உண்ணாவிரதம்-மாநாடு

 சந்திராயன் -3 விண்கலத்திற்கு முன்னதாக ரஷ்யா அனுப்பிய லூனா -25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கி உள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் உண்டானது. இதையடுத்து காவல்துறையினர் வியாசர் பாடியை சேர்ந்த மணிகண்டனை கைது செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மணிகண்டன் ஏற்கனவே பலமுறை வெடி குண்டு மிரட்டல் புகாரில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவில் சந்திராயன் 3 எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்யும் விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  

----------------------------------


இருவேறு நிகழ்வுகள்.

1.தி.மு.க. உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும் ஆளுநரையும் கண்டித்து, மதுரையை தவிர தமிழ்நாடு முழுவதும் தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

உண்ணாவிரதத்தில் நிறைவுரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

 "நீட் தேர்வை பற்றி கடந்த 5 ஆண்டுகளாக மிக அதிகமாக பேசிவிட்டேன். இந்த உண்ணாவிரதத்தில் நான் அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ கலந்து கொள்ளவில்லை.

 சாதாரண உதயநிதி ஸ்டாலினாக, இறந்துபோன 20 குழந்தைகளின் அண்ணனாக கலந்து கொள்கிறேன்.

நீட் உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்து கொண்டால் உங்களுக்கு சட்ட சிக்கல் வரும். உங்கள் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என கூறினார்கள். 

அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் கூட இது குறித்து புகார் அளித்துள்ளார். 

ஆனால் எனக்கு அமைச்சர் பதவி முக்கியமல்ல; இதற்காக பதவி போனாலும் பரவாயில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன திமிரு, எவ்வளவு கொழுப்பு. 

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்ட கூட்டத்தில், அம்மாசியப்பன் என்பவர் ‘என் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். எனக்கு வசதி இருந்தது. இதனால் என்னால் கோச்சிங் செண்டருக்கு அனுப்ப முடிந்தது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்’ என்றார்.

ஆனால் இதை கேட்ட ஆளுநர். ‘ஐ நெவர் எவர்’ என்று சொல்கிறார். நான் ஆளுநரை கேட்கிறேன். நீங்கள் யார்? நீங்கள் என்ன மக்கள் பிரதிநிதியா? நீங்கள் ஒரு தபால்காரர் மட்டும்தான்?

நீங்கள் உங்கள் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுங்கள்.

 தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிடுங்கள். தி.மு.க சார்பில் தலைவர்கள் யாரும் இல்லை. தி.மு.க.,வின் கடைக்கோடி தொண்டனை எதிர்த்து போட்டியிட்டு நீங்கள் வெற்றி பெறுங்கள். 

அப்படி நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கிறோம். உங்கள் சித்தாதங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள், அவர்கள் செருப்பை கழற்றி அடிப்பார்கள்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதில் தி.மு.க உறுதியாக உள்ளது.

 உண்ணாவிரதம். நாம் ஒவ்வொரு கல்லூரிக்கும் செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராடினோம். மாணவர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டாமா? மாணவர்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

எங்கள் தலைவர் நிச்சயமாக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவார்.

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். 

ஏனெனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

பா.ஜ.க.,வையும் அ.தி.மு.க.,வையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 

அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக வாக்களித்துள்ளன, எனவே அ.தி.மு.க மதுரை மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிராக பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்த, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பிரதிநிதிகளை அனுப்பு வேண்டும்.

 அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அதற்கான முழுப் புகழையும் அ.தி.மு.க எடுத்துக் கொள்ளட்டும். 

-இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

2.அதிமுக மாநாடு

அ.தி.மு.க தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதை நினைவுகூரும் வகையில் இந்த மாநாட்டுக்கு ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என பெயரிடப்பட்டிருந்தது

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் தொடக்கமாக காலை 8.30 மணிக்கு மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர அ.தி.மு.க கொடியை ஏற்றினார். எடப்பாடி பழனிசாமி கொடியை ஏற்றும் போது 10 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ மலர்கள் தூவப்பட்டன. 

