துறவி நடத்தும்

 திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமடைந்தன.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள.

பொறியியல் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மொத்தம் 50,737 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

மத்திய பிரதேசத்தில்  சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில்  பாஜக
பெண்களைக் கவரும் நோக்கில் மேலும் பல சலுகை அறிவிப்புகளை தற்போதைய முதல்வா் சௌஹான்  அறிவித்தாா். 
பெண்களுக்கு மாதம்  உதவித்தொகை வழங்கும் திட்டத்தில்  ரூ.1,250 வழங்கப்படும்.  இதை உயா்த்தி ரூ.3,000 வழங்கப்படும். 
ரூ.450-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கப்படும். 
அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு 35 சதவீதமாக அதிகரிக்கப்படும். அதுவே ஆசிரியா் பணியிடங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக இருக்கும் என்று இலவச வாக்குறுதிகளைஅறிவித்துள்ளார்
.

-------------------------------------

துறவி நடத்தும் ராமராசியம்.

உ.பி யில் உள்ள முசாஃபர்நகரிலுள்ள கப்புபூர் என்ற கிராமத்தில்  ரஜினி காலில் விழுந்து கும்பிட்ட யோகி ஆத்யநாத் ஆட்சியின் ராமராசியம் தொடர்பான ஆதாரம்தரும்  நிகழ்வு.

அங்குள்ள நேஹா பப்ளிக் பள்ளியின் இயக்குநரும் ஆசிரியையுமான திரிப்தா தியாகி தனது சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி நடத்தி வருகிறார்.

அதே கிராமத்தில் வசிக்கும் இர்ஷாத் என்பவரின் இளைய மகன் அந்தப் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். 

திரிப்தா தியாகி மற்ற மாணவர்களை இர்ஷாத்தின் மாணவரை தாக்கத் தூண்டியதாகச் சொல்லப்படும் வீடியோ ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அந்தப் பள்ளியில் எடுக்கப்பட்டது.

அந்த வீடியோவில், திரிப்தா தியாகி இர்ஷாத்தின் குழந்தையை அடிக்குமாறு மற்ற மாணவர்களைத் தூண்டிவிடுவதையும், ‘முகமதிய குழந்தைகளைப் பற்றி முட்டாள்கள் எனக் கூறுவதையும்அதில் கேட்க, காண முடிகிறது.

இதுகுறித்து தாக்கப்பட்ட மாணவரின் தந்தை இர்ஷாத் பேசும்போது, “ஆசிரியை என் மகனை அடிக்க மற்ற குழந்தைகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார். 

ஏதோ வேலையாக அந்தப் பக்கம் சென்ற எனது மருமகன், என் மகனை அடிப்பதைப் பார்த்து வீடியோ எடுத்து வந்து எங்களிடம் காட்டினார்.

அன்று நான் சுமார் 3 மணியளவில் பள்ளிக்குச் சென்றேன். 

ஆனால் ஆசிரியை தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அங்கே அதுதான் விதி என்று கூறினார். நாங்கள் இரண்டு முறை சென்றோம். அவர் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை. 

அதற்குப் பிறகுதான், நாங்கள் அந்த காணொலியை இணையதளத்தில் பரவவிட்டோம் ,” எனத் தெரிவித்தார்.

இந்த காணொலி பரவலானதைத் தொடர்ந்து, மாணவரின் தந்தை அதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

பள்ளி ஆசிரியர் திரிப்தா தியாகி மீது ஒருவரை காயமுறச் செய்வது, வேண்டுமென்றே அவமதிப்பது போன்றவற்றுடன் தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கத்தௌலி போலீஸ் அதிகாரி  ரவிசங்கர் மிஸ்ரா  பேசியபோது, “குழந்தையின் தந்தை இர்ஷாத் அளித்த புகாரின்பேரில் மன்சூர்பூர் காவல்நிலையத்தில் நேஹா பப்ளிக் பள்ளியின் இயக்குநர் திரிப்தா தியாகி மீது ஐபிசி 323 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி பார்த்தால், குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான கருத்துகளுக்கு எதிராகப் பதிவு செய்யப்படும் 123ஏ என்ற சட்டப்பிரிவை மாவட்ட காவல்துறை இந்த வழக்கில் பயன்படுத்தவில்லை. 

இதனால், ஆசிரியை திரிப்தி தேசாயை காப்பாற்ற உத்தரபிரதேச காவல்துறை முயற்சிக்கிறது என்ற சந்தேகமே எழுந்துள்ளது.

மதம் இழிவுபடுத்துதலுக்கு எதிராக 123ஏ,என்ற சட்டப் பிரிவு இருக்கையில் அதற்கு காணொலி ஆதாரமும் இருக்கையில் ஒருவரை காயப்படுத்தல்,அவபதித்தல் போன்ற பிரிவுகள் கீழ் காவல் துறை ஏன் வழக்கைப் பதிவு செய்கிறது.?

-----------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?