இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இருக்கு, ஆனா. இல்லை.!

படம்
  நீங்கள் கிரிப்டோ கரன்சி பற்றி அறிந்தவராக இருக்கலாம். அல்லது அதைப் பற்றிப் பிறர் பேசுவதைக் கேட்டிருக்கலாம். இரண்டில் ஒரு பிரிவில்தான் நீங்கள் இருக்க முடியும்.  காரணம்  கிரிப்டோ கரன்சி  அந்த அளவுக்குப் பிரபலமாகியிருக்கிறது. இந்த வர்த்தகத்தில் கிராம மக்கள்கூட ஈடுபட்டுவருகிறார்கள். எளிதாகச் சொல்வதானால், இது ஷேர் மார்க்கெட் போலத்தான். கிரிப்டோ கரன்சியில் பல்வேறு பிரிவுகள் உண்டு, பிரலமானது பிட் காயின். இவற்றை வாங்கிவைக்க வேண்டும். நாளை அவை ‘விலை’ ஏறும்போது உங்களுக்கு லாபம். இது எல்லாமே இணையம் மூலம் நடக்கும். இதற்கு மெய்நிகர் நாணயம் ( virtual currency ) என்று பெயர் ஷேர் மார்க்கெட் மாதிரி இல்லாமல், கிரிப்டோவில் முதலீடுசெய்யும் நடைமுறை எளிது. குறைந்தபட்சம் நூறு, இருநூறு ரூபாய்கூட முதலீடுசெய்யலாம். இது நாடு என்ற வரையறை கடந்து உலகம் முழுவதுற்கும் பொதுவானது என்று, கிரிப்டோ பயன்படுத்துவோர் சொல்கிறார்கள். கிரிப்டோ என்றால் என்ன? கிரிப்டோ கரன்சியை 2009ஆம் ஆண்டு, சடோஷி நகமோடோ என்ற புனைப்பெயரைக் கொண்டவர்தான் உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. என்னது நம்பப்படுகிறதா... என்கிறீர்களா? ஆம்.. இந்த கிரிப்ட

ஏழு நொடிகளில்

படம்
உங்களுக்கான தனிப்பட்ட மாத்திரை தயார். தனிநபருக்கென்றே மருந்து தயாரிப்பு' என்ற புதுமை, விரைவில் நடைமுறைக்கு வரும்போலத் தெரிகிறது.  அதற்கு, லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள நவீன முப்பரிமாண அச்சியந்திரம் உதவும். இன்று மாத்திரை மருந்துகள், பெரிய தொழிற்சாலைகளில் எல்லோருக்கும் பொதுவாகத் தயாராகின்றன.  ஆனால், ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலமைப்பு, நோயின் தன்மை ஆகியவற்றை உணர்ந்து தயாரிக்கப்படுவதில்லை. இந்த முறையை மாற்ற, 'பர்சனலைஸ்டு மெடிசின்' என்ற தனி மருந்துத்துறை மெல்ல உருவெடுத்து வருகிறது.  அதில் ஒன்றுதான், லண்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள, மாத்திரையை நொடிகளில் அச்சிட்டுத்தரும் முப்பரிமாண அச்சியந்திரங்கள். இது எப்படி முடிகிறது?  ஒரு உண்ணக்கூடிய பிசினில் மருந்தினை கலந்துவிடுவர்.  இத்துடன் ஒளி பட்டால் மாற்றமடையும் வேதிப் பொருளையும் சேர்ப்பர். பிறகு, முப்பரிமாண அச்சியந்திரத்தில் இந்த மூலப்பொருட்களை உள்ளிட்டு, அதன் மீது பல்வேறுகோணங்களில் ஒளியினை பாய்ச்சுவர்.  ஒளி படும் இடங்களில் எல்லாம் மருந்துப் பிசின் கெட்டியாகி, ஒரு திடமான மாத்திரை தயாராகிவிடும். ஒளிக் கதிர்கள்

டெக் ஃபாக் செயலி.

படம்
ஜி-20 உலக நாடுகளின் பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதே ‘நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுனர்களின் அமைப்பு.’ இது இருபது உலக நாடுகள் மற்றும் அதில் உள்ள நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்களைக் கொண்ட கூட்டமைப்பாகும். இதனையே ‘Group of Twenty’ (20-களின் குழு) என்றும், சுருக்கமாக ‘ஜி-20’ என்றும் அழைக்கிறார்கள். இதில் இடம் பிடித்துள்ள 20 நாடுகளின் பட்டியல் பின் வருமாறு:- இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம். ஜி-20அமைப்பின் தலைவராக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன. அந்த வகையில் வரும் டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதிவரை, அந்த தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வருகிறது. ----------------------------------------------------------------------------- ஸ்டாலின் கொடுத்த மூன்று வாய்ப்புகள்.

5000 அல்ல6100 கோடிகள்

படம்
 நான் பணத்தை அல்ல, தமிழக மக்களின் மனங்களை எடுத்துக் கொண்டு துபாய் வந்திருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று திரும்பினார். முன்னதாக, அபுதாபியில் இந்திய சமூக கலாசார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். எனது இந்தப் பயணத்தை தமிழகத்தில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், இந்தப் பயணம் வெற்றி அடைந்துவிட்டதே என கருதிய சிலர், அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நான் பணத்தை எடுத்துக் கொண்டு இங்கு வந்திருப்பதாக கூறுகின்றனர். நான் அரசியல் பேசுவதாக நீங்கள் நினைக்கக் கூடாது.  நான் பணத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களின் மனங்களை தான் எடுத்து வந்திருக்கிறேன்.  அது தான் உண்மை.  எங்கிருந்தாலும் தமிழர்களின் உள்ளத்தில், தமிழர்களுடன் இருக்கிறோம் என்பது தான் எனக்கு முக்கியம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தியாவே வெளியேறு.

படம்
மார்ச் 23 அன்று, மாலத்தீவு பாராளுமன்றம் இரண்டு நாட்களுக்குப் பின்னர் தலைநகர் மாலேயில் திட்டமிடப்பட்ட எதிர்க்கட்சி பேரணியை அனுமதிக்காத அவசரகாலப் பிரேரணையை ஏற்றுக்கொண்டது.  இந்த பேரணி முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் மற்றும் அவரது முற்போக்கு கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸால் நடத்த திட்டமிடப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீதின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (எம்.டி.பி) உறுப்பினர் அப்துல்லா ஜாபிரால் அவசரகால பிரேரணை முன்மொழியப்பட்டது.  இந்த பேரணி தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், மாலத்தீவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகளை விதைப்பதாகவும் பிரேரணை கூறியது. பேரணி மற்றும் பிற நிகழ்வுகளை நிறுத்துமாறு மாலத்தீவு அரசு தேசிய பாதுகாப்புப் படைகளைக் கேட்டுக் கொண்டது. பேரணியின் கருப்பொருள் “இந்தியா அவுட்” என்பது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ் தலைமையிலான MDP அரசாங்கம் மாலத்தீவை இந்தியாவிற்கு “விற்றுவிட்டதாக” எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மாலத்தீவிற்கு வருவதற்கு ஒரு நாள