மோடியை வாழ்த்தும் ஜெயலலிதா,.,.,.,.,.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடியி்ன் உண்ணாவிரதத்திற்கு அ.தி.மு.க.,. ஆதரவு தெரிவித்திருந்தது.உண்ணாவிரத நிகழ்ச்சியில் அ.தி.மு.கவை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மோடியின் உண்ணாவிரதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க., கொள்கையும் மோடியின் கொள்கையும் ஒன்றாக உள்ளது. மோடியின் உண்ணாவிரதத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் உள் நோக்கமல்ல என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த சமய மோதல் தடுப்பு சட்டத்தை பா.ஜ.க.வினருடன் சேர்ந்து எதிர்த்தார்.அது கூட அந்த சட்டத்தில் சில விதிகள் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக இருந்ததால் ஜெயலலிதாவின் எதிர்ப்பை நியாயப்படுத்தலாம்.
ஆனால் இப்போது நரெந்திர மோடி உண்ணா விரதத்திற்கு ஆதரவு-வாழ்த்து தெரிவித்தால் காணாது என
தம்பித்துரை,மைத்ரேயன் ஆக்கிய இரு அ.தி.மு.க.பிரதிநிதிகளயும் அனுப்பிவைத்து மகா ஆதரவைத்தெரிவித்திருக்கிரார்.அயோத்தி பிரச்னையில் கரசேவைக்கு ஆள் அனுப்பப் போவதாக தெரிவித்து செங்கல் அ னுப்பியவர்தானே இந்த ஜெயலலிதா?
அவரின் இந்துத்துவா குணம் தெரிந்தும் அதை எதிர்க்கும் மனிதநேய மக்கள் [முசுலிம்]கட்சி சிலசீட்டுகளுக்காக இன்னும் அவரின் புகழ் பாடிக் கொண்டிருக்கிறதே. மத அடிப்படைவாத பா.ஜ.க.உடன் ஒட்டுறவு வைக்கக்கூடாதெனும் இடது சாரிகள் என்ன செய்யப்போகிறார்கள்.
கலைஞர் ஆட்சியில் திறந்த மிகசிறப்பு மருத்துவனை[சூப்பர் ஸ்பெசாலிட்டி]யை ஜெயலலிதா அவர் ஆட்சியில் செய்யப்பட்டகாரணத்திற்காக மூடியதை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் முதுகெழும்பை முறிக்கும் படி ஏவல் துறையின் மூலம் வெறியாட்டம் ஆடிய ஜெயலலிதாவிற்கு முது கெழும்புடன் ஒரு எதிர்ப்பைக்கூட தெரிவிக்காமல்
கண் மண் தெரியாமல் மண்டை ,முதுகெழும்பு பலருக்கு முறிக்கப்பட்டுள்ளது.
ஜெ .வை ஆதரித்து வாககளித்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு பரமக்குடியில் குண்டு-ஆதரித்து பேசும் மார்க்சிஸ்டுகளுக்கு திண்டுக்கல்லில் குண்டாந்தடி.தொடரட்டும் ஜெயலலிதாவின் மக்கள் பணி.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மன்னர் கடவுளை பாதுகாப்பரா?
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் 5 ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடவும், பி அறையை திறப்பது குறித்து தீர்மானிக்கவும் தேசிய அருங்காட்சியக இயக்குனர் ஆனந்த போஸ் தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
பொக்கிஷங்களை மதிப்பிடுவது தொடர்பாகவும், கோயிலுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்தும் இந்த குழு பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அது பற்றிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் இக்குழு தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணை கடந்த 12ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஓணம் விடுமுறையை முன்னிட்டு விசாரணையை ஒத்திவைக்கும்படி கேரள அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.
, நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் வழக்கை விசாரத்து. , ‘‘பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளை பாதுகாப்பது தொடர்பாக மன்னர் குடும்பத்தினர் மூட நம்பிக்கைகளை பரப்புவதை ஏற்க முடியாது. கோயில் பாதுகாப்புக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் தீர வேண்டும். பி அறையை திறந்து சோதனை செய்யாமல் கோயிலுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? கோயில் பொக்கிஷங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் மன்னர் குடும்பம் பொறுப்பேற்குமா?’’ என்று கேள்வி எழுப்பினர். பினனர், விசாரணையை ஒத்திவைத்தனர்.
அச்சுதானந்தன்:” மன்னர் குடும்பம் திருடியதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன”
பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து மன்னர் குடும்பத்தினர் பொக்கிஷங்களை திருடியதாக முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் சமீபத்தில் குற்றம்சாட்டினார். அதை மன்னர் குடும்பம் மறுத்தது. இருப்பினும், மீண்டும் அந்த குற்றச்சாட்டை அச்சுதானந்தன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் அச்சுதானந்தன் நேற்று அளித்த பேட்டியில், ‘’கோயிலில் இருந்து மன்னர் குடும்பத்தினர் பொக்கிஷங்களை கொண்டு சென்றதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
நகைகளை கொண்டு செல்வதை பார்த்த பூசாரிகளை மன்னர் குடும்பத்தினர் டிஸ்மிஸ் செய்து விட்டனர். அதை போல், கோயில் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் நரேந்திரநாத் என்பவரும் மன்னர் குடும்பத்தினர் நகைகளை கொண்டு செல்வதை பார்த்துள்ளார். அவரையும் நீக்கி விட்டனர். பொக்கிஷங்களை மன்னர் குடும்பம் கடத்துவதை தடுக்க உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
____________________________________________________________________________________________________________
அமெரிக்காவின் ஈட்டிக்காரன் சீனா.
அமெரிக்க நிதி அமைச்சகத்தின் வேண்டுகோள்படி ஜூலை முதல், அமெரிக்காவுக்கு 800 கோடி அமெரிக்க டாலர் என்றஅளவில் கடனைச் சீனா தொடர்ந்து கொடுத்துவருகிரது. தொடர்ந்து 4மாதங்களாக, அமெரிக்காவுக்கு சீனா கடன் வழங்கும். இப்போது, சீனாதான், அமெரிக்காவின் மிக பெரிய கடன்கொடுத்த நாடாகும். , அமெரிக்காவில் சீனாவின் முதலீட்டுக்கும் அமெரிக்க டாலர் கடன் பாதுகாப்புக்கும் சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்கத் துணை அரசுத் தலைவர் Biden பல ஆவணங்களை வழங்கி கடனைத்திருப்பித்தர பிணை கொடுத்துள்ளார்.
________________________________________________________________________________________
கோடிஸ்வர மக்கள் பணியாளர்கள்.
மத்திய அமைச்சர்களில் 77 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.10.3 கோடி ஆகும். இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 3 கோடி அதிகரித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மத்திய தொழில்துறை அமைச்சர் பிரபுல் படேல், 122 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். 2009-ம் ஆண்டு இவர் காட்டிய சொத்துக் கணக்கு ரூ.79.8 கோடி.படேலுக்கு அடுத்தபடியாக தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.70 கோடி. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கமல்நாத், ரூ.41 கோடி சொத்துகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கு ரூ.14 கோடி சொத்து இருந்தது.
பிரபுல் படேல்,
கடந்த 2 ஆண்டுகளில் சொத்து அதிகமாக உயர்ந்தவர்கள் வரிசையில் ஜெகத்ரட்சகன் (1,092%), ஜவுளித்துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி (828%), சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் துஷார்பாய் சவுத்ரி (705%) ஆகியோர் உள்ளனர். வீரப்ப மொய்லி, ஜெய்பால் ரெட்டி உள்ளிட்ட 15 அமைச்சர்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காட்டிய சொத்து மதிப்பை விட தற்போது குறைவாக காட்டியுள்ளனர். இந்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.