புதன், 13 மார்ச், 2013

வால் நட்சத்திரம்-


இப்போது மேற்கு வானில் ஒரு வால்நட்சத்திரம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதன் பெயர்: C/2011 L4 பாண்ட்ராஸ் (C/2011 L4 (PANSTARRS).
 இன்னும் ஒரு வாரத்துக்கு அதனை எந்த வித கருவியும் இன்றி வெறும் கண்ணால பார்க்கலாம்.

 வால் நட்சத்திரம் என்றால் என்ன ?
ஆதிகாலத்தில் நம் மக்களுக்கு வால்நட்சத்திரங்கள் பற்றியோ, அது எப்படி உருவாகிறது என்பது பற்றியோ எதுவும் தெரியாது. அதனால் வால்நட்சத்திரங்கள் பற்றி ஏராளமான கட்டுக் கதைகள் நம்மிடையே உலவி வந்தன. வால்நட்சத்திரங்கள் வந்தால் உலகுக்கு ஆகாது என்றும், அரசன் செத்துப் போவான், ஆட்சியாளர்களின் வீழ்ச்சியும் அஸ்தமனமும் நடக்கும் என்றும், ஒரு ஊரின்- நாட்டின் கெட்ட நேரம் வந்தால்தான் வால்நட்சத்திரங்கள் உதிக்கும் என்றெல்லாம் ஏராளமான புனைவுகள் பேசப்பட்டன.
அவை நம்பவும் பட்டன.
 இதெல்லாம் உண்மையா? அப்படி ஏதும் இல்லை என்பதுதான் உண்மை. இது பின்னர் அறிவியல் மூலம் நிரூபணம் ஆனது.ஆனால் ஆதிகாலத்தில், வால்நட்சத்திரங்களைப் பார்த்து பயந்தனர். அதிலிருந்து வரும் ஒளி ஏதோ இயற்கையின் சக்திக்கு அப்பாற்பட்டு எங்கிருந்தோ வந்ததாக மக்கள் முழுமையாய் நம்பினர்.
அவர்கள் வால்நட்சத்திரங்கள் நெருப்பை சுமந்து வந்து கொண்டிருக்கின்றன என்றும், அதனால்தான் அவை இரவில் பிரகாசமாய்த் தெரிவதாகவும் நம்பினர்.சிலர் இந்த வால்நட்சத்திரங்கள் வருவது என்பது அந்த நாட்டுக்கு-மக்களுக்கு வீசப்பட்ட சாபம் என்றும் நினைத்தனர்.
வால் நட்சத்திரம் என்பது உண்மையில் நட்சத்திரமே இல்லை.வால் நட்சத்திரங்கள் என்பவையும் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்களே. முன்பெல்லாம் வால் நட்சத்திரங்கள். அழுக்கான பனிக்கட்டிப் பந்து என்றே அழைக்கப்பட்டது. இதில் பனிக்கட்டியைவிட அதிக அழுக்கே உண்டு என்றும் நம்பப்பட்டது. ஆனால் இன்று இவற்றை “ஐஸ்கட்டியின் அழுக்கு பந்து” என்று பந்தாவாக அழைக்கிறோம். ஆனால் அவைகள் அனைத்தும் சூரிய குடும்பத்தின் வெளிப்பரப்பில் உள்ள ஊர் ட் மேகத்திலிருந்து உருவானவை. இவை பனிக்கட்டியால் ஆனவை. குழந்தைகள், அப்பா அம்மாவுக்கு அருகில் வரும்போது சேட்டை செய்வது போல இந்த வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு அருகில் வரும்போது தனது வாலை நீ ட்டிக் காட்டும். மெலிதான தெளிவற்ற ஒரு தற்காலிக வளிமண்டலத்தை வால் நட்சத்திரங்கள் கொண்டுள்ளன. சிலசமயம் அந்தப் பகுதில் வளிமண்டலம் அப்படியே நீண்டு வாலாக மாறியிருக்கும்.
