மனு(க்களின்) நீதி

 

`இந்திய அரசு, தன்னுடைய நாட்டு விவசாயிகளுக்கு கொடுத்துவரும் மானியத் தொகை காரணமாக, அமெரிக்க விவசாயிகளுக்கு பெரும்பாதிப்பு. உடனடியாக இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடரவேண்டும்' என்று அமெரிக்க அதிபருக்கு, அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்-க்கள் 28 பேர் கடிதம்!
- இது, அண்மையில் வெளியாகியிருக்கும் செய்தி.

இதைப் படித்ததுமே உங்களுக்கு என்ன தோன்றும்?

`இங்க அடிச்சா... அங்க வலிக்கும்' என்று தமிழ் சினிமாக்களில் அவ்வப்போது வில்லன்கள் விடும் வசனம் போல இருக்கிறதே! இந்திய விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதால், அவர்களுக்கு என்ன பிரச்னை? கொஞ்சம் உள்ளுக்குள் ஆழ்ந்து சென்று யோசித்தால்தான் புரியும்... அது, இந்திய விவசாயிகளின் வாழ்க்கையைக் குலைத்துப்போடக்கூடிய வில்லாதி வில்லத்தனம் கலந்த வசனம் என்பது!

`இந்திய அரசு, தன்னுடைய கோதுமை விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதால், ஆண்டுதோறும் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அமெரிக்கக் கோதுமை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் வழக்குத் தொடுக்கவேண்டும்’ என்பதுதான் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கோரிக்கையின் சாரம்!

American flag

எது நடக்கக்கூடாது என்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உயிரைக் கொடுத்துப் போராடிப் போராடி, விவசாயிகளாகிய நாங்கள் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோமோ... அந்தக் கோட்டைக்கு இப்போது ஆபத்து வந்தேவிட்டது, வில்லாதி வில்லன்களான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால்!

கார்ப்பரேட்களுக்குக் கால்பிடிக்கும் ஆட்சியாளர்கள்!

உலகம் மொத்தத்தையும் வணிகம் என்கிற ஒற்றைக் குடையின்கீழ் கொண்டு வருவதில் தொடர்ந்து வெற்றிபெற்றுக் கொண்டே இருக்கிறார்கள் உலகளாவிய பெருவணிகர்கள். `கார்ப்பரேட் கும்பல்' என்று சொன்னால், சட்டென்று புரிந்துவிடும். அவர்களுக்குக் கவரி வீசி, கால்பிடித்து, வணிகத்தைப் பெருக்குவதற்கான அத்தனை உதவிகளையும் செய்வது ஒன்றுதான் தங்களுடைய தலையாய பணி என்றே உலகளாவிய ஆட்சித் தலைவர்களும் பணியாற்றி வருகின்றனர். உண்மையில், அனைத்தையும் வணிகமயமாக்குவது பேராபத்தையே கொண்டு வந்து சேர்க்கும் என்பதற்கு நூற்றாண்டு சாட்சி... ஆங்கிலேயர்களுடைய நாடு பிடிக்கும் வெறிதான். கடல் கடந்து உலகையே தங்களின் ஆளுகையின்கீழ் கொண்டுவந்து, மக்களையெல்லாம் அடிமைகளாக மாற்றினார்கள். அடிப்படைத் தேவையான உணவையும் ஒட்டுமொத்தமாக வணிகக் குடையின் கீழ் கொண்டு வந்தார்கள். விளைவு... உலகம் முழுக்கவே பசி, பஞ்சம், பட்டினி என்று கணிசமான கூட்டம் சுருண்டுகிடக்க... சிறு அளவிலான கூட்டம் சொத்துகளைச் சேர்த்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது.

உள்ளூர் வணிகம், உலக வணிகம், தடையற்ற வணிகம் போன்றவையெல்லாம் ஒருபோதும் மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தாது. வணிகத்துக்கு மனித முகம் கிடையாது. லாபம் ஒன்றுதான் நோக்கம். அந்த லாபமும் வணிகர்களுக்கு மட்டும் கிடைக்குமே தவிர, மக்களுக்குக் கிடைக்காது. எனவே, தடையற்ற உலக வணிகம் என்பது விவசாயிகளுக்கு, ஏழை மக்களுக்குக் கட்டும் சமாதி. இதைத்தான் விவசாயச் சங்கங்கள் 1991-ம் ஆண்டு முதல் தொடர்ந்து முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு, பொருளாதாரரீதியில் வலுவான ஒரு நாட்டில் அபரிமிதமாக உணவு தானியங்கள் விளைகின்றன என்று வைத்துக்கொள்வோம். அதுவும் அந்த நாட்டு அரசு மானியங்களை அள்ளிவீசி விளைவித்த உணவு தானியங்கள். அத்தகைய தானியங்களை, மானியம் என்றால் என்னவென்றே தெரியாத ஏழை நாடுகளுக்குக் கொண்டுபோய், அந்த வலுவான நாடு விற்பனை செய்தால் என்ன நடக்கும்?

