இணையம் மூலம் திருட்டு

"இந்திய தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ".நமது இந்திய நாட்டின் முக்கிய பாதுகாப்பு தொடர்பான ராணுவ ரகசியங்கள் இதன்  கணினிகளில் கோப்புகளாக பாதுகாத்து வரப்படுகின்றன.
இந்த நிறுவன கணினி களில்  இருந்து பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களை ஒரு கணினி அறிவுள்ள கும்பல்  களவாடி யுள்ளது. 
இது போன்ற கன்னி தகவல்களை மறைமுகமாக தங்கள் கணினி அறிவு மூலம் திருடும் கும்பலுக்கு "ஹேக்கர்ஸ்' என்ற பெயர் உள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையின் பல முக்கிய பைல்கள் இவர்கள் வசம் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவர்கள் சீனா வைச்சே ர்ந்தவர்கள் என்றும்  கடந்த ஒரு ஆண்டாக நடந்த  இந்த திருட்டு  இம்மாதம் முதல் வாரத்தில் தான்  நம் இந்திய பாதுகாப்பாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.அந்த அளவு நம்நாட்டின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப நிபுணர் குழு மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், தனியார் பாதுகாப்பு வல்லுனர்க ஆய்வு செய்ததில்  இந்த திருட்டை சீனாவில் இருந்து தான்  நடத்தி இருப்பதாக தெரிகிறது.
 "ஆர்மி சைபர் பாலிசி' என்ற இணைப்புடன் இந்த பாதுகாப்பு நிறுவன அலுவலர்களுக்கு  வந்த, "மின்னஞ்சலை ' திறந்தவுடன் அதில் அனுப்ப படும் வைரஸ்கள் மூலம்  அக்கணினியில் பாதுகாக்கப்படும் கோ ப்புகள் எதிராளி கணினியில் தரவிறக்கம் ஆகி விடும்.
இந்த கணினி தகவல் கொள்ளை   குறித்த தகவல் தெரிந்தவுடன், இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் ஆராய்ந்ததில் இது போன்ற திருட [ "ஹேக்'] பட்ட  அனைத்துத் தகவல்களும், சீனாவில் உள்ள, "குவாண்டாங்' என்ற இடத்தில் உள்ள, "சர்வர்' மூலம் பதிவேற்றம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு அமைப்பு, இதற்கு முன் நடந்த திருட்டை இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்ததில்லை. இம்முறைதான்  மிகத் துல்லியமாக கண்டறிந்துள்ளது.ஐதராபாத்தில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு குறித்த ஆவணங்கள், ரேடார் மற்றும் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற ஆயிரக்கணக்கான மின் கோப்பு கள், இம்முறையில் திருடப்பட்டுள்ளன.