இந்த தற்காலிக வளிமண்டலம் மற்றும் வால் எல்லாம் சூரியனின் தாராள மயத்தால்தான். அதன் கதிர்வீச்சும், சூரியக் காற்றும் தான், வால்நட்சத்திரங்களின் வளிமண்டலம் உருவாக்கும் முதன்மைக் காரணிகள்.வால்நட்சத்திரத்தில் உள்ள பனிக்கட்டி உருகி, அதனால் நீரும் தேவையற்ற எரிந்த புகையும் பின்னால் தள்ளப்படுவதால் தான் வால் நீண்டுகொண்டே போவதற்கும் காரணம் என்றும் அறியப்பட்டுள்ளது.
இந்த வால் நட்சத்திரங்கள் மார்ச் 7 லிருந்து தெரிந்தாலும், மார்ச் 10 சூரியனுக்கு அருகில் வருவதால் இன்னும் பிரகாசமாய் இருக்கும். சூரியன் மறைந்த பின் 30 நிமிடத்தில் மேற்கு வானில்,தொடுவானிலிருந்து 10 டிகிரி உயரத்தில் தெரியும். மார்ச் 12 நிலவுக்கு அருகில் இருப்பதால் இன்னும் பிரகாசம் அதிகமாய் இருக்கும். வெறும் கண்ணாலும் பார்க்கலாம். இரு கண்ணோக்கி பைனாகுலர் கொண்டும் பார்க்கலாம்.
இது போல் இன்னொரு வால் நட்சத்திரம், நம்ம சந்திரனைவிட 5 மடங்கு ஒளி தரவல்லதாக இருக்கும். இது 2013,நவம்பர் 18ல் தெரியும். அப்போது பார்ப்போம்.வால் நட்சத்திரங்களை, தெளிவாக காண, ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம், விமான பயணத்துக்கு, ஏற்பாடு செய்துள்ளது.இந்த ஆண்டு, இரண்டு வால் நட்சத்திரங்கள் பூமியை கடக்க உள்ளன. இவற்றில், “பான்-ஸ்டார்ஸ்’ என்ற வால்நட்சத்திரம் இந்த மாதம் பூமியை கடக்கிறது.வரும் நவம்பர் மாதம் “ஐசோன்’ என்ற மற்றொரு, வால்நட்சத்திரம் வானில் தோன்றுகிறது. பூமியில் இருந்து 10 கோடி மைல், தொலைவில் பயணிக்கும், “பான்-ஸ்டார்ஸ்’ நட்சத்திரத்தை தெளிவாக காண ஜெர்மனியின், பான் நகரத்தில் உள்ள “எக்லிப்ஸ் ட்ராவல்’ என்ற நிறுவனம் சிறப்பு விமானத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
.இந்நிறுவனம் ஏற்பாடு செய்யும்விமானம் வரும் 16ம்தேதி, புறப்படுகிறது. இவ்விமானத்தில் மொத்தம், 144 இருக்கைகள் இருந்தாலும், அனைவரும் ஜன்னலோரம் அமர்ந்து வால் நட்சத்திரத்தை காண வசதியாக விண்வெளி ஆர்வலர்கள் 88 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். வானிலை தெளிவாக இருந்தால், பூமியில் இருந்தே, இவ் வால்நட்சத்திரத்தை காண முடியும்.
 மேகங்களையும் தாண்டி11 ஆயிரம் மீட்டர்களுக்கு அப்பால், பயணம் செய்யும் இவ்விமானத்தில் இருந்து வால் நட்சத்திரத்தை இன்னும் தெளிவாக காண முடியும்.
இரண்டு மணி நேர பயணத்துக் காக இந்நிறுவனம் 35 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க உள்ளது.
                                                                                                                                  --சொ.மோகனா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 "இந்திய பட்ஜெட்" -ஒரு அலசல்.
=============================
                                                                                                                    -சீத்தாராம் யெச்சூரி எம்.பி

இந்திய  வளர்ச்சி -பட்ஜெட்  மாயை!

