இந்திய பொருளாதாரம்
ஒரு சின்ன பார்வை.
நமது இந்தியாவை வழிகாட்டி நடத்தி செல்பவர்கள் சாமானியப்பட்டவர்கள் கிடையாது.
பொருளாதாரத்தில் புலிகள்.அதையே புளி போல் கரைத்து குடித்து கொட்டை போட்டவர்கள் .மன்மோகன் சிங் ,ப.சிதம்பரம் என்றால் சும்மாவா?
அ தன்படி, நம் நாட்டில் 100 கோடி டாலருக்கும் (ரூ.5,500 கோடி) அதிகமாக நிகர சொத்து மதிப்பைக் கொண்டுள்ளவர்கள் 55 பேர்.
இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் கோடி (18,900 கோடி டாலர்) ஆகும். இது, நம் நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறையான 5 லட்சம் கோடி ரூபாய்களை காட்டிலும் 100 சதவீதம் அதிகமாகும்.
ஆனால் இதனை அதாவது நாட்டின் பற்றக்குறைகளை களைய இந்திய அரசு அதன் கடுமையான போக்குகளை இந்த பகாசுர பணக்காரர்களை விட்டு விட்டு வறுமையில் இருக்கும் மக்களையே மேலும் மானியங்கள் வெட்டு என்று இருக்கும் கோவணத்தையும் ஆட்டையை போட பார்க்கிறது.
அதே நேரம் தொழில் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு பகாசுர தொழிலதிபர்களுக்கு வரிச்சலுகை,இதர சலுகைகள்,முறைகேடுகள் என வாரி வழங்குகிறது. ஆனால் அந்த அமபானிகளொ அரசை வரிமுதல் அத்தனை விடயங்களிலும் ஏ மாற்றுகிறர்கள்.அது தெரிந்தே அரசும் மக்களை கசக்கி பிழிகிறது,சவ ஊர்வலம் தவிர அனைத்துக்கும் சேவைவரி என்று பிடுங்கும் அரசு பல கோடிகள் புழங்கும் சினிமாத்துறைக்கு சேவை வரி விளக்கை தருகிறது.
அன்றாடம் சாப்பிடும் சோற்றை பொங்க கூட ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை என்று வயிற்றில் அடிக்கிறது.
பண முதலைகளுக்கு மேலும் சலுகைகள்-சேவைகள் .
நடுத்தர மக்களுக்கு மேலும் -மேலும் சேவை வரிகள்.
இதுதான் நேரு சொன்ன காங்கிரசின் சோசலிசமா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-
"நானோ தொழில்நுட்பம் என்பது மூலக்கூறு அல்லது அணு அளவில் ஒரு பொருளினை மாற்றம் செய்வதாகும்".
அத்தொழில் நுட்பம் இப்போது பல துறைகளிலும் பெரும் புரட்சியையே செய்து வருகிறது.
இப்போது அத தொழில் நுட்பம் விவசாயத்திலும் தனது கரங்களைப் பதித்துள்ளது.
இந்தியா விலேயே முதன் முதலாக தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை உருவாக்கியுள்ளது.
மண்வளத்தை பாதுகாப்பது பயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.
பயிருக்கு அளிக்கப்படும் சத்துக்களில் பெரும்பாலானவை களிமண்ணில் ஒட்டிக் கொள்வதால் பயிருக்கு சரியான விகிதத்தில் கிடைப்பதில்லை.
ஆனால் நானோ தொழில்நுட்பத்தின்மூலம் இதனை மாற்ற முடியும். நானோ துகள்கள் களிமண்ணில் ஒட்டிக்கொள்வதால் பயிர்ச்சத்துக்கள் களிமண்ணில் ஒட்டுவது தடுக்கப்பட்டு பயிருக்கு தேவையான அளவு கிடைக்கிறது.
நானோ உரங்களுக்கு ஜியோலைட் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் முதற்கட்ட ஆராய்ச்சியில் நானோ உரங்களிலிருந்து பயிருக்கு தேவையான நைட்ரஜன் சத்து நாற்பது நாட்கள் வரையிலும் நானோ உரங்களிலிருந்து சீராக வெளியாகிறது.
