தி, மு, க , என்றால் ?

ஒரே வாரம் 30 கோடி வசூல்-டில்லி பெல்லி 
தற்போது வெளியாகியுள்ள அமீர் கானின்  புதிய படம்”டில்லி பெல்லி”. படம் வெளியான ஒரே வாரத்தில் மட்டும் ரூ.30 கோடியை வசூலித்துள்ளது. பாலிவுட் முன்னணி நடிகரான அமீர்கான், யு.டி.வி., நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் டில்லி பெல்லி. இதில் இம்ரான் கான், விர்தாஸ், பூர்ணா ஜெகன்நாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபினய் தேவ் இப்படத்தை இயக்கியுள்ளார். ராம் சம்பத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் கடந்தவாரம் ரிலீசானது. சுமார் 1200 தியேட்டர்களில் ரிலீசான இப்படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் இந்தபடம் ரூ.30கோடி வசூலை ஈட்டி சாதனை புரிந்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கும் டில்லி பெல்லி படத்தின் பலகாட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும் படத்திலுள்ள’ டாய்லெட் காமெடி’ வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறதாம். இதற்காகவே ரசிகர்கள் பலர் டில்லி பெல்லி படத்தை பலமுறை கண்டு ரசித்திருக்கின்றனர். அமிதாப் பச்சனின்’ புத்தா ஹோகா தேரே பாப்’ படத்தை காட்டிலும்டில்லி பெல்லி அதிக வசூலை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                       டில்லி பெல்லிஒரே வாரத்தில் ரூ.30 கோடியை அள்ளிய அமீரின் டில்லி பெல்லி!
 ==========================================================================
மீண்டும் பெரிய பூமி அதிர்ச்சி - கலக்கத்தில் ஜப்பான்,, 
ஜப்பானில்  மார்ச் மாதம் ஏற்பட்ட நில நடுக்கம் 9 ரிக்டராக பதிவானது. இதைத்தொடர்ந்து தாக்கிய சுனாமியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். புகுஷிமா அணுஉலை பெரும் பாதிப்பை சந்தித்தது.இதனால் ஜப்பான் மிகக்கடுமையான சேதத்தையும் -மக்கள் இழப்பையும் சந்தித்தது.தற்போதுதான் இக்கட்டில் இருந்து மீண்டு வருகிறது.                       ஆனால்ஜப்பான் நிம்மதியக்குலைகும் விதமாக இன்று[10.07.11] ஜப்பானின் வட பகுதியில் காலை  9. 57 க்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செண்டாய் நகரின் கிழக்கு பகுதியில் 130 கி.மீ தொலைவில் உள்ள ஹோன்சு தீவுப்பகுதியில் இந்த நிலநடுக்கம்  உரு்வாகியிருந்தது..
                      
