சீர்காழி வைகோவிற்கு தந்த ஆப்பு !
கொடுத்த சீர்காழி எம்எல்ஏ
சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை.
இதற்கான காரணம் கேட்ட போது, அவர் கட்சியின் உயர்நிலைக் குழுவில் உறுப்பினராக இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று மதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் இதறலு மறுப்பு தெரிவித்துள்ள எம்எல்ஏ செந்தில் செல்வன், "நான் ஏற்கனவே மதிமுகவிலிருந்து விலகி தற்போது திமுக உறுப்பினராக உள்ளேன்". ஏற்கனவே முழுமையாக திமுக-வில் இணைந்து விட்டதால் மதிமுக கூட்டத்தில் பங்கேற்கத் தேவையில்லை என விளக்கம் கொடுத்து உள்ளார்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதிமுக தலைமை திமுக கூட்டணியில் இருந்து விலகி, ஆளுக்கு கட்சியாக உள்ள தவெக-விற்கு ஆதரவளிக்க திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வென்றனர்.
கூட்டணி மாற திட்டமிட்டு வருவதால் தங்கள் கட்சி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என மதிமுக தலைமை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பதவி விலகும் முடிவை ஏற்க மறுத்த சீர்காழி எம்.எல்.ஏ, இன்றைய மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததோடு, தான் எப்போதோ திமுக-வில் இணைந்து விட்டதாக கூறி மதிமுக-விற்கு வைகோ வின் தாவல் அரசியலுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி!
தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்க தி.மு.க. அரசு நேர்மையாக செயல்பட்டது என ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஆனால் பல தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்திற்கு சென்றுவிட்டது. அதற்கு தி.மு.க. அரசுதான் காரணம் என த.வெ.க. அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் நேற்று முன்தினம் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் பேசியதாவது:
‘ஆந்திராவில் முதலீடு களை ஈர்க்க, தமிழ்நாட்டில் முந்தைய தி.மு.க. அரசுடன் நாங்கள் கடுமையாக போட்டியிட்டோம். சிலவற்றில் வென்றோம். சிலவற்றில் தோற்றோம்.
ஆனால் தி.மு.க. அரசாங்கம் தங்களிடம் பணம் கேட்பதாக ஒரு முதலீட்டாளர் கூட எங்களிடம் புகார் செய்வதை நான் கேட்டதில்லை.
தி.மு.க. அரசு ஒரு நேர்மையான மற்றும் தொழில்முறை முதலீட்டு செயல்முறையை நடத்தியது. அதற்கு தி.மு.க. அரசுக்கு பாராட்டுக்கள்’ என்றார்.
தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்ததாக
த.வெ.க.வினர் பேசி வரும் தற்போதைய நிலையில், ஆந்திர மாநில அமைச்சர், முந்தைய தி.மு.க. அரசை பாராட்டி உள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா ?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 73 டாலராக சரிந்துள்ளதால், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தன. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதன்காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் சர்வதேச சந்தையில் அதன் விலையேற்றம் பன்மடங்கு அதிகரித்தது.
ஒரு பீப்பாய் பிராண்ட் கச்சா எண்ணெய் 65 டாலர் என்றிருந்தநிலையில், 110 டாலராக அதிகரித்தது.
இந்த கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தின் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து உயர்த்தியது. இதனால் தற்போது பெட்ரோல் சராசரியாக ஒரு லிட்டர் ரூ.108க்கும், டீசல் ரூ.100க்கும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1000க்கும், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.3000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில், எரிபொருளுக்கான இவ்விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் அரசுடன் அமெரிக்கா நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் இறுதி நிலை எட்டியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் போக்குவரத்திற்காக ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்துவிட்டுள்ளது. அந்த வழியே இந்தியாவிற்கு 11 எண்ணெய் கப்பல்கள் நேற்று முன்தினம் கடந்தது. இந்த கப்பல்கள் ஓரிருநாளில் இந்திய துறைமுகங்களை வந்தடையவுள்ளது. அதேபோல், மற்ற உலக நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதன்காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. பிராண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 110 டாலர் என்றிருந்த நிலையில் இருந்து, இன்று காலை 73 டாலராக சரிந்துள்ளது.
இந்த விலையானது, வரும் நாட்களில் மேலும் குறையும் என கச்சா எண்ணெய் வணிக நிபுணர்கள் கணித்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை 73 டாலராக குறைந்ததால், இந்தியாவில் பங்குசந்தை ஏற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக விமான போக்குவரத்துத்துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், மற்ற வணிக நிறுவனங்களின் பங்குகளும் உயரத்துவங்கியுள்ளன.
இந்த கச்சா எண்ணெய் விலை குறைவின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குறிப்பாக வரும் ஜூலை 1ம் தேதி காஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கவுள்ளன. அதில், வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலையை பெருமளவு குறையுமா என எதிர்நோக்கியுள்ளனர்.
அதேபோல், பெட்ரோல், டீசல் விலையை ஒரு மாதத்திற்குள் ரூ.8 வரை உயர்த்தினர். அப்படி ஏற்றப்பட்ட விலையையாவது குறைக்க வேண்டும்.
ஆனால், இந்த விலை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள்மட்டுமல்ல ஒன்றிய மோடி அரசும் வாய் திறக்காமல் மவுனமாக உள்ளன.
விலை உயரும்முன் பெட்ரோல்,சிரிண்டர் விலையை இருமுறை உயர்த்தியவர்கள் உலகளவில் விலை குறையும் போது மஙுனமாகி,மாயமாக மறைந்து விடுவது ஏன.??









