வியாழன், 18 அக்டோபர், 2018

புதிய அடிமையைத் தேடி

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக தலைவர்கள்,அமைச்சர்கள் ஆகியோரை குறிவைத்து நடைபெற்று வரும் சிபிஐ ,வருமானவரி ரெய்டுகள்  குறித்து விரிவாக எடுத்துரைத்தாகவும், அப்போது நீங்க கிளம்பி போங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என பிரதமர் உறுதி அளித்ததாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் எடப்பாடியின் டெல்லி சென்று மோடியை சந்தித்த  சில நாட்களிலேயே  அவர் மீதான நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கை  தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றிட ஆணைபிறப்பித்து எடப்பாடி  தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்..
மேலும் ஒரு மாதத்துக்குள் முதல கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இது அழிக்க முடியாத ஆவணங்களை உள்ளடக்கிய வழக்கு என்பதால் இதற்கு நெடுஞ்சாலைத்துறையை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பாவார் எனவும் கூறப்படுகிறது.
இதில் உள்ளபடியே பல அமைச்சர்களுக்கும்,அதிமுகவினருக்கும் ரொம்ப மகிழ்ச்சி.
ஒரு மாத விசாரணையில் இந்த முறைகேட்டுக்கு  முகாந்திரம் இருப்பதாக ஒரு வேளை சிபிஐ தெரிவித்தால் நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டிய கட்டாயம்  இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.
காரணம் எட்டப்பாடியை மாட்டிவிடும் பதிவுகள் பல உள்ளதாம்.அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் எடுக்காமல் மறைத்து எடப்பாடி மீது வழக்குத்தொடுக்க முகாந்திரமில்லை என்று பூசி மெழுகினாலும் ஆதாரங்கள் அதிகம் உள்ளதாம்.
இதை வைத்து எடப்பாடி மீதான பிடியை இறுக்க முடிவு செய்துள்ள பாஜக, இபிஎஸ் தான் சொல்லுகிறபடியெல்லாம் ஆட வேண்டும் என நினைப்பதாக  கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பு அமைச்சர் செங்கோட்டையன் வசம் போக வேண்டும்  என பாஜக விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனை மனதில் கொண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்கிவிட்டு செங்கோடடையனை நியமிக்க மோடி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே முதல்வராகும் வாய்ப்பை இழந்து விரக்தியில் உள்ள  செங்கோட்டையனும் மகிழ்வுடன் தலையாட்டிவிட்டதாக கூறப்படுகிறது. 

பாஜகவுடன் வரும் தேர்தல்களில் கூட்டணி வைத்து பாஜகவை தமிழகத்தில் முதுகில் இடம் கொடுத்து சுமக்க வேண்டிய நிபந்தனைக்கும் செங்கோட்டையன் சம்மதித்துவிட்டார்.
இந்த நடைமுறைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. 
இதன் மூலம் அதிமுக மீதுள்ள ஊழல் இமேஜை  மாற்ற முடியும் என்றும் பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது. 
எது எப்படியோ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை தன்னை விட தொண்டர்கள் பலமிக்க அதிமுகவுடன்  இணைந்து சந்திக்க எண்ணி பாஜக போட்ட திட்டம் நிறைவேறுகிறது.
தங்களுக்கேற்ற அடிமைவம்சம் கட்சியில் புதிய அடிமையைத் தேடிய பாஜக அதற்கு பட்டம் சூட்டும் நாள் நெருங்குகிறது.
அதனால்தான் காவி வேட்டிகள் பத்து வரும் சட்டமன்றத்தில் அமர்வார்கள் என்று 
ஆனால் ஏற்கனவே தமிழக மக்கள் மனதில் மக்கள் விரோத ஆட்சியை செய்து வரும் பாஜக,அதிமுக மீதுள்ள கோபம் ஒட்டுமொத்தமாக இருகட்சிகளுக்கும் பாடம் புகட்டுவதாகவே இருக்கும் எனது தெரிகிறது.
=========================================================================================
410 கோடிகளில்  சுற்றுப்பயணம்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல் ஆகஸ்ட் வரை 55 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் மற்றும் அதற்கான செலவுத்தொகை 393.34 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

2014 ஜூன்  மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் அவர் பூட்டானுக்கு பயணம் செய்தார், இதுவே அவரின் முதல் பயணம். 

அதைத்தொடர்ந்து 2018 ஆகஸ்ட் வரை அமெரிக்கா, மியான்மர், பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூர் பிரேசில் என மொத்தம் 55 நாடுகளுக்கு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த நான்கு ஆண்டுகளில் 44 அரசுமுறை பயணங்கள் சென்றுள்ள பிரதமர் மோடி,  சில நாடுகளுக்கு இருமுறை சென்றுள்ளார் என்பதும், ஆறு பயணங்களுக்கு இந்திய விமானப்படை விமானத்தில் சென்றதால் அதற்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்றும், அந்த ஆறு ரசீது இதுவரை கிடைக்கவில்லை.
 எஞ்சிய பயணங்களுக்கான தொகைதான் இந்த  ரூ. 393,34,27,465  என்பது  தெரியவந்துள்ளது. 
ஆறு பயணங்கள் தொகையும் சேர்ந்தால் 410 கோடிகளாகும் என்று மதிப்பிடப்படுகிறது.
கடந்த உலக சுற்றுலாதினத்தில் அதிகம் நினைவுகூறப்பட்டவர் இந்திய பிரதமர் மோடிதான்.
====================================================================================
ன்று,
அக்டோபர்-18.
சார்லஸ் பாபேஜ்


  • கணினியைக்  கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)

  • பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)

  •  கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)

  •  முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை டெக்சாஸ் 
  • இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது(1954)
  • நாகப்பட்டினம் மாவட்டம் அமைப்பு (1991)
=====================================================================================

கணினியின் தந்தை என கருதப்படும்  சார்ல்ஸ் பாபேஜ் (Charles Babbage, 1791 - 1871) பிரித்தானிய கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர். 

இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.


1837யில்  முதல் முழுமையான செய்நிரல் கணினியை (Programmable Mechanical Computer) சார்ல்ஸ் பாபேஜ் வடிவமைத்தார். 


ஆனால் அக்கால தொழில்நுட்ப எல்லை, 
நிதி பற்றாக்குறை, 
மற்றும் தன்னுடைய வடிவமைப்புடன் தனகுதலை நிறுத்தமுடியாமை (ஆயிரக்கணக்கான கணினி சம்பந்தப்பட்ட பொறியியல் செயற்திட்டங்களின் முடிபுக்கு காரணமாக பண்பு) 
போன்ற காரணங்களின் கலப்பால் இந்த சாதனத்தை அவரால் முழுமையாக உருவாக்க முடியவில்லை.


இவரது இயந்திரத்தில் துளையிடப்பட்ட அட்டைகள் (Punch Card) பயன்படுத்தப்பட்டன. 


உதாரணமாக இரண்டையும் மூன்றையும் கூட்ட வேண்டும் எனில் இரண்டு துளையிடப்பட்ட அட்டையையும், மூன்று துளையிடப்பட்ட அட்டையையும் இவ்வியந்திரதினுள் நுழைத்தால்
 ஐந்து துளைகளிடப்பட்ட அட்டை விடையாக வரும் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------