நானோ உரங்கள் பயிருக்கு தேவையான சத்துக்களை சரியான விகிதத்தில் தக்க முறையில் கிடைக்க வழிசெய்கிறது. மேலும் உரத்துகள்கள் நானோ படலம் கொண்டு பூசுவதால் சத்துக்கள் வெளியாவது தடுக்கப் படுகிறது.
பயிர்களின் சரிவிகித சத்து தேவைக்காக எல்லாத்தேவையான சத்துக்களையும் உள்ளடக்கிய நானோ கம்போஸ்ட்டை உருவாக்க முடியும்.
விவசாயப் பல்கலைக்கழகத்தில் நானோ களைக்கொல்லிகள் உருவாக்கப் பட்டுள்ளன. களைக்கொல்லியின் மூலக்கூறுகளைத் தேவையான இடத்தில் வெளியிடுவதால் களைகளில் வளர்ச்சி கட்டுப்படுத்தப் படுகிறது.
பாலிமர் பொதிந்த களைக்கொல்லிகள் மண்ணில் உள்ள ஈரப்பதத்திற்கேற்ப வெளியாகி அதிலுள்ள வேதிப்பொருட்களை விதைகளின் முளைப்புத்திறனைக் குறைத்துவருகிறது. இதன்மூலம் களைக்கொல்லிகளின் திறன் அதிகரிக்கிறது.
கார்பன் நானோ குழாய்கள் விதைகளின் தோலை விரிவடையச் செய்தும் நீக்கி கதவுகளாகச் செயல்பட்டு விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கின்றன. இந்த கார்பன் நானோ குழாய்கள் மண்ணின் ஈரப்பதம் குறைவாக உள்ள நிலையிலும் முளைப்புத்திறனை அதிகரிக்கிறது.
நானோ துகள்களை பயிர்களில் நோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து
தேவையான பூசனக்கொல்லியை தேவையான இடத்தில் வெளியிடச்செய்ய முடியும்.
இதன்மூலம் விளைச்சல் குறைவதைத் தடுக்க முடியும்.
நானோ சென்சார்கள் மூலம் பயிரில் உள்ள பிரச்னைகளையும் உடனடியாக தெரிந்துகொள்ளலாம். நானோ தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண் பொருட்களைத் தரப்படுத்துவதும் சாத்தியப்படுகிறது.
நானோ உயிரி தொழில்நுட்பத்தின்மூலம் உணவு-பயிர்ச்சத்துக்களுக்குத் தேவையான மூலக்கூறுகள், புரதத்தைக் கண்டு
பிடிப்பதற்கான புதிய உபகரணங்கள் பற்றியும் விலங்குகளின் கழிவிலுள்ள நச்சான
"பைட்டோ டாக்சிக்" நோய்க் காரணிகளைக் கண்டுபிடிப்பதும் சாத்தியமாகும்.ஏற்கனவே நானோ
தொழில்நுட்பம் உணவியல் துறையில் பெரும்பங்கு வகிக்கிறது.
மண், நீர் மாசுபடுவதை நானோ துகள்கள் மூலம் தடுப்பது குறித்து ஆராய்ச்சிகளும் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது இந்தியாவை வழிகாட்டி நடத்தி செல்பவர்கள் சாமானியப்பட்டவர்கள் கிடையாது.
பொருளாதாரத்தில் புலிகள்.அதையே புளி போல் கரைத்து குடித்து கொட்டை போட்டவர்கள் .மன்மோகன் சிங் ,ப.சிதம்பரம் என்றால் சும்மாவா?
அவரகள் தலை மையின் கீழ் இப்போதைய இந்தியா பொருளாதார வலிமையை பார்ப்போம்.
மொத்த வருவாயைக் காட்டிலும் மொத்த செலவினம் அதிகரித்துள்ளதால் நடப்பு
2012-13-ஆம் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டி
உள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும்.
நிதி
பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்தியாவின்
கடன் பெறும் தகுதியை குறைக்கும் என்ற அச்சம் எற்பட்டு ள்ள து.