  
இதைத் தொடர்ந்து சுனாமி  உருவாகி தாக்கும் என்ற அச்சத்தில் , ஐவே , மியாகி உள்ளிட்ட முக்கிய தீவு பகுதி மற்றும் கடலோரங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திருப்ப பெறப்பட்டது. புகுஷிமா நகரில் உள்ள முக்கிய அணுஉலையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
        இன்றைய பூகம்ப இழப்பு-சேதம் பற்றி இன்னமும்  ஜப்பான் அரசு தெரிவிக்கவில்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நாம் பார்த்ததை பிறர் பார்த்துவிடாமலிருக்க....
     நாம் பார்க்கும் தளங்களின் விபரம்- தகவல்கள் History, Temporary Files, Cookies என்ற முறையில் நம்முடைய கணணியில் பதிவாகி விடும்.    அது கணணியின் வேகத்தை கூட பாதிக்கலாம். அதேபோல் நம் கடவுச் சொல். நாம் ரகசியமாக வைத்திருக்கும் தகவல்கள் கூட  கணணியில் பதிவாகி  பிறர் கண்ணில் பட்டுவிடும் வாய்ப்புள்ளது.இதன் மூலம்
 மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்ப்பிருக்கிறது. இதற்காக நாம் ஒரு Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய எளிதாக இருக்கும்.
 பல Browsers Google chrome, Firefox, opera, IE பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது தகவல்களை Delete செய்ய ஒரு வசதி உள்ளது. இதற்கு Browser Cleaner என்ற மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தவுடன் Run செய்தால் ஒரு விண்டோ வரும்.
இதில் ஒவ்வொன்றாக கிளிக் செய்து(Internet Items, Windows items, Applications) Clean Now தந்தால் உங்களது தகவல்கள் Delete ஆகிவிடும்.அது தான் இது:
இது பலவகைகளில் உங்களுக்குப்பயன் படும்.அலுவலகங்களில் நாம் இணையம் பார்த்த விசயம் மேல் அலுவலருக்குத்தெரியாமல் அழித்துவிடவும் பயனுள்ளதாக இருக்கும்.
==========================================================================
தி காரில் முடிந்த ழகம்,,,?
       இன்று தி.மு.க வின் நிலை இதுதானே.?ஒவ்வொருவராக திகார சிறையை நிரப்பிக்கொண்டிருக்க கருணாநிதியோ கையறு நிலையில் புலம்பிக்கொண்டிருக்கிறார்.
 கூடா நட்பு எது எனத் தெரிந்தும் அவர் காங்கிரசைக் கழற்றி விடாமல் கையை பிடித்துக்கொண்டிருப்பது தான் மிக அவலம்.
 ஏன் இன்னும் காங்கிரசின் உறவு.சி.பி.ஐ. இவ்வளவு முரட்டுத்தனமாக கனிமொழிக்கு பிணை கொடுப்பதை  கூட தடுக்கிறது.அதன் முதலாளிகள் ஆணை இல்லாமல் இப்படி நடந்துகொள்ளாது.
 சி,பி.ஐ ,சுதந்திரமான அமைப்பு எங்கள் கையில்ஒன்றும் இல்லை என சோனியா- மன்மோகன் சொன்னால் என்றால் அதை இந்தையாவில் உள்ள மனநலன் இல்லாதவர்கள் கூட நம்பமாட்டார்கள்.
 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு லாலு-முலாயம்-மாயாவதி மூவரும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு கடைசியில் இடது சாரிகள் காலை வாரி விட்டு வாக்களித்ததற்கு  காரணம்சி.பி.ஐ.மிரட்டல்தானே.அதைத்தானே காங்கிரஸ் ஆயுதமாகப் பயன் படுத்தியது.
  கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிறையில் இருக்கக்கூடாது என்ற காரணம்தானே இதுவரை காங்கிரசின் மிரட்டலுக்கு பயந்து கூட்டணி வைத்தது.
 இப்போதுதான் வரிசையாக குடும்பத்தினர்கள் திகாரை நிரப்பிக்கொண்டிருக்கிறார்களே .காங்கிரசுதான் கைகழுவிவிட்டதே பின்னும் ஏன் கையைப்பிடித்து தொங்குகிறீர்கள்.
 நெஞ்சுக்கு நீதி இன்னும் கிடைக்க வேண்டியதிருக்கிறதா?
 இளக்கோவன் மட்டுமல்ல காங்கிரசினர் தி.மு.க.உறவை வேண்டா உறவாகத்தான் நினைக்கிறார்கள்.அதேபோல் தி.மு.க.தொண்டனும் காங்கிரசை கூடாநட்பாகத்தான் கருதுகிறான்.
 அதை கட்டிபிடித்து அழுவது நீங்களும்-அழகிரியும்தான்.
 ஒன்று மட்டும் நிச்சயம்.காங்கிரசினர் தி.மு.க.வை அழிக்க 1967 லில் ஆரம்பித்து  முடியாததை  இப்போது முடித்து விடஎண்ணியே காரியங்களை செய்கின்றனர்.அவர்களுக்கு நீங்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்து தி.மு.கழகம் என்ற கட்சி யை சமாதிக்கு அனுப்ப முடிந்த உதவிகளை செய்கிறீர்கள்.
     
 இனி தி.மு.க என்றால்                  திகாரில் முடிந்த ட்சி என்றுதான்  வரலாறு சொல்லும்.
   இதற்குத்தான் ஆசை பட்டீர்களா   கலைஞர் மு.கருணாநிதி    அவர்களே??  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?