ஊடக {வியா] வாதிகளும் ......?


suran
-ஊடக தர்மங்களும்.

இப்போது ஊடகங்களால் அலசப்படும் முக்கிய செய்தி ஸ்டாலின் வீட்டின் முன் நிருபர்கள் தாக்கப்பட்டதுதான்.
இதற்கு முன் இவர்கள் தாக்கப்பட்டதே இல்லையா?
அப்போதெல்லாம் இவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தார்களா என்பது முக்கியமில்லை.இவர்கள் புகாரில் கைது செய்யப்பட்டவர்கள் யாராவது உண்டா?
சென்னை கடற்கரை சாலையில் அயோத்தியாகுப்பம் அருகில் அதிமுகவினரால் வீரமணி தலைமையில் அரிவாளால் வெட்டப்படும் , குத்தப்பட்டும் ராணிமேரி கல்லூரியில் பிணங்கள் போல் 
கிடத்தப்பட்டு கிடந்தார்களே அப்போது இந்த ஊடக விடுதலை வீரர்கள் எங்கே சொம்படித்துக்கொண்டிருந்தார்கள்.அப்போது இந்த ஊடகவாதிகளுக்காக பரிந்து போராடியது கருணாநிதியும்,திமுகவும்தான்.

இன்று திமுக என்றால் அதை செய்தி வெளியிடும் விதம்,அதிமுக என்றால் அதை செய்தி வெளியிடும் விதம் ஊடக தர்மம் இன்றுள்ள நிலையை நன்றாகவே காட்டுகிறது.
suran
சசிகலா.நடராசன்,இளவரசி தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்ட போது அதை முக்கிய செய்தியாக புலனாய்வு செய்தி இதழ்களை தவிர வேறு நடுநிலை நாளிதழ்கள் என்று திரியும் ஊடகங்கள் வெளியிட்டதா?
அப்போது ஜெயலலிதாவை சந்தித்து நீங்கள் நடத்துவது நாடகம் என்கிறார்களே என்று ஊடகவாதிகள் எவனாவது மிகை வாயருகே பிடித்தானா?
அல்லது சசிகலாவிடமாவது கேள்விக்கணைகளை தொடுதார்களா?
நக்கீரன் இதழை தாக்கும்போது இந்த ஊடக தளபதிகள் புகார் கொடுத்தார்களா?
நக்கீரனில் கொலை வெறித்தாக்குதலும்,அதன்பின் அப்பத்திரிக்கை இருக்கும் பகுதிக்கே ஒருவாரத்துக்கும்மேல் மின்சாரத்தையும்-,குடிநீர் வழங்கலையும் நிறுத்தினார்களே  அப்போது இந்த ஊடக புரட்சியாளர்கள் ஒளிந்திருந்த இடம் என்ன போயஸ் தோட்டமா?

இன்றைய தினத்தந்தி,இந்து,தினமணி தினகரன்,தினமலர் என்று எந்த ஊடகமுமே நடுநிலை இல்லை.அனைத்துமே அதிமுக ஆதரவு அப்படி சொல்லுவதை விட திமுக எதிர்ப்பு கண்மூடித்தனமான ஜெயலலிதா ஆதரவு .
.அதுதான் இன்றைய தமிழக ஊடக தர்மம்.
இந்த நிலை வரக்காரணம் .இன்றைய ஊடகவாதிகள் ஜெயலலிதாவின் அடக்கு முறைக்கு பயப்படுவதும்,அவர் கோடிக்கணக்கான ரூபாய்களில் அள்ளித்தரும்   விளம்பர வருமானத்துக்கு சோரம் போனதுதான்.
திமுகவை விட்டே விலக்கப்பட்ட அழகிரியை பற்றியும் அவர் திமுகவுக்கு எதிராக என்ன சொல்லுகிறார் என்று அவர் வாயை கிண்ட அவர் வீட்டின் முன்பே நாயை விடக்கேவலமாக காத்துக்கிடக்கும் இந்த ஊடகவியாதிகள் ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட அமைச்சர்கள்,அதிகாரிகள்,கட்சித்தலைவர்களை என்றாவது ஒரு சிறிய பேட்டியை எடுத்திருக்கிறார்களா?

