தனியே அவற்கொரு
மருந்து மாபியாமருத்துவர்கள்
சிறப்பு மருத்துவர்கள் சங்கத்தால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை சில மருத்துவர்கள் பரிந்துரைப்பதால், புற்று நோயாளிகள் பெரும்பாலும் தனியார் துறையிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது என்று மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
புற்று நோயாளிகளுக்கு தேவையற்றவை என சிறப்பு மருத்துவர்கள் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பட்டியல் இருப்பதாகவும், அந்த மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவால் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டியலில் இல்லாத மருந்தை ஒரு மருத்துவர் பரிந்துரைக்கும்போது, நோயாளிகள் அதை தனியார் துறையிடமிருந்து வாங்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.
புற்றுநோய் நோயாளிகளுக்குத் தேவையான சில மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை என்ற புகார்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக விஜேசூரிய இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
"புற்றுநோய் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் பல வகையான மருந்துகள் உண்மையில் உள்ளன." அவைகளில் இரண்டு அல்லது மூன்று இல்லை மற்ற எல்லா மருந்துகளும் இங்கே உள்ளன. சில மருத்துவர்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கு மேலதிகமாக வேறு மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், புற்றுநோய் நோயாளிகளுக்கு சில வகையான மருந்துகள் அவசியமில்லை என்று சிறப்பு மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. அவை எங்கள் பட்டியலில் இல்லை.
ஆனால் சில மருத்துவர்கள் அவற்றை எழுதுகிறார்கள். எழுதி முடித்ததும், நோயாளிகள் அவற்றை வெளியே எடுத்துச் செல்ல வேண்டும். இதுபோன்ற சமயங்களில் தான் பெரும்பாலான பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது.
நாங்கள் வழக்கமாக மருந்து பற்றாக்குறை ஏற்பட்டால் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மருந்துகளை வழங்குவதற்காக வேலை செய்கிறோம்.
இதேபோல், மருத்துவமனை பணிப்பாளர்கள் அத்தகைய மருந்துகளை உள்ளூரில் வாங்கி வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால், மருத்துவமனை பணிப்பாளர் அவற்றை உள்ளூரில் வாங்கலாம்.
சில மருந்துகள் இனி கிடைக்கவில்லை என்றாலும், அவற்றுக்கு மாற்றாக உள்ளன. உதாரணமாக, ஒரு வகை வலி நிவாரணி கையிருப்பில் இல்லாவிட்டாலும், அதற்கு மற்றொரு மாற்று மருந்து உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு அடிக்கடி பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கான காரணம் பதிவு இல்லாததுதான். கொண்டு வரப்படும் மருந்துகளின் நிலை குறித்த அறிக்கைகள் இல்லாமை. சர்வதேச அளவில் சில மருந்துகள் கிடைக்காததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழன் என்றொரு இனமுண்டு.!
தனியே அவற்கொரு குணமுண்டு !!
சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்தின்படி, நான்காம் கட்டமாக, 12 இந்தியர்கள் நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள், புதுடில்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு துவக்கியது.
இதன்படி இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த, சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வருகிறது. இந்த திட்டத்தின்படி, முதல் கட்டமாக, 104 பேர், இரண்டாம் கட்டமாக 116 பேர், மூன்றாம் கட்டமாக, 112 பேர் ஏற்கனவே நம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கிஉள்ளவர்களை, மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது.
அங்கு விசாரணைக்குப் பின், அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, சமீபத்தில், 300 பேர் பனாமாவில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
கட்டாயப்படுத்தி, ஹோட்டலுக்குள் அடைத்து வைக்கப்பட்டுஉள்ளதாக அங்கிருந்தோர் புகார் கூறியிருந்தனர். இதில், பெரும்பாலானோர் சொந்த நாட்டுக்கு திரும்ப மறுத்தனர்.
இந்நிலையில், பனாமாவில் இருந்து, 12 இந்தியர்கள் டில்லி விமான நிலையத்துக்கு நேற்று வந்து சேர்ந்தனர். இவர்களில், நான்கு பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். இதுவரை நான்கு கட்டங்களாக, இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.
இந்த விமானங்கள் அனைத்தும் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு வந்தன. இதில், பெரும்பாலானோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். அதற்கடுத்து ஹரியானா, குஜராத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்தனர்.
அமெரிக்காவில் இருந்து இதுவரை நாடு கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 400 பேரில் ஒருவர் கூட தமிழர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் விரிவாக சொல்லப்போனால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த யாருமே இதில் கிடையாது.
தமிழர்கள் ஆவணங்கள் இன்றி அமெரிக்காவிற்கு செல்வது இல்லை. முறையான விசா வாங்கியே செல்கின்றனர்.
2. தமிழர்கள் பொதுவாக ஏமாற்றி அமெரிக்கா செல்லும் வகையில் செயல்களில் ஈடுபடுவது குறைவு.
3. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் அங்கே முறையாக வேலை விசா வாங்கி சென்று.. கிரீன் கார்டு பெற பல வருடம் காத்திருப்பவர்கள்.