 திருடப்பட்ட அந்த கோப்புகள்  மீட்கப்பட்டுவிட்ட ன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், டி.ஆர்.டி.ஓ., மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஒப்பந்தம், பிரான்ஸ் ஏவுகணை நிறுவனத்துடனான பணப் பட்டுவாடா உள்ளிட்ட பைல்கள் மீட்கப்பட்டுள்ளன. 
இந்தத் திருட்டை தனியார்கும்பல்கள் [ "ஹேக்கர்'] செய்திருக்க  முடியாது.  சீன அரசு சம்பந்தப்பட்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 "ஹேக்' செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட, "சர்வர்' சீனாவில் உள்ளது. இதற்காக, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள, "சர்வர்' பயன்படுத்தப்பட்டு உள்ளது.
 ஆரம்பத்தில் இருந்தே சீனாவுக்கு  பிற நாடுகளின் ரகசியங்களைத் திருடுவ துவழமையாக உள்ளது.
 அமெரிக்காவின் ரகசியங்களையும், சீனா, "ஹேக்' செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ ரகசியங்களை சீனா திருடு வது போல் அமெரிக்காவில் பிரபலங்காளாக உள்ள அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் ரகசியங்களை  இணைய தகவல் திருடர்கள் எடுத்து ஒரு இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதுதான் இப்போது  அமெரிக்காவை அதிர்ச்சியில் மூழ்க செய்துள்ளசெய்தியாகும்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், எப்பிஐ இயக்குநர் ராபர்ட் முல்லர், ஜோய் பைடன், எரிக் ஹோல்டர், சாரா பாலின் மற்றும் பிரபலங்களான ஜெ சே, பியொன்ஸே, கிம் காதர்ஷியன், பெரிஸ் ஹில்டன், எஸ்டன் கட்சர் உட்பட பலரின் தனிப்பட்ட கணக்குவிபரங்கள் உள்ளிட்டவையை அவர்களுக்கு தெரியாமலேயே இணையம் மூலம் எடுக்கப்பட்டிருக்கிறது. 
இந்த தகவல்களை ஹேக்கர்கள் எடுத்து இணையத்தில் வெளியி ட்டுள்ளனர்.
 இது அமெரிக்க அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பிரபலங்களின் சொத்து விபரங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், கடன் விபரங்கள், கடனட்டை விபரங்களே தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு ரகசிய விபரங்களையும் இந்த ஹேக்கர்ஸ் சேகரித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
இதனால் அமெரிக்காவில் பெரிய மனிதர்கள்  பலரது ரகசியங்கள் நடுத்தெருவில் பகிரப்படலாம்.
இதில் மிகப்பெரிய கொடுமை.இது போன்ற கணினி தகவல்களை ஆட்டைபோடும்   ஹேக்கர்களை கண்காணிக்கும் எப்பிஐயின் இயக்குநர் ராபர்ட் முல்லரின் தகவல்களும் அவருக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டிருக்கிற து .
 இதையடுத்து உடனடியாக இந்த ஹேக்கர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுகடும்  உத்தரவிட்டிருக்கிறது.
 இதற்கெல்லாம் காரணம் தகவல் தொழில்நுட்ப அறிவை பொதுவுடமையாக்கி மக்கள் பயன்பெற வழிகாண வேண்டும் என போராடி வந்த அரோன் ஆர்சத் என்ற இணைய போராளியை அமெரிக்க அரசு சமீபத்தில் கைது செய்து, கடுமையான சித்தரவதைக்குள்ளாக்கியது. 
மேலும் அவருக்கு பல ஆ ண்டுகள்  சிறைதண்டனை விதித்து அவரது வாழ்க்கையையே நாசமாக்கி விட்டது.
 இந்த கவலையில்  அவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார் .
 இந்த கொலைக்கு காரணம் அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி என்றும், எப்பிஐ திட்டமிட்டு அவரது கொலைக்கு காரணமாக செயல்பட்டிருக்கிறது என குற்றம் சாட்டி உலக நாடுகளில் உள்ள இணைய போராளிகளும், ஹேக்கர்களும் இணைந்து போராடி வருகின்றனர். 
ஆனால் இந்த தற்கொலை சம்பவத்தை -தகவலை அமெரிக்க அரசு கட்டளைக்கேற்ப உலக ஊடகங்கள்  மறைத்து விட்டன.

 இந்நிலையில் அமெரிக்க பிரபலங்களின் ரகசிய தகவல்கள் வெளியாகியிருப்பது அமெரிக்க அரசு நிர்வாகத்தின் பாதுகாப்பு தன்மையை எங்களால் உடைத்தெரிய முடியும் என ஹேக்கர்கள் அமெரிக்காவிற்கு பாடம் புகட்டவே இதுபோன்று செய்திருப்பதாக பல பதிவுகள் இணையத்தில் வெளியாகி வருகிறது .
ஏற்கனவே அசாஞ்ச்சே தனது "விக்கி லீக்ஸ்" மூலம் அமெரிக்காவின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி உள்ள நிலையில் ,இது அமெரிக்காவுக்கு வந்த புது சோதனையாகும்.
இந்த அசாஞ்ச்சே இலங்கை-{சோனியா]இந்தியா  ஆதரவு மர்மம் தொடர்பான தகவல்களை  எடுத்து வெளியிட முடியாதா?
ஆனாலும் இது போன்ற இணையத்திருட்டு பல நாடுகளின் பாதுகாப்பை  கேள்விக்குரியதாக்கி விடும் ஆபத்தை கொண்டிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?