இந்த
பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்தியாவின் முதல்
பணக்காரராக இருந்து வரும் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு சுமார்
ரூ.1.18 லட்சம் கோடியாக (2,150 கோடி டாலர்) உள்ளது. இது, நாட்டின் நிதி
பற்றாக்குறையில் 24 சதவீதமாகும்.அவருக்கு மட்டும் இந்திய அரசு இதுவரை 1000 கோடிகள் வரிச்சலுகை ,மற்றும் வருமானத்தில் முறைகேடுகள் என செய்துள்ளது.
நடப்பு விலை அடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.95
லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
இந்தியாவில் உள்ள 55 ப காசுர கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு
10 சதவீதத்திற்கும் அதிகமாகும். கடந்த 2011-ஆம் ஆண்டில் மெகா
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 55-ஆக இருந்தது. இது, 2012-ஆம் ஆண்டில் 48-ஆக
குறைந்தது. இது, தற்போது மீண்டும் 55-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும்
2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மொத்த சொத்து மதிப்பு 3 சதவீதம்
குறைந்துள்ளது.
நம் நாட்டில் "10 மெகா கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு
மட்டும் சுமார் ரூ.5.50 லட்சம் கோடியாகும். இதுவும் நிதி பற்றாக்குறையைக்
காட்டிலும் ரூ.50,000 கோடி அதிகமாகும்".
இந்தியாவில் 55 மெகா கோடீஸ்வரர்கள் இருந்தா லும், உலகின் டாப் 100
பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, லட்சுமி
மிட்டல், அசிம் பிரேம்ஜி ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
இவர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.2.71 லட்சம் கோடி (4,920 கோடி
டாலர்) என்பது குறிப்பிடத்தக்கது. இது, நிதி பற்றாக்குறையில் 60
சதவீதமாகும்.
உலக பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வணிக பத்திரிகை ஆண்டுதோறும்
வெளியிடுகிறது. அ தன்படி, நம் நாட்டில் 100 கோடி டாலருக்கும் (ரூ.5,500 கோடி) அதிகமாக நிகர சொத்து மதிப்பைக் கொண்டுள்ளவர்கள் 55 பேர்.
இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் கோடி (18,900 கோடி டாலர்) ஆகும். இது, நம் நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறையான 5 லட்சம் கோடி ரூபாய்களை காட்டிலும் 100 சதவீதம் அதிகமாகும்.
ஆனால் இதனை அதாவது நாட்டின் பற்றக்குறைகளை களைய இந்திய அரசு அதன் கடுமையான போக்குகளை இந்த பகாசுர பணக்காரர்களை விட்டு விட்டு வறுமையில் இருக்கும் மக்களையே மேலும் மானியங்கள் வெட்டு என்று இருக்கும் கோவணத்தையும் ஆட்டையை போட பார்க்கிறது.
அதே நேரம் தொழில் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு பகாசுர தொழிலதிபர்களுக்கு வரிச்சலுகை,இதர சலுகைகள்,முறைகேடுகள் என வாரி வழங்குகிறது. ஆனால் அந்த அமபானிகளொ அரசை வரிமுதல் அத்தனை விடயங்களிலும் ஏ மாற்றுகிறர்கள்.அது தெரிந்தே அரசும் மக்களை கசக்கி பிழிகிறது,சவ ஊர்வலம் தவிர அனைத்துக்கும் சேவைவரி என்று பிடுங்கும் அரசு பல கோடிகள் புழங்கும் சினிமாத்துறைக்கு சேவை வரி விளக்கை தருகிறது.
அன்றாடம் சாப்பிடும் சோற்றை பொங்க கூட ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை என்று வயிற்றில் அடிக்கிறது.
பண முதலைகளுக்கு மேலும் சலுகைகள்-சேவைகள் .
நடுத்தர மக்களுக்கு மேலும் -மேலும் சேவை வரிகள்.
இதுதான் நேரு சொன்ன காங்கிரசின் சோசலிசமா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை விவகாரத்துக்காக உண்ணா நிலை போராட் டத்தில் லயலோ கல்லுரி மாணவர்கள்.