இதிலேயே தெரிகிறதல்லவா இவர்களின் செய்தி சேகரிக்கும் புத்தி.வழி.
கருணாநிதி ஒரு பத்திரிக்கையாளர் என்பதாலேயே இந்த ஊடக வியாதிகளுக்கு அதிகம் இடம் கொடுத்து விட்டார்.
இன்றைய ஊடக தர்மம் என்பது அதிமுகவிடம் ஊடக உரிமையாளர்கள் வாங்கும் விளம்பரத் தர்மத்தை பிரதிபலிக்கிறது.
இனி மனுஷ்ய புத்திரன் இந்த ஊடக[வியாதியா]ளர்களைப்பற்றி எழுதியவை:

"ஸ்டாலின் அவர்கள் வீடு முன்னால் இரண்டு தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்களின் கருவிகள் உடைக்கப்பட்டதும் இங்கே ஊடக சுதந்திரம் தொடர்பானா தார்மீக ஆவேசங்கள் உடைப்பெடுத்து ஓடுகின்றன. இந்த செயலை ஸ்டாலின் உடனடியாக கண்டித்தார். வருத்தமும் தெரிவித்தார். ஊடக சுதந்திரத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவன் என்ற முறையில் இந்த செயலை நான் எதன் பொருட்டும் சகித்துக்கொள்ள மாட்டேன்

ஆனால் நமது ஊடகங்களுக்கு ஊடக சுதந்திரம் தொடர்பாக ஏதேனும் ஒரு தார்மீக நிலைப்பாடு இருக்கிறதா? அவதூறு வழக்குகள் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி ஊடக சுதந்திரத்தை தமிழகத்தில் முற்றாக முடக்கியவர் ஜெயலலிதா. அதைப் பற்றி நீங்கள் எப்போதாவது இப்படி பொங்கி எழுந்ததுண்டா? கேப்டன் டிவியின் செய்தி வாசிப்பாளர் மீது வழக்குப் போடும் அளவிற்குக் கூட சென்றார்கள். நக்கீரன் அலுவலகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது இந்த தார்மீக ஆவேசம் எங்கே போனது? தேர்தல் பிரச்சாரத்தின்போது கலைஞர் டிவி செய்தியாளர்கள் அ.தி.மு.கவினரால் காஞ்சிபுரத்தில் தாக்கப்பட்டபோது ஏன் இதுபோன்ற தார்மீக ஆவேசங்கள் பீரிடவில்லை? அது ஒரு செய்தி என்பதற்கு மேல் எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை

தோல்வியை தாங்க முடியாமல் தி.மு.கவினர் இப்படி நடந்துகொள்வதாக தொடர்ந்து பிரச்சார மேற்கொள்ளப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அன்று அ.தி.மு.க அலுவலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற சன் நியூஸ் செய்தியாளர் ராம செல்வராஜ் அ.தி.மு.கவினரால் அடித்துவிரட்டப்பட்டாரே அது ஏன்? அவர்கள் வெற்றிதானே பெற்றார்கள்?

இன்று தி.மு.கவிற்கு எதிரான பெரும்பாலான ஊடகங்கள் எவ்வளவு வன்மத்துடன் இயங்குகின்றன என்பது ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தெரியும்..சொத்துக் குவிப்பு வழக்கு விவரங்களை ஒரு செய்தியாகக் கூட வெளியிட இயலாத ஊடகங்கள் அழகிரியின் புலம்பல்களை கொண்டாடுகின்றன. தி.மு.கவை பலவீனமாகக் காட்ட எது கிடைத்தாலும் அதை ஆவேசமாக பற்றிக்கொள்கின்றன. ஒரு காலத்தில் ஜெயா டிவி மட்டுமே செய்யத் துணிகிற பலகாரியங்களை இன்று பெரும்பாலான ’ நடுநிலை’ ஊடகங்கள் எந்த தயக்கமும் இன்றி செய்கின்றன..ஸ்டாலின் ராஜினாமா விவகாரத்தில் காட்டப்படுகிற அக்கறையில் சிறு பகுதி தேர்தல் தினத்திற்கு முந்தைய தினம் அ.தி.மு.க 1000கோடி ரூபாய்க்கு மேல் ராணுவ ஒழுங்குடன் வின்யோகித்து மொத்த ஜனநாயகத்தைய்ம் கேலிக்கூத்தாக்கியபோது காட்டப்பட்டதா? எவ்வளவு நாசூக்காக பட்டும் படாமல் பெரும்பாலான ஊடகங்கள் நடந்துகொண்டன?