புறாக்களை பறக்கவிட்டார். பின்னர் ஜெயலலிதா பேரவை உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த 3,000 தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

இதைத் தொடர்ந்து, மாநாட்டுப் பந்தலையும், அ.தி.மு.க அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அ.தி.மு.க மாநாட்டுப் பந்தலையும், அ.தி.மு.க அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

 ஜெயலலிதாவின்  திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப், அம்மா உணவகம் ஆகியவை குறித்து மாதிரிகளுடன்  அமைக்கப்பட்டிருந்தது.

1989-ம் ஆண்டு சட்டமன்ற நிகழ்வுகள்  குறித்தும் படங்கள் மூலம் விளக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் சத்துணவு திட்ட அமைப்பாளராக இருந்தது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்த புகைப் படங்களும் இடம் பெற்றிருந்தன.

அ.தி.மு.க மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல தொலைக்காட்சி புகழ் ரோபோ சங்கர், காமெடி நடிகர் ராமர், செந்தில், ராஜலட்சுமி உள்ளிட்டோர் அ.தி.மு.க-வின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றனர். செந்தில் மற்றும் ராஜலட்சுமி பாடல் பாட ரோபோ சங்கர் டிரம்ஸ் வாசித்தார். 

மாநாட்டில் எம்.ஜி.ஆரின் குரலில் நடிகர் ரோபோ சங்கர் பேசி மாநாட்டில் இருந்தவர்கள் அனைவரையும் நகைச்சுவையாக சிரிக்க வைத்தார்.

மாநாட்டில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் “தலைசிறந்த தலைவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்திட காரணம், கண் துஞ்சா கழகப் பணியா? மனம் துஞ்சா மக்கள் பணியா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் கண் துஞ்சா கழகப் பணி எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலான அணியும், மனம் துஞ்சா மக்கள் பணி எனும் தலைப்பில் அ.தி.மு.க நிர்வாகி நடிகை விந்தியா தலைமையிலான அணியும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

மாநாட்டி நடைபெற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மூச்சிரைக்க ஒயிலாட்டம் ஆடி னார். 

முன்னதாக எடப்பாடியார் சேலம் இரும்பல்ல.. சிலுவம்பாளையம் செங்கரும்பு” என முன்னாள் அமைச்சர் வளர்மதி அடுக்கு மொழியில் கவிதை பாடினார்.

மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சம் பேர் வருகை தந்து சாதனை படைத்த மாநாடு என்று பேசினார். 

ஆனால் மாநாட்டு திடலில் 2 லட்சம் தொண்டர்களுக்கு மட்டுமே இருக்கைகள் போடப்பட்டிருந்தது. திடலுக்கு வெளியே சிலர் இருந்தனர்.ஆக மொத்தம் மூன்று லட்சம் இருந்தால் அதிகம்

மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது. ஸ்டாலின் அவர்களே! உங்கள் கட்சியை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.” என்று தி.மு.க வை எச்சரித்தார்.

-------------------------------------------------

இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ்.அதிகாரபூர்வ திரைப்பட வசூல் நிலவர அறிவிப்பு.

காதர் 2:

மொத்த பட்ஜெட்: ரூ.100 கோடி

வசூல்: ரூ.378 கோடி

ஜெயிலர்:

மொத்த பட்ஜெட்: ரூ.200 கோடி

வசூல்: ரூ.282 கோடி

ஓ.எம்.ஜி.2:

மொத்த பட்ஜெட்: ரூ.150 கோடி

வசூல்: ரூ.115 கோடி

கூமர்:

மொத்த பட்ஜெட்: ரூ.28 கோடி

வசூல்: ரூ.2 கோடி

இது நேற்று வரைக்குமான இந்திய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் ஆகும். 

இன்று முதல் அடுத்த 5 நாட்கள் பணி நாட்கள் என்பதால், இதன் வசூல் கணிசமாக குறையும். ,

அடுத்த சில நாட்களில் ஓடிடியில் நகர்த்துவதற்கான கெடு நெருங்கும் என்பதால், வசூல் குறைய வாய்ப்புள்ளது எனவும் அறிவிப்பு. 

------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?