-
விவசாயத்திலும் "நானோ"
"நானோ தொழில்நுட்பம் என்பது மூலக்கூறு அல்லது அணு அளவில் ஒரு பொருளினை மாற்றம் செய்வதாகும்".
அத்தொழில் நுட்பம் இப்போது பல துறைகளிலும் பெரும் புரட்சியையே செய்து வருகிறது.
இப்போது அத தொழில் நுட்பம் விவசாயத்திலும் தனது கரங்களைப் பதித்துள்ளது.
இந்தியா விலேயே முதன் முதலாக தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை உருவாக்கியுள்ளது.
மண்வளத்தை பாதுகாப்பது பயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.
பயிருக்கு அளிக்கப்படும் சத்துக்களில் பெரும்பாலானவை களிமண்ணில் ஒட்டிக் கொள்வதால் பயிருக்கு சரியான விகிதத்தில் கிடைப்பதில்லை.
ஆனால் நானோ தொழில்நுட்பத்தின்மூலம் இதனை மாற்ற முடியும். நானோ துகள்கள் களிமண்ணில் ஒட்டிக்கொள்வதால் பயிர்ச்சத்துக்கள் களிமண்ணில் ஒட்டுவது தடுக்கப்பட்டு பயிருக்கு தேவையான அளவு கிடைக்கிறது.
நானோ உரங்களுக்கு ஜியோலைட் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் முதற்கட்ட ஆராய்ச்சியில் நானோ உரங்களிலிருந்து பயிருக்கு தேவையான நைட்ரஜன் சத்து நாற்பது நாட்கள் வரையிலும் நானோ உரங்களிலிருந்து சீராக வெளியாகிறது.
நானோ உரங்கள் பயிருக்கு தேவையான சத்துக்களை சரியான விகிதத்தில் தக்க முறையில் கிடைக்க வழிசெய்கிறது. மேலும் உரத்துகள்கள் நானோ படலம் கொண்டு பூசுவதால் சத்துக்கள் வெளியாவது தடுக்கப் படுகிறது.
பயிர்களின் சரிவிகித சத்து தேவைக்காக எல்லாத்தேவையான சத்துக்களையும் உள்ளடக்கிய நானோ கம்போஸ்ட்டை உருவாக்க முடியும்.
விவசாயப் பல்கலைக்கழகத்தில் நானோ களைக்கொல்லிகள் உருவாக்கப் பட்டுள்ளன. களைக்கொல்லியின் மூலக்கூறுகளைத் தேவையான இடத்தில் வெளியிடுவதால் களைகளில் வளர்ச்சி கட்டுப்படுத்தப் படுகிறது.
பாலிமர் பொதிந்த களைக்கொல்லிகள் மண்ணில் உள்ள ஈரப்பதத்திற்கேற்ப வெளியாகி அதிலுள்ள வேதிப்பொருட்களை விதைகளின் முளைப்புத்திறனைக் குறைத்துவருகிறது. இதன்மூலம் களைக்கொல்லிகளின் திறன் அதிகரிக்கிறது.
கார்பன் நானோ குழாய்கள் விதைகளின் தோலை விரிவடையச் செய்தும் நீக்கி கதவுகளாகச் செயல்பட்டு விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கின்றன. இந்த கார்பன் நானோ குழாய்கள் மண்ணின் ஈரப்பதம் குறைவாக உள்ள நிலையிலும் முளைப்புத்திறனை அதிகரிக்கிறது.
நானோ சென்சார்கள் மூலம் பயிரில் உள்ள பிரச்னைகளையும் உடனடியாக தெரிந்துகொள்ளலாம். நானோ தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண் பொருட்களைத் தரப்படுத்துவதும் சாத்தியப்படுகிறது.
மண், நீர் மாசுபடுவதை நானோ துகள்கள் மூலம் தடுப்பது குறித்து ஆராய்ச்சிகளும் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தகவல்: முனைவர் ப.முருகேசபூபதி
, துணைவேந்தர், த.வே.பல்கலைக் கழகம்,
கோயம்புத்தூர்-641 003
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--