இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீதி அரசர்?

படம்
  போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பொதுமக்கள் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து புகார் அளித்து வருகின்றனர்.  இதுபோன்ற புகார்களை உடனுக்குடன் காவல்துறை தரப்பில் விசாரணை செய்து அபராதங்களும் விதிக்கப்பட்டு செலான் புகைப்படத்தை சென்னை காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறது. காவல்துறை ஏடிஜிபி, அரசியல் பிரமுகர் என யாராக இருந்தாலும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை பாரபட்சம் இன்றி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  குறிப்பாக காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும்போது பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் நேற்று (டிச.29) மதியம் அரசு முத்திரையுடன், தேசியக் கொடியுடன் வாகனம் ஒன்று ஒருவழிப்பாதை வழியாக சென்றதை, வாகன ஓட்டி ஒருவர் தனது கார் கேமரா மூலம் வீடியோ எடுத்து

மக்கள் அடையாளம்

படம்
 தமிழ்நாடு அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கென புதிதாக "மக்கள் ஐடி" என்ற பெயரில் தனித்துவமிக்க புதிய அடையாள எண்ணை வழங்கப்போவதாக  செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு அரசின் மின் ஆளுமை முகமை சமீபத்தில் ஒரு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.  அதன்படி, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த, தமிழ்நாடு அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் ஒரு தனித்துவம் மிக்க அடையாள எண்ணை உருவாக்க விரும்புவதாகவும் அதற்கான திறன் கொண்ட நிறுவனங்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த டெண்டர் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு மக்கள் ஐடி என்ற பெயரில், இந்திய மக்களுக்கு என ஆதார் எண் இருப்பதைப் போல தமிழ்நாட்டு மக்களுக்கு என ஒரு தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியானது. தமிழ்நாடு அரசு தற்போது அந்த டெண்டரில் முன்வைத்திருக்கும் குறிப்புகளின்படி, "மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் தகவல் தொகுப்பை தமிழ்நாடு அரசு உருவாக்க விரும்புகிறது.  அந்தத் தகவல் தொகுப்பை உருவாக்குவதன் மூலம், திட்டமிடுதல், அவற்றை

2022 நிகழ்வுகள்.

படம்
  கோகுல்ராஜ் கொலை வழக்கு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆணவக்கொலை வழக்குகளில் முக்கியமானது நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு. 2015-ம் ஆண்டு நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது.  சாதி ஆணவக் கொலை வழக்கில், மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. இந்த கொலை வழக்கில் சுவாதி பிறழ் சாட்சியாக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிஜாப்   மாணவர்கள் போராட்டம்! கர்நாடக மாநிலம், உடுப்பி பி.யூ பெண்கள் கல்லூரியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை.  இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளானது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் 25-வது பிரிவை மேற்கோள்காட்டி, `ஹிஜாப் அணிவதென்பது மதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையின் பகுதியல்ல' எனக் கூறி ஹிஜாப் அணியத் தடைவிதித்த

போதை விரும்பர் வேண்டாம்

படம்
  குடிப்பழக்கத்தால் தனது மகன் உயிரிழந்ததிலிருந்து புகையிலை, மது மற்றும் போதைப்பொருள் இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கான இயக்கத்தை மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் நடத்தி வருகிறார்.  இந்நிலையில் வரும் ஆண்டை போதையில்லா ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்பதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லம்புவா பகுதியில் நேற்று நடைபெற்ற போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு எதிரான கூட்டத்தில் பேசிய அவர்,  “இந்தியாவில் 272 மாவட்டங்களில் போதைப்பொருள் பழக்கம் அதிகமாக உள்ளது என அரசு அடையாளம் கண்டுள்ளது. போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்ட வேண்டும்.  விரைவில் இந்த நாடு புகையிலை மற்றும் மதுவிலக்கு இல்லாத நாடாக மாறும். எனது மகனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதனைச் சரி செய்ய அவனைப் போதை ஒழிப்பு மையத்தில் சேர்த்தோம். பின்னர் அவன் திருந்தியதாக நினைத்து, திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அவன் மாறவில்லை.  திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், இந்த குடிப் பழக்கத்தின் காரணமாகச் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழந்ததால்

