இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக நாட்டாமை அமெரிக்காவும்,

படம்
 உக்ரைன் பிரச்சினையும்! ரஷ்யா, யுக்ரைன் மீது படையெடுத்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால், இந்தக் கட்டுரையின் தலைப்பு ஏன் ரஷ்யாவும் உக்ரைனும் என்று இருக்காமல் அமெரிக்காவும் உக்ரைனும் என்று இருக்கிறது? இந்தப் பிரச்சினையில் “அமெரிக்கா எங்கே வந்தது?” என்று ஒருவர் கேட்கலாம்.  உலகின் பிரச்சினைகள் பலவும் அமெரிக்காவால் வந்ததுதான் என்று சொன்னால் பலருக்கும் கோபம் வரும்.  உடனே பனிப்போர் காலத்தில் கம்யூனிச சோவியத் யூனியனை ஆதரித்த பழக்கத்தில் பேசுகிறேன் என்று கொந்தளிப்பார்கள். நான் பிரச்சினையை வேறு விதமாகப் பார்க்கிறேன்.  உக்ரைன் பிரச்சினையில் ரஷ்யா அந்த நாட்டின் மீது படையெடுத்ததைக் கண்டிப்பதும், தங்கள் தந்தை நிலத்தைக் காக்க யுக்ரைன் மக்கள் மேற்கொள்ளும் வீரம் செறிந்த போராட்டத்தைப் பாராட்டுவது என்பதும் அனைவரும் செய்யக்கூடியதுதான். ஆனால், இந்தப் பிரச்சினையின் வேர்கள் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் விடுவது என்பது மீண்டும் அமெரிக்கா உருவாக்கி வரும் வரலாற்று கதையாடலை (Narrative) விமர்சனமின்றி அனுமதிப்பதாகிவிடும். இந்திய புராண கற்பனையில் தேவலோகத்தவர்கள், அதாவது தேவர்களும், கடவுள்களும் ஒருபுறமும், அசுர

ஸ்விஃப்ட் என்றால் என்ன??

  ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி: - ஆயிரக்கணக்கான நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து பல ரஷ்ய வங்கிகளை விலக்கி வைக்க ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கையானது ரஷ்யாவின் வங்கி அமைப்பு மற்றும் ஸ்விஃப்ட் மூலமான நிதி போக்குவரத்துகளை தாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்விஃப்ட், உலகளாவிய பணப் பரிவர்த்தனைக்கு முக்கியமானது. ரஷ்யாவின் மத்திய வங்கியின் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். இது வெளிநாடுகளில் தன் நிதி இருப்புகளைப் பயன்படுத்துவதற்கான திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. தொடக்கத்தில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சில நாடுகள் , ரஷ்யாவை ஸ்விஃப்ட் பயன்பாட்டிலிருந்து விலக்கிவைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தயக்கம் காட்டின. இந்தத்தடையானது, பிற நாடுகளையும் நிறுவனங்களையும் பாதிக்கும் என்ற கவலைகளும் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது தடைபடும். இருப்பினும், "ரஷ்யா மீது தொடர்ந்து தடைகளை விதிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சர்

செல்வாக்கு...யாருக்கு.?

படம்
தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றது.  அதன் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டப்பட்டது.  பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு மண்டலத்தை மொத்தமாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது திமுக.  இந்த தேர்தலில், மாநகராட்சி வார்டுகளில் அனைத்து கட்சிகளும் பெற்றிருக்கும் வாக்கு வங்கி என்ன?  கடந்த தேர்தல் காலத்தில் இருந்து இது உயர்ந்திருக்கிறதா?  21 மாநகராட்சியில் அமைந்திருக்கும் 1374 வார்டுகளில் 57 கட்சிகளைச் சேர்ந்த 11200 பேர் போட்டியிட்டுள்ளனர்.  சுயேட்சையாக மொத்தம் 3038 வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள்.  அதற்கு அடுத்த படியாக அதிமுக 1363 வேட்பாளர்களை களம் இறக்கியது.  திராவிட முன்னேற்றக் கழகம் 1121 வார்டுகளில் தங்களின் வேட்பாளர்களை இறக்கியது.  தனித்து நின்று களம் கண்ட பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி முறையே 1134 மற்றும் 1114 வார்டுகளில் வேட்பாளர்களை களம் இறக்கினார்கள்.  மக்கள் நீதி மய்யம் 671 இடங்களில் நின்றது. பல்வேறு கட்சிகள் ஒற்ற இலக்க வார்டுகளில் மட்டுமே போட்டி

3 வது உலகப் போர்?

படம்
  உக்ரைன் மீது போரை அறிவித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உலக நாடுகளை பெரும்பீதியில் ஆழ்த்தியுள்ளார். 3-வது உலகப்போரை  உலகம் தாங்காது என்ற ரீதியில் இருநாடுகளுக்கும் இடையே ராஜாங்கரீதியில் பேச்சு நடத்த உலகநாடுகள் அறிவுறுத்தின.  ஆனால், யாரும் எதிர்பாராமல் இருக்கையில் போரை புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ படைகள் களமிறங்கினால், விளைவு மிக மோசமானதாகஇருக்கும் என்பதில் மறுப்பதற்கில்லை.  முன்னாள் சோவியத்யூனியன் நாட்டில் ஒருஅங்கமாகத்தான் உக்ரைன் இருந்தாலும், சோவியத் சிதறுண்டபின் தனிநாடாக உதயமானது.  இருப்பினும், உக்ரைனை ரஷ்யா தனது ஆளுகைக்குள் உட்படுத்தவே முயற்சி செய்துவந்தது என்பது கடந்த கால வரலாற்றில் தெரியவருகிறது.  படை பலம், வீரர்கள் எண்ணிக்கை, விமானங்கள், கப்பல், ஆயுதங்கள் என அனைத்திலும் ரஷ்யா வல்லரசு என்பதை நிரூபித்தாலும், உக்ரைனுடன் மோதும்போது சேதம் ஏற்படாமல் இருக்காது.  ரஷ்யாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உக்ரைன் நாடும் ஆயுதங்கள், வீரர்கள், விமானங்களை வைத்துள்ளனர்.  உலக நாடுகளின் ராணுவ வல்லமையை மதிப்பிடும் 'குளோபல் ஃபயர் பவர்' எனும் இணையதளம் மற்றும் இன்டர