுதலாம் என்ற நடைமுறை தற்போது அமலில் உள்ளது.இப்போது அதில் மாற்றம் செய்து புதிய விதி கள் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள் ளன.
முதன்மைப் பாடத் தேர்வில் குறைந்தபட் சம் 25பேர் ஒரு மொழியில் தகுதி பெற்றிருந்தால் - அதாவது முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அந்தப் பகுதி  மொழி யில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.
 ஆனால் இந்த நடைமுறை இந்தி அல்லது ஆங்கிலத்துக் குப் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங் கள், மொழிபேசும் மக்களைக் கொண்ட துணைக் கண்டத்தில் அந்தந்த மாநில மொழி களில் மத்திய ஆட்சிப்பணி தேர்வுகளை எழுத ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உரி மையைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டா வது பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தேசிய மொழிகள் எல்லாவற்றிலும் வினாக் களுக்கு விடையளிக்க வாய்ப்புத் தருவது தானே நியாயம். 
பட்ட வகுப்பில் மாணவர்கள் படித்த மொழி வழியாக மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்பது இன்னொரு முட் டுக்கட்டை. 
இப்படிச் செய்வதன் மூலம் மாநில மொழிகளில் - மக்களின் தாய்மொழிகளில் முதன்மைத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிகமிகக் குறை வானதாக அல்லது விரல்விட்டு எண் ணக்கூடியதாக மாறிவிடும். 
எந்த மொழியில் பட்டப் படிப்பு படித்தாலும் தங்கள் தாய்மொழி யில் பதில் எழுதுவதற்கு ஏன் தடைவிதிக்க வேண்டும்?
அதுமட்டுமின்றி தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே அதை விருப் பப் பாடமாக தேர்வு செய்ய முடியும் என்று மற் றொரு விதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 பட்டப் படிப்பில் வேறு பாடங்களை விருப்பப்பாடமாகப் படித்தவர்கள் தமிழ் இலக்கியத்தை விருப் பப் பாடமாக - முதன்மைத் தேர்வில் எழுதுவது மறுக்கப்படுகிறது. 
ஆனால் கடந்த காலங்களில் பட்டப்படிப்பில் வேறு பாடங்கள் படித்தவர்கள் முதன்மைத் தேர்வில் தமிழ் இலக்கியத்தை எடுத்து எழுதி சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள னர்.
 தற்போதைய புதிய விதிகளின்படி தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே தமிழில் எழுத முடியும் என்பதன்படி பார்த்தால் ஓரிரு மாண வர்கள் மட் டுமே தேர்வு எழுதும் தகுதியை பெற முடியும். 
அதனால் இனி  தமிழில் எழுத 20 பேர்கள் கூட  இனி தேர்வு எழத தேறமாட்டார்கள்.
ஆனால் இந்தி மொழிக்கு அந்த நிபந்தனை ஏது மில்லை. இது இந்தித் திணிப்பே.
முதல் நிலைத் தேர்வு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் அனைத்து மொழிகளிலும் எழுத வாய்ப்பளிக்க வேண்டும். விடையளிப் பது மட்டுமின்றி வினாத்தாளும் தமிழ் உள் ளிட்ட அனைத்து மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். 
மிக முக்கியமாக பிரதானத்தேர்வில் ஆங்கிலத்துக்கு நூறு மதிப்பெண் அளிப்பது கைவிடப்பட வேண்டும். 
பணிக்குத் தேர்வு பெற்ற பின் மூன்று மாதத்தில் வேறு மொழிகள் கற்றுக்கொடுக்கப்படும்போது ஆங்கிலத்தையும் அவ்வாறு கற்க முடியும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------- 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?