இந்த பட்ஜெட் மக்களின் மீது மென் மேலும் சுமையைத்தான் ஏற்றியுள்ளதே தவிர, ஏற்கனவே சொல்லப்பட்ட அனை வரையும் “உள்ளடக்கிய வளர்ச்சி” என் பதையெல்லாம் பொய்யாக்கியுள்ளது. மேலும், இந்த பட்ஜெட் முன்மொழிவுகள் நமது பொருளாதாரத்தை மேல் நோக்கிய வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல் லும் உந்து சக்தியாக அமையவில்லை. மத்திய புள்ளியியல் நிறுவனம் 2012-2013ம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியினை 5 சதவீதம் என்று அளவிட்டிருக்கிறது.
மேலும் நமது பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்று தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளி விவரம் தவறானது என்றும், மத்தியப் புள்ளியியல் நிறுவனம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியினை குறைவாக கணக்கிட்டுள்ளது எனவும் நிதியமைச்சரும், நிதியமைச்சகமும் வாதாடி வந்தன. ஆனால் இந்த பட் ஜெட் மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் இந்த கணக்கீடு சரிதான் என்பதை ஊர் ஜிதம் செய்துள்ளது.
 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, பொருளாதார வளர்ச்சி என்பது மந்த மாகவே உள்ளது. 2009-10ல் 9.3 சதவீத மாக இருந்தது. இது 2011-12ல் 6.2 சதவீத மாகவும், பின்னர் 2012-2013ல் இது 5 சதவீதமாகவும் குறைந்தது எனவும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக் கிறது. இந்தப் பொருளாதார மந்தத்திற்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம்.
 அதில் மிக முக்கியமானது 2008ம் ஆண்டு தொடங்கிய உலகப் பொருளா தார நெருக்கடியின் போது ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் உருவாக்கப்பட்ட கிராக்கி உயர்வு ஆகும். இப்படி கிராக்கியில் உருவாக்கப்பட்ட உயர்வு என்பது 2009-2012ம் ஆண்டு களுக்கிடையில் வருடா வருடம் குறைந்தபட்சம் சராசரியாக 8 சதவீத அளவிற்கு நுகர்வினை அதிகரித்தது. ஆனால், 2012-2013ம் ஆண்டில் இது 4 சதவீதமாகக் குறைந்துவிட்டது.


இதனிடையே இந்த பட்ஜெட்டில் இந்த வருடம் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது கிட்டத்தட்ட கடந்த ஆண்டு போல தேக்க நிலை யிலேயே உள்ளது.
தற்போதுள்ள 10 சத வீத பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் சொல்லப்பட்டுள்ள 12 சதவீத உயர்வு என்பது உண்மையில் ஒன்றுமேயில்லை. ஒட்டு மொத்த மானி யங்களின் அளவில் ரூ.26,571 கோடிகள் குறைக்கப்பட்டுள்ளன.
 நிதியமைச்சர் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.10,000 கோடிகளை வைத்துக் கொண்டு, உண வுப்பாதுகாப்பு என்பதை தூக்கிப்பிடித்து முன்நிறுத்த முயற்சி செய்கிறார். உண் மையில் இந்த ஆண்டிற்கு ஒதுக்கப்பட் டுள்ள ஒட்டு மொத்த உணவு மானியத் திற்கான நிதி ஒதுக்கீடு என்பது, கடந்த வருடம் திருத்தியமைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் அளவை விட, ரூ. 5,000 கோடிகள் மட்டுமே அதிகமாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக் கீட்டில் எந்த மாற்றமும் இல்லை.
 பெட் ரோலியத்திற்கான மானியம் ரூ.30,000 கோடிகளுக்கும் மேல் வெட்டப்பட்டுள் ளது.
இதனிடையே மக்களின் சொத் தான பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ. 50,000 கோடி களை திரட்டும் திட்டம் உள்ளது.