சளி-இருமல்-குழந்தைகள்

படம்
  சில எச்சரிக்கைக் குறிப்புகள். தற்போது குளிர்காலம். சாதாரணமாகவே சளி,இருமலில் துன்பப்படுபவர்கள்.இக்குளிர்காலத்தில் அதிகமாகவே அயற்சியடைந்து விடும் நிலை. குழந்தைகளைக் குளிர்காலம் பாடாய்ய்படுத்தி விடும். மும்பையைச் சேர்ந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தைக்கு இருமல் அதிகமாக இருக்கவே, தாயார் இருமல் மருந்து கொடுத்துள்ளார்.  அந்த மருந்தை குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தை திடீரென மூச்சுப் பேச்சின்றி மூர்ச்சையாகிவிட்டது. குழந்தையின் சுவாசத்தையோ, இதயத் துடிப்பையோ உணர முடியாமல் போகவே அதிர்ந்து விட்டனர். இத்தனைக்கும் அந்த தம்பதியினர் இருவருமே மருத்துவர்கள்தான். அப்போது வெளிநாட்டில் இருந்து வந்திருந்த, குழந்தையின் பாட்டியும், பிரபல வலி மேலாண்மை நிபுணருமான திலு மங்கேஷிகார் என்பவர்  பதற்றப்படாமல் செயல்பட்டதே குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.  குழந்தைக்கு இதயம், நுரையீரலை மீள உயிர்ப்பிக்கும் சி.பி.ஆர். சிகிச்சையை அவர் அளிக்க, சுமார் 20 நிமிடங்கள் மூச்சுப் பேச்சின்றி இருந்த குழந்தை மெல்ல கண் விழித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் சிறுவனின் சுவாசம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை மெல்லமெல்ல

தனிமனிதம் தனித்துவம்

படம்
  தனி­ம­னித தனித்துவம்(சுதந்­தி­ரம்) குறித்த அழுத்­த­மான கருத்தை உச்­ச­நீ­தி­மன்றத் தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட் தலை­மை­யி­லான அமர்வு தெரி­வித்­துள்­ளது. உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி டி.ஒய்.சந்­தி­ர­சூட், நீதி­பதி பி.எஸ்.நர­சிம்மா ஆகி­யோர் அமர்­வின் முன் வந்த ஒரு வழக்­கில் அளித்த தீர்ப்பில், ‘‘தனி­ந­ப­ரின் சுதந்­தி­ர­மா­னது மதிப்பு மிக்­க­தும், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் வழங்­கி­யுள்ள தவிர்க்க இய­லாத உரி­மை­யும் ஆகும்.  அந்­தச் சுதந்­தி­ரம் பறிக்­கப்­ப­டும் போது அர­ச­மைப்­புச் சட்­டம் வழங்­கி­யுள்ள பொறுப்­பை­யும் கட­மை­யை­யும் உச்­ச­நீ­தி­மன்­றம் தவ­றா­மல் நிறை வேற்­றும். அவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளில் நீதி­மன்­றங்­கள் தலை­யிடவில்லை என்­றால் குரல் நசுக்­கப்­பட்டு சுதந்­தி­ரம் பறிக்கப்படும். தனிமனிதசுதந்­தி­ரத்­தைக் காக்க வேண்­டும் என்­பது அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் 136 ஆவது பிரி­வால் உச்­ச­நீதி மன்­றத்­துக்கு வழங்­கப்பட்­டுள்ள பொறுப்­பு­ணர்வு ஆகும். அவ்­வா­றான வழக்­கு­க­ளில் உச்­ச­நீதி­மன்­றம் தலை­யிட்டு தீர்வு வழங்­க­வில்லை என்­றால் நாங்­கள் இங்கு இருப்­ப­தற்கே பொருள் இல்லை.  அ