பிரச்சினை தெளிவானது. ஊடகங்கள் தங்கள் அரசியல் சார்பு நிலைகளை இன்று வெளிப்படையாக அனுஷ்டிக்கின்றன. ஊடக நிறுவனங்களின் இந்த திட்டவட்டமான நிலைபாடுகள்தான் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடி. நியாயமாக பேச விரும்புகிற ஊடகவியலாளர்கள் பலர் எப்படி நிம்மதி இல்லாமல் ஒவ்வொரு நாளும் தூங்கப் போகிறார்க்ள் என்பதை நான் அவர்கள் சொல்லி பலமுறை கேட்டிருக்கிறேன். பத்திரிகை செய்திகள் அரசு விளம்பரங்களைவிட தீவிரமான குரலில் ஆளும் கட்சிக்கும் ஆதரவாக பேசுகின்றன. தொலைக் காட்சிகளில் செய்திகளும் விவாதங்களும் கட்டமைக்கப்படும் விதத்தின் நோக்கங்கள் பச்சையாக இருக்கின்றன. ஊடகங்களோடு மிக நெருக்கமான உறவு கொண்டவன் என்ற முறையில் எனக்கு இந்த நியாயமற்ற விளையாட்டின் ஒவ்வொரு தந்திரமும் தாங்கமுடியாத கசப்பை ஏற்படுத்துகிறது.
suran

ஊடகங்களின் மீதான தாக்குதல் என்பது கட்சிகளுக்கு இடையே நடக்கும் தெருமுனைச்சண்டை என்ற அளவிற்கு கீழே இறங்கிவிட்டது என்பதுதான் உண்மை. இதற்கு ஊடகங்களுக்கு எந்தப் பொறுப்புமே இல்லையா?

எந்த ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டாலும் நாம் பாரபட்சமின்றி அதற்காக குரல் கொடுப்போம். நேற்றும் இன்றும் என்றும் நம் நிலைபாடு அதுதான். ஆனால் ஊடவியலாளர்களே... உங்கள் சுதந்திரத்தை உங்கள் நிறுவனங்களிடமிருந்து நீங்கள் எப்படி பாதுகாத்துக்கொள்ளப் போகிறீர்கள்? அந்த நிறுவனங்கள் உங்களை யாருக்கு எதிராககவோ அரசியல் மற்றும் பிற ஆதாயங்களுக்காக அடியாட்களைபோல உபயோகிக்கும்போது உங்கள் தார்மீக நிலைப்பாடுகள் என்ன?

எமெர்ஜென்சியைவிட மிக மோசமாக ஊடக சுதந்திரம் இன்று பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதைச் செய்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டு காமிராக்களை உடைப்பவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்."

நன்றி: மனுஷ்யபுத்திரன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கண்ட தாக்குதல் நடந்த போது ஊடக வியாதிகள் செய்த சேவை என்ன?

சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினர் கடும் தாக்குதல் நடத்தினர். சோடா பாட்டில், பெரிய பெரிய கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து உடைத்தனர்.
100க்கும் அதிகமான அ.தி.மு.கவினர் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தினர்.  பாதுகாப்புக்காக வந்த போலீசார் எதையும் தடுக்க முயற்சிக்காமல் அமைதியாக நின்றதாக நக்கீரன் தரப்பு புகார் கூறியுள்ளது.
மேலும் அதிமுக எம்எல்ஏ கலைராஜன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் போய் அமர்ந்து கொண்டு, நக்கீரன் அலுவலகத்துக்கு எந்த பாதுகாப்பும் தரவேண்டாம் என வற்புறுத்தியதாகவும் பத்திரிகை அலுவலகம் புகார் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.கவினரின் தாக்குதலைக் கண்டு பயந்து ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தாக்குதல் நடந்த போது நக்கீரன் ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ், செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரிகை அலுவலகத்துக்குள் இருந்தனர்.
நக்கீரன் அலுவலகத்துக்குள்  செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்களும் தாக்குதலை நேரடியாக எதிர்கொண்டனர். பிற்பகலுக்குப் பிறகும் தாக்குதல் தொடர்ந்ததாக நிருபர்கள் தெரிவித்தனர்.
நக்கீரன் அலுவலகத்தைப் பூட்டிய எம்எல்ஏ
வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.
அண்ணாசாலை அருகே அதிமுகவினர் சுமார் 50 பேர் நக்கீரன் ஆசிரியர் கோபாலின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்


suran- உத்தம வில்லன்
-------------------------------------------------------------------------------------------------------------------------
suran



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?