 எல்லா வற்றிற்கும் மேலாக, சுகாதாரம், கிராமப்புற அபிவிருத்தி மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டின் அளவு ஒட்டுமொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதாச்சாரத் தின் அடிப்படையில் ஒப்பிட்டால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நிதி மிகக் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள் ளது. சட்டப்படி நிர்ணயம் செய்யப்பட்ட தொகையைவிட மிகக் குறைவாகவே எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்கான துணைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
 நிதிய மைச்சரின் இது போன்ற நடவடிக்கை களால் நாட்டின் மிகப் பெரும்பான்மை யான மக்கள் துன்பத்திற்கு ஆளாக்கப் படுவார்கள் என்பது ஒருபுறம். மறுபுறம் பட்ஜெட் செலவினங்கள் இப்படி சுருக் கப்பட்டதன் விளைவாக மக்களுடைய வருமானமும் வாங்கும் சக்தியும் மேலும் குறையும். இதனால் நமது நாட்டுப் பொரு ளாதாரத்தில் ஒட்டுமொத்தமாக நுகர்வு என்பது மேலும் குறையும்.
இந்த பட்ஜெட் என்பது அந்நிய மற் றும் உள்நாட்டு மூலதனங்களின் முத லீடுகள் எளிதாக மற்றும் பெரிய அளவில் செய்யப்படுவதற்கான வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் எவ்வளவுதான் அதிகமான நிதி முதலீடு கள் வந்தாலும், மக்களுக்கான வாங்கும் சக்தி உயர்த்தப்படாமல், இந்த முதலீடு கள் மட்டுமே தானாக வளர்ச்சியினை உருவாக்கிவிடாது. ஏனென்றால் மக்களு டைய வாங்கும் சக்தி உயரும்போதுதான் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் நுகர்வு என்பதும் உயரும்.
 அதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உறுதிப் படும். சுருக்கமாகச் சொல்வதெனில், இந்த பட்ஜெட்டின் காரணமாக மக்க ளின் வாங்கும் சக்தி மேலும் குறையும். இந்த பட்ஜெட் முன் மொழிவுகள் மாற்றி யமைக்கப்படாவிட்டால், முதலீடு செய் யப்படும் எந்த நிதித் தொகையாலும் வளர்ச்சியை எட்ட முடியாது.
எனவே, இந்தச் சூழ்நிலையில் உள்ளே வரும் நிதி யாதாரங்கள் உற்பத்தியைப் பெருக்கும் முதலீடுகளாக அமையாது. மாறாக ஊக வணிகத்திற்கான நிதி மூலதனங்கள் தான் அதிக அளவில் இந்தியாவிற்குள் வரும். இதன் காரணமாக தங்கம் மற்றும் நிலங்களின் மதிப்பு சமீப காலமாக அதி கரித்துக் கொண்டே போனது போல் மேலும் அதிகரிக்கும்.
திருத்தப்பட்ட நிதிப்பற்றாக்குறை ரூ. 5,20,925 கோடி என்ற பின்னணியில், இவையனைத்தையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
வர வேண்டிய வரி அளவில் வசூலிக்காமல் விட்ட தொகை ரூ. 5,73,630.1 கோடி என 2012-2013ம் ஆண்டு பட்ஜெட் தெரிவித்திருந்தது. அதாவது இந்த வரிப்பணத்தை வசூலித் திருந்தால் நிதிப்பற்றாக்குறை என்பதே இல்லாமல், அரசாங்க கஜானாவில் கூடுதலாக ரூ. 53,000 கோடிகள் இருந் திருக்கும். நிதித் திரட்டல் மிக அவசர மாகச் செய்யப்பட வேண்டிய கட்டாய மான பணியாக இருக்கும்போது, வெறு மனே செலவினங்களை வெட்டிச் சுருக் குவதன் மூலம் நிதி வருவாயை பெருக்க முயலக் கூடாது.
 மாறாக, வரிகளுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடை யிலான விகிதாச்சாரத்தினை விரிவு படுத்துவதன் மூலம், அதாவது செல்வந் தர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரிகளை அதிகரிப் பதன் மூலம், நிதி வருவாயைப் பெருக்க முடியும். 2007-2008ம் ஆண்டில் இந்த விகிதாச்சாரம் என்பது 11.9 சதமாக இருந்தது. தற்போது இது 10 சதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
செல்வந்தர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு வழங் கப்படும் வரிச் சலுகைகள் என்பது வேறு ஒன்றுமில்லை, இவை மானியங் களே. ஆனால் இவற்றிற்கு வளர்ச்சிக் கான ஊக்கத் தொகைகள் என்று பெய ரிடப்பட்டுள்ளது. இப்படி ஊக்கத் தொகைகளை வழங்கும்போது ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க சாமானிய மக்களுக்கு ஏற்கனவே சிறிய அளவில் வழங்கி வரும் மானியங்கள், சுமை என்று கருதப்பட்டு, மேலும் வெட் டிச் சுருக்கப்படுகின்றன.
 இப்படி வசூலிக்காமல் விடப்பட்ட வரிகளை வசூலிப்பதன் மூலம், நிதி வரு வாயை பெருக்குவது சாத்தியமாகும். இத னால் நிதிப் பற்றாக்குறை குறையும். மறு புறம் நமது நாட்டில் மிகப் பெருமளவில் தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கு வதற்குத் தேவை யான பெரிய அளவிலான பொது முதலீட் டிற்கான நிதியினை உருவாக்க முடியும். இப்படி அடிப்படை கட்டுமான வசதி களைப் பெருக்குவது என்பது பொருளா தார ரீதியாக அவசியமான ஒன்று மட்டு மல்ல, மாறாக, அனைவருக்குமான சுகா தாரம், கல்வி, மருத்துவம், போன்ற சமூக அடிப்படைக் கட்டுமானங்களையும் பெருக்க உதவும். இப்படி செய்யப்படும் நிதி முதலீடுகள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். அதனால், மக்களுடைய வருமானமும், வாங்கும் சக்தியும் உயரும்.
 இதனால் உருவாகும் ஒட்டு மொத்த உள் நாட்டு கிராக்கி உயர்வின் மூலம் தற்போது நசிவடைந்து கொண்டிருக்கும் உற்பத் தித்துறை மீண்டும் புத்துயிர் பெறும்; உற்பத்தியும் பெருகும். அனைவராலும் ஏற்றுக்கொண்டுள் ளபடி, வளர்ச்சி விகிதங்கள் மட்டுமே ஒட்டு மொத்த பொருளாதார நலனையோ அல்லது மக்கள் நலனையோ உத்தர வாதப்படுத்தி விட முடியாது. மனித வளக் குறியீட்டின் அடிப்படையில், இந் தியா இன்னும் மோசமான நிலையில் உள்ளது. முக்கியமான மனிதவளக் குறி யீடுகளின் அடிப்படையில் மொத்த முள்ள பிரிக்ஸ்  நாடுகளில் இந் தியாதான் கடைசி இடத்தில் உ ள்ளது.
 துரதிருஷ்டவசமாக, நிதி அடிப்படை வாதம் என்பது இந்த பட்ஜெட்டில் வெற்றி ஆரவாரத்துடன் ஜெய கோஷம் செய்துள்ளது. நமது நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்குவதற் கான நிதியை பெருமளவில் திரட்டி, முத லீடு செய்து, அதன் மூலம் உள்நாட்டு கிராக்கியை அதிகப்படுத்துவதில் நாம் தவறியதன் காரணமாக நிதி அடிப்படை வாதத்தின் ஜெய கோஷம் சாத்தியமாகி யுள்ளது.
 இதனால், இரண்டு இந்தியாக்க ளாக உள்ள ஒளிரும் இந்தியாவிற்கும், இருளும் இந்தியாவிற்குமான இடை வெளி என்பது மேலும் அதிகரிக்கும்.
செல்வந்தர்களை மேலும் செல்வந்தர் களாக்கும்.
 ஏழைகளை மேலும் வறு மைக்குள்ளாக்கும்.

நன்றி : ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ், (5.3.2013)தமிழில்: ஆர்.எஸ். செண்பகம், திருநெல்வேலி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------