இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெடிக்க தயாராகிஉள்ளது?

படம்
  கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு.15 நாட்களுக்கு 5,000 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம், நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில் நீர் வெளியேற்றத்தின் அளவை அதிகரித்தது கர்நாடகா. மழை இல்லாததால் நடப்பு மாதத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. எல் நினோ பாதிப்பின் தீவிரத்தை இந்தியா உணர்வதாக எச்சரிக்கை!! சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு இன்று (30.08.2023) இரவு 8:37 மணிக்கு விண்ணில் நிகழ்கிறது.இதனை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம் .வழக்கமாக தோன்றும் பவுர்ணமி நிலவை விட கூடுதல் வெளிச்சத்துடன் நிலவு தெரியும். பெரியார் சிலை உடைப்பு, திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் உள்பட பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்து விட்டது. ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரமணா படத்துக்கே சவால் விடும் வகையில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பல கோடி மோசடி. பொருளாதார வளர்ச்சியில் சாதித்த தமிழ்நாடு.தேசிய அளவில் 2 ஆம்

மொட்டையும்,கொட்டையுமே துறவியாக்காது!

படம்
  தாடி வைத்தவர் எல்லாம் தாகூர் அல்ல’ என்பதைப் போலத் தான் காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல. அடுத்த வேளையையும் - அடுத்த வேலையையும் கருதாமையே துறவறம் ஆகும். மனித வாழ்க்கையில் இருந்தும் - பந்த பாசங்களில் இருந்தும் - அனைத்து பதவி - பொறுப்புகளில் இருந்தும் - அனைத்து அதிகாரத்திலும் இருந்தும் விடுபட்டு தன்னை வருத்தி துறவு மேற்கொள்பவரே துறவி என்று ஆன்மீகர் மொழியில் சொல்லப்படுகிறது.  திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும் - மனைவியை பாதியில் விட்டுவிட்டுப் போவதும் - காவி வேட்டி உடுத்திக் கொள்வதும் சந்நியாசியின் அடையாளம் என்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். லனில் பற்றுக் கொண்டு எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பதே துறவு நிலை. அந்த வகையில் பார்த்தால் வோட்டுக் கேட்டு அலைந்த - அதிகாரத்தின் அத்தனை பலனையும் அனுபவிக்கும் யோகி ஆதித்யநாத் எப்படி சந்நியாசி ஆவார்.? பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்திட்ட பிச்சை யெல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கையரைத் தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லி சேய்போல் இருப்பர்கண் டீருண்மை ஞானம் தெளிந்தவரே ’ - என்பது பட்டினத்தார் பாடல் ஆகும். இந்த அ

தங்கச்சாலை

படம்
  சென்னையில் நிர்பயா திட்டத்தில் 4,300 மின்கம்பங்கள் அமைக்கும் பணி ஆரம்பம். இந்தியா கூட்டணி.மும்பை கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம். இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளதாக தகவல். உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.10 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,910,780 பேர் கொரோனா வால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 694,229,081 பேர்பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 666,204,445 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,534 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   திருவள்ளூரில் இருந்து சென்னை  வந்த மின்சார ரயில் பெட்டியில் திடீரென கரும்புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஓடினர். மதுரையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலையில் ரயில் பெட்டி தீப்பிடித்து 9 பேர் பலியாகினர்.  காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை. தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும். இன்று இறுதி முடிவு . ,"ஒன்றிய அரசில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எல்லா ஆட்சி

துறவி நடத்தும்

படம்
  திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமடைந்தன. டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள . பொறியியல் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மொத்தம் 50,737 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மத்திய பிரதேசத்தில்  சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில்  பாஜக பெண்களைக் கவரும் நோக்கில் மேலும் பல சலுகை அறிவிப்புகளை தற்போதைய முதல்வா் சௌஹான்  அறிவித்தாா்.  பெண்களுக்கு மாதம்  உதவித்தொகை வழங்கும் திட்டத்தில்  ரூ.1,250 வழங்கப்படும்.  இதை உயா்த்தி ரூ.3,000 வழங்கப்படும்.  ரூ.450-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கப்படும்.  அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு 35 சதவீதமாக அதிகரிக்கப்படும். அதுவே ஆசிரியா் பணியிடங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக இருக்கும் என்று இலவச வாக்குறுதிகளைஅறிவித்துள்ளார் . ------------------------------------- துறவி நடத்தும் ரா

தாதாவுடன் சந்திப்பு ஏன்?

படம்
  மதுரையில் நேற்று தீ விபத்துக்கு உள்ளான ரயிலில், நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் சிறிய அளவில் தீபற்றி எரிந்ததால் பரபரப்பு.  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயை அணைத்தனர். திருவாரூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தெருக்களில் நடைபயிற்சி மேற்கொண்டு, பொதுமக்களுடன் உரையாடி மகிழ்ந்தார். மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மதுரையில் இருந்து 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. விமானம் மூலம் லக்னோ கெண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க வந்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்த நிலையில் 2 பேர் உயிரிழப்பு. சென்னையில் ஓரிரு நாட்களில் பறக்கும் ரயில் பணிகள் துவங்க இருக்கும் நிலையில் இன்று முதல் அடுத்த 7 மாதத்திற்கு முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி

விழிப்புணர்வைத் தரவில்லை

படம்
  மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். . நிலவில் சந்திரயானின் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு "சிவசக்தி" என பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் செப்டம்பா் 9,10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . டெல்லியில் செப்டம்பா் 9,10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின் நேரடியாகப் பங்கேற்க மாட்டாா் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது . தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். -

கொடநாடு குடைச்சல்

படம்
  தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு விரிவாக்க  திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டம் கொசப்பேட்டையில் குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தந்தை மகன் தகராறின் போது மது போதையில் இருந்த மகன் சரத் குமார் தந்தை தேவராஜை கத்தியால் குத்தினார். உலகக் கோப்பை செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு வீடியோ கால் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். ஆகஸ்ட் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தட சேவை மாற்றப்பட உள்ளது. வேளச்சேரி சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில்கள் இயக்கப்படும் என கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு 20 நிமிடத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் மோசடி குறித்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த

(தென்)துருவ வெற்றி

படம்
ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க இன்று முதல் வீடுகளில் கள ஆய்வு. சந்த்ரயான் 3 - விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதை இஸ்ரோ யூ ட்யூப் சானலில் மட்டும் 6 மில்லியன்+ (6 கோடிக்கும் அதிகம்) பேர் பார்த்துள்ளனர்.  இது உலக சாதனையாகும். புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு. வாக்னர் குழு தலைவர் எவ்கேனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யாவில் புதினுக்கு எதிராக ராணுவ புரட்சியில் ஈடுபட்டவர் பிரிகோஜின். பெலாரசில் தஞ்சமடைந்த பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிப்பு. திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வதற்காக இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து நாகப்பட்டினம் சென்று  தங்குகிறார். கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து வெப்ப அலை மற்றும் பலத்த காற்று வீசுவதால் காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள வடமேற்கு ஏவ்ராஸ் பகுதியில் உள்ள டாடியா வனப்பகுதியின் அருகே 20 பேரின்