கிரீன் கார்டு பெறுவது என்பது அங்கே உள்ள தமிழர்களின் குறிக்கோள்களில் ஒன்று. அப்படி இருக்க ஆவணங்கள் இன்றி சென்றால் கிரீன் கார்டு எல்லாம் பெற முடியாது.
5. வேலை இன்றி படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் தமிழர்கள் பலரும் பொதுவாக அங்கே படிப்பு முடித்து overstay செய்வது இல்லை. அது சட்ட விரோதம் என்பதால் திரும்பி வந்துவிட்டு அதன் பின்பே வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
குஜராத்திகள் அதிகமாக நாடு கடத்தல் முதல் கட்டமாக நாடு கடத்தப்பட்டவர்களில், ஹரியானா - 35 குஜராத் - 33 பஞ்சாப் - 31 உத்தரப்பிரதேசம் - 3 மகாராஷ்டிரா - 2 குஜராத்திகள் பலர் கடந்த சில மாதங்களாக 1 கோடி ரூபாய் எல்லாம் தந்து அமெரிக்காவிற்கு ஆவணங்கள் இன்றி செல்லும் நிலையில்தான் இப்படி நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம். வட இந்தியர்கள்தான் அதிகம் இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 199 பேரில் 67 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படி நாடு கடத்தப்பட்டவர்களில் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் யாரும் கிடையாது.
வடஇந்தியர்கள் மட்டுமே இதுவரை நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
செலவு எவ்வளவு: இந்த ராணுவ விமானத்தில் ஒருவரை நாடு கடத்த குறைந்தபட்சம் $4,675 (ரூ. 4.07 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வணிக விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். ICE வகை விமானங்களை நாடு கடத்த பயன்படுத்தினால் மிகவும் மலிவு விலையில் அதாவது ஒரு நபருக்கு ரூ. 55,000 என்ற செலவில் நாடு கடத்த முடியும்.
ஆனால் சாதாரண விமானத்தில் நாடு கடத்தி அது விபத்துக்கு உள்ளானால்.. அது இரண்டு நாட்டு பிரச்சனையாக மாறும். வேறு நாட்டு குடிமகனை கொன்றதாக மாறிவிடும். இதை தடுக்கவே C-17 போர் விமானத்தை டிரம்ப் பயன்படுத்துகிறார். நாடு கடத்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் C-17 போக்குவரத்து விமானம், ஒரு மணி நேரத்துக்கு $28,500 (ரூ. 24,90,559) இயக்கச் செலவாகும்,
இந்தியாவுக்குச் செல்லும் விமானம் 12 மணி நேரத்திற்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 48 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதாவது 119546832 ரூபாய் செலவு. அதாவது 200 பேர் நாடு கடத்தப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 6 லட்சம் வரை செலவு ஆகும்.
அமெரிக்க அரசின் துல்லியமான கணக்குப்படி ஒரு நபருக்கு நான்கரை லட்சம் செல்வாக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது.
இந்தியாவில் மிக முக்கிய போக்குவரத்துத் துறையாக இருக்கும் ரயில்வே துறையை ஒன்றிய பா.ஜ.க அரசு சிதைத்து வருகிறது.
மேலும் சாதாரண மக்கள் ரயில்களை பயன்படுத்தவே கூடாது என்பதற்காக சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது.
அனைத்து நீண்ட தூர ரயில்களிலும் இரண்டாம் வகுப்பு சாதாரண பெட்டிகள், முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டு வருவதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர் வருகின்றனர். இதனால் நீண்ட தூரம் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ரயில்களில் இடம் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள்.
கூட்ட நெரிசல் காரணமாக முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணிகளிடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனிடையே மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டிகளை தொடர்ந்து அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்.
ஒட்டுமொத்த ரயில்வே கட்டண வருவாய் 80 ஆயிரம் கோடி. அதில் மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் மூலம் மட்டும் ரயில்வே துறைக்கு 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
5 ஆண்டுகளுக்கு முன் (2019-20) மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் மூலம் கிடைத்த வருவாய் 12,370 கோடி. தற்போது அது (2024-25) 30,089 கோடியாக உயர்ந்துள்ளது.
இதனை அடுத்த நிதியாண்டில் 37,000 கோடியாக உயர்த்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏ.சி பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரயில்வே துறை கூறியுள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன் ஏ.சி பெட்டியில் பயணிப்போர் 18 கோடியில் இருந்து தற்போது 38 கோடியாக உயர்ந்துள்ளது. மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டி பயணிகள் எண்ணிக்கை மட்டுமே 11 கோடியிலிருந்து 26 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சாதாரண வகுப்பு பெட்டிகளில் பயணிகள் எண்ணிக்கை 790 கோடியிலிருந்து 688 கோடியாக குறைந்துள்ளதாக ரயில்வே துறை கணக்குகள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக ரயில் பயணிகளின் எண்ணிக்கை 727 கோடியாக உள்ளது.