தங்கள் நாட்டில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உற்பத்தி செய்த அந்த ஏழை நாட்டு விவசாயிகளின் பொருள்கள் விலைபோகாது. 

மானியத்தில் விளைவித்த பொருள்களை, குறைந்தவிலையில் வெளிநாட்டுக்காரர்கள் வந்து விற்பனை செய்யும்போது, அதை வாங்கத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள்... அமேசான், ஃப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் என்று இணையத்தில் முட்டிமோதுவதுபோல! 

இது, ஏழை நாட்டு விவசாயிகளின் வாழ்வைக் கூண்டோடு அழித்துவிடுவதோடு மட்டுமல்லாமல், அந்த நாட்டையும் பொருளதாரரீதியில் பிச்சை எடுக்கவைத்துவிடும்; தற்போது இலங்கை தேசமே சீனாவிடம் கையேந்திக் கொண்டிருப்பதுபோல. 

மக்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்படும்; வாங்கும் சக்தி முற்றிலுமாகக் காணாமல்போகும்; வறுமை, பஞ்சம், பசி, பட்டினி என்பது மட்டுமே எங்கெங்கும் குடியேறும்; கொள்ளையடித்த பணத்தில் சொத்து சேர்த்த அதிகார, அரசியல் மற்றும் ஆட்சியாளர்களின் வர்க்கம் மட்டும் குஷியோடு வாழும்.

எனவேதான்,`உலக வர்த்தக மைய (WTO) வரையறைக்குள் விவசாயத்தைச் சேர்க்கக் கூடாது' என்று உலக விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடினர். அமெரிக்காவைச் சேர்ந்த விவசாயிகள் சங்கமும் (Family Farmer Organisation) இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


AP Photo/Eranga Jayawardena
இந்நிலையில்தான், இப்போது மானியத்துக்கு எதிர்ப்பு என்கிற ரூபத்தில் இந்திய விவசாயிகளின் கழுத்துக்குத் தூக்குக்கயிற்றை மாட்டச் சொல்ல ஆரம்பித்துள்ளனர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள். இந்திய விவசாயிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடமும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடமும் இந்திய அரசியல்வாதிகள் அடகு வைத்துவிட்டனர் என்பதே உண்மை. இதற்கு, வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கவேண்டும்.

முரசொலிமாறனின் குரல்

1995–ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு (WTO) தொடங்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு நாட்டில் வர்த்தக மந்திரிகள் கூடி சட்ட திட்டங்களை வகுக்கவேண்டும் என்பது விதி. பொதுவாக, உலக வர்த்தக மந்திரிகள் மாநாட்டில் எல்லா பிரச்னைகளுக்கும் எளிதில் விடை கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், விவசாயம் என்பதற்கு மட்டும் ஒவ்வொருமுறையும் முட்டுக்கட்டை விழுந்துவிடும். 

காரணம்... உலக விவசாயிகளின் தொடர்போராட்டம். அத்துடன், 2001-ம் ஆண்டு தோஹா மாநாட்டில் இந்திய வர்த்தக மந்திரி எழுப்பிய கடுங்குரலும் முக்கியமான காரணம். அன்றைய மாநாட்டில், விவசாயத்துக்கான மானியத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் முக்கிய குரலாக முன்வைக்கப்பட்டது. 

குறிப்பாக, இந்தியா போன்ற ஏழை-வளரும் நாடுகள், தமது நாட்டு விவசாயிகளுக்குத் தந்துவரும் மானியத்தை மூட்டைக் கட்ட வேண்டும்' என்று வலியுறுத்தினார்கள். இதைக்கேட்டுக் கொதித்தெழுந்த அன்றைய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன், 'வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு வாரிக்கொடுக்கும் மானியங்களை நிறுத்தும் வரை, உலக வர்த்தக அமைப்பில் விவசாயத்தைச் சேர்க்கக்கூடாது' என்று தனி ஒருவராகக் கர்ஜனை செய்தார். இது இந்தியாவுக்கு மட்டுமான கோரிக்கை அல்ல. வளரும் ஏழை நாடுகள் (least developing countries) அனைத்துக்குமான கோரிக்கை என்பதால், அப்போது அரங்கமே அதிரும்படி கைத்தட்டல்கள் எழுந்தன முரசொலி மாறனின் குரலுக்கு ஆதரவாக!

----------------------------------------------------------------------------



நீதியரசர் ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பு விசாரணைக்கு வருகிறது.

அந்த வழக்கில் 06-12-2021- ம் தேதியன்று உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது.

அதில்.. 

தமிழக அரசின் குறிப்பாணை எண் .3584/70-4 தேதி 23.11.1970 –ன் படி உள்ளாட்சி அமைப்புக்கள்,அரசு விழாக்கள் மற்றும் கல்வி நிலையங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பாடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை தெளிவு படுத்தினார்.

தமிழ் தாய் வாழ்த்து இறைவணக்கம் பாடல் தானே தவிர,, பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி கூறியிருந்தார்.

சன்யாசிகள் குறித்து மிக உயர்வான கருத்துகளையும் கூட அந்த உத்தரவில் நீதிபதி 

ஜி.ஆர்.ஸ்வாமிநாதன்  பதிவு செய்திருந்தார். 

ஆனால்அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நான்கு தினங்களில் அதாவது 

06-12-2021- ம் தேதியன்று எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்..

10-12-21-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கப்படும் தருணத்தில் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டுமென்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து விட்டது.

இந்த விஷயம் பார்ப்பதற்கு கொஞ்சம் லேசானது போல தெரியலாம்.

ஆனால்,

நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் மற்றும் தமிழக அரசுக்கு இடையே 

ஆனால் ஒரு விதமான மோதல் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

அதற்கான காரணத்தையும் சொல்லி விடுகிறேன்.

மதுரையில் இருக்கும் மாரிதாஸ் என்ற நபர் 

Maridhas Answers என்ற Youtube பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மிகவும் நல்ல மனிதர்ஆனால் அவருடைய ஒரே நோக்கம் இலக்கு எல்லாம் திமுக என்ற கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடு வீழ்த்துவது மட்டுமே.

ஆட்சியில் இருந்தாலும்இல்லாவிட்டாலும் திமுகவை மட்டுமே திட்டி வீடியோ போடுவார்.

அரசியல் ரீதியாக அவரது வீடியோக்கள் பிஜேபிக்கு ஆதரவானவை.

அது அவரது நிலைப்பாடு தவறொன்றும் இல்லை.

ஆனால்,, கடந்த 2021- டிசம்பர் மாதம் 10-ம் தேதி 

குன்னூரில் முப்படைகளின் தலைமை அதிகாரி பிபின் ராவத் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகிறது.

அது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவொன்றை போடுகிறார்.

அது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

போலீசார் கைது செய்கின்றனர்.

கொரோனா தொற்றின் முதலாம் அலை பரவல் தொடங்கியபோது 

தப்லிக் ஜமாஅத் அமைப்பினர் தான் பரவலுக்கு காரணம் என்று அவர் பேசிய வீடியோ குறித்து கொடுக்கப்பட்டிருந்த புகார் தொடர்பாக மீண்டும் கைது செய்யப்படுகிறார் .

மாரிதாஸின் கைதை கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் செயல்,,

என தமிழக பிஜேபியினர் பெரும் அரசியல் யுத்தத்தையே நடத்தி வந்தனர்.அதில் ஆச்சர்யம் சம்பந்தப்பட்ட நபர் முழுக்க முழுக்க பிஜேபியின் அரசியலுக்கு உதவக்கூடியவர்.ஆனால்விஷயம் அதுவல்ல..

தன் மீது போடப்பட்ட FIR – களை  ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்கிறார்

அவர் தாக்கல் இரண்டு மனுவும் நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பே விசாரணைக்கு வந்ததுமனு தாக்கல் செய்த சில தினங்களில்

பதிவு செய்யப்பட்ட  FIR –களை ரத்து செய்ய வேண்டுமென்று உத்தரவை பிறப்பிக்கிறது நீதிமன்றம்அந்த உத்தரவு சட்டப்படியே கூட பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்

காவல்துறையால் பொய்யாக போடப்பட்ட

FIR-  ரத்து செய்யக்கோரிஉண்மையாகவே பாதிக்கப்பட்ட  நபர்கள் தாக்கல் செய்யும் எல்லா மனுக்களின் மீதும் மதுரை உயர்நீதிமன்ற கிளை இவ்வளவு வேகமாக உத்தரவு பிறப்பித்துள்ளதா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.

சாமானியர்களுக்கும் இவ்வளவு விரைவாக நீதி கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அதே நேரம்நீதிபதியின் தீர்ப்புக்கு எந்த விதமான உள்நோக்கமும் நான் கற்பிக்கவில்லை 

ஆனால்தமிழகத்தில் தீவிர அரசியல் செய்து வரும் பாஜக தங்களுடைய ஆதரவாளர்களை கண்ணின் இமைபோல பாதுகாக்க நினைக்கிறது.

அந்த கட்சி அரசியலுக்காக கையிலெடுக்கும் விஷயங்கள் எப்படி நடக்க வேண்டுமென நினைக்கிறதோ அது மதுரை உயர்நீதிமன்ற கிளை மூலமாக நடக்கிறது. 

அப்படியொரு தோற்றம் ஆழமாக  உருவாகிறது என்பதை தலைமை நீதிபதியான தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமென நினைக்கிறேன்.

கடந்த 2022 ஜனவரி மாதம் 19-ம் தேதி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி,விஷமருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகில் இருக்கும் மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு  பயின்று வந்த மாணவி அவர். 163 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி அது.

அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில்  இருந்தபோது முத்துவேல் என்பரால் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது. 

அதன் பிறகு மாணவி லாவண்யாவின் இறப்பிற்கு காரணம் மதமாற்ற நிர்பந்தமே என தமிழக பிஜேபினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இறந்த மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 21-01-22 ம் தேதியன்று மனு ஒன்றை தாக்கல் செய்கிறார்.

அவசர வழக்காக அன்றே மனு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

, ( Crl OP(MD)No.1344 of 2022 )

31-01-22-ம் தேதியன்று நீதிபதி.ஜி.ஆர்.சாமிநாதன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு 34 பக்க தீர்ப்பொன்றை பிறப்பிக்கிறார்.

மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களே தயவு செய்து அந்த தீர்ப்பை நீங்கள் படிக்க வேண்டும்.

பத்திரிகையாளர் மனு ஜோசப் என்பவர் கற்பனையாக எழுதிய Serious Men என்ற புத்தகத்தை மையமாக வைத்து Sudhir Mishra என்பவர் நவாஸுதீன் சித்திக்கை ஹீரோவாக வைத்து படமொன்றை இயக்கி உள்ளார்.

netflix-OTT தளத்தில் அந்த படம் வெளியாகியிருக்கிறது.

அந்த திரைப்படத்தில் வரும் 2 நிமிடம் மட்டுமே வரும் காட்சியில் உள்ள வசனங்களை எல்லாம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி குறிப்பிட்டுள்ள வசனங்களுக்கு முன்பாகஅய்யன் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நவாஸுதீன் சித்திக்,,

தன்னுடைய தாத்தா குளத்தில் தண்ணீர் எடுத்து குடித்தற்காக சிலர் எலும்பை உதைத்துவிட்டதாகவும்,அதனால் தன்னுடைய தாத்தா சாகும் வரை கூன் விழுந்த நிலையிலேயே வாழ்ந்ததாக  மிகுந்த கோபத்துடன் கூறுவார். 

தலைமையாசிரியர் அறையில் பேசப்படும் காட்சிகளை மட்டும்  நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதால் இதையும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தனக்கு தேவையான விஷயங்களை மட்டும் குறிப்பெடுத்து வழக்கறிஞர்கள் பேசலாம்.

பட்டிமன்ற பேச்சாளர்கள் பேசலாம்.

ஆனால், நீதிமன்றமே பேசக்கூடாது அல்லவா!

கற்பனையான கதையில் கதாபாத்திரங்கள் உரையாடுவதை எல்லாம்  தீர்ப்பில் பதிவு செய்துள்ளதால்,அந்த கதாபாத்திரம் பேசிய மற்ற எல்லா விஷயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது நீதிமன்றத்தின் கடமையில்லையா ?

அதே போல மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “கல்யாண அகதிகள்” என்ற திரைப்படத்தின் வசனங்கள்.

1990- ம் ஆண்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாணக்யா என்ற தொடர் குறித்து கூட  தீர்ப்பில் எழுதியுள்ளார்.

மிகுந்த பணிவுடன் கூறுகிறேன்.

நீதிபதி குறிப்பிட்டுள்ள திரைப்படங்கள் ஆவணப்படங்கள் அல்ல.

அவை ஒரு பொழுதுபோக்கு அம்சம் நிரம்பிய திரைப்படங்கள்.

ஆனால், திரைப்படத்தில் வரும் காட்சிகளைவசனங்களை எல்லாம் உண்மை என்று நீதிமன்றங்கள் எப்போது  நம்பத் தொடங்கின என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

கூடவே அந்த தீர்ப்பில்,, சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த வீடியோவில் கூறப்படும் விஷயம் குறித்து விசாரிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

உண்மையில்  அந்த வீடியோவே  சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கும் முக்கிய காரணம்.

அதனால் உங்களுக்கு இந்த ஒரு சம்பவத்தையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

2017, ஏப்ரல் 1-ம் தேதி ஹரியானா மாநிலம் மேவட் மாவட்டத்தின் ஜெய்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெஹ்லு கான் தனது இரண்டு மகன்களான இர்ஷாத்ஆரிஃப் ஆகியோருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த அசுமத் கான் என்பவரோடு சேர்ந்து தங்களது பால் பண்ணைக்கு மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்றார்.

அப்போது விசுவ ஹிந்து பரிசத்பஜ்ரங்தள் இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் இவர்களது வாகனத்தைத் தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கொடூரமாக தாக்குதலுக்கு ஆளான முதியவர் பெஹ்லு கான் அடுத்த இரண்டு தினங்களில் இறந்து விடுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் விசாரித்து வந்தது.

பேர் அந்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்அதில் மூன்று பேர் சிறுவர்கள்.

கடந்த 14.08.2019 தேதியன்று  ஆல்வார் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் குற்றவாளிகளாக கூறப்பட்ட 6 நபர்களையும் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி விடுவித்துவிட்டது.

அதோடு நிற்கவில்லை.

இந்த தேசத்தையே அதிர வைத்த அந்த வீடியோவை எல்லாம் ஆதாரமாக கருத முடியாதென்றும் கூறி விட்டது.

ஆனால்,,தமிழகத்தில் அதே விசுவ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் முத்துவேல் என்பவர்  எடுத்த ஒரு வீடியோவை மட்டுமே ஆதாரமாக வைத்து நீதிபதிஜி.ஆர்.சாமிநாதன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று நம்புகிறோம். 

எல்லோரும் பேசுகிறோம். 

உண்மை வேறோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

நாம் எல்லோருமே ஒவ்வொரு தேர்தலின் போதும் 

தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றக்கூடியவர்களே.

ஏதோ ஒரு கட்சியின் கொள்கைசித்தாந்தம் பிடித்தோஅல்லது அந்த கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டோ அதன் வேட்பாளருக்கு வாக்களிப்போம்.

நீதிபதியாக பதவி வகிப்போர் கூட வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நீதிபதிகளுக்கு கூட அரசியல் நிலைப்பாடு இருக்கலாம்.

அது தவறொன்றும் இல்லை.

ஆனால்,,அவர்களின் தீர்ப்பு அரசியல் கட்சிகள் செய்யும் ஆதாய அரசியலுக்கு உதவிகரமாக இருந்துவிடக்கூடாதென நினைக்கிறேன்.

லாவண்யா என்ற சிறுமியின் மரணம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்துள்ள உத்தரவு 

பிஜேபி என்ற அரசியல் கட்சி தன்னுடைய ஆதாயத்திற்காக  கையிலெடுத்த விவகாரத்திற்கு உதவி செய்வதற்காகவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவோ என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

அதனால் மீண்டும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

தயவு செய்து அந்த உத்தரவை நீங்கள் படிக்க வேண்டும்.

இந்தியாவில்,, திரைப்பட வசனங்களை எல்லாம் உதாரணமாக காட்டி இதற்கு முன்பு  இப்படி ஒரு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாஎன்பதை மாண்புமிகு தலைமை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீதியரசர்ஜி.ஆர்.சாமிநாதன் பிறப்பித்துள்ள இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் நீதிமன்றங்களால் மேற்கோளாக எடுத்துக்கொள்ளப்பட்டால்  ஆபத்தானதாக மாறிவிடும் என மிகவும் அச்சப்படுகிறேன்.

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமென நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பகிரங்கமாக கூறியதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  “Justice for the Judge” புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புத்தகம் தொடர்பாக பல தொலைக்காட்சிகளுக்கு அவர் பேட்டி கொடுத்தார்.

நீதிபதிகள் மீதான சில விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு,,

நீதிபதிகளும் மனிதர்கள் தான்தேவ தூதர்கள் அல்ல என்று பதில் கொடுத்தார்.

உண்மைதானே அது

நீதிபதிகளுக்கும் சில அரசியல் நிலைப்பாடு இருக்கலாம்.

அரசியல் கட்சிக்கு ஆதரவானவர்களாக கூட இருக்கலாம்.

தவறே அல்ல.

ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இந்திய நீதித்துறை செயல்படுகிறதென வெளிப்படையாகவே விமர்சனங்கள் இருப்பதை நீங்களும் அறிவீர்கள்.

பதவியில் இருந்த போதே 4 உச்சநீதிமன்ற  நீதிபதிகளும் மறைமுகமாக அதை மக்கள் முன்பு வெளிப்படுத்திவிட்டனர்.

ஒருவேளை  நீதிபதிகள்  ஒருதலைப்பட்சமாகவோ,,தவறாகவோ நடக்கிறார்கள் என்றால்,

அவர்களை தண்டிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

சட்டத்தை வடிவமைத்தவர்களும் அப்படியான வாய்ப்புக்களை உருவாக்கவில்லை..

கடந்த 60 தினங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் சில உத்தரவுகள் பகிரங்கமாகவே அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ற உத்தரவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசுக்கும்நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனுக்கும் இடையில் ஈகோ யுத்தம் நடக்கிறதோ என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் இந்த போக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல..

தவறான முன்னுதாரணமாகவும்  மாறிவிடக்கூடாது.

அந்த அக்கறையின் அடிப்படையிலேயே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.இதை நீங்கள் மனுவாகவும் கூட கருதலாம்.

அதிகாரம் மிக்கவர்கள்,செல்வாக்கானவர்களால் நீதிமன்றத்தில் தங்களுக்கு ஏற்றவாறு காரியத்தை சாதிக்க முடியும் என்ற நிலையை மாற்ற நீதித்துறை தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அப்படி இருக்க,,பிஜேபி என்ற கட்சி அரசியலுக்காக கையிலெடுக்கும் 

பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு,, அதன் நிர்வாகிகள் விரும்புவது போல  நீதிமன்றம்  மூலமாக உத்தரவுகளை பெறுகிறதோ என்ற பிம்பம் ஏற்படுவது நல்லதல்ல என்பதை  மிகுந்த கவனத்தோடு தெரியப்படுத்த விரும்புகிறேன். 

அது ஒரு குடிமகனாக என்னுடைய கடமை என்றும் கருதுகிறேன்.

மனிதர்கள் எல்லோருமே தவறு செய்பவர்கள் தான்.

ஆனால் நீதிபதிகள் கொஞ்சமாவது 

விதி விலக்கானவர்களாக இருக்க வேண்டியது 

அவசியமில்லையா ?

 

B.R.அரவிந்தாக்ஷன் 

ஊடகவியலாளர்

--------------------------------------------------------------------------------


உலகில் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதே நேரம், பெரும்பாலான நாடுகளில் உடல் பருமன் ஒரு சவாலான போக்காக மாறியுள்ளது. இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்றனர், நார்வே அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

நாம் உணவு மற்றும் நீரைக் கையாளப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கலன்களில் உள்ள சில வேதிப் பொருட்கள், உடலில் புகுந்து உணவை செறிமானிக்கும் முறையில் இடையூறுகளை ஏற்படுத்துவதாக நார்வே விஞ்ஞானிகள் கண்டரிந்துள்ளனர்.

இதனால், மனித உடலில் கொழுப்பு செல்கள் அபரிமிதமாகப் பெருகி வளர்வதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். தயிர் வைக்கும் பிளாஸ்டிக் பாத்திரம், சமையலறையில் சுத்தம் செய்ய உதவும் ஸ்பாஞ்ச், குடிநீர் பாட்டில்கள் போன்ற அன்றாடம் பயன்படும் 34 விதமான பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள வேதிப் பொருட்களை அடையாளம் கண்டனர்.

இவற்றில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருப்பதையும், அதில் 629 வகைகளை, ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்று பிரித்தனர். இதிலும் 11 வேதிப் பொருட்கள் மனித செரிமான அமைப்பில் இடையூறு செய்ய வல்லவை என்று தெரிய வந்தது. எனவேதான், பிளாஸ்டிக் கலன்களை உணவு மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்துவதை அறவே தவிர்ப்பது, உடல் பருமனை குறைக்க உதவக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?