வெள்ளி, 18 ஜனவரி, 2013

எனது கனவு ...., !

   காலம் யாருக்காகவும் காத்திருப்பதாக 

    தெரியவில்லை. 

    காலன் மட்டுமே 

    காத்திருத்தலில் இருக்கிறான்.

   கனவுகள்  அனைவருக்கும் இருக்கிறது.

கனவுகள் இல்லாதவன் -

உயிரும் இல்லாதவனாகத்தான்

 இருக்கிறான்.

கனவுகள்தான் மனிதனை இன்னமும்

 வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

கனவுகள் விரியும் 

மனதில்லாதவன் 

வாழ்வும் நின்று விடுகிறது.

கனவுகள் 

இல்லாதவனுடன் 

வாழ வாழ்வுக்கு 

 விருப்பம் கிடையாது.

சிறுவனின் கனவு -மீசையுடன் 

பெரியவனாக  மாறுவது.

இளைஞனின்  கனவு 

காதலில் இன்புறுவதாக 

அதிகம்.

வாழ்வில் முன்னேறுவது 

அங்கு கொஞ்சம் 

இருக்கும் .

வயதானவனின் கனவு 

இன்னமும் இளமை

தன்னுள் ஊஞ்சலாடுவதாக .

கனவுகள் மாறலாம்.

கனவு காண்பது மாறாதது.

பிச்சைக்காரனுக்கு கூட 

தங்க பிச்சைப்பாத்திரக் கனவுகள் 

இருக்கலாம்.

நரியின் கனவில் -அது 

கோழிப்பண்ணைக்கு 

அதிபராகும்  வாய்ப்புகள் 

உண்டு.

 சின்ன ,சின்ன கனவுகள்தான் 

பெரிய,பெரிய நனவுகளகியுள்ளது.

கணினி  மட்டுமா?

வாணூர்திகளும் கனவுகளில்தானே 

சாத்தியமாயிற்று.

நீங்களும் கனவுகளைக்  காணுங்கள்.

அவை 

பகல் கனவாக இல்லாமல் 

பலிக்கும் 

கனவுகளாகட்டும்.

அதுதான் இப்போது 

என்னுள்  இருக்கும்  கனவு! 

 
 

suran