அறிக்கை என்னாச்சு?

🔹 சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கோடை மழை. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலைக்குப் பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.

🔹 தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததால், சிரமம் அடைந்த மக்கள். அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.🔹 தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இரவில் மின் வெட்டு தொடருவதால், மக்கள் போராட்டம். புதுக்கோட்டை அரசு அலுவலகத்தில் அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வின்போதே மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு.🔹 தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம். தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்.🔹 தென்காசி, நெல்லை மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில், தெருக்களில் நின்ற மக்களை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல். இருசக்கர வாகனங்களில் வந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலா என அறிய, 4 பேரைஹப் பிடித்து போலீஸ் விசாரணை.🔹 டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் முடிந்து கடைகள் திறக்கப்பட்டதால் அலைமோதிய கூட்டம். தனியார் பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் வாங்கியதாக மதுகுடிப்போர் வேதனை.

🔹 கடலூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா எனவும் கேள்வி.
🔹 சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணியை கோயெம்ப்ட் நிறுவனத்திற்கு கொடுத்ததில் முறைகேடு. 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் தகுதியில்லா நிறுவனத்திடம் தரப்பட்டதாக குற்றசாட்டு,சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளியிட்ட மாணவர். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை அம்பலப்படுத்தியதாக 17 வயது மாணவருக்கு ராகுல் பாராட்டு.
🔹 மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம். தமிழகஅரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தல்
🔹 தேனியில் தவெக மகளிர் அணி பொறுப்பில் இருப்பதாகக் கூறி அரசு அலுவலகங்களில் ஆய்வு. கட்சி பெண் பிரமுகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என மாவட்ட செயலாளர் எச்சரிக்கை.
🔹 அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு. கச்சா எண்ணெய் விலை 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு 2 சதவீதம் குறைந்தது.

கீழடி..

அமர்நாத் அறிக்கை என்னாச்சு? வலுக்கும் கோரிக்கை!

கீழடியில் (Keezhadi) தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட ஆய்வறிக்கையை (Amarnath Report) ஒன்றிய அரசு உடனே வெளியிட தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டறிக்கை: 2014 – 2016 காலகட்டத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ( Archeological Survey of India – ASI ) சார்பாகக் கீழடி அகழாய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் மேற்கொள்ளப் பட்டது. கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு 2023 ஜனவரி மாதத்தில் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். அறிவியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழடியின் காலம் கி.மு.800 – 500 வரை என்பதாக அவர் வரையறுத்துள்ளார்.


திருப்பி அனுப்பிய தொல்லியல் ஆய்வகம்

ஆனால், போதிய உண்மையான காரணங்களோ, மதிப்புயர் நியாயங்களோ இன்றி அமர்நாத் அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கையினை மறுத்து,
அவரின் ஆய்வறிக்கையை மேம்படுத்தி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அவருக்கே திருப்பி அனுப்பியது.


இந்த அறிக்கையை அனுப்பிய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உறுப்பினர் குழுவில் உள்ள எவரும் கீழடிக்கு வந்ததே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தனக்கு அனுப்பிய அறிக்கை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப் பட்டதாக அமர்நாத் அவர்கள் தெளிவு படுத்துகிறார்.


அறிக்கையை மாற்ற சொல்வதா?

பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கீழடியின் தொன்மையைக் கணித்த அமர்நாத் அவர்களின் காலத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஏற்கத் தயாராக இல்லை.

அதை மாற்ற வேண்டும் என அது வலியுறுத்துகிறது.

இதுதான் இச்சிக்கலின் சாரம்.

அமர்நாத்தின் திட்டவட்டமான முடிவு

ஆனால், எவ்விதப் புறச் செல்வாக்கிற்கும் உள்ளாகாமல், உண்மையான மற்றும் சரியான அறிக்கையைக் கடமை உணர்வோடும் மனச்சாட்சியோடும் சமர்ப்பித்ததாகக் கூறி, தனது ஆய்வறிக்கையை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அமர்நாத் அவர்கள் திட்டவட்டமாக எழுத்து வடிவில் தெரிவித்து விட்டார்.


ஆனால் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிக்கையைத் திருத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


பொதுவெளியில் பகிரங்கப்படுத்துக

துறைவாரியான கடிதப் போக்குவரத்தோடு இந்த முக்கியமான செய்தி முடங்கி விடுவது ஏற்புடையதல்ல! அமர்நாத் அவர்கள் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பது பெரும் ஐயத்தை உண்டாக்குகிறது.


இதனால் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாமலும் இருக்கிறது.


எனவே இத்தகைய குழப்பத்தைப் போக்கும் வகையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி ஆய்வறிக்கையின் மூலப்பிரதியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட்டு, அனைவரின் ஐயத்தையும் போக்க வேண்டும்.

மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் நிலைப்பாட்டை ஆதரித்தும், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் அறம், விதிகள், விழுமியங்களுக்கு எதிராகத் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை ஏற்க மனமின்றிச் செயல்படும் போக்கினைக் கண்டித்தும் முந்தைய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருந்தது.

தமிழகத்தின் தொன்மையை அறிவியல் வழியில் நிறுவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட  அரசும் உரிய அனைத்து வழிகளிலும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.


கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு : கண. குறிஞ்சி (தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை)

குழந்தைத் தொழிலாளர் நடவடிக்கை?

 சட்​டமன்​றத் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது வாக்​காளர்​களுக்கு பணப்​பட்​டு​வாடா செய்​தது, பெற்​றோரை தங்​கள் கட்​சிக்கு வாக்​களிக்​கும்​படி குழந்​தைகள் மூல​மாக அறி​வுறுத்​தி​யது தொடர்​பாக விசா​ரணை நடத்​தக் கோரிய வழக்​கில் தேர்​தல் ஆணை​யம், தவெக, திமுக, அதி​முக ஆகிய கட்​சிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடலூர் மாவட்​டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்​கறிஞர் வாசுகி தாக்​கல் செய்த பொது நலமனு​வில், நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின் போது வாக்​காளர்​களுக்கு பணப்​பட்​டு​வாடா செய்​த​தாக திமுக, அதி​முக​வுக்கு எதி​ராக​வும், பெற்​றோரை தங்​கள் கட்​சிக்கு வாக்​களிக்​கும்​படி குழந்​தைகளிடம் செல்​வாக்கை செலுத்​தி​ய​தாக தவெக​வினருக்கு எதி​ராக​வும் குற்​றஞ்​சாட்டி இருந்​தார்.இது தொடர்​பாக திமுக, அதி​முக, தவெக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு எதி​ராக சுதந்​திர​மான விசாரணை நடத்த உத்​தர​விட வேண்​டும் எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​த​போது, “தவெக தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் எஸ்​.​முரளிதர் ஆஜராகி, வெறும் செய்​தி​யின் அடிப்​படை​யில் மட்​டுமே இந்த வழக்கு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

 தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட பிறகு தேர்​தல் நடத்தை விதி​கள் விலக்​கிக் கொள்​ளப்​பட்​டு​விடும். தேர்​தல் நடத்தை விதி​மீறல் தொடர்​பாக தேர்​தல் வழக்​கு​தான் தாக்​கல் செய்ய முடி​யும்” எனத் தெரி​வித்​தார்.

திமுக தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்​கோ, “குழந்​தைகளை பிரச்​சா​ரத்​தில் பயன்​படுத்​தி​ய​தாக தங்​களுக்கு எதி​ராக எந்த குற்​றச்​சாட்​டும் இல்​லை. 

ஊழல் நடவடிக்​கையை பொறுத்​தவரை வெற்​றி​பெற்ற வேட்​பாளரை எதிர்​மனு​தா​ர​ராக சேர்க்க வேண்​டும்” என தெரி​வித்​தார்.

அதி​முக தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் எஸ்​.ஆர்​.​ராஜகோ​பாலும் இதே வாதங்​களை முன்​வைத்​தார். தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் நிரஞ்​சன் ராஜகோ​பாலன், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்​டும் எனக் கோரிக்கை விடுத்​தார்.

 இதை ஏற்​றுக்​கொண்ட நீதிப​தி​கள், மனுவுக்கு பதிலளிக்​கும்​படி தவெக, தி​முக, அதி​முக தேர்​தல் ஆணை​யம் ஆகியோ​ருக்கு உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை ஜூலை 1-ம்​ தேதிக்​குத்​ தள்​ளிவைத்​தனர்​.