தமிழர்கள் தேவையா?இனவாத இலங்கை தேவையா?
இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும்,சிங்களருக்கு கீழே தாழ்த்தப்பட்ட சமுகமாக மாற்றப்படுவதையும் எதிர்த்து தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள
ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சண்டை கடந்த
2009–ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
விடுதலைப்புலிகளை ஒடுக்குகிறோம் என்ற
பெயரில் சிங்கள ராணுவம் நடத்திய வெறியாட்டத்தில், அப்பாவி தமிழர்கள்
லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் .அப்பாவி மக்கள்-பெண்கள் -சிறுவர்கள் என அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர்.இது உலகையே அதிரவைத்தது.இந்திய அரசை தவிர.
அப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 14 வயது பாலச்சந்திரனை
பிணைக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு பின்னர் தமிழினத்துரோகி கருணாவின் ஆலோசனையின்பேரில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர் .
அந்த படுகொலை படங்கள் தற்பொது வெளியாகி இலங்கை அரசின் கொலைவெறி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் இந்தியாவை த்தவிர தான்.
இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அதிபர்
ராஜபக்சேவை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு முன்பும், சர்வதேச நீதிமன்றத்திலும்
விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்
வலுத்து வருகின்றன.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா.
மனித உரிமை கவுன்சிலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு கண்டன
தீர்மானத்தை தாக்கல் செய்தது.
இதில் பலத்த வற்புறு த்தலில் இந்தியாவும் மனிதாமிமான அடிப்படையில் பெரும்பான்மையான நாடுகளும் இந்த
தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு அளித்தன. அந்த தீர்மானம் நிறைவேறியது
இலங்கைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது ஐ.நா. மனித உரிமை குழு
மீண்டும் கூடி நடக் கிறது. இந்த கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக
அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. இன்று (திங்கட்கிழமை)
தாக்கல் ஆகும் இந்த தீர்மானத்தில், "இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை
நடத்தப்பட வேண்டும், போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழுவின்
பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், கடமையை நிறைவேற்றுவதில் தனக்குள்ள
பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தப்படும்"
என்று தெரிகிறது. இந்த தகவலை இலங்கை விவகாரங்களுக்கான அமெரிக்க
வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரல் நிருபர்களிடம்
தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகுழவில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அவற்றில், ஐரோப்பிய நாடுகள் உள்பட 30–க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த
தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க முன்வந்து இருப்பதாகவும், மேலும் சில
நாடுகளும் ஆதரவு அளிக்கும் என்று நம்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இன்று முதல் இந்த தீர்மானத்தின் மீது
விவாதம் நடந்து, முடிவில் ஓட்டெடுப்பு நடக்கும்போது தீர்மானம் பெரும்பான்மை
ஆதரவுடன் நிறைவேறும் தெரிகிறது.
ஆனால் தமிழர்கள் வாழும் மாநிலத்தையே தன்னிடம் கொண்டு கூட்டாட்சி நடத்தும் இந்தியா மட்டும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இன்னமும் யோசித்து வருகிறது.உலக நாடுகள் அனைத்தும் இலங்கையி கொடுரத்தை எதிர்த்து தீர்மானத்தை ஆதரிக்கும் போது இந்தியா மட்டும் இலங்கை தனது நட்பு நாடு என்று புலம்பிக்கொண்டிருப்பது என்ன மர்மம் என்று தெரிகிறதா?
இந்த விவகாரத்தில் முழுக்க இந்தியாவுக்கு நட்பு நாடு அல்ல இலங்கை சோனியா வுக்கும் காங்கிரசுக்கும் மட்டும் தான் இலங்கையும்-ராஜபக்சேயும் நட்பு.
தமிழனாகப்பிறந்தததே இவன் படுகொலைக்கு காரணம். |
இங்கேயே வாழும் தமிழர்கள் தேவையா?அல்லது தமிழரினத்தையே கொன்று குவிக்கும் பக்சேயின் சிங்கள இனவாத இலங்கை தேவையா?
இத்தீர்மானத்தில் இந்தியா முடிவு அதன் வருங்காலத்தையே அதாவது காங்கிரசின் தமிழக வருங்காலத்தையே தீர்மானிக்கும்.
இது ராஜபக்சே காசை கொடுத்து போடும் படம்
---------------------------------------------------------------------------------------------------------------
அத்திப்பழத்தை புட்டுப் பார்ப்போம்?
பவர்களுக்கு பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட் உணவு வாழ்க்கைக்கு பெரும்பாலனோர் மாறிவருகின்றனர். டின்களில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள் இவற்றை அதிகம் உண்ண தொடங்கிவிட்டனர். இதில் அதிக அளவில் சோடியம் அடங்கியுள்ளது. இதுவே உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதேபோல் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.
இதில் உள்ள ஆக்ஸலேட் ரசாயனம் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பு சரியாவதோடு நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம். இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ப்பொருள் அத்தியில் காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.
காட்டு ஆத்தாப்பழம்
-------------------------
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்க்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.
புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு.
புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மலைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்
போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் சி, வைட்டமின் ஙி1, வைட்டமின் ஙி2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான வாசனை உடையதாக இருக்கும்.
பக்கவிளைவுகள் இல்லை
காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையானகுமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்றகொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மை கொண்டது.
இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------