"பாக்" அனுப்பிய நாய்கள் கதை

"இரு இந்திய படை வீரர்களை கொன்று  தலையை அறுத்துக்கொண்டு போன மனிதத் தன்மை இல்லாத பாகிஸ்தான் இப்போது அப்சல் குரு தூக்கை கண்டித்து மக்களவையிலேயே தீர்மானம் நிறைவேற்றி யுள்ளதாம் .
எந்த பாகிஸ்தான் ?
இந்தியாவில் குண்டு வைத்து மக்களை கொன்று குவிக்க கசாப் போன்றவர்களை மூளை சலவை செய்தும்-பணத்தால் வாங்கியும்,மதத்தால் வெறியூட்டியும் வழியனுப்பி வைக்கும் பாகிஸ்தான்.
 கசாப்புடன் வந்தவர்களால் 100க்கும் மேற்பட்டவர்கள் பலி.அப்சல் குரு கூட்டத்தால் பலர் பலி.அவனுக்கு தண்டனை கொடுத்த டெல்லி நீதிமன்றத்தில் குண்டூ வைத்ததால் பலர் பலி.
இப்படி பல உயிர்களை கொன்ற கொலைகாரருக்கு தூக்கை கொடுத்தாள் அவர் மறைவுக்கு இரங்கல் தீர்மானமா? இதில் இருந்தே இந்த குண்டு வெடிப்புகளுக்கு தான்தான் காரணம். தான் அனுப்பிய மரண  கிங்கரர்கள் மரணம் தன்னை வருத்துகிறது என்றுதானே பாகிஸ்தான் சொல்லுவதாக அர்த்தம்.
பாகிஸ்தான் நாட்டில் உள் சண்டையில் குண்டு வெடித்தால் அதையடுத்து இந்தியாவில் குண்டுகள் வைக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.
அந்த குண்டு வெடிப்புகளுக்கு மக்களிடம் எழும் எதிர் வினைகளை திசை திருப்பும் வழியாக இதை வைத்துக்கொண்டிருக்கிறது.

தன்னிடம் உள்ள மாநிலங்களை ,பகுதிகளையே ஒழுங்காக வைத்து ,பராமரிக்க காப்பாற்ற முடியாத பாகிஸ்தான் இந்திய பகுதியான காஷ்மீரை கைப்பற்ற நினைப்பதும், அதற்காக பல தீவிரவாத செயல்களை செய்வதும் வாடிக்கையாகப் போயிற்று.
தன் நாட்டை கவனித்து முன்னேறுவதை விட்டு விட்டு இந்தியாவையே கவனித்துக்கொண்டும்-கரித்துக்கொண்டும் இருப்பதுதான் பாக் வேலையாகப் போய்விட்டது.
  பாகிஸ்தான்  இந்தியாவை எப்போதும் எதிரியாக பார்த்து வயிற்றெரிச்சலில் இருப்பதற்கும்,இந்தியா விற்கு ஏட்டிக்குப்போட்டியாகவே எதையும்  செய்வதற்கு ம் ஒரு சமீப காலத்திய செயலை ஒரு உதாரணமாக சொல்லலாம்.இது உண்மை சம்பவம்.வேடிக்கையல்ல -வேதனை  ,அல்லது வேடிக்கையான வேதனை சம்பவம்.

"பாகிஸ்தான்-இந்தியா புகைவண்டி சென்று வந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
இதன் மூலம் நல்லுறவு வரும் என்றுதான் இந்தியா நினைத்து ஆரம்பித்ததுஅதன் மூலம்தான் தீவிரவாதத்திற்கு உதவி வந்து கொண்டிருக்கிறது .
சரி.நடந்த கதையை பார்ப்போம்.
இந்த ரெயிலில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு தெரு நாய் தவறு தலாகவோ பாகிஸ்தானில் உள்ள தன்  உறவினரை பார்க்கவோ ஏறி சென்று விட்டது.இந்திய பாதுகாவலர்களின் கடமை உணர்ச்சியைப்பற்றிதான் தெரியுமே.  குண்டுவைக்க வருபவர்களையே கண்டு கொள்ளாதவர்கள் இந்த நாயை எப்படி பார்த்திருப்பார்கள்.
நாயும் பாகிஸ்தான் சென்று சேர்ந்து விட்டது.அங்குள்ள பாகிஸ்தான் பாதுகாவலர்களிடம் கடவு சீட்டு கைவசம் இல்லாததால் மாட்டிக்கொண்டது.
இந்திய நாயை பார்த்ததும் தேச பற்று மிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் சும்மா இருப்பார்களா ?
அடுத்து அவர்கள் செய்த வேலை.
தெருத்தெருவாக சென்று முப்பதுக்கும் மேல் தெரு நாய்களை பிடித்து வந்தார்கள்.அவ்வளவுதான் அவசரத்துக்கு கிடைத்தது.
அதை பட்டினி போட்டு வழக்கம் போல் இந்திய எதிர்ப்பு மூளை சலவை செய்தார்களோ என்னவோ?
அடுத்து இந்தியா கிளம்பிய ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டார்கள்.
இந்தியா வந்து சேர்ந்த ரெயிலில் நம் பாதுகாப்பு படையினர் ஒரு பார்வைக்காக ஏறியதுதான் மிச்சம்.பசியால் கொலை வெறியில் இருந்த "பாக்" நாய்கள் பாய்ந்து வர நமது இந்திய வீரர்கள் தலை வெட்டி "பாக்" படை வீரனுக்கு பயந்து ஓடியதை விட வேகமாக ஒடி பதுங்கி தப்பினார்கள்.
அதன் பின் பள்ளி வாசலில் சென்று தண்ணிர் தெளித்தே சுய நினைவே வந்ததாம் ."

இந்த சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் கூட உண்மை சம்பவம்.
பாகிஸ்தான் இந்தியா செய்யும் எதற்கும் அதற்கு போட்டியாக செய்வதையே வாடிக்கையாகக்கொண்டுள்ளது என்பதற்கும் அதற்கு ரத்தத்திலேயே இந்திய எதிர்ப்பு ஊறியுள்ளது.சுய நற்சிந்தனையோ மனசாட்சியோ கொஞ்சமும் கிடையாது.
இதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கிறது.இப்போது அப்சல் குரு தீர்மானம்.
அப்சல் இந்தியன் அவனுக்கு தீவிரவாத செயலுக்காக தூக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு கண்டன தீர்மானம் பாக்கிஸ்தான் நிறைவேற்ற என்ன அவசியம்?
கசாப்பை யார் என்றே தெரியாது.
அ வன் பாகிஸ்தானியே கிடையாது என்று சத்தியம் செய்த பாகிஸ்தான் அவன் தூக்குக்குப்பிறகு அவன் உடலை அவன் குடும்பத்திடம் பாகிஸ்தானில் ஏன்  ஒப்படை க்கவில்லை  என்று கேள்வியை எழுப்பியதும் உலகம் இன்னும் மறக்கவில்லை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?