"நீதி வென்றது”
"நீதிவென்றது”_அப்பாவு2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்றும்,
திமுக வேட்பாளர் மு.அப்பாவு வெற்றி பெற்றுள்ளார் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளது.
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை – திமுக வேட்பாளர் அப்பாவு இடையே நேரடி போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதை எதிர்த்த அப்பாவு துணைராணுலத்தினரால் தேர்தல் மய்யத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
அதிமுகவின் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு 2016-ல் தொடர்ந்த தேர்தல் வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது.
இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என ஆகாது.
ஆனால் இந்த 5 ஆண்டுகளுக்கான எம்எல்ஏ பென்ஷனை அவரால் கேட்க முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2016 – 2021-ஆம் ஆண்டுகளில் அரசு ஆவணங்களில் ராதாபுரம் எம்எல்ஏ என்ற இடங்களில் இன்பதுரை பெயரை நீக்கவும், அதற்கு பதிலாக அப்பாவு பெயரை மாற்றவும் தமிழக அரசுக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, “2016 ராதாபுரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அப்போது நான் தபால் வாக்குகளை எண்ணாமல் முடிவுகளை அறிவித்து விட்டார்கள். அது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் 2019 அக்டோபர் 4-ஆம் தேதி தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக தற்போது நீதிபதி அறிவித்துள்ளார்.
2016- 2021 வரை ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ என இன்பதுரை பெயரை நீக்கிவிட்டு என் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.10ஆண்டுக்குப்பின்னாவது
, நீதி வென்றது” எனத் தெரிவித்தார்.
வழக்கின் பின்னணியும் அப்பாவுவின் சட்டப் போராட்டமும்
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் பொதுத்தேர்தலின் போது, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் தற்போதைய பேரவைத் தலைவர் மு. அப்பாவுவும் நேருக்கு நேர் களம் கண்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான போது, அதிமுகவின் இன்பதுரை வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், தபால் வாக்குகள் (Postal Ballots) மற்றும் சில குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக திமுக வேட்பாளர் அப்பாவு குற்றம் சாட்டினார். குறிப்பாக, தகுதி வாய்ந்த தபால் வாக்குகள் பல நிராகரிக்கப்பட்டதாகக் கூறி, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை (Election Petition) தொடர்ந்தார். இந்த வழக்கில் வாக்குளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்ற அப்பாவுவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மறு வாக்கு எண்ணிக்கையும் நீதிமன்றத்தின் இறுதி முடிவும்
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், ராதாபுரம் தொகுதியின் தபால் வாக்குகள் மற்றும் சர்ச்சைக்குரிய வாக்குச் சாவடிகளின் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டு மறு எண்ணிக்கை செய்யப்பட்டன. இந்த மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரங்களை ஆய்வு செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தற்போது இந்த வழக்கில் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
நீதிமன்ற மேற்பார்வையில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அப்பாவு உண்மையில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரையை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2016இல் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இன்பதுரையின் வெற்றி சட்டப்படி செல்லாது என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்பதுரையின் தகுதி நீக்கமும் சட்ட விளக்கமும்
இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழத் தொடங்கின. குறிப்பாக, இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்குத் தீர்ப்பிலேயே தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தச் சட்டமன்றக் காலவட்டம் (2016-2021) ஏற்கனவே முடிந்து, அடுத்த பொதுத்தேர்தலும் (2021) நடந்து முடிந்துவிட்டதால், தற்போதைய சூழலில் இன்பதுரையை “தகுதி நீக்கம்” செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை.
எனவே, இந்தத் தீர்ப்பின் காரணமாக இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று பொருள் கொள்ள முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த ஐந்து ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதால், தற்போதைய அரசியல் நிலவரத்திலோ அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலோ இதனால் உடனடித் தாக்கம் எதுவும் ஏற்படப் போவதில்லை.
முன்னாள் எம்.எல்.ஏ சலுகைகள் மற்றும் ஓய்வூதியத்திற்குத் தடை
இருப்பினும், சட்டப்படி வெற்றி பெறாத ஒரு நபர், அந்தப் பதவியின் மூலம் கிடைக்கும் அரசு சலுகைகளை அனுபவிக்க முடியாது என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதன் அடிப்படையில், 2016 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஓய்வூதியம் (Pension), மருத்துவச் சலுகைகள் அல்லது பிற அரசு சலுகைகளை இன்பதுரை தனது சட்டப்பூர்வ உரிமையாகக் கோர முடியாது என நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மறுபுறம், இந்தத் தீர்ப்பின் மூலம் தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தனது வெற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிலைநாட்டப்பட்டுள்ளதாக மு. அப்பாவு தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. காலதாமதமாகக் கிடைத்தாலும், இந்தத் தீர்ப்பு தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும், தபால் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது என அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர்.
சினிமாவில் தனது கடைசிப்படம் ஜனநாயகன் என்று அறிவித்திருந்தார் விஜய்.
தளபதி -69 என்ற பெயரில் அப்படம் எடுக்கப்பட்டு பின்னர் ஜனநாயகன் என்று டைட்டில் வைக்கப்பட்டது. தணிக்கை வாரியத்தில் நடந்த அரசியல் மற்றும் ஈகோ பிரச்சனையால் அப்படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வரவில்லை.
போகிற போக்கினை பார்த்தால் வரும் பொங்கலுக்கு கூட அப்படம் திரைக்கு வராது போலிருக்கிறது.
ஜனநாயகன் படம் ஏன் வெளிவரவில்லை? என்று சொல்லுகிற தைரியம் தனக்கில்லை என்றும், அப்படியே தைரியமாக சொன்னால் அதை வெளியிடும் தைரியம் ஊடகங்களிடம் இல்லை என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார் ஜனநாயகன் பட இயக்குநர் எச்.வினோத்.
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் இல்லை என்பது தற்போது தெரியவருகிறது. தளபதி -70க்காக கதை கேட்டு வருகிறார் விஜய்.
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறும் என்பதால் இடைத்தேர்தல் முடிந்ததும் தளபதி -70 படத்தின் படப்பிடிப்பை துவங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் விஜய்.

ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் சட்டம் ஒழுங்கு சீர் ஆகவில்லை.
பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
வாக்குறுதி அளித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.
இதனால் தவெக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில்திடீரென விஜய் நடிக்க கிளம்புவதால் கோட்டையில் இருக்கும் தவெகவினர் கலக்கத்தில்் உள்ளனர்.
இது என்னப்பா? என்று அதிகாரிகள் மிரண்டுப்போய இருக்கிறார்கள்.
இப்போது இருக்கும் நிலைமையை பார்த்து எங்கே செல்லும் இந்தப்பாதை..? என்று தெரிந்து, விஜய் இந்த முடிவெடுத்திருக்கிறாரா? என்று தெரியவில்லை.