இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை :

படம்
டெல்லியில் நடைபெறும் வன்முறைக்கு போலீஸ்தான் முழுக் காரணம். அதற்கு நானே ஆதாரம்’ என்று பாஜகவின் கூட்டணி கட்சி எம்பியும், முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் மகனுமான நரேஷ் குஜ்ரால் பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். பஞ்சாப் சிரோன்மணி அகாலி தள் கட்சியின் மக்களவை உறுப்பினர் நரேஷ் குஜ்ரால். இவர் பஞ்சாபில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். புதன்கிழமை (26-2-2020) இரவு 11.30 மணியளவில் இவருக்குத் தெரிந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. உரையாடிய நபர் தானும் 15 முஸ்லிம்களும் வடகிழக்கு டெல்லியில் மவுஜ்புரில் உள்ள கோண்டா சவுக் என்னும் இடத்தில் வன்முறையாளர்களிடம் சிக்கியிருப்பதாகவும், உடனே உதவி புரியும்படியும் கதறியுள்ளார். செய்தி அறிந்து பதறிப்போன நரேஷ் குஜ்ரால் உடனடியாக டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, சூழலை விளக்கிச் சொல்லி, உடனே நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறை, எம். பி. நரேஷ் குஜ்ல் தெரிவித்த இடத்திற்கும் செல்லவில்லை. அவரது நண்பருக்கும் முஸ்லிம்களுக்கும் உதவியும் அளிக்கவி

ஆன்மீக அரசியல்

படம்
தில்லியில் நிலைமை மோசம் என்று தகவல்கள் வருகிறதே என்னவாயிற்று என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வீடியோக்களும் வந்து கொண்டே இருக்கின்றன. ஷாஹீன்பாக் பகுதியில் பல நாட்களாக அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பிரச்சினை ஏற்பட்டிருப்பது யமுனைக்குப அப்பால் வடகிழக்கு தில்லிப் பகுதியில். இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் அடரத்தியாக உள்ளன. இந்துக்கள் வீடுகளுக்கு அடையாளமாக காவிக் கொடிகள் கட்டியிருக்காங்க. கொடி இல்லாத வீடு மட்டும் குறிவச்சு தாக்கலாம். முன்னாடியே டிராக்டர்கள்ல லோடு லோடா கற்களை கொண்டு வந்திருக்காங்க. உள்ளூர் ஆட்களைத்தவிர வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டாந்து இறக்கியிருப்பாங்க. ஜஸ்ட் 2 கிலோமீட்டர்ல உபி, வெளியூர் ஆட்கள்தான் கலவரம் செய்யறதுக்கு வசதி. தெரிஞ்சவன்னு யாரையும் விடவும் மாட்டான். நாளைக்கு மாட்டவும் மாட்டான். கலவரம் செய்யறதுக்கே பழக்கப்பட்ட கும்பல். டிரம்ப் வர்ற நேரத்துல மீடியா கவனம் பூராவும் அங்கேதான் இருக்கும்னு தெரிஞ்சே ப்ளான் போட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. கடந்த இரண்டு மூன்று நாட்களாக அங்கும் பெண்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு

ஆர்.எஸ்.எஸ் ,ஆட்டம் ஆரம்பம்.

படம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் குடியுரிமைதிருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது சிஏஏவுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாக கூறி பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டப்பகுதியில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.  இந்த வன்முறையில் 3 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் தலைமைக்காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் காவல் ஆணையர் அமித்ஷர்மா மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதையடுத்து துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலையை ஆர்.எஸ்.எஸ்.&பாஜக வினர் மற்ற போராட்டக் களங்களிலும் செயல் படுத்த உள்ளதாக தகவல் வருகிறது. -------------------+------------------+------------------ அண்டவியல் ஹாக்கிங் கடைசி ஆய்வு.8 அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) போன்ற ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பி

வெறும் 160 கிலோகள்தானாம்.

படம்
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையும், சில நிறுவனங்களை மட்டும் வளர்த்துவிடும் போக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை படுகுழியில் வீழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக வோடஃபோன் நிறுவனம் திவாலாகி தனது சேவையை இந்தியாவில் இருந்தே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. AGR எனப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு தரவேண்டிய வருவாய்ப் பங்கீடே இந்த நஷ்டத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 92,000 கோடி ரூபாய் AGR பாக்கித் தொகையை அரசுக்கு செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி, மோடியின் தயவால் சந்தைக்கு புதிதாக வந்த ஜியோ நிறுவனத்தால் ஏற்கெனவே கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த ஏர்டெல், வோடஃபோன்- ஐடியா, டாடா டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தரவேண்டிய 92,000 கோடி ரூபாய் தொகையைத் தராமல் இழுத்தடித்து வந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, அடுத்த மாதம் 17ம் த