வீழ்ந்த போராளி...?

அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், "தேர்தல் பிரசாரத்தின் போது, நான் பேசிய பேச்சுக்கள் எந்த உள்நோக்கமும் கொண்டது அல்ல. தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு தலை வணங்குகிறேன். துரதிர்ஷ்டவசமாக நான் அவ்வாறு பேசியதற்காக வருந்துகிறேன்' என குறிப்பிட்டிருந்தார்தேர்தல் ஆணைய கடிதததின் மீது நடவடிக்கை எடுத்திட குடியரசு தலைவர் பிரதமருக்கு கடிதம் எழுதிய அன்று  இரவே, அவரது கடிதம் தேர்தல்யஆணியத்திடம் கொடுக்கப்பட்டது. 


இதுகுறித்து,தலைமை தேர்தல் ஆணையர் ஒய்.எஸ்.குரேஷி கூறுகையில், "அமைச்சரின் கடிதம் குறித்து, நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அது குறித்து, விரைவில் முடிவெடுப்போம். தற்போது, எங்களுக்கு அதை விட முக்கியமான வேறு[?] பணிகள் உள்ளன' என்றார். அமைச்சரின் கடிதத்தை அடுத்து, தேர்தல்யஆணையம் இப்பிரச்னையை இதோடு கைக்கழுவிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இப்படி பேசியதற்கு என்னை தேர்தல் ஆணையம் தூக்கிலிட்டாலும் பின் வாங்கப்போவதில்லை"
-என்று வீர வசனம் பேசிய குர்ஷித் தனது அமைச்சர் பதவிக்கு வேட்டு வந்துவிடும் என்றவுடன் 'தூரதிர்ஷ்டவசமாகப் பேசி விட்டதாக வருந்திவிட்டது"
ஒரு சிறுபான்மைப்போராளிக்கும்,இந்திய சட்டத்துறைக்கே அமைச்சரானவருக்கும் அழகல்ல.
தூக்கு மேடை வரை போனவர் ஒரு நாற்காலிக்காக குட்டிக்கரணம் போட்டது நன்றாகவா இருக்கிறது.
தனது மனைவிக்காக வாக்கு பொறுக்க எல்லை தாண்டி பேசி இப்படி அவமானப்பட வேண்டுமா?
இதைத்தான் எங்க வள்ளுவர் 'யாகாவராயினும் நா காக்க" என்று சொல்லியிருக்கிறார்.அப்பப்போ திருக்குறல் படியுங்க குர்ஷித்.
________________________________________________________________________
________________________________________________________________________
பணத்துக்கான செய்திகள். 


சட்டமன்றத் தேர்தல் நடை பெற்றுவரும் 5 மாநிலங்களில் பணத்திற்கு செய்தி வெளியிடுவது குறித்து பல புகார்கள் வருகின்றன. பணம் பெற்றுக்கொண்டு செய்தி வெளியிடுபவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அனைத்து பத்திரிகையா ளர்கள், ஊடகவியலாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

5 மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் பணத்திற்குச் செய்தி வெளியிடும் போக்குகுறித்து பல தரப்புகளிலி ருந்து புகார்கள் வந்துள்ளன. பணத் திற்குச் செய்தி வெளியிடும் போக்கு பரவலாக உள்ளது என்று நீதிபதி கட்ஜுவின் அறிக்கை தெரிவிக் கிறது.

பணத்திற்காகச் செய்தி வெளி யிடும் போக்கு, நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாகும். பணத்திற்குச் செய்தி வெளியிடும் செயல் ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி. இச்செயல் நாடா ளுமன்ற ஜனநாயகத்தை இழிவு படுத்துகிறது என்று அவர் குறிப் பிட்டார்.

எனினும், தேர்தல் ஆணையம் ஊடகக் கண்காணிப்பு அமைப்புகளை மாவட்டந்தோறும் அமைத்துள்ளது குறித்து கட்ஜு மகிழ்ச்சி தெரிவித்தார்

இக்கண்காணிப்பு அமைப்புகள் பணத்திற்கான செய்திகள் என்று சந்தேகப்படும்வகையிலான செய்திகளைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். அது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் பிரஸ் கவுன்சிலுக்கும் அறிக்கையிட வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் தலைவர் தெரிவித்தார். பீகார் சட்டமன்றத்தேர்தலின் போது தமிழகத்தில் உள்ள ஒரு நாளிதழில் கூட தேவையின்றி பீகாரில் நிதீஷ்குமார் செய்த சாதனைகள் பற்றி பத்து நாட்களாக கட்டுரை-படங்களுடன் வந்தது நினைவிருக்கலாம